Skip to Content

புத்தகத்திற்கும் BBC திரைப்படத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்

 

  • டார்சியும், பிங்கிலியும் நெதர்பீல்டைக் காண்பதற்காக,குதிரையில் வந்து, அந்த இடத்தைப் பற்றி அவர்களுடைய மாறுபட்ட கருத்தைக் கூறுகிறார்கள். புத்தகத்தில், பிங்கிலியின் வருகையைப் பற்றி திருமதி. லாங்கிடமிருந்து திருமதி. பென்னட் கேள்விப்படுகிறாள்.
  • அவர்கள் இருவரையும் எலிசபெத் குதிரையின் மேல் பார்க்கிறாள். புத்தகத்தில், அவர்களை, நடன அரங்கில் முதல் முறையாக அவள் காண்கிறாள்.
  • எலிசபெத் வீடு திரும்பும் பொழுது, லிடியாவும், கிட்டியும் சண்டையிடுவதைக் காண்கிறாள். அவள் தகப்பனாரைப் பார்த்து புன்னகை புரிகிறாள். திருமதி. பென்னட், ஜேனையும், எலிசபெத்தையும், அழைக்கிறாள். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசயம் இருந்தாலும் இக்காட்சி புத்தகத்தில் விவரிக்கப்படவில்லை.
  • குடும்பத்தினர் சர்ச்சிலிருந்து திரும்பும் பொழுது, திருமதி.பென்னட் பிங்கிலியைப் பற்றி, அவர்களிடம் கூறுகிறாள். கிட்டியும், லிடியாவும், பிங்கிலி அவர்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உத்வேகத்துடன் கூறுகிறார்கள். திரு.பென்னட், திருமதி.பென்னட்டை பரிகாசம் செய்வதைப் பார்த்து லிடியா கேலியாகச் சிரிக்கிறாள். இதை எலிசபெத் கண்டிக்கிறாள். திருமதி.பென்னட், ஹில்லிடம்,திரு.பென்னட்டை பற்றி புகார் செய்கிறாள். திரு.பென்னட் தன்னை மனதில் வைத்துக் கொண்டு, முட்டாள் பெண்களை மணம் புரிந்த ஆண்களைப் பற்றி பரிகாசமாகப் பேசுகிறார். ஆனால் புத்தகத்தில், எப்பொழுது, எங்கு திருமதி. பென்னட் அவளது கணவனிடம் கூறினாள் என்றோ, அப்பொழுது பெண்கள் அங்கு இருந்தார்கள் என்றோ குறிப்பிடப்படவில்லை. பெண்கள் பிங்கிலியைப் பற்றி விவாதித்த விவரங்களும் புத்தகத்தில் கூறப்படவில்லை.
  • திருமதி. பென்னட் பெண்களுக்கு எதிராகவே, தனக்கு புதல்வர்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகிறாள். புத்தகத்தில் அவள் அது போல் சொல்வதில்லை.
  • மேரி, வாழ்க்கையின் கஷ்டங்களைப் பற்றி வேதாந்தமாகப் பேசுகிறாள். லிடியா தனக்குப் பசிப்பதாகக் கூறுகிறாள். ஜேனும், எலிசபெத்தும், திருமணம் பற்றிய எதிர்பார்ப்புகளையும், சாத்தியங்களையும் பேசுகிறார்கள். எலிசபெத், உறங்கச்செல்வதற்கு முன் குடும்பத்தினரிடம், விடை பெறுகிறாள். திரு.பென்னட், கணக்கு வழக்குகளைப் பார்க்கிறார். குடும்பத்தினரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் இவை எதுவும் புத்தகத்தில் இல்லை.
  • பிங்கிலியும் அவனைச் சேர்ந்தவர்களும், ஹர்ட்போர்ட்ஷயருக்கு வந்து சேர்ந்த விஷயத்தை கிட்டியும், லிடியாவும் குடும்பத்தினருக்கு கூறுகிறார்கள். ஆனால் இந்த விஷயம் எப்படி குடும்பத்தினருக்குப் போய் சேருகிறது என்பதைப் பற்றி புத்தகத்தில் விவரிக்கப்படவில்லை.
  • கட்டிடத்தில் நுழைவதற்கு முன்பு, மெரிடன் நடன அரங்கில் உள்ள கூட்டத்தைப் பற்றி கரோலின் டார்சியிடம் விமர்சிக்கிறாள். கரோலினும் அவளது சகோதரியும் அகந்தையும், வெறுப்பும் கொண்டிருந்தனர் போல் தோன்றுகிறார்கள். ஆனால் அவர்கள், எதுவும் கூறுவதாக புத்தகத்தில் இல்லை.
  • புதிதாக வந்தவர்களை சர் லூகாஸ் வரவேற்கிறார். புத்தகத்தில், பிங்கிலியும், உடன் வந்தவர்களும் முதல் நடனத்தில் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் வந்த பொழுது அவர்களை யார் வரவேற்கிறார்கள் என்று குறிப்பிடப்படவில்லை.
