Skip to Content

பகுதி 2

  • 1. அளவுகடந்த கெட்டிக்காரர்கள் எப்படியெல்லாம் பொறுப்பை விலக்க முடியும் என்று மனத்தைத் தயார் செய்திருப்பார்கள்.

அன்பர் - Taste of Ignoranceக்காக தன் கெட்டிக்காரத் தனத்தையும் விட்டுக் கொடுப்பான். தன் கையால் பிறருக்கு நல்லது நடந்து விடப்போகிறது என்று பயப்படுபவர் அடுத்த கட்டம்.

நண்பர் - எப்படியெல்லாம் நான் சாமர்த்தியமாக இருக்கிறேன் என்று நினைத்து தானே பெருமைப்படுவது அற்பம். அப்படிக் கொஞ்சம்பேர். இந்த 9 நிலைகளையும் கடந்து தான் மக்கு, மட்டம், அற்பம் என்றே தெரியாமல் காரியவாதியாக unconscious ஆக இருப்பது 10ஆம் நிலை.

அன்பர் - உண்மையிருந்தால்,

நண்பர் - இந்த 10 குறைகளும் வெள்ளம் அடித்துக் கொண்டு போனதுபோல் போகும். தொடர்ந்த முன்னேற்றம், வாய்ப்பை ஏற்பது என்பவை இக்குறைபாடுகளிருந்தாலும், அவற்றைச் செயல்பட அனுமதிக்காது.

அன்பர் - வாய்ப்பு அன்பர்கட்குத்தான், வாழ்விலில்லை என்பது உண்மையா?

நண்பர் - அன்னையை அறியுமுன் நமக்கெல்லாம் எத்தனை வாய்ப்பு வந்தது?

அன்பர் - அப்படி ஒன்றும் வந்ததில்லையே.

நண்பர் - taste of Ignorance என்பது நாகரீகமான சொல், பொய் சொல்வதில் உள்ள திருப்தி ஆத்மதிருப்தியைக் கடந்தது!

அன்பர் - நாம் பொய் சொல்லாதவர் என வைத்துக் கொள்வோம்.

நண்பர் - அப்படி ஒருவரை உங்களுக்குத் தெரியுமா?

அன்பர் - அப்படி வைத்துக் கொண்டால், அவர் சொல்லாத பொய் அவர் மனத்திலிருப்பதைப் பிரதிபலித்து

- பொய் மட்டும் சொல்லும் பிள்ளை, கணவன், தம்பி, இருப்பதை நான் கண்டபொழுது ஆச்சரியப்பட்டேன். அன்னை கூறுவதுபோல் பொறாமைப்படும் உடன்பிறந்தவர் நம் ஆழத்திலுள்ள பொய்யைப் பிரதிபலிக்கிறார். பொறாமை பொய்யைவிடக் கடுமையானது. கொடுமை பொறாமையின் சிகரம். இவற்றையெல்லாம் அன்னை எழுதியிருக்கிறார்.

நண்பர் - இவற்றையெல்லாம் அறிந்து திருவுருமாறுவது யோகம். இன்று பொறுப்பை ஏற்று, பிறர் பொய்யை அனுமதிக்காமல் செயல்பட்டால் அதிர்ஷ்டம் வரும். பிறகு,

அன்பர் - உள்ளேயுள்ள பொய் நிதர்சனமாகத் தெரியும்!

நண்பர் - ஆமாம், பொய்யை, பொறாமையை, கொடுமையை விலக்கிப் பெறும் அதிர்ஷ்டம் அன்னையை அறிவது.

அன்பர் - நம் இருளை, பொய்யை, அஞ்ஞானத்தை அறிவது?

நண்பர் - இருளும், பொறாமையும் எவ்வளவு இருந்தாலும், அன்னையை அறிந்த அதே நேரம் அது மறையும்.

அன்பர் - அதிர்ஷ்டம் அந்த நிலைக்கு நம்மைக் கொண்டு போகும்.

நண்பர் - தைரியமும் அதையே செய்யும்.

அன்பர் - மனிதன் அதிர்ஷ்டத்தை நாடுவான்.

நண்பர் - ஞானமும் அதைச் செய்யும்.

அன்பர் - அன்பும் செய்யுமல்லவா?

நண்பர் - ஏதாவது செய்யவேண்டும். நல்லதாகச் செய்ய வேண்டும். பெரியதாகச் செய்யவேண்டும். பேசுவது பயன் தாராது.

