Skip to Content

லைப் டிவைன் Book 1

 

December 8, 2007

Chapter I

இதயத்தின் எழுச்சி

Page No. 1:

  • ஆதி நாள் முதல் மனிதன் தேடுபவை இறைவன், ஜோதி, சுதந்திரம், அமரத்துவம்.
  • நாம் காணும் வாழ்வு இந்த இலட்சியத்திற்கு நேர் எதிரானது. உடன்பாட்டை முரண்பாடாக வெளிப்படுத்துவதே இயற்கை செயல்படும் முறை.

Page No. 2:

  • சுமுகம் குறைவதே பிரச்சினை.
  • பிணக்கு அதிகமானால் சுமுகத்திற்காக எடுக்கும் முயற்சி பெரியதாகும்.

உடலும், உணர்வும் இணைவது தமஸ், சோம்பேறித்தனம்.

உணர்வும், மனமும் இணைந்து செயல்படுவது விஞ்ஞானம்.

மனமும் சத்திய ஜீவியமும் இணைந்து சுமுகம் ஏற்பட்டால் சத்திய ஜீவன் பிறப்பான்.

Page No.3:

  • வேதாந்தம் கூறுவதை நாம் ஏற்றால் பரிணாமத்தை ஏற்க முடியும்.

அதனால் அடுத்த கட்டமான சத்திய ஜீவனை ஏற்பது இயலும்.

Page No. 4:

  • விலங்கு உடலில் எப்படி தெய்வீக வாழ்வு எழும் என்ற கேள்விக்கு இதுவே பதில்.

சுருக்கம்: Chapter I  இதயத்தின் எழுச்சி.

1)            மனிதன் ஆதிநாள் முதல் இறைவனைத் தேடுகிறான்.

2)            இருண்ட ஜடம் விழிப்பான மனமாவது பரிணாமம் என வேதாந்தம் கூறுகிறது.

3)            பரிணாமத்தை அறிவு ஏற்கலாம்.

Chapter II

இரு முரண்பாடுகள்

நாத்திகனின் மறுப்பு

Page No:. 6:

  • தெய்வீக வாழ்வு உலகில் ஏற்பட நாம் ஜடத்தை ஆன்மாவின் உடையாக ஏற்க வேண்டும்.
  • மேலும் நாம் ஜடம் பிரம்மம் என்று கொள்ள வேண்டும்.அத்துடன் ஜடம், வாழ்வு, மனம், சத்திய ஜீவியம் என்ற கட்டங்கள் இடைப்பட்டவை எனக் கொள்ளாவிட்டால், அறிவு ஜடமும், ஆன்மாவும் ஒன்றென ஏற்காது.

Page No:. 7:

  • ஆன்மாவே அனைத்துமெனில் பிரகிருதி விட்டுப் போகிறது.புருஷனும், பிரகிருதியும் தமஸாலானவை. ஆனால் அத்தமஸ் எதிரானது. அதுவும் பொதுவாகாது.
  • நாத்திகன் ஜடம் தவிர வேறில்லை என்ற அத்துவைதம் பேசுவது அறிவின் முயற்சியை அரைகுறையாக விடுவதற்கு ஒரு சாக்கு, வாதமாகாது.
  • முரண்பாட்டை ஏற்க முடியாது.

அவற்றைச் சமரசம் செய்ய வேண்டும்.

வாழ்வையும், மனத்தையும் காய்தல் உவத்தலின்றி ஆராய்வது ஐக்கியத்தைக் காண உதவும்.

இது புறத்திற்குரிய முறை.

அகத்திற்குரிய முறை ஒன்றாக இணைப்பது.  அதுவும் ஐக்கியத்தைக் காணும்.

Page No:. 8:

  • இரு எதிர் முனைகள் மட்டும் உள்ளன என்பதை பிரபஞ்சம் ஏற்காது. பிரபஞ்ச உணர்வு ஏற்காது.

ஐரோப்பா ஜடத்தை வென்றது. ஆனால் அவர்கள் வாழ்வில் ஆன்மா சூன்யமாகி விட்டது.

இந்தியா ஆன்மாவை வென்றது. ஆனால் அவர்கள் வாழ்வு சூன்யமாயிற்று.

Page No:. 9:     

இரண்டும் சேர்ந்த செறிவான முழுமை, பூர்த்தி வேண்டும்.

Page No:. 10:

  • நாத்திகனுடைய மறுப்பு அவ்வளவு தீவிரமானதல்ல. அதன் அடிப்படை புலன் உணர்வு.  அது பகுத்தறிவாகும்.
  • எதையும் நம்ப மறுப்பவர் சூட்சும நிகழ்ச்சிகளையறிய முடியவில்லை. அதற்கு விளக்கம் தர அவரால் இயலாது.
  •    பகுத்தறிவு மனித குலத்திற்கு செய்த சேவை பெரியது.

Page No:. 11:

  • புலன்களைக் கடந்த திறமை செயல்படும்பொழுது ஆபத்து எழ ஏதுவாகும்.ஏனெனில் வளர்ச்சியற்ற மனம் கிடைக்கும் சக்தியைத் தவறாகப் பயன்படுத்தும்.
  • தெளிவான அறிவு, கட்டுப்பாடுடையது. அதற்கு கால் தரையில் ஊன்றுவது அவசியம்.
  • நாத்திகம் செய்த சேவை பெரியது. அது ஞானத்தை வளர்க்க உதவியது. தவறு, ஞானம் பெற அவசியம். தவறு அறிவுக்கு குரு.

Page No:. 12:

  • எதையும் நம்ப முடியாது என்பவன் முடிவான ஞானத்தைப் பெற முடியும்.

நாம் எந்தப் பாதை வழி சென்றாலும் பிரம்மத்தில் முடிப்போம்.

அறிவுக்குப் புலப்படாதது ஜீவியத்திற்குப் புலப்படும்.

அறிவால் வெளிப்படுத்த முடியாத ஞானம் உண்டு. அதன் வழி அது வெளி வருகிறது.

அது நம் அறிவுக்குப் புலப்படாது. இதுவே முடிவான ஞானமில்லை.

ஆனால் நாத்திகனுடைய அறிவைக் கடந்தது.

  • இந்த ஞானம் வாழ்வு, மனம், சத்திய ஜீவியத்தை விளக்கவல்லது.