  • புதிதாய் வந்தவர்களைப் பற்றி சார்லெட் அவளது நண்பர்களிடம் தெரிவிக்கிறாள். பிங்கிலியைப் பற்றி அனைத்து விஷயங்களையும் எல்லா அக்கம் பக்கத்தினரும் அறிந்திருந்தாலும் அவர்களைப் பற்றிய தகவலின் மூலம் புத்தகத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை.
  • திருமதி. பென்னட் உற்சாகத்துடன் ஜேனையும் எலிசபெத்தையும் அழைத்து டார்சியைப் பற்றிக் கூறுகிறாள். டார்சியின் நல்ல தோற்றத்தைப் பற்றி திருமதி.பென்னட் கூறியதற்கு, டார்சி அவ்வளவு பணக்காரனாக இருந்திராவிட்டால், அவ்வளவு அழகானவனாக இருக்கமாட்டான் என்று எலிசபெத் கூறுகிறாள். சர் லூகாஸ் பிங்கிலியை, திருமதி. பென்னட்டிடம் அழைத்து வருகிறார். அவள், ஜேனுக்கும், எலிசபெத்திற்கும் பிங்கிலியை அறிமுகப்படுத்துகிறாள். திருமதி.பென்னட் டார்சியிடம் ஒரு உரையாடலை ஆரம்பிக்கிறாள். ஆனால் அவனோ தீடீரென அங்கிருந்து அகன்று விடுகிறான். அவன் காதில் கேட்கும்படி அவள் அவனை திட்டுகிறாள். கட்டிடத்திற்கு வெளியே வண்டி ஒட்டுனர்கள் கேளிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக காண்பிக்கப்படுகிறது. மேரி எலிசபெத்திடம், நடனத்தைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கிறாள். நடனம் ஆடாமல் இருந்ததற்காக, வீட்டிற்குத் திரும்பியவுடன் கிட்டியும், லிடியாவும் மேரியை பார்த்து சிரிக்கின்றனர். புத்தகத்தில் இவை எதுவும் கூறப்படவில்லை.
  • எலிசபெத்தை டார்சி உதாசீனப்படுத்தியது பற்றி, திரு.பென்னட் ஆச்சரியம் அடைகிறார். அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை எனக் கூறுகிறாள். பிறகு எப்பொழுதேனும் அவளை டார்சி நடனமாட அழைத்தால், அவள் அவனுடன் நடனமாடக்கூடாது என்ற திருமதி. பென்னட்டின் யோசனைக்கு, ஒருபொழுதும் அவனுடன் சேர்ந்து நடனம் ஆடமாட்டேன் என்று உறுதி அளிக்கிறாள். புத்தகத்தில் நடனம் முடிந்து, லாங்பர்ன் திரும்பியதும் திருமதி.பென்னட், திரு.பென்னட்டிடம், டார்சியின் அவமதிப்பை விவரித்தபொழுது அவருடைய மற்றும் எலிசபெத்தின் உணர்ச்சிகளைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.
  • ஹர்போர்ட்ஷயரில் உள்ள பெண்களைப் பற்றிய டார்சியின் கருத்தை கரோலின் கேட்கிறாள். திருமதி.பென்னட் மற்றும் அவளது இளைய மகள்களைப் பற்றி அவர்கள் கேலியாகப் பேசுகிறார்கள். பிங்கிலியும், டார்சியும், ஒருவர் மற்றவருடைய அணுகுமுறையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். ஹர்ஸ்ட் தீடீரென உறக்கத்திலிருந்து எழுந்து மாலை நிகழ்வுகளைப் பற்றிய அவருடைய பிரத்யேகமான கருத்துகளைக் கூறுகிறார். புத்தகத்தில் பிங்கிலியும், டார்சியும் நடனத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள். பிங்கிலியின் சகோதரிகளின் குணம் அவ்வாறு இருந்தாலும் கூட அவர்கள் பென்னட் வீட்டு மகளிரைப் பற்றி கேலியாகப் பேசுவதாக, புத்தகம் விவரிக்கவில்லை.
  • சர் லூகாஸ், பிங்கிலியின் சகோதரிகளை அங்கு கூடியிருப்பவர்களுக்கு அறிமுகம் செய்ய விழையும்பொழுது அவர்கள் மனவருத்தம் அடைகிறார்கள். அவருக்குப் பின்னால் அவர்கள் சிரிக்கிறார்கள். டார்சியின் மீது பரிதாபப்படுகிறார்கள். இவைகளைப் பற்றி புத்தகத்தில் ஒன்றும் எழுதப்படவில்லை.
  • எலிசபெத் கர்னல் பார்ஸ்டரை, ஹர்ட்போர்ஷயருக்கு எதற்காக வந்துள்ளீர்கள், அதிருப்தியை குறைப்பதற்காகவா அல்லது பிரஞ்சுக்காரர்களை எதிர்த்துக் காப்பாற்றிக் கொள்ளவா என்று கேட்கிறாள். இந்த உரையாடலைப் பற்றிய விவரம் புத்தகத்தில் இல்லை.