அன்பர் - No words,acts பேசாதே, வேலையைச் செய் என அன்னை கூறியுள்ளாரே.

நண்பர் - செய்யாதவரைக்கும் நாமே நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம். செய்தபின் நாம் நம் குறைகளை அறியலாம். அது அன்னையை அறிவதாகும். இக்கருத்தைத் தொகுத்துக் கூறினால்,

"கடந்த கால தவறுகளை இப்பொழுது செய்யாமல், நாம் வெற்றிகரமாகச் செய்த காரியங்களில் எடுத்துக் கொண்ட பொறுப்புடன், subconscious திறமையுடன், consciousஆகச் செயல்பட முடிவு செய்து முடிவை உள்ளே பூர்த்தி செய்வது, காலத்தைக் கடந்து காலத்துள் காலத்தை கடந்த நிலையில், தோல்வியில்லாமல், அதிர்ஷ்டமாகச் செயல்பட முடியும். பொறாமை, போட்டி, சுயநலம், பொய்மீது ஆசை, அறியாமைமீது பற்று அவ்வளவையும் கரைக்கா விட்டாலும், வெற்றிகரமான செயல் விலக்கி, அதிர்ஷ்டம் மூலம் அவை நம்முள் இருப்பதையும், அன்னை தரிசனத்தையும் தரும்.''

அன்பர் - புறத்தை அகமாக்குவதை விளக்கினால் தேவலை.

நண்பர் - புறத்தில் கற்பனைக்கு இடமுண்டு, தவறு நடக்கும். ஒரு காரியத்தைச் செய்து நஷ்டப்பட்டு காலம் கடந்து புத்தி வரும், அவசரம் கெடுக்கும், போட்டி போட முடியும், பொறுப்பில்லாமல் நடக்க முடியும்.

அன்பர் - ஏன், அகத்திலும் அவையிருக்குமே.

நண்பர் - அகத்தில் அவை நஷ்டம் வருமுன் தெரியும். புறத்தில் நஷ்டப்பட்டு அறிவதை அகத்தில் நஷ்டப்படாமல் தெரிந்து கொள்ளலாம்.

அன்பர் - எப்படித் தெரியும்?

நண்பர் - புறத்தில் தெரியாது, அகத்தில் தெரியும், புறக்கணிப்போம்.

அன்பர் - புறக்கணிப்பவன் புறக்கணிக்கப்படுவான்.

நண்பர் - முடிவுகள் முதல் கட்டத்தில் இல்லாவிட்டால் குறை, மனத்தில் குறையாகத் தெரியும். தெரிந்தபின் தவறு செய்பவன் செய்து கற்றுக் கொள்ள வேண்டும்.

2

+    -

1

+    +

-    -

3

-    +

4

 

அன்பர் - Being of the Becoming காலத்துள் கடந்ததை எப்படிப் பார்ப்பது?

நண்பர் - நாம் இயல்பாகச் செய்வது, காலத்திலிருப்பது, நிதானமாக அமைதியாகச் செய்வது, காலத்தைக் கடந்து செயல்படுவது. நிதானமாக அமைதியாகச் செயல்படும்பொழுது அதிகப் பூரிப்பு, ஆரவாரம் - ஆர்ப்பாட்டமல்ல - energy பொங்கி வருவது, Being of the Becoming, காலத்துள் கடந்தது. அன்பர் - செய்தால் பலிக்கும். செய்யப் பிரியப்படுபவருக்கும் பலனுண்டு. செய்பவர் அன்பர், பேசுபவர் கணக்கில் சேராதவர்.

நண்பர் - Time,Timelessness,Simultaneity காலம்,கடந்தது, காலத்துள் கடந்தது என்பது ஆன்மீகத் தத்துவம். அதையே Becoming,Being,Being of the Becoming என்று தத்துவமாகக் கூறலாம். இல்லறம், துறவறம், துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம் என்றும் கூறலாம். இந்தத் துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம் என்றும் கூறலாம். இந்த

தத்துவப்படி எப்படி அதிர்ஷ்டம் எல்லாப் பக்கங்களையும் நம்மைச் சூழ்ந்துள்ளது என அறியலாம்?

அன்பர் - உதாரணம் உதவும்.