அவற்றின் முக்கிய சுபாவத்தை வெளியிடும் திறனுள்ளது.

Page No: 13:

  • தெரியாதது என்பது தெரிய முடியாததல்ல. நாமே அதை விலக்கலாம். உலக ஞானம் என்றிருந்தால் மனிதனால் அதைப் பெற முடியும். ஜடம் என்ன என்பதை நிரூபித்தபின், அதன் திறனென்ன என்று அறிந்தபின், அந்த வேகம் மற்றதையும் அறிய நிர்ப்பந்திக்கும்.
  • நாத்திகத்தின் கரு ஞானம். புலனறிவு முடிந்தால் அதற்கடுத்த அறிவு எழும்.
  • விஞ்ஞானமும் அத்வைதத்தை நாடுகிறது. அது வேதாந்தப் பாதையில் வருகிறது.

Page No: 14:

  • மனம், வாழ்வு, ஜடம் என்பவை மூவகை சக்தி என வேத ரிஷிகள் கூறுகிறார்கள்.

சக்தி என இருந்தால் அதன் மூலம் உறுதியாகும்.

Page No: 15:

  • உறுதிக்கு வேலையுண்டு. வேலை என்பது சிருஷ்டி, பரிணாமம். மனிதனுடைய உறுதி நெடிய ஆயுளையும், முடிவில்லாத ஞானத்தையும், அதிகாரத்தையும் நாடுகிறது.

லிமிட் என்பதில்லை. தனிமனித உறுதிக்குப் பின்னால் சமூகத்தின் உறுதியும் அதன்பின் பரமாத்மாவின் திறனும் உண்டு. பிரபஞ்ச சக்தி தன்னையறியாதது. அது சிருஷ்டியையும், பரிணாமத்தையும் நடத்துகிறது.

Page No: 16:

  • ஜடம் லிமிட்டை உற்பத்தி செய்கிறது. அது தடை. கம்பியில்லாத்தந்திக்கு  இரு முனைகளிலும் மெஷினால் செயல்படுகிறது. ஜட சக்தியை மனிதன் பெற்று அனுபவிக்க முடியும்.
  • அகந்தை கடைசி மெஷின்.

சுருக்கம்:  Chapter II  நாத்திகனின் மறுப்பு.

1)            ஜடத்தை ஆன்மா என ஏற்க வேண்டும்.

அதற்கு பல கட்டங்கள் உள்ளன. சமரசம் தேவை.

2)            எண்ணத்தின் பின்னும், பிராணனின் பின்னும், மனம் அது இருப்பதை அறிகிறது.

3)            அறிவுக்குப் புலப்படாதது ஜீவியத்திற்குப் புலப்படும்.

4)            எண்ணம் வெளியிட முடியாத ஞானம் உண்டு.

அதனால் வாழ்வு, மனம், ஜடம் ஆகியவற்றை ஆராய்ந்து தெளிய முடியும்.

5)            மனம், வாழ்வு, ஜடம் என்பவை மூவகை சக்திகள் என வேதம் கூறுகிறது.

வேலை என்பது சிருஷ்டி, பரிணாமம்.

சக்தியை ஏற்படுத்தியது உறுதி.

அதன்பின் பரமாத்மாவின் உறுதியுண்டு.

6)            மனித உறுதி முடிவற்ற ஞானத்தையும், சக்தியையும் தேடுகிறது.

7)            லிமிட் மறைகிறது.

கம்பியில்லாத்தந்தி கம்பியை எடுத்து விட்டது.

அகந்தை அகல வேண்டும்.

Chapter III

சன்னியாசியின் துறவறம்

Page No:. 17:

  • பிரபஞ்ச ஜீவியத்தைக் கடந்த பிரம்ம ஜீவியம் உண்டு. அதன் முன் வாழ்வு துரும்பு, அல்பம்.
  • மாற்றமும், மரணமுமறியாத தூய ஆத்மாவை வலியுறுத்தும் உரிமை சன்னியாசிக்குண்டு.
  • புலனுக்குப் புலப்படாததை இல்லை என்பது அறிவுடைமையாகாது.

Page No:. 18:

  • புலனைக் கடந்தவையும், ஜடத்தைக் கடந்தவையும் ஜடத்தையறிய முடியும்.அவற்றால் நமக்கு ஜடத்தைக் கடந்தவற்றுடன் தொடர்பு கிடைக்கும்.
  • விஞ்ஞானமும் அதை இப்பொழுது ஏற்கிறது. பிறர் எண்ணத்தை அறிவது உதாரணம்.

Page No:. 19:

  • நம்மைக் கடந்த உலகம் உண்டு. சுயமான சட்டங்கள் உண்மை.
  • பிரபஞ்சம் என்பது நாம் காண்பது. பிரபஞ்சம் என்று ஒன்றில்லை. நம் பார்வை பிரபஞ்சத்திற்கு உயிரளிக்கிறது.

Page No:. 20:

  • நாத்திகன் கூறுவதை ஏற்றுத் தொடர்ந்தால், அர்த்தமற்ற முடிவு வருகிறது. அல்லது நாம் அசத்தில் முடிவோம்.
  • தர்க்கம் பிரச்சினையைத் தீர்க்காது. ஜடமே முடிவா, ஆன்மாவே முடிவா என்பது நெடுநாள் பிரச்சினை. நம் ஜீவியம் உயர்ந்தால் பிரச்சினை தீரும்.
  • சாட்சி என்றொருவன் உண்டானால் அது மனிதனில்லை, பிரபஞ்ச ஜீவியம் நாமறிந்த சிந்திக்கும் மனம் சாட்சியல்ல. அமைதியான காலத்தைக் கடந்த வாழ்வும், அதன் தலைவனும் சாட்சி புருஷனாவான்.

Page No:. 21:

  • பிரபஞ்ச ஜீவியத்தை இக்காலத்தில் ஏற்கின்றனர். அகந்தையைக் கடப்பதே அதன் கரு. வாழ்விலும் ஜீவனற்ற பொருள்களிலும் இரகஸ்யமாக உறையும் சுய ஞானமே  பிரபஞ்ச ஜீவியம். அதனுடன் ஐக்கியமானால் அது பலிக்கும்.
  • பிரபஞ்ச ஜீவியத்துள் நுழைந்தால் (substance) நாமும் பொருளும் ஒன்றாவோம்.மனமும், வாழ்வும் புற உலகில் தானே செயல்படும் திறன் பெறும்.