  • கிட்டி, லிடியா மற்றும் திருமதி.பென்னட், நடன அரங்கில், வேகம் குறைந்த இசையை வழங்கியதற்காக மேரியை விமர்சிக்கிறார்கள். கிட்டியும், லிடியாவும் தாங்கள் நடனம் ஆடுவதற்காக ஏதேனும் வாசிக்குமாறு மேரியை வேண்டுவதாக புத்தகத்தில் உள்ளது.
  • லிடியாவை நடன அரங்கில் கட்டுப்படுத்துவதற்காக அவளை நோக்கி எலிசபெத் வரும் பொழுது, சர் லூகாஸ் டார்சியை எலிசபெத்துடன் நடனமாட வைக்க முயற்சிக்கிறார். புத்தகத்தில் எலிசபெத், டார்சியையும், சர் லூகாஸையும் கடந்து செல்கிறாள். அதற்கான காரணம் கூறப்படவில்லை.
  • தன்னை குதிரைமீது பயணம் செய்ய தன் தாயார் திட்டமிடுவது பற்றி, ஜேன் அதிர்ச்சி அடைகிறாள். ஜேனுடைய உணர்ச்சிகளைப் பற்றி புத்தகத்தில் விவரிக்கப்படவில்லை. தாயார் ஆணை இடுகிறாள். ஜேன் கீழ்ப்படிகிறாள்.
  • பிங்கிலியின் சகோதரிகள் ஜேனிடம் அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கும் பொழுது, அவள் மயக்கம் அடைகிறாள். புத்தகத்தில் தனக்கு உடல் நலம் சரியில்லை என்ற ஜேனின் குறிப்பு அவளது பெற்றோருக்கு கிடைக்கிறது. ஜேன் நெதர்பீல்ட் போய் சேர்ந்தவுடன் என்ன நடக்கிறது என்று விவரிக்கப்படவில்லை.
  • இராணுவ அதிகாரிகளைக் காண, கிட்டி, லிடியாவுடன் மெரிடனுக்குச் செல்லுமாறு எலிசபெத்திடம் திருமதி.பென்னட் கூறுகிறாள். புத்தகத்தில், திருமதி.பென்னட் எலிசபெத்திடம் அசுத்தத்தில் நடந்து சென்றால், அவள் பார்ப்பதற்குத் தகுதியானவளாக இருக்கமாட்டாள் எனக் கூறுகிறாள். ஆனால் வேறு ஆலோசனை ஒன்றும் கூறவில்லை.
  • கிட்டியும், லிடியாவும் அதிகாரிகளைச் சந்திப்பது குறித்து உற்சாகத்துடன் இருக்கிறார்கள். திரு.பென்னட் அவர்களை அற்பத்தனமானவர்கள் என்கிறார். புத்தகத்தில் திரு.பென்னட்டின் உணர்ச்சிகளைப் பற்றி ஒன்றும் கூறப்படவில்லை.
  • எலிசபெத் ஜேனுக்கு உதவி செய்வதற்காக நெதர்பீல்ட் வந்து சேர்ந்தபொழுது டார்சி மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறான். ஜேனைத் தவிர மற்ற அனைவரும் இருந்த, காலைஉணவு உண்ணும் இடத்திற்கு, எலிசபெத் வருவதாக புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
  • பிங்கிலியைத் தேடிச் சென்ற எலிசபெத், பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்த டார்சியைச் சந்திக்கிறாள். எலிசபெத் எதிப்பாராதவிதமாக டார்சியைச் சந்திப்பது போல் புத்தகத்தில் எழுதப்படவில்லை.
  • இது ஒரு நல்ல ஏற்பாடு இல்லையா என்று கிட்டியையும் லிடியாவையும் கேட்டவாறு, திருமதி. பென்னட் நெதர்பீல்டில் நுழைகிறாள். அங்கு நுழையும் பொழுது திருமதி.பென்னட் எதுவும் குறிப்பிடுவது போல் புத்தகத்தில் இல்லை.
  • திருமதி. பென்னட்டின் வருகை குறித்து, கரோலின் புகார் செய்கிறாள். கரோலின் நிச்சயமாக சந்தோஷமாக இல்லை. ஆனால் அவளுடைய விமர்சனத்தைப் பற்றி குறிப்பு எதுவும் புத்தகத்தில் இல்லை.
  • டார்சி குளித்துவிட்டு நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கும் எலிசபெத்தை ஜன்னல் வழியாகக் காண்கிறான். புத்தகத்தில் இது இல்லை.
  • ஜேனும், எலிசபெத்தும் லாங்க்பர்ன் செல்லும் வண்டியை டார்சி காண்கிறான். எலிசபெத்துடன் இணைத்து அவனை கரோலின் கேலி செய்கிறாள். கரோலின் டார்சியை மிகவும் கேலி செய்வதாக புத்தகத்தில் இருந்தாலும், இந்த குறிப்பிட்ட காட்சி விவரிக்கப்படவில்லை.