நண்பர் - திருமணம் நடத்த ஏற்பாடு செய்தால், அது மனத்தில் பாரமாக இருக்கிறது. எத்தனைப் பேருக்கு எத்தனை விதமான பதில்கள் சொல்வது என்ற நிலை படபடப்பைக் கொடுப்பது அல்லது அவ்வளவையும் சமாளிக்க முடிவு செய்து உறுதியாக நிற்பது காலத்தில் செயல்படுவது. திறமைக்கேற்ப இதற்கு வெற்றி அல்லது தோல்வியுண்டு. இது நான் நடத்தும் 3ஆம் திருமணம் என்பதால் அனுபவத்தால் மனம் நிலையாக, நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பது மனம் காலத்தைக் கடந்துவிட்டது எனப் பொருள். நிம்மதி ஏராளமாக நிலையாக இருப்பதால், வேலைகளை எல்லாம் கவனிக்க கம்பனி ஆட்கள் இருப்பதால், பணம் பிரச்சினையில்லை என்பதால், வீட்டில் கேள்வி எழுப்ப எவருக்கும் தைரியமில்லை என்பதால், சம்பந்தி நம் நிலைக்குத் தாழ்ந்தவரென்பதால் அடக்கமாக இருப்பதால், மனம் குதூகலமாக, செய்ய வேண்டிய வேலையில்லாமல், விருந்தினரிடம் விளையாட்டாகப் பேசும் நிலை காலத்துள் கடந்த நிலை.

அன்பர் - பணம், கம்பனி, அந்தஸ்து எல்லாம் உள்ளவருக்கு இது.

நண்பர் - அன்னை இத்தனையும் கடந்தவர், இத்தனையும் அவருள் அடக்கம் என்பதை மனம் ஏற்றால் நாம்

காலத்துள் கடந்த நிலைக்கு மனத்தால் வந்துவிடுகிறோம். அதன்பிறகு எல்லாக் காரியங்களும் பணம், கம்பனி, அந்தஸ்து உள்ளவருக்கு நடப்பதுபோல் நடக்கும்.

அன்பர் - சில காரியங்கள் அப்படி அன்பருக்கு நடப்பதைக் கண்டுள்ளேன்.

நண்பர் - உலகில் பணமும், அந்தஸ்தும் செய்வதை அன்பருக்கு அன்னை செய்கிறார் என்பதை நடைமுறையில் காண்பது இது. இந்த மனநிலையில் செயல்பட்டவர் அதிர்ஷ்டத்தை அறிய முற்பட்டால்,

  • அதிர்ஷ்டம் தன்னை வெளிப்படுத்தும்.
  • அது அன்பரை நோக்கி வரும்.
  • அன்பர் கிறுக்கு, கிராக்கி செய்யக்கூடாது.

அன்பர் - உலகம் இந்தச் சூத்திரத்தை ஏற்குமா?

நண்பர் - உலகத்திற்கு இதைக் கொடுக்க விரும்பும் உரிமை நமக்கில்லை.

அன்பர் - உரிமை வந்தால், மார்க்கமிருக்கிறதா?

நண்பர் - இக்கருத்தைப் பிரித்துக் கூறலாம்.

  • 1. தோல்வியற்ற செயல் என்ற அடிப்படை.
  • 2. செயலுக்குத் தோல்வியில்லை என்பது அதிர்ஷ்டம்.
  • 3. அதிர்ஷ்டத்தைச் செயல் பெறுமுன் எண்ணமாகப் பெறவேண்டும்.

  • 4. எண்ணம் செயலாகுமுன் (will) உறுதியாகும் முடிவு.

அன்பர் - முடிவு முதற்கட்டத்திலிருக்க வேண்டும் என்றீர்கள்.

நண்பர் - நாம் நம் முடிவைப் பிறரிடம் கூறுகிறோம். நாமே நினைக்கிறோம். நினைத்ததைக் கூற முடியாமல் தவிக்கிறோம்.

- பிறரிடம் கூறும் முடிவு என்பது புறம் (தோல்வியும், வெற்றியும் கலந்தது). நாமே நினைப்பது அகம் - நிதானமானது, தோல்வியற்றது.

நாமே நினைப்பதை வெளியில் சொல்ல முடியாதது - பொய் கலந்தது.

நாமே நினைப்பதைத் தைரியமாகச் சொல்ல முடிவது - உண்மையான தோல்வியற்ற முடிவு.

உள்ளே போய் உண்மையான முடிவை எடுத்து, தயக்கமின்றி வெளியில் பேசக்கூடிய முடிவு அதிர்ஷ்டத்திற்குரியது.