Page No:. 22

  • அங்கே நிலையாக இருந்தால் பிரபஞ்ச ஜீவியம் உண்மையாக உள்ளது எனத் தெரியும்.அது சுயமாக இருக்கிறது எனக் காணலாம்.

Page No:. 23:

  • இதுவே ஜீவனுள்ள புருஷன், சத்திய ஜீவியத்தின் சத்தியம்.  இது நம் உலகைக் கடந்தது.

உலகம் இதனால் வாழ்கிறது.  நம் உலகிற்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன?

  • பிரம்மத்தின் வாயிலில் ஆத்மா காவல் செய்கிறது.

இதுவே அத்வைதம் கூறும் தூய்மையான பிரம்மம், செயலற்ற பிரம்மம், அனைத்தையும் கடந்த மௌனம்  பிரம்ம மௌனம். அசத் என்பது இதன் பின்னுள்ளது. இதன் ஸ்பர்சம் பட்டவுடன் மனத்திற்கு அனைத்தும் மாயை என்ற உணர்வு தோன்றுகிறது. அதனால் சன்னியாசி உலகைத் துறந்தான்.

Page No:. 23:

  • இதுவே ஜடம் ஆத்மாவை எதிர்க்கும் புரட்சி. ஆரிய முன்னோர் அனுபவித்த ஒருமையை இது கலைத்து விட்டது. பௌத்தம் இதைப் பிரபலப்படுத்தியது. இன்று வரை உலகம் துறவறத்தைப் போற்றுவதற்கு இதுவே காரணம்.

Page No:. 24:

  • மனித குலம் ஜீவனற்றுப் போய்விட்டது என நாம் நினைக்கலாம். மனிதன் ஆன்மீகப் பூரணமடைய துறவறம் வழி செல்வதால் இது அத்தியாவசியமாகிறது.
  • பிரம்மம் தவிர வேறில்லை எனவும் சர்வம் பிரம்மம் எனவும் கூறியவர்கள் வாழ்வில் எப்படி இவையிரண்டும் உண்மையெனக் கூறவில்லை.
  • சன்னியாசி துறவறத்தையும், பிரம்மத்தையும் அறிந்தது போல், விஞ்ஞானி ஜடத்தையும் முழுமையாக அறியவில்லை.
  • இறைவன் சிருஷ்டியாக உலகை வந்தடைந்ததை நாம் அறிவோம்.பரிணாமம் மூலம் உலகம் இறைவனை மீண்டும் அடைவது எப்படி என நாம் கருதவில்லை.
  • ஆரிய முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிய வாழ்வை ஜடத்தில் கண்டது போல் அதே ஒருமைப்பாட்டை சத்திய ஜீவியத்தில் நாம் காண வேண்டும்.

சுருக்கம்: Chapter III - சன்னியாசியின் துறவறம்.

1)            பிரபஞ்ச ஜீவியத்தைக் கடந்த பிரம்ம ஜீவியம் உண்டு.

2)            சாட்சி புருஷன் என்பது பிரபஞ்ச ஜீவியம், நம் ஜீவியத்தை உயர்த்தி அதை நாம் அடையலாம்.

3)            பிரபஞ்ச ஜீவியம் சுயமாக இருப்பது.

4)            அசத் என்பது அத்வைதம் கூறும் பிரம்மத்தின் பின் உள்ளது.

5)            ஜடத்தை மறுக்கும் துறவி அசத்தைக் கண்டவன், பிரம்மம் மனித குலம் ஜீவனற்றது எனக் கூறவில்லை. மனிதன் பூரணம் பெற அது தேவையான நிபந்தனை என்கிறது.

Chapter IV

பரம்பொருள்

Page No:. 25:

  • ஜடமும், ஆன்மாவும் சந்தோஷமாக இணையும் தத்துவத்தை நாம் காண வேண்டும். அது முழுமையானதாக இருக்கும். ஒரு பெரிய உண்மை தீவிரமாகப் பேசப்பட்டால் அது கம்பீரமான மறுக்க முடியாத உண்மையாக இருக்கும். அதை நாம் தவிர்க்க முடியாது. தவிர்த்தால் அழிவு நேரும்.

Page No:. 26:

  • பிரபஞ்ச ஜீவியத்தில் முதற் கட்டமாக ஜடமும், ஆன்மாவும் இணைகின்றன. ஜடம் ஆன்மாவின் உடலாக காட்சியளிக்கிறது. ஆன்மா ஜடத்தின் சாரம், மனமும் வாழ்வும் சத் புருஷனுடைய கருவிகள்.
  • இது தெய்வீக வாழ்வு பலிக்கும் எனக் காட்டுகிறது. விஞ்ஞானம் கூறும் உண்மையிதுவே.
  • பிரம்மம் என்றால் என்ன? துறவி உலகை மறுப்பதற்கு என்ன நியாயம் உண்டு. அக்ஷர பிரம்மம், க்ஷர பிரம்மம்  அசையாத பிரம்மம், அசையும் பிரம்மம்  என்பவை தனிப்பட்டவையல்ல. செயலுக்குரிய சக்தி மௌனப் பிரம்மத்தினின்று எழுகிறது.

Page No:.27:

  • மௌனம் உலகையும், அதன் சலனத்தையும் நிராகரிக்கவில்லை. அவற்றை ஆதரிக்கிறது. சுதந்திரமான ஆத்மாவில் ஜடமும், ஆன்மாவும் இணைந்தால் உலகின் செயலை அது நடத்தவல்லது.