  • நெதர்பீல்டை விட்டுச் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக ஜேனிடம் எலிசபெத் ஒத்துக் கொள்கிறாள். அங்கிருந்து புறப்படுவது மகிழ்ச்சி அளித்தாலும் எலிசபெத் ஒன்றும் கூறுவதாக புத்தகத்தில் கூறப்படவில்லை.
  • காலின்ஸின் கடிதத்தை திரு.பென்னட் படித்துக் காட்டியபொழுது , லிடியா கேலியாகச் சிரிக்கிறாள். ஜேன், எலிசபெத் மற்றும் லிடியா கேலியாகச் சிரிப்பதாகவும் இரவு உணவு உண்ணும் பொழுது காலின்ஸை வெறுப்புடன் பார்ப்பது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், பெண்களுக்கு அவனைக் கண்டால் கேலியாக இருந்தாலும், அவர்கள் வெளிப்படையாகச் சிரிப்பது போல் எழுதப்படவில்லை.
  • எலிசபெத்துடன் மெரிடனுக்குத் தானும் வரட்டுமா என்று காலின்ஸ் கேட்கிறான். புத்தகத்தில், பென்னட் தம்பதிகள் அவனை பெண்களுடன் போகச் சொல்லி ஊக்குவிப்பது போல எழுதப்பட்டுள்ளது.
  • மெரிடனில் தெருவின் ஒரு புறத்திலிருந்து டென்னியை லிடியா அழைப்பதற்கு ஜேன் கோபித்துக் கொள்கிறாள். புத்தகத்தில் ஜேன் அவ்வாறு செய்யவில்லை.
  • லிடியா, விக்காமை, திருமதி.பிலிப்ஸ் வீட்டிற்கு அழைக்கும் பொழுது, மேரியும், காலின்ஸூம் ஆட்சேபிப்பது போல் பார்க்கிறார்கள், புத்தகத்தில் அது போல் இல்லை.
  • சீட்டு விளையாடுவதற்கு முன் காலின்ஸ் எலிசபெத்திடம் அனுமதி கேட்கிறான். புத்தகத்தில் அப்படி கேட்பதில்லை.
  • விக்காம் எலிசபெத்துடன் தனியாக இருக்கிறான். புத்தகத்தில் எலிசபெத்திற்கும் லிடியாவுக்கும் இடையில் அமர்ந்து சீட்டாடிக் கொண்டு டார்சியைப்பற்றி பேச ஆரம்பிக்கிறான்.
  • சமீப காலத்தில் விக்காம் நடனம் ஆடாததால், எலிசபெத் அவன் மீது அனுதாபப்படுவது குறித்து அவன் லிடியாவிடம் கேலி செய்கிறான். இந்த உரையாடல் புத்தகத்தில் இல்லை.
  • விக்காமைப் பிடித்திருக்கிறதா, என்று ஜேன் எலிசபெத்தைக் கேட்கிறாள். அவள், பிடித்திருப்பதாக ஒத்துக் கொள்கிறாள். புத்தகத்தில் ஜேன் எலிசபெத்திடம் வெளிப்படையாக இந்த கேள்வியைக் கேட்பதில்லை.
  • காலின்ஸ், எலிசபெத் மற்றும் விக்காம், லாங்க்பர்னில் ஒன்றாக நடந்துச் செல்லும் பொழுது ஜேன், காலின்ஸை தனியே அழைத்துச் சென்று, விக்காமையும் எலிசபெத்தையும் தனியே விடுகிறாள். அவன் டார்சியைப் பற்றி தொடர்ந்து பேசுகிறான். புத்தகத்தில் இந்த உரையாடல் திருமதி. பிலிப்ஸ் வீட்டில் நடப்பதாக உள்ளது.
  • நெதர்பீல்ட் நடனத்திற்கு முன்பு, திருமதி.பென்னட் எலிசபெத்தின் தோற்றத்தைப் புகழ்கிறாள். காலின்ஸிடம் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறாள். லிடியா, பாதி அலங்காரத்தில் எலிசபெத் அறைக்குச் செல்லும் வழியில் காலின்ஸைச் சந்திக்கிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • எலிசபெத் நடனத்திற்காக நெதர்பீல்டில் நுழையும் முன்பே, டார்சியும் எலிசபெத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். நடனத்தில் காலின்ஸ் செய்த தவறுகளைக் கண்டு டார்சி புன்னகை புரிகிறான். மேரி நெதர்பீல்டில் பாடும் பொழுது, வெளியில் நாய்கள் குரைக்கின்றன. புத்தகத்தில் இவை இல்லை.
  • நடன அரங்கில், திருமதி.பென்னட் திருமதி.லூகாஸிடம், காலின்ஸ் முதலில் ஜேனை விரும்பினான் எனவும், பின்னர் எலிசபெத்திடம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக கூறுகிறாள். புத்தகத்தில் திருமதி.பென்னட் இது போல் கூறுவதில்லை.