- வெளியில் பேசுவது காலத்திற்குரியது. உள்ளே எடுக்கும் முடிவு காலத்தைக் கடந்தது. உள்ளே எடுத்த முடிவை வெளியில் சந்தோஷமாகப் பேசுவது.

காலத்துள் காலத்தைக் கடந்த முடிவு அதற்கு அதிர்ஷ்டம் எனப் பெயர்.

நம் வாழ்வில் இது போன்ற நடைமுறையை முக்கியமான செயல்களில் ஆரம்பித்து எல்லா முக்கியச் செயல்களிலும் உண்மையை, உள்ளே உணர்ந்த உண்மையை சந்தோஷமாக வெளியில் பேசுவது வாழ்வில்

அதிர்ஷ்டம் என்பதை வேரூன்றச் செய்யும்.

அது குடும்ப வாழ்வில் நிலையான பேரதிர்ஷ்டம். குடும்பத்தில் அடுத்தவர் ஒருவர் அதை மேற்கொள்வது கடினம். அனைவரும் மேற்கொள்வது எதிர்பார்க்க முடியாதது.

  • முக்கிய விஷயத்தில் உண்மை அதிர்ஷ்டமாகும்.
  • எல்லா முக்கிய விஷயங்களிலும் உண்மை நிலையான அதிர்ஷ்டம்.
  • அடுத்தவர் அதை ஏற்பது.
  • அனைவரும் குடும்பத்தில் அதை ஏற்பது.
  • நாம் எல்லா விஷயங்களிலும் அதிர்ஷ்டம் பெறுவதாகும்.

அன்பர் - பிரச்சினைகள் எல்லாம் மேல் மனத்திலிருக்கின்றது. ஸ்ரீ அரவிந்தர் கூறும் தீர்வுகள் எல்லாம் அடிமனத்தில் இருக்கின்றன. அடிமனம் ரிஷிகள் அறியாதது. நாமெல்லாம் சாதாரண மனிதர்கள்.

நண்பர் - அதுதான் உண்மை. நாகரீகம் வளரும்பொழுது அன்று பெரியவர்கட்குக் கிடைக்காதது இன்று எளியவர்க்குக்

கிடைக்கிறது. நமது பிரார்த்தனைகள் பலிப்பதெல்லாம் அடிமனத்தில்தான். ஒவ்வொரு முறை பலிக்கும் பொழுதும் நாம் அடிமனத்தைத் தொடுகிறோம்.

அன்பர் - அன்று அரசனை எவரும் கேட்க முடியாத கேள்விகளை இன்று மேடையில் எல்லோரும் கேட்கின்றனர். இருந்தாலும் ரிஷிகள் பெறாததை நாம் பெறுகிறோம் என்று நம்ப முடியவில்லை.

நண்பர் - அந்த உண்மையை அன்பருலகம் ஏற்க வேண்டும்.

 

 

ரிஷிகள் அடிமனத்தையறிவர். அவர்கள் யோகம் மேல்மனத்தோடு நின்றுவிட்டது. பூரணயோகம் அடிமனத்திற்குரியது. அன்னை நம்மை அடிமனத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

மேல்மனம் பிரச்சினைக்குரியது.

உள்மனம் பிரச்சினையில்லாதது.

அடிமனம் பிரச்சினையை வாய்ப்பாகக் காண்பது.

அதிர்ஷ்டம் மேல்மனம், உள்மனம் அறியாதது. அடிமனம் அறியும்.

நிதானம் உள்மனத்திற்குக் கொண்டு போகும்.

நிதானத்தின் அடிப்படையில் எழும் குதூகலம் அடிமனத்திற்குப் போகும்.

எந்தப் பிரச்சினையிலும் நிதானமாக, சந்தோஷமாக இருந்தால் அது தீரும். ஆழ்ந்த நிதானமும், பொங்கிவரும் சந்தோஷமும் அடிமனத்திற்கும், காலத்துள் காலத்தைக் கடந்த நிரந்தரச் சந்தோஷத்திற்கும் உரியன.

அன்பர் - என்ன செய்யக்கூடாது என்ற முறையில் உள்ளவை எவை?

நண்பர் - The Mother என்ற நூலில்,

  • 1. அருளை விலக்கும் 14 முறைகளையும்,
  • 2. நாம் விலக்க வேண்டிய 30 குணங்களையும்

சொல்கிறார். அவை விலக்கப்பட வேண்டியவை.