Page No:. 28:

  • உலகம் அசத்திலிருந்து எழுவதால், அதனுள் மீண்டும் மறைந்தால், பிரம்மம் உண்மையல்ல. அகந்தையைப் போல் அதுவும் மனம் சிருஷ்டித்ததேயாகும்.
  • அசத் என்பது உலகை உட்கொண்ட பூஜ்யம். அல்லது விவரிக்க முடியாத அனந்தம். மனம் அதை வெற்றிடமாகக் காண்கிறது. உண்மையில் அசத் என்பது உண்மையான உலகம், நிஜமான சத்.
  • அசத், சத் என்பவை காலம் கூறும் மொழி. அவை பிரம்மம். நாம் நம் அனுபவத்தை விவரிக்க முற்படுகிறோம். அனுபவத்தை அதன் எதிரானதைக் கொண்டு விவரிக்க இயலாது.
  • சத், அசத் என்பவை எதிரானவை. அசத் என்பது சத்திலிருந்து பெற்ற சுதந்திரத்தை வலியுறுத்திப் பேசுவது. அதாவது எந்த வகையான வாழ்விலிருந்தும் விடுபட்ட நிலை. மேலும் இல்லாதது. கடந்தது ஆகியவற்றிலிருந்தும் பெற்ற சுதந்திரமாகும். அசத் இல்லையெனக் கூறவில்லை. அதன் லிமிட்டை மறுக்கிறது.
  • மௌனம் செயலை அனுமதிப்பது போல், அசத், சத்தை அனுமதிக்கிறது. இவை எதிரானவையல்ல. ஒன்று மற்றதைப் பூர்த்தி செய்யவல்லது. இவ்வழி விழிப்பான ஆத்மா, சத்புருஷனையும், பிரம்மத்தையும் ஒரே சமயத்தில் உணர முடியும். புத்தருடைய மௌனமும், பெரும் சேவையும் அதை விளக்குகின்றன.

Page No:. 29:

  • கடந்த கால சொந்த அனுபவங்களை நாம் அறிவோம்.மிகப் பரந்த சுமுகத்தைக் காண, மனிதனின் பகுதியான ஞானத்தைக் கடந்து செல்வது அவசியம்.
  • மௌனத்தின் பின்னால் மௌனம் உண்டு.உயர்ந்த சிறந்த ஆத்மா சத்திலிருந்து காலை எடுக்காமல், அசத்துள் நுழைய முடிய வேண்டும்.

Page No:. 30:

  • ஜடமும், ஆன்மாவும் பிரபஞ்ச ஜீவியத்துள் இணைந்தது முதற் கட்டம். அடுத்த கட்டத்தில் பிரம்ம ஜீவியத்தில் அவை இணைகின்றன. பிரம்மம் எங்கும் நிறை பரம்பொருள்.
  • பிரபஞ்சத்தைப் பிரம்மம், அதற்கு எதிரானது எனப் பிரிப்பது அத்துவைதமாகாது.

உண்மையான அத்துவைதம் அனைத்தையும் பிரம்மமாகக் காணும்.

Page No:. 31:

  • ஆண்டவன் ஒருவன், பிரம்மம் ஒன்றே. பல அவன் பிரதிநிதிகள்.

Page No:. 32:

  • தோற்றம் மாயையல்ல; தோற்றம் என்பது சத்தியத்தின் சத்தான பகுதி.
  • இது நம் கொள்கை. நம்பிக்கை ஜனிக்கும்வரை இக்கொள்கையை ஏற்று செயல்படுவது அவசியம்.

சுருக்கம்: Chapter IV - பரம்பொருள்.

1.            ஜடமும் ஆன்மாவும் முதலில் பிரபஞ்ச ஜீவியத்தில் இணைந்தன.

2.            அசத், மௌனம் செயலை மறுக்கவில்லை. தாங்கிப் பிடிக்கின்றன.

3.            சிறந்த ஆத்மா சத்தை இழக்காமல் அசத்தையடைய வேண்டும்.

4.            இது பிரபஞ்ச ஜீவியத்திற்கு அடுத்த பிரம்ம ஜீவியத்தில் ஜடமும், ஆன்மாவும் இணைவதாகும்.

5.            இது நம் கொள்கை.

Chapter V

ஜீவாத்மாவுக்கு இறைவன் வகுத்த வழி

Page No:. 33:

  • எங்கும் நிறை பரம்பொருள் எல்லா வாழ்வின் சத்தியமான உண்மை. பிரம்மம் தவிர உலகில் எதுவும் எப்பொழுதுமிருந்ததில்லை.
  • ஐக்கியத்தின் சுபாவம் சொல்லிலகப்படாது. பரந்த அறிவையும் ஆழ்ந்த அனுபவத்தையும் இயல்பாகக் கடப்பதே அதன் சுபாவமும் கடமையுமாகும்.
  • நாமறிய முடியாத பிரம்மம் முடிவற்ற ரூபங்களை ஏற்று மிளிர்கிறது.

அதன் ஒரு அம்சம் விளக்கக் கூடியது என்பதால் எடுத்து நாம் விளக்குகிறோம்.

அதன் பிறவாத சுபாவத்திற்கு அது நாம் செய்யும் பாவம்.

Page No:. 34:

  • வேதாந்த ரிஷிகள் இதை ஆழ்ந்துணர்ந்தனர்.

அதனால் சச்சிதானந்தம் அவர்கட்கு முடிவாகப்படவில்லை.

அதைக் கடந்து அசத் இருப்பதாகக் கொண்டனர்.

பௌத்தர்களும் இவ்வேதாந்தக் கருத்தை ஏற்கின்றனர்.

சத்தும், அசத்தும் மனம் அறிய முடியும் முடிவான முரண்பாடு.

அவை மூலம் அறிய முடியாத பிரம்மத்தை அறியலாம் எனக் கண்டனர்.

வித்தையில்லாவிட்டால் அவித்தை அஞ்ஞானக் குழப்பமாகும்.

அவித்யா இல்லாவிட்டால் வித்தையின் ஒளி கண்பார்வையைக் குருடாக்கும்.

Page No:. 35:

  • பிற்காலம் பொறுமையிழந்து ஏகனை மட்டும் நாடி, அநேகனை மறுத்தது.
  • அரைகுறை ஞானமான அதை நாம் கருத வேண்டாம்.
  • ஆன்மா ஜடத்தை மறுக்கிறது. ஜடம் ஆன்மாவை மறுக்கிறது.
  • ஆனால் இரண்டிலும் உள்ள உண்மையை நாம் ஏற்கிறோம்.

உடலின் ஜீவியத்தை சொந்தமாக ஏற்று உரிமையாகப் பெற்று உச்சகட்ட சிகரத்துடன் சுமுகம் அடையாமல் எதுவும் முழுமையாக உண்மையாக இருக்க முடியாது.