  • எலிசபெத் காலின்ஸை மறுத்தபின், அவனை வீட்டிற்கு அழைக்க வேண்டுமா என்று சார்லெட் கிட்டியையும் லிடியாவையும் கேட்பதற்கு அவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். காலின்ஸ், சார்லெட்டுடன், லூகாஸ் லாட்ஜிற்குச் செல்கிறான். புத்தகத்தில், சார்லெட் காலின்ஸை பிரத்யேகமாக அழைக்கவில்லை. அந்த நாளைக் கழிப்பதற்காக அவள் லாங்க்பர்ன் வருகிறாள். மற்றொரு நாள் பென்னட் குடும்பத்தினர் லூகாஸ் குடும்பத்தினருடன் உணவு உண்கிறார்கள். அப்பொழுதுதான் சார்லெட் காலின்ஸின் சம்மதத்தைப் பெறுகிறான்.
  • சார்லெட்டின் திருமணம் நிச்சயமானது பற்றி, கிட்டி, லிடியா மூலம் எலிசபெத் அறிகிறாள். எலிசபெத் சார்லெட் வீட்டிற்குப் போகிறாள் அங்கு சார்லெட் தன் முடிவை எலிசபெத்திற்கு விளக்குகிறாள். புத்தகத்தில் சார்லெட் எலிசபெத்திடம் சென்று தெரிவிப்பதாக உள்ளது.
  • திருமணம் நிச்சயமானது எலிசபெத்திற்குத் தெரிந்த பொழுது, காலின்ஸ் ஹர்ட்போர்ட்ஷயரில் இருக்கிறான். சார்லெட்டின் கையைப் பிடித்துக் கொண்டு தன் மகிழ்ச்சியைப் பற்றி காலின்ஸ், எலிசபெத்திடம் பேசுகிறான். புத்தகத்தில் காலின்ஸ் ஹன்ஸ்போர்டிற்குப் புறப்படுகிறான். அதற்குப் பிறகு சார்லெட், செய்தியை வெளியிடுவதாக உள்ளது.
  • சார்லெட்டின் நடத்தையை ஜேன் நியாயப்படுத்துகிறாள். அவளும், எலிசபெத்தும், பிங்கிலி, விக்காம் மேல் உள்ள தங்களது பாரபட்சத்தை குறித்து ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்கிறார்கள். அப்பொழுது பிங்கிலி குடும்பத்தினர் புறப்படுவது பற்றிய கரோலின் கடிதம் வருகிறது. புத்தகத்தில் இவை காணப்படவில்லை.
  • புத்தகத்தில் எலிசபெத், விக்காமை லாங்க்பர்னுக்கு அழைத்து வந்த பிறகு கரோலினினுடைய கடிதம் வருவதாக உள்ளது. அதற்குப் பிறகு சார்லெட்டின் திருமணம் நிச்சயமான செய்தி அறிவிக்கப்படுகிறது. திரைப்படத்தில் சார்லெட்டிற்குத் திருமணம் நிச்சயமாகிறது. கரேலினினுடைய கடிதம் வருகிறது. பிறகு விக்காம் லாங்க்பர்னிற்கு வருகிறான்.
  • எலிசபெத்திடம், காலின்ஸ் விடுத்த திருமண வேண்டுகோளைப் பற்றிய பேச்சை விக்காம் எழுப்புகிறான். புத்தகத்தில் அவன் அதைக் கூறுவதில்லை.
  • திரு.பென்னட், விக்காம் பொய் சொல்வதாகவும், டார்சி நல்லவனாக இருப்பான் என்றும் கூறுவதை குடும்பத்தினர் விவாதிக்கின்றனர். குடும்பத்தில் உள்ள எல்லா பெண்களும் விக்காம் கூறுவதை நம்பினாலும் இந்த காட்சி புத்தகத்தில் இல்லை.
  • ஜேன், கார்டினர் குடும்பத்துடன் லண்டன் போகலாம் என எலிசபெத் ஆலோசனை கூறுகிறான். புத்தகத்தில் திருமதி.கார்டினர் கூறுவதாக உள்ளது.
  • விக்காமை, திருமதி.கார்டினருக்கு அறிமுகப்படுத்த எலிசபெத் வரும் பொழுது திருமதி.பென்னட் கோபத்துடன் வெளியேறுகிறாள். சார்லெட், எலிசபெத்தை ஹன்ஸ்போர்டிற்கு அழைத்த பொழுது, ரோஸிங்ஸ் பார்க் செல்ல விரும்புவதாக எலிசபெத் வேடிக்கையாக கூறுகிறாள். எலிசபெத், தன்னுடன் ஹன்ஸ்போர்டு வருவது பற்றி மரியா லூகாஸ் மகிழ்ச்சி அடைகிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • திருமதி.கார்டினர் முன்னிலையில், மேரி கிங் யார் என்று மரியா சார்லெட்டைக் கேட்கிறாள். புத்தகத்தில் திருமதி.கார்டினர் லண்டனுக்குப் புறப்பட்டபின், விக்காம், கிங்கிடம் வருகிறான். எலிசபெத் இது பற்றி தன் அத்தைக்கு கடிதம் எழுதுகிறாள்.