அன்பர் - 44 சொன்னால் என்ன செய்வது? சுருக்கமாகக் கூற முடியாதா?

நண்பர் - என்ன செய்ய வேண்டும் என்பது சுருக்கமானது.

அன்பர் - அது என்ன?

நண்பர் - ஆன்மீகப் பாஷையில் - மெய் மட்டும் சொல்லவேண்டும்.

அன்றாட மொழியில் - சந்தோஷம் பொங்கி வரவேண்டும்.

அன்பர் - நிதானம் வேண்டாமா?

நண்பர் - நிதானமில்லாமல் சந்தோஷம் எழாது.

அன்பர் - சுயநலமான சந்தோஷம் சரியாகுமா?

நண்பர் - அது சுயநலமான அதிர்ஷ்டம் தரும்.

அன்பர் - அதுவும் அதிர்ஷ்டம்தானே.

நண்பர் - அதுவே போதும் என்றால் சரி.

அன்பர் - பரநலமான சந்தோஷம் பெரிதல்லவா?

நண்பர் - அது வளரக் கூடியது. பிரச்சினையற்றது.

அன்பர் - சுயநலமான சந்தோஷத்திற்குப் பிரச்சினையுண்டா?

நண்பர் - பிரச்சினை பிறருக்கு, நமக்கில்லை. நல்லதும், கெட்டதும் கலந்து, நல்லது அதிகமாக இருக்கும்.

அன்பர் - சுயநலம் வேண்டாம்.

நண்பர் - மேல்மனம், உள்மனம் இரண்டிலும் சுயநலம் உள்ளது.

அன்பர் - பிறர் விஷயத்தில் சந்தோஷம் வந்தால் அதிர்ஷ்டம் வருமா?

நண்பர் - நிச்சயம் வரும். அதற்கு நல்லெண்ணம் எனப் பெயர்.

அன்பர் - நல்லெண்ணத்திற்கு அத்தனை சக்தியுண்டா?

நண்பர் - வாயால் பேசும் நல்லெண்ணமில்லை. மனம் உணரும் நல்லெண்ணம் சக்தி வாய்ந்தது.

அன்பர் - நமக்கெல்லாம் நல்லெண்ணமேயில்லையா?

நண்பர் - நமக்குள்ளது எண்ணம், நல்லெண்ணம் என்று கூற முடியாது.

அன்பர் - பிறர் நோக்கில் புரிவது எப்படி அதிர்ஷ்டத்திற்குப் பயன்படும்?

நண்பர் - தரித்திரம், வறுமை என்பது சிறுமை, சுயநலம். பரநலம் அதிர்ஷ்டம், பெரியது, சுபீட்சம். மனம் உற்பத்தியான பொழுது இருபுறமும் மாறிமாறிப் பார்க்கக் கூடிய கருவியாக ஏற்பட்டது. மனம் சத்தியஜீவியத்திலிருந்து பிறந்தது.

  • இருபுறமும் பார்க்கும்வரை சத்தியஜீவியத் தொடர்பு இருக்கும்.
  • மேல்புறம் பார்க்க மறுத்தால் அது அறுந்து போகும். அதுவே அறியாமையின் ஆரம்பம்.

  • பிறர் நோக்கத்தை மனம் ஏற்றால், அறியாமையை விட்டகன்று சத்தியஜீவியத்தை நோக்கிப் போக ஆரம்பிக்கிறோம்.
  • சத்தியஜீவியம் அதிர்ஷ்டம்.

தன் நோக்கம் சுயநலம், பிறர் நோக்கம் பரநலம். உலகத்து நோக்கம், பிரபஞ்சத்து நோக்கம், பிரம்மாவின் நோக்கம் என மனம் விரிவதன் முதற்படி பிறர் நோக்கம்.

அன்பர் - உதாரணம் தர முடியுமா?

நண்பர் - இலட்ச ரூபாய் இன்றைய கோடிக்குச் சமம் என்ற நாட்களில் அறிவில்லாமல் ஒரு இலட்சத்தை முதலீடு செய்து, முழுவதும் இழந்தவர் ஒருவர். அவர், அடுத்தவர் தம்மால் பயன்பட நினைத்தார். நினைவின் விளைவாக,

  • 1. இழந்த முதல் முழுவதும் (2 ஆயிரம் குறைவாக) காப்பாற்றப்பட்டது.
  • 2. 3 ஆண்டுகளில் புது முதலீடு 18 மடங்கு பெருகியது.
  • 3. வானம் திறந்து வையகம் தெரியும்படி அவருடைய முதலைப்போல் 960 மடங்கு ஆண்டு வருமானம் உள்ள திட்டம் அவர் கைக்கு வந்தது.