எல்லை என்பது தெய்வ ஜீவியத்தின் செயல், ஆத்ம அம்சத்தின் பாங்கு.

Page No:. 36:

  • பிரம்மம் என்பது இங்கு வாழ்வின் பண்புகளாகும்.

பிரம்மத்தை வாழ்வில் காண வாழ்வு பிரம்மத்தை எட்டியது.

உலகுக்கு மனிதன் ஜீவிய முக்கியத்துவம் அளித்து அதன் மூலம் வாழ்வு பிரம்மம் எனக் காணும் திருவுருமாற்றத்தை ஏற்படுத்துகிறான்.

  • தன்னையறிவது படிப்படியாக அதிகமாக அறிவதாகும்.

பிரம்மம் தன்னைப் படிப்படியாக வெளியிடுகிறது.

காலம், வாழ்வு, மனம் ஆகியவற்றுள் பிரம்மம் வெளிப்படுகிறது.

பிரம்மம் முழுமையுடையது என்பதால் எந்த நிலையையும் விலக்க முடியாது.

மனிதன், பிரபஞ்சம், பிரம்மத்திற்குரிய தொடர்பு வாழ்வின் சிருஷ்டி மையம்.

எதையும் விலக்க முனையும் அவசரம் கூடாது.

  • மனிதனே பிரபஞ்ச ஜீவியத்தின் மையம்; பிரபஞ்சம் என்பது அரூபியின் ரூபம்.

Page No:. 37:

  • நாம் சரியான ஜீவியத்தைப் பெற்றால் பிரம்ம உறவுகளில் எதுவும் மாறவில்லை.

மனிதனின் அகப்பார்வையும், புறப்பார்வையுமே மாறியுள்ளன எனத் தெரியும்.

Page No:. 38:

  • அத்துவைதி வித்தையைத் தோற்றம் என்கிறான். அவித்தை போல் அதுவும் தோற்றமே.
  • மீண்டும் அத்துவைதம் என் மோட்சம் உண்மை என்கிறது. அடுத்த ஜீவன்கள் மாயையில் உழல்வதை ஏற்கிறது.

Page No:. 39:

  • பிரம்மத்திற்கும் உலகத்திற்கும் உள்ள முரண்பாடு மறைந்தால், அததற்குள்ள முக்கியத்துவம் முரண்பாடில்லாமல் எழும்.

தன்னையறியும் சத் புருஷன் கட்டுப்பட்டவனில்லை.

பிரிவினை அதைக் கட்டுப்படுத்தாதது போல், ஐக்கியமும் கட்டுப்படுத்தாது.

அது சுதந்திரமானது.

அதன் சுதந்திரமும் அதைக் கட்டுப்படுத்தாது.

அகந்தை இடைப்பட்ட நிலையே.

  • சிருஷ்டியைக் கடந்தது அதன் சுதந்திரத்தால் சிருஷ்டிக்கிறது.

சுயமான ரூபம் பெறுகிறது.  அப்படி ஏற்படுபவை மூன்று நிலைகள்.

                பாதாளம்

                தன்னையறியும் மனித ஜீவனான ஆத்மா

                பரமாத்மா

மனிதனில் அகந்தை தன்னை நான் என்ற லிமிட்டிற்குள் காண்கிறது. தன் சொந்த எல்லையைக் கடந்து ஜீவாத்மா பிரபஞ்சத்துடன் ஐக்கியப்பட்டு பிரம்ம ஐக்கியத்தையும் ஏற்கிறது.

Page No:. 40:

  • ஜீவாத்மா பெறும் மோட்சமான விடுதலையே இரகஸ்யம்.

விலங்கு குட்டி போடுவது போல் தெய்வீக ஆன்மா மோட்சம் பெறத் தகுதியுள்ள ஆத்மாக்கள் மூலம் தன்னை வளர்க்கிறது  குட்டி போடுகிறது.

அதனால் ஒரு ஜீவாத்மா மோட்ச தகுதி பெற்றால் அதன் மூலம் பல ஜீவாத்மாக்கள் மோட்சம் பெறுகின்றன.

  • பிரபஞ்ச ஜீவியத்தை இழக்காமல் அதிகபட்சமான பிரம்மத்தை நாம் அடையலாம்.

நாம் கடந்து வந்ததை விலக்கிப் பெறும் சுதந்திரம் எதிர்மறையாக முடியும்.

வித்தை அவித்தையை ஏற்க வேண்டும்.

அது அநேகனின் ஏகனுடைய அனுபவம் தரும்.

அதன் வழி நாம் பெறும் ஆனந்தம் பூரணமானது, அமரத்துவமுடையது.

சுருக்கம்: Chapter-V  ஜீவாத்மாவுக்கு இறைவன் வகுத்த வழி.

1.            சத்தியம் என்பது ஒன்று, அறிய முடியாதது.

வேதாந்த ரிஷிகள் சச்சிதானந்தத்தைக் கடந்து அசத் உண்டு என்றனர்.

2.            ஜடமோ, ஆன்மாவோ எடுபட வேண்டுமானால் அவை அஸ்திவாரமான பூமியையும், உச்சியான பிரம்மத்தையும் ஏற்க வேண்டும்.

3.            பிரம்மம், பிரபஞ்சம், மனிதன் மூன்றும் அவசியம்.

நம் பார்வை மாறுகிறது. அவற்றுள் மாற்றமில்லை.

4.            சிருஷ்டியைக் கடந்த ஜீவன் பாதாளத்தையும், மனிதனையும், பரமாத்மாவையும் சிருஷ்டித்தது.

அகந்தை தன் எல்லையைக் கடந்து அடுத்த இரண்டையும் சித்திக்கிறது.

5.            அதனால் மனிதனே சாவியான இரகஸ்யம்.

தெய்வீக ஆன்மா மோட்சம் பெற்ற ஆன்மாக்கள் மூலம் பெருகுகிறது.

6.            மனிதனுடைய தெய்வக் கடமை இம்மூன்றின் ஐக்கியத்தை அடைய வேண்டும்.