  • விக்காமை, அவனுக்கு கிங்குடன் நடக்க இருக்கும் திருமண நிச்சயதார்த்தத்திற்க்காக எலிசபெத் பாராட்டுகிறாள். அவன் மன்னிப்பு கலந்த உணர்வுடன் அவன் நிலைமையை விவரிக்கிறான். அவள் சிரிக்கிறாள். புத்தகத்தில் இவை இல்லை.
  • எலிசபெத்தும் ஜேனும் திரும்பும் வரை, புத்திசாலித்தனமான பேச்சு ஒன்றும் வீட்டில் கேட்கமுடியாது என்று திரு.பென்னட் எலிசபெத்திடம் கூறுகிறார். புத்தகத்தில் இது இல்லை.
  • பிரயாணத்தின் பொழுது லேடி காதரினுடைய செல்வத்தைப் பற்றியும் சார்லெட்டின் பொருத்தத்தைப் பற்றியும் சர் லூகாஸ், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறார். புத்தகத்தில் அவருடைய உணர்வுகளை வெளிப்படையாகப் பேசுவது போல விவரிக்கப்படவில்லை.
  • சார்லெட், எலிசபெத் மற்றும் மரியா நடந்து செல்லும் பொழுது எதிரில் வந்த காலின்ஸ், டார்சியை வரவேற்பதற்காக அவர்களை பார்சனேஜூக்குத் திரும்புமாறு கூறுகிறான். புத்தகத்தில், டார்சியுடன், தன் கணவன் ரோஸிங்ஸ் பார்க்கிலிருந்து திரும்புவதைக் கண்ட சார்லெட், எலிசபெத்திற்கும், மரியாவுக்கும் தெரிவிக்கிறாள்.
  • எலிசபெத்திற்கும், கர்னல் பிட்ஸ்வில்லியமிற்கும் ஹன்ஸ்போர்டில் முதல் சந்திப்பில் நிகழ்ந்த உரையாடல் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை.
  • திருமதி.ஜென்கின்ஸனின் அறையில், டார்சிக்கு முன்னால் பியானோ வாசிக்கும்படி எலிசபெத்தை லேடி காதரின் அழைக்கிறாள். புத்தகத்தில், அவள், முதல் சந்திப்பின் பொழுது வாசிக்க அழைக்கிறாள்.
  • ஹன்ஸ்போர்ட் பிரச்சனைக்குப் பிறகு, கர்னல் பிட்ஸ்வில்லியம் டார்சியை சந்திக்கிறார். லேடி காதரினை சந்திக்க டார்சி மறுக்கிறான். டார்சி ரோஸிங்ஸ் பார்க்கிற்குத் திரும்பிச் சென்று கடிதம் எழுதுவதாக மட்டும் புத்தகத்தில் உள்ளது.
  • டார்சி, எலிசபெத்திற்கு கடிதம் எழுதும் பொழுது காணப்படும் கீழ்க்கண்ட காட்சிகள் புத்தகத்தில் இல்லை.
  • - டார்சியும் விக்காமும் சிறுவர்களாக மீன் பிடிப்பது
  • - கல்லூரியில் விக்காமை ஒரு பெண்ணுடன் டார்சி பார்ப்பது
  • - டார்சியிடமிருந்து 3000 பவுன்கள் பெற்ற பிறகு, விக்காம் ஜார்ஜியானாவைச் சந்திப்பது
  • - ஒடிப்போவதைத் தடுப்பதற்காக சரியான நேரத்தில், டார்சி வரும் பொழுது, விக்காம், ஜார்ஜியானாவுடன் திருமதி.யங்கும் உடன் இருப்பது, பிறகு டார்சி ஜார்ஜியானாவைக் கட்டி அணைப்பது,
  • ஜேனின் லண்டன் விஜயத்தின் பொழுது டார்சி அவளைக் காண்பது
  • காலின்ஸ் விசாரித்ததற்கு லேடி காதரினை விட்டுப் போவது மனதிற்குக் கஷ்டமாக இருக்கும் என்று எலிசபெத் ஒத்துக் கொள்வது புத்தகத்தில் இல்லை.
  • லாங்பர்னுக்குத் திரும்பும் குழுவில் ஜேன் காணப்படவில்லை. புத்தகத்தில் எலிசபெத்தும் மரியாவும் லண்டனில் தங்குவதாகவும், ஊர் திரும்பும் பொழுது அவளை அழைத்துச் செல்வதாகவும் உள்ளது.
  • பிங்கிலியைப் பற்றிய தன் உணர்வுகளை ஜேன் எலிசபெத்திடம் கூறுகிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • லிடியா பிரைட்டன் செல்வது பற்றி திருமதி.பென்னட் மிகவும் சந்தோஷப்படுகிறாள். துணிமணிகளைப் பற்றியும் விருந்துகளைப் பற்றியும் விவாதிக்கிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • விக்காமும் எலிசபெத்தும் ஒருவரிடமிருந்து ஒருவர் விடை பெற்றுக் கொண்டபின், விக்காம் திரும்பி வருவதை எலிசபெத் விரும்பவில்லை என்று கூறுகிறாள். புத்தகத்தில் இந்த வரி இல்லை. ஆனால் இருவரும் மீண்டும் சந்திக்கும் ஆவல் இல்லாமல் விடை பெறுகிறார்கள்.
