Skip to Content

ஹிருதய சமுத்திரம்

 

  • அகந்தையற்ற   பார்வைக்கு   உலகம்   சமுத்திரமான   சக்தியாகக் காட்சியளிக்கும்.
  • நமக்கு  சமுத்திரம்  பொருட்டல்ல.  சமுத்திரத்திற்கு  நாம்  முக்கியம்.
  • நாம்  நம்  வாழ்வை  சமுத்திரத்தின்  கையில்  ஒப்படைத்தால்  நம் வாழ்வுக்கு  சமுத்திரத்தின்  முழுத்  திறன்  வரும்.
  • நெடுநாள்   கழித்துப்   பிறந்த   குழந்தைக்குக்   குடும்பத்தில் அனைவரும் முழு ஆதரவு தருவதுபோல், நம் வாழ்வு இறைவனால் நடத்தப்படும்..
  • ஓரளவுக்கு  நாம்  நம்  வாழ்வை  குடும்பத்திடம்  ஒப்படைக்கிறோம்.
  • ஒரு  குழந்தை  குடும்பமில்லாமல்  வளராது,  உயிரோடிருக்காது.
  • குடும்பத்தில்  எவரும்  கவனிக்காமல்  ஒரு  குழந்தை  வளர்ந்தால் அது  எப்படியிருக்கும்?
  • நாம்  சமூகத்தைப்  பல  விஷயங்களிலும்  நம்பியிருக்கிறோம்.
  • நாம்  பயன்படுத்தும்  எல்லாப்  பொருள்களும்  சமூகம்  நமக்காக உற்பத்தி  செய்வதாகும்.
  • சமூகத்தில்   மேல்   மட்டத்திலுள்ளவர்   செல்வாக்கு   நமக்குத் தெரிகிறது.
  • சமூகத்தின்   உச்சியிலுள்ள   அனைவரும்   நம்மை   முன்னுக்குக் கொண்டு   வரப்   பாடுபட்டால்   நாம்   எவ்வளவு   உயர   முடியுமோ, அந்த  அளவுக்கு  சமூகத்தை  நாம்  மனதால்  ஏற்றுக்  கொண்டால் முன்னேறலாம்  என  நமக்குத்  தெரியாது.
  • நாம்  மூச்சு  விடும்  காற்று  பூமாதேவியின்  ஆடை.
  • நாம்   பூமாதேவியின்   மீது   நடந்து   செல்வதை   அவள்   நம் அரவணைப்பாக  ஏற்கிறாள்.
  • நாம்   அதுபோல்   பூமாதேவியையோ,   சமூகத்தையோ   மனதால் அறிவதில்லை.
  • எந்த  அளவுக்கு  நாம்  பூமியின்  பகுதி,  எந்த  அளவு  சமூகத்தின் பகுதியென   மனதால்   அறிந்து,   உணர்ந்து,   ஏற்றுக்கொண்டால், மனிதனுக்கு  அளவுகடந்த  முன்னேற்றம்  உண்டு.
  • இன்று   உலகிலுள்ள   அவ்வளவு   கல்வியும்   நமக்குப்   பாடமாக, செய்தியாகக்  கிடைக்கிறது.
  • உலகம்   நம்மை   ஏற்ற   அளவுக்கு   நாம்   உலகை   ஏற்றால்   நாம்   பெறும் முன்னேற்றம்  அளவு  கடந்தது.  உலகின்  உச்சியிலிருப்போம்.
  • அரசியல்   நமக்கு   அளித்துள்ள   உரிமை,   வியாபாரம்   நமக்கு வழங்கும் பொருள்கள், சமூகம் கொடுக்கும் வசதிகள் என்ன என்று அறிந்து   அதே   அளவுக்கு   நாம்   மலர்ந்து,   மனம்   உவந்து சமூகத்தை   மனதால்   ஏற்றால்,   நாம்   இன்றுள்ள   நிலையில் இருக்கமாட்டோம்.

******



book | by Dr. Radut