Chapter VI

பிரபஞ்சத்தில் மனிதன்

Page No:. 42:

  • தன்னை முழுவதும் அறிந்த வாழ்வு, தனக்குத் தானே தலைவனாகி, உலகைத் தன்னுட்கொண்டு, அவ்வுலகில் தான் ஊடுருவிக் கலந்துளது. அது ரூபத்தில் சித்தித்து, மனிதனில் தன்னை வெளிப்படுத்துகிறது.
  • ஆரிய முன்னோர்கள் இந்த ஜோதிமயமாய் எழும் புனிதத்தைப் போற்றி வணங்கினர்.

அதன் உச்சகட்ட சிறப்பு விஷ்ணு.

அநித்தியமான மனிதனுக்கு அது அபாரக் கவர்ச்சி தரும்.

விஷ்ணுவை எட்ட தியாகம் செய்து எழுவதை உலகம் ஏற்கும்.

Page No:. 43:

  • சத்தியம் என்பது சுயமானது. அது சிருஷ்டியைப் பொறுத்ததில்லை.

தன்னையறிந்து அது தானாவது உலகம்.

தானாக அது மாறும்பொழுது அது தன்னையறியும்.

தன்னை அகத்துள் முழுமையாகப் பெற்றது.

தான் சச்சிதானந்தத்தை விழிப்போடு உணர்ந்து அனுபவிப்பதை தன் ரூபங்கட்கும் குணத்திற்கும் அது அளிக்கிறது.

இம்மாறுதல் சிருஷ்டி.

ஆனந்தம்சத்ஜீவியம் மனம் வாழ்வு உடலில் செயல்படுகிறது.

                மனித வாழ்வின் பயன் இத்திருவுருமாற்றம்.

  • பிரம்மம் தன்னை சச்சிதானந்தமாக அறிவது வேதாந்தம் கண்ட உண்மை.

மனித ஜீவியம் எப்பொழுதும் சச்சிதானந்தத்தைத் தேடுகிறது.

வாழ்க்கையைப் பூர்த்தி செய்யவோ, அல்லது வாழ்வைக் கடக்கவோ முயல்கிறது.

  • பிரபஞ்சமும், மனிதனும் இருவகை.

பிரம்மம் அவற்றுள் இறங்கி வருகிறது.

மற்ற அனைத்தும் இடைப்பட்டவை. பிரபஞ்சமும் மனிதனும் கலந்து கொள்வதால் ஏற்படுபவை.

இறங்கி வருவது நம் கண்ணுக்குத் தெரியாது.

தன்னைத் தானே மறைத்துக் கொள்வதே இறங்கி வருவது.

வெளிப்படுவது பரிணாமமாக உயர்வதால் தெரிகிறது.

இறைவன் இறங்கி வரும் ஒவ்வொரு நிலையும் மனிதன் உயரும் நிலையாகும்.

வாழ்விலிருந்து மனம் வெளிப்படுகிறது.

இவ்வழி பிரபஞ்சம் தன்னை ஒரு தனி ஜீவனாக அறிகிறது.

மனம் உயர்வதைத் தொடர்கிறது. அதனால் முடிக்க முடியாது.

மனம் வாழ்வின் கூறுகளைக் கலைஞனிடம் கொடுக்கிறது.

கலைஞன் சத்திய ஜீவியத்தில் வாழ்கிறான்.

Page No:. 44:

  • அறிவிலும் வாழ்விலும் உள்ள குழப்பங்கள் மறைந்து அழிய நாம் உடலை விட உயர்ந்த (order) ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும்.

ஜடம் செயலுக்கும் அமைதிக்குமிடையே ஓர் உறவை ஏற்படுத்தியுள்ளது.

 ஆனால் அவ்வுறவுக்கு ஆளும் சக்தியில்லை.

அதன் சொந்த சுமுகத்தால் எழும் சந்தோஷம் விழித்தெழுந்து வெளிவரவில்லை.

  • மனம், வாழ்வைக் கடந்து நாம் அதையே முழு சாந்தியில் முழு ஆட்சியுள்ளபடிப் பெறுகிறோம். ஆசைகள் அழிகின்றன.

Page No:. 45:

  • பிரபஞ்சமும், மனிதனும் ஒருவருக்கொருவர் இன்றியமையாதவர்.

பிரபஞ்சம் என்பது அனந்தம் காலம் இடத்தில் பரவியது.

மனிதன் காலத்திலும் இடத்திலும் அளவோடு செறிந்த நிலை.

பிரபஞ்சத்திற்கு இறைவன் முழுமை தெரியும்.

ஆனால் பிரபஞ்சம் இறைவனைச் சொந்தமாகப் பெறவில்லை.

எனவே பிரபஞ்சம் தன்னுள் ஒரு செறிவான புள்ளியில் தான் சேர்ந்து அதன் மூலம் இறைவனையடைய முயல்கிறது.

தன்னையறியும் மனிதனில் பிரகிருதி திரும்பி புருஷனைப் பார்க்கிறது.

உலகம் அவ்வழி பிரம்மத்தை நாடுகிறது.

இறைவன் இயற்கையாக மாறியதால் மீண்டும் இயற்கை இறைவனாக முயல்கிறது.

  • பிரபஞ்ச மூலமே மனிதன் தன்னையறிய முயல்கிறான்.

அதுவே அதன் அஸ்திவாரம், அவன் கருவி, அவனரங்கம், தெய்வக்காரியத்திற்கு அவனுடைய பொருள்.

பிரபஞ்ச வாழ்வு செறிந்த ஒரு புள்ளி மனிதன்.

அது பிரம்மத்தின் தீவிர ஐக்கியமில்லை.

மனிதன் அவசியமாக சிருஷ்டிக்க வேண்டும் அனைத்தையும் தன்னுட்கொண்ட இறைவனை வெளிப்படுத்த வேண்டும்.

இருப்பினும் புதிரான பிரம்மத்தை அவன் தன்னுட் கொள்ள வேண்டும்.

அதை அவனுடைய சுபாவம் அகந்தையாக்கி விட்டது.

இதைச் செய்யாவிட்டால் மனிதன் இலக்கைத் தவற விடுவான்.

Page No:. 46:

  • பிரபஞ்சம் மனிதனிடம் வாழ்வாக வருகிறது.

மனித முன்னேற்றமென்பது வாழ்வை அவன் சீர் செய்ய வேண்டும்.

மிருகத்திற்கு சாப்பாடு போதும்.