  • பிரைட்டனில், ஜேனிற்கும் எலிசபெத்திற்கும் தகுந்த ஆண்மகன் கிடைத்தால் தெரிவிப்பதாக லிடியா கூறுகிறாள். பிரைட்டனுக்குப் போக வண்டி ஏறும் பொழுது அவள் ஏறக்குறைய தடுக்கி விழுகிறாள். லிடியா பிரைட்டன் போவது குறித்து அழும் கிட்டியை திரு.பென்னட் கேலி செய்கிறார். இவை புத்தகத்தில் இல்லை.
  • டார்சி வாள் பயிற்சி செய்து கொண்டு, நான் இதில் வெற்றி பெறுவேன் என தனக்குத் தானே கூறிக் கொள்கிறான். புத்தகத்தில் இது இல்லை.
  • எலிசபெத் ஒரு மலையில் ஏறுகிறாள். சுற்றுலாவின் பொழுது அவள் கீழே விழ நேர்ந்தால், தான் திரு. பென்னட்டை நேரில் சந்திக்க முடியாது என திருமதி. கார்டினர் கூறுகிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • பிம்பெர்லியை நெருங்கும் பொழுது, கார்டினர் தம்பதியினர், யார் டார்சியை திருமணம் செய்து கொள்வார்கள் என்று வியக்கின்றனர். வீட்டைப் பராமரிப்பவரை அவர்களுக்கு வீட்டை காண்பிக்குமாறு கேட்க முடிவு செய்கிறார்கள். இது புத்தகத்தில் இல்லை.
  • டார்சி குதிரை மீது ஏறி பிம்பெர்லி வந்தடைந்து, ஒரு ஏரியில் குதிக்கிறான். புத்தகத்தில் எப்படி வருகிறான் என்றோ, ஏரியில் குதிப்பதாகவோ இல்லை.
  • எலிசபெத் டார்சியைச் சந்தித்த பிறகு, உடனே அங்கிருந்து புறப்பட விரும்புகிறாள். புத்தகத்தில் அவளும், கார்டினர் தம்பதியினரும் புல்வெளிகளைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள்.
  • திருமதி. கார்டினர், டார்சியின் மாற்றத்திற்குக் காரணம் எலிசபெத்திற்குத் தெரியுமா என்று குறிப்பாகக் கேட்டு, தான் அதை ஏற்கெனவே ஊகித்து விட்டதாகக் கூறுகிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • எலிசபெத் விடுதிக்குத் திரும்பி வரும் பொழுது . டார்சி அவளுக்காக காத்திருக்கிறான். புத்தகத்தில் அவர்கள் டார்சியை வரவேற்பதற்காக விடுதியில் இருக்கிறார்கள்.
  • எலிசபெத்திற்கும் ஜார்ஜியானாவிற்கும் நடைபெறும் உரையாடல் புத்தகத்தில் விவரிக்கப்படவில்லை.
  • பிங்கிலியை விடுதிக்கு வரவழைக்க, டார்சி அனுமதி கேட்கிறான். புத்தகத்தில் அவனாகவே பின்னர் வருகிறான்.
  • விடுதியில் நடக்கும் சந்திப்பில், கார்டினர் தம்பதிகள் காணப்படவில்லை. புத்தகத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
  • எலிசபெத் விருந்திற்கான அழைப்பை ஏற்றுக் கொள்கிறாள். புத்தகத்தில் அவள் மறுப்பதாகவும் திருமதி.கார்டினர் ஏற்றுக் கொள்வதாகவும் உள்ளது.
  • பிம்பெர்லியில் எலிசபெத்தும், ஜார்ஜியானாவும் பியானோ வாசிக்கிறார்கள். புத்தகத்தில் இது இல்லை.
  • கரோலின் எலிசபெத்தை கேலி செய்யும் பொழுது விக்காமின் பெயரைக் குறிப்பிடுகிறாள். புத்தகத்தில் அவள் பொதுவாக மெரிடனில் உள்ள இராணுவத்தைப் பற்றி குறிப்பிடுகிறாள்.
  • டார்சி இரவில் நடந்துச் செல்லும் பொழுது எலிசபெத்தின் நினைவுடன் பியானோவை அன்புடன் பார்க்கிறான். புத்தகத்தில் இது இல்லை.
  • கரோலின். எலிசபெத்தைப் பற்றிக் கூறி டார்சியைக் கேலி செய்கிறாள். அவள் வேகமாக வெளியேறுகிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • லிடியா ஒடிச் சென்றது தன் தவறு என்று ஜேன் கூறுகிறாள். தங்களுடைய திருமண வாய்ப்பு குறைந்து வருவதை எலிசபெத்தும் ஜேனும் உணர்கின்றனர். பிங்கிலி, டார்சி மற்றும் அவர்களைப் போன்ற ஆண்கள் தங்கள் குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் ஒத்துக் கொள்கின்றனர். புத்தகத்தில் இது இல்லை.