அன்பர் - அது பலித்ததா?

நண்பர் - பெரிய வருமானம் கண்ணுக்குத் தெரிந்ததும் அன்பர் அன்னைக்கு எதிரானவற்றைச் செய்ய ஆரம்பித்தார். பிறர் பலன் பெறக் கூடாது என்று நினைத்தார். விஷயம் தலைகீழே போயிற்று.

அன்பர் - இன்றைய நிலை என்ன?

நண்பர் - அன்றைய மூலதனம் இன்று 480 மடங்கு அதிகரித்துள்ளது. வருமானம் சொற்பம். மூலதனத்திற்குச் சமமான வருமானம்.

அன்பர் - மனை விலைபோல ஏறுகிறதே!

நண்பர் - மனம் பிறர் நோக்கை ஏற்றால் சொத்து. மனை விலை போல ஏறுவது அன்பர் அனுபவம்.

அன்பர் - அதிர்ஷ்டம் புரியும் என்றீர்களே.

நண்பர் - மனம் சுயநலமானால் வாழ்வு தரித்திரம் எனப் புரியும். மனம் பிறர் நோக்கை ஏற்றால் வாழ்வு அதிர்ஷ்டமயமானது எனப் புரியும்.

அன்பர் - புரிந்தால்?

நண்பர் - வழி ஏற்படும். மீதியைச் செயல்படுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அன்பர் - கீதை வழி பேசலாம் என்பது?

நண்பர் - நாம் எதை நாடுகிறோமோ அதையடையலாம் என்பது கீதை.

அன்பர் - அது முடியுமா?

நண்பர் - மனம் சத்தியமானால் நாடியது பலிக்கும்.

அன்பர் - அப்படிப் பலித்ததற்கு உதாரணம் உண்டா?

நண்பர் - உதாரணம் தேவைப்படுவது சிறிய மனம். சிறிய மனத்திற்குச் சிறியது உண்டு. கீதை கூறுவது பக்குவமான ஆத்மாவுக்கு. அனைத்தும் அறிந்து ஆபத்தை விரும்பி ஏற்பவனுக்குச் சொல்லிய சொல் இது.

அன்பர் - அது நமக்கு எப்படிப் பலிக்கும்?

நண்பர் - நாம் 500மைல் வேகத்தில் பறக்கலாம் என்றால், பறப்பது விமானம், நாமல்ல. அன்னையை ஏற்றுக் கொண்டால் அவர் ஆபத்தை விரும்பி நாடிப் போவார். அவர் சாதிப்பார். நாமல்ல.

அன்பர் - பயமாயிருக்கிறது.

நண்பர் - பயப்பட்டால் தூரப் போகவேண்டும். பயத்தைக் கண்டுதான் பயப்பட வேண்டும் என்பது சொல்.

அன்பர் - நீங்கள் கூறும் அதிர்ஷ்டம் நமக்கெல்லாம் இல்லையா?

நண்பர் - விமானப் பயணம் நமக்கு எந்த அளவில் உண்டோ. அந்த அளவில் அதிர்ஷ்டமும் உண்டு. இன்று நாம் வறுமையில் வாடுகிறோம் என்றால் கீதை வறுமையை நாம் வருந்தி அழைத்தோம் என்கிறது.

அன்பர் - புரியவில்லை.

நண்பர் - எதை நாடினாலும் அது கிடைக்கும்.

எது கிடைத்ததோ அதை நாடினோம் என்பவை ஒன்றன்றோ! இந்த ரகஸ்யம் புரிந்தால் நிலைமை மாறும்.

அன்பர் - முதல் சொல்லியது புரியவில்லை. இது புரியவேயில்லை.

நண்பர் - மனிதன் நினைத்ததைச் சாதிப்பான். சாதித்தபடி இருக்கிறான். எதை நினைத்தாலும் அதைச் சாதிப்பான். இன்று உள்ள நிலை அப்படிச் சாதித்ததே.

அன்பர் - ஒரு வகையில் ஓரளவு புரிகிறது.

அன்பர் - புரிவது என்பது உணர்வுக்குப் புரியவேண்டும். புரிவது பூர்த்தியானால், பலிப்பது முழுமையாகும்.

*******



book | by Dr. Radut