தெய்வம் தன் அற்புதத்தில் தன்னை இழந்துள்ளது.

மனிதனுக்கு மட்டுமே இறைவனையடையும் ஆர்வம் கடமையாக அமைந்துள்ளது.

  • வாழ்வின் ஜீவனுக்கு மனிதன் மனு ஆவான், அவன் மனோமயப் புருஷன்.

இந்த நிலையைக் கடந்த உயர்நிலையை அவன் வலியுறுத்தித் தேடுவதே தெய்வீக வாழ்வின் அடிப்படை.

Page No:. 47:

  • மனிதனுடைய தேடல் அவனை இரு எதிர்மறைகளுக்கிடையே கொண்டு வருகிறது.கீழே இருட்டு, மேலே பயங்கர இருட்டு.
  • அவை எப்படி தன்னை பாதிக்கிறது என அவன் காண்கிறான். என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது, எது அதன் சாரம் என அவனால் அறிய முடிவதில்லை.
  • இறைவனை மறுக்கும் இவை வாழ்வில் உண்மை.

Page No:. 48:

  • சுமுகத்தினின்று எழுந்தவை உலகத்துடனும் அதன் சத்தியத்துடனும் சுமுகமாக இல்லாததால் மனிதன் முரண்பாட்டைக் காண்கிறான்.
  • அறியாமையால் நாம் மரணத்தைக் கடக்க வேண்டும்.

தீமையை விலக்கி அதைச் செய்ய முடியாது. தீமையைத் திருவுருமாற்ற வேண்டும்.

Page No:. 49:

  • தெய்வத் திருமாற்றம் நடக்க வேண்டுமானால், ஆரம்பத்தில் இம்முரண்பாடுகள் ஒரே பொருளாலானவையாக இருக்க வேண்டும்.
  • நாம் அசத் என்பது அறிவைக் கடந்த வாழ்வாக இருக்கலாம் எனக் கண்டோம்.

அசத் என்பதும் சச்சிதானந்தம்.

நமக்கு அசத்திற்கு சத், சித், ஆனந்தம் எனப் பெயரிட அச்சப்படுகிறோம்.

  • அனைத்தும் ஒரே பொருள் ஒரே சத்தியம் என நாம் கூறினோம்.

பாதாள இருட்டும் சச்சிதானந்தம் தவிர வேறில்லை.

அதை அறிவால் அறிய முடியும்,  திருஷ்டியால் காணலாம்,  இன்று அதை மறுக்கும் உணர்வுக்குப் புலப்படும்படி  நாம் அதைப் பெறலாம்.

இக்கண்ணோட்டத்தில் ஒரு தீர்வு காண முடியும்.

  • அதை சாதிக்க நாம் மேல்மனத்தை ஊடுருவிச் செல்ல வேண்டும்.

சுருக்கம்: Chapter VI - பிரபஞ்சத்தில் மனிதன்.

1.            தன்னையறியும் வாழ்வு தன்னை ரூபத்தில் சித்திக்க மனிதனில் வெளிப்படுகிறது.

இது விஷ்ணு. இதை உலகம் ஏற்கிறது.

2.            மனம், வாழ்வு உடலில் அனந்தமாவது மனிதனால் நடக்கக் கூடியது.

3.            பிரபஞ்சம் மனிதனை சிருஷ்டித்து அவன் மூலம் இறைவனையடைய முயல்கிறது.

4.            பிரபஞ்ச மூலமே மனிதன் தான் யார், தான் பிரம்மம் என உணர முடியும்.

5.            மனோமயப் புருஷன் வாழ்வின் ஆத்மாவுக்கு மனிதன்.

தெய்வீக வாழ்வுக்கு இதைக் கடந்த புருஷன் தேவை.

6.            மேல்மனத்தின் உள்ளே ஊடுருவிச் சென்றால் சச்சிதானந்தத்தை விடப் பெரிய அசத் மூலம் விடையைக் காணலாம்.

Chapter VII

அகந்தை

Page No:. 51:

  • அனைத்தும் சச்சிதானந்தமானால், வேதனை, மரணம் என்ன?

கடவுளை ஏற்பது முழுநிலை.

கடவுளை பிரிந்த ஜீவியத்தில் ஏற்பதால் எழுபவை மரணம், வேதனை.

மனிதனுள் பிரபஞ்சத்தைக் காண்பது தவற்றை விலக்கும்.

உடலின் ஜீவியத்தில் ஆன்மாவைக் காண வேண்டும்.

  • முழுமை என்பது மீண்டும் சுமுகத்தை ஏற்படுத்துவது.

அதனால் எதிரானவை இணையும்.

எதிரான இரட்டைகளை சச்சிதானந்தத்தில் காண முடியாது.

சச்சிதானந்தம் ரூபத்தைக் கடந்தது.

கடந்தது இணைப்பதில்லை, திருவுருமாற்றும்.

Page No:. 52:

  • மனிதனை முழுமையுடன் இணைக்க வேண்டும்.

நமக்கு தற்சமயம் உள்ள ஜீவியமே முடிவல்ல; அதன் பண்புகளே முடிவல்ல எனில் வழி பிறக்கும்.

வேறு ஜீவியம் உண்டு. அதில்;

மரணம் அமர வாழ்வில் ஏற்படும் மாற்றம்

வலி ஆனந்தம் திரும்பிச் செல்வதால் ஏற்படுவது

அளவு என்பது அளவற்றது திரும்பித் தன்னைக் காண்பது

தீமை என்பது நன்மை தன் சிறப்பைத் தானே சூழ முயல்வது.

எண்ணத்தில் மட்டுமல்ல, அனுபவத்திலும் இது உண்மை.

அந்நிலையை எட்டுவது சிறப்பெய்துவதில் ஒரு கட்டம்.

  • பழைய பழக்கங்கள் புதிய பழக்கங்களைப் புரிந்து கொள்ளும்வரை புதியதாக மாற முயல்வது ஆபத்து.

Page No:. 53:

  • நம் கண் சூரியன் பூமியைச் சுற்றுவதைக் காண்கிறது.

தன்னை மையமாகக் கொண்டு, இறைவன் தனக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைக்கிறது.

இது மாற மனிதன் பிரபஞ்சமாகவும், பிரம்மமாகவும் மாற வேண்டும்.