  • லிடியா ஒடிச்சென்ற பிறகு, காலின்ஸ் லாங்க்பார்னுக்கு வருகிறான். புத்தகத்தில் அவன் கடிதம் எழுதுகிறான்.
  • திருமதி. பிலிப்ஸ்ஸும், திருமதி.பென்னட்டும் விக்காம் கெட்டவன் என்று முன்பே அவர்களுக்குத் தெரியும் என்கிறார்கள். புத்தகத்தில் இது இல்லை.
  • டார்சி, அவ்விருவர்களை தேடும் காட்சியும், லிடியாவும் விக்காமும் பேசிக் கொள்ளும் காட்சியும் புத்தகத்தில் இல்லை. ஆனால் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.
  • எலிசபெத், கார்டினரின் கடிதத்தைப் படிக்கும் பொழுது ஜேன் சில சமயங்களில் குறிக்கிடுகிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • டார்சியைப் பற்றிய தனது குழப்பமான எண்ணங்களை ஜேனிடம் கூறுகிறாள். புத்தகத்தில் அவைகளைப் பற்றி அவள் நினைத்துப் பார்க்கிறாள்.
  • லிடியா, லாங்க்பர்னில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திருமதி. பென்னட் விரும்புகிறாள். எலிசபெத் அது சாத்தியமில்லை என்று விளக்குகிறாள். இது புத்தகத்தில் இல்லை.
  • தன்னுடைய உணர்வுகளைப் பற்றியும் அபிப்பராயங்களைப் பற்றியும் திரு.பென்னட், எலிசபெத்திடம் பேசுகிறார். புத்தகத்தில் அவர் அவற்றை உணர்கிறாரே தவிர எதையும் வெளியே சொல்வதில்லை.
  • விக்காமையும், லிடியாவையும் வரவேற்க குடும்பம் முழுவதும் வெளியே வருகிறது. புத்தகத்தில் அவர்கள் காலைச் சிற்றுண்டி அறையில் குழுமியிருக்கிறார்கள்.
  • டார்சியின் பங்கு பற்றி லிடியா வெளியிடும் பொழுது விக்காம் குதிரைச் சவாரி செய்து கொண்டிருக்கிறான். புத்தகத்தில் அவள், ஜேனுடனும், எலிசபெத்துடனும் வீட்டில் அமர்ந்திருக்கிறாள்.
  • லிடியா செல்ல இருக்கும் வடக்குப் பகுதிக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்ல திரு.பென்னட் மறுத்து விட்டதால் அவரை திருமதி. பென்னட் கொடுமைக்காரர் என குற்றம் சுமத்துகிறாள். மேரி, அங்கு செல்ல விருப்பம் இல்லை எனக் கூறுவதால், திருமதி.பென்னட் அவளைக் கோபிக்கிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • பிரிந்து செல்லும் பொழுது விக்காம் கூறும் அந்த வார்த்தைகள் புத்தகத்தில் இல்லை.
  • பிங்கிலியை வரவேற்க நல்ல ஆடை அணியும் படியும், நிமிர்ந்து உட்காரும் படியும் திருமதி.பென்னட், ஜேனிடம் கூறுகிறாள். புத்தகத்தில் இது இல்லை.
  • பிங்கிலியிடம் தன் சதியை ஒத்துக் கொண்டு டார்சி கூறிய அதே வார்த்தைகள் புத்தகத்தில் இல்லை.
  • டார்சியின் வாழ்த்துக்கள் தனக்கு உண்டா என்று பிங்கிலி டார்சியைக் கேட்கிறான். புத்தகத்தில் இது இல்லை.
  • லிடியா லண்டனிலிருந்து வாங்கி வந்த நகையை மேரி பார்த்தாளா என்று கிட்டி, மேரியைக் கேட்கிறாள். இது புத்தகத்தில் இல்லை.
  • பிங்கிலியையும் ஜேனையும் தனித்து விடுவதற்காக திருமதி.பென்னட் கண்சிமிட்டுவதும், திட்டம் போடுவதும் அவனை அவளிடம் திருமண பிரேரணை செய்ய வைத்தது. புத்தகத்தில் அவன் மறு நாள் தான் செய்கிறான்.
  • தான் பொறுத்துக் கொள்ளக் கூடிய மிகச் சிலரில் அவன் ஒருவனாக இருப்பான் என்று பிங்கிலியிடம் திரு.பென்னட் கூறுகிறார். புத்தகத்தில் இது இல்லை.
  • திருமதி.பென்னட்டை லேடி காதரின் குறுக்கிட்டு புல்வெளியில் எலிசபெத்துடன் நடப்பதற்காக எழுந்திருக்கிறாள். இது அவள் செய்யக்கூடியதாக இருந்தாலும் புத்தகத்தில் இது இல்லை.



story | by Dr. Radut