Page No:. 54:

  • புது வாழ்வின் இலட்சியம் அகந்தை அழிவது. அளவு, அறியாமை, மரணம், வேதனை, தீமையைக் கடப்பது இலட்சியம்.
  • மரணமும், அளவும் முடிவானால் மேல்லோகத்திலேயே அவற்றைக் கடக்க முடியும்.

Page No:. 56:

  • பகுத்தறிவு வலியுறுத்தினால் உயர்ந்த இலட்சியம் ஒரு எட்ட முடியாத உயர்ந்த இலட்சியமாகும்.

பகுத்தறிவைத் தொடர்ந்தால் பிரம்மம் நம்முள் வரும்.

மனம் கலப்பற்ற சந்தோஷத்தைக் கருத முடியும்.

நெஞ்சு திருப்தியில்லை என்ற நிலையை விலக்கும்.

உடலால் வலியை எளிதாக விலக்க முடியாது.

வலியை நீக்குவது புலன்களின் பிறப்புரிமை.

Page No:. 57:

  • இன்றுள்ளது, நேற்று வித்தாக இருந்தது.

இன்றைய வித்து நாளைய சித்தி.

ஞானம் சக்தியும் ஆளும் திறனுமாகும்.

 அதனால் வருத்தம், வலி இவற்றைப் பற்றிய ஞானத்தை நாம் பெற முடியும்.

  • விஞ்ஞானம் வலியைக் குறைக்க முயல்கிறது. ஒரு நாள் வலியிருக்காது.
  • வேதாந்தம் அப்படிப்பட்ட கருத்தைத் தெரிவிக்கிறது.
  • அழியா வாழ்வு, சுய ஆனந்தம், சுயமான நல்லது ஆகியவை அவை.

Page No:. 58:

  • வாழ்வு, ஆனந்தம், சத்தியம், நல்லது ஆகியவற்றை நம் அகந்தை அறிய முயலும்பொழுது மரணம், வலி, தீமை, பொய் எழுகிறது.

சரியான உறவு தவற்றை விலக்கும்.

மனிதன் பிரம்ம முழுமையில் பங்கு கொண்டால் தவறு விலகும்.

  • அகந்தை இடைப்பட்டது. ஈஸ்வரனே காரணமும் ஆண்டவனுமாகும்.

Page No:. 59:

  • அகந்தை இடைப்பட்டது. ஈஸ்வரனே காரணமும் ஆண்டவனுமாகும். அனந்தம், சத்தியம், நல்லது மனிதனில் மனிதனைக் கடந்து மலர்ந்தால் அதுவே பிரகிருதி காத்திருக்கும் புனர்ஜென்மம்.

சுருக்கம்: Chapter VII  அகந்தை.

1.            பிரபஞ்சம் மனிதனில் பிறப்பதுவும், உடலின் ஜீவியத்தில் ஆன்மீகம் எழுவதும் அகந்தையினின்று மீளும் வகை.

2.            மரணம் ஒரு மாற்றமே என்ற உணர்வு அனுபவிக்கக்கூடியது.

3.            பூமி சூரியனைச் சுற்றி வருகிறதென கண் அறிய பிரபஞ்சமும், பிரம்மமும் சித்திக்க வேண்டும்.

4.            பிரம்மத்தை அறிவால் அடையலாம்.

5.            அகந்தை செயல்படாவிட்டால் சுய ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.

6.            பிரகிருதி மனிதனில் அனந்தம் மலரக் காத்துள்ளது.

Chapter VIII

வேதாந்த ஞானம்

Page No:. 60:

  • சச்சிதானந்தத்திற்கும் அகந்தைக்குமிடையே உள்ளது என்ன?
  • புலன் வழி ஜட உலகை மட்டும் காண முடியும்.தூய்மையான அறிவு புலன்களை விட்டகன்று உயர உதவும்.
  • புலன் அறிவை பகுத்தறிவால் திருத்துவதே மனிதன் பெற்றுள்ள கருவி.

Page No:. 61:

  • தூய அறிவு தத்துவ ஞானம் தரும்.

புலனைக் கடந்த சத்தியம் அறிவுக்கு எட்டும்.

Page No:. 62:

  • மனம் பெறும் அறிவு கலப்படமானது.
  • மனம் என்பது புலனறிவு. அதனால் புலனுதவியின்றி நேரடியாகக் காண இயலும்.
  • ஞானம் என்பது ஐக்கியம்.
  • நாம் சூழலினின்று பிரிந்து விட்டதால் புலன்கள் தேவைப்படுகிறது.
  • நேரடி ஞானம் ஐக்கியத்தால் பெறுவது. நாம் அதை இழந்து விட்டோம்.
  • இது அகந்தையின் செயல்.

மயக்கம் தரும் மந்திரத்தில் நாம் புலன்களைக் கடக்கிறோம்.

விழிப்பில் இது கடினம்.  ஆனால் முடியும்.

Page No:. 64:

நம்மால் புதிய புலன்களை வளர்க்க முடியும்.

Page No:. 65:

  • அறிவு காண்பது.

ஐக்கியத்தால் நாம் சுய வாழ்வை அறிகிறோம்.

இந்த ஐக்கியத்தை மனத்தினின்று ஆத்மாவுக்குக் கொண்டு போகலாம்.

அதனால் சத்தியம் சித்திக்கும்.

வேதாந்தம் பிரம்ம ஞானத்தின் மூலம் பிரபஞ்சத்தை அறிகிறது.

  • பகுத்தறிவு பரமாத்மாவுக்கும் பாதாளத்திற்கும் இடையேயுள்ள பாலம்.

பாதாளத்தின் முக்கிய சொல் ஜோதி.

வாழ்வுக்கு முக்கிய சொல் செயல்.

பரமாத்மாவின் ஜீவியத்தில் ஜோதி கலந்துள்ளது.

  • ஞானம் ஐக்கியத்தால் பெறுவது.
  • பரமாத்மாவில் ஞானம் மறைந்தில்லை.

அது அவ்விடத்திற்குரியது.

  • பகுத்தறிவும் மனமும் ஞானத்தை சிறை மீட்க முயல்கின்றனர்.அதன் மூலம் ஞானத்தின் மூலத்தையடைய முயல்கின்றனர்.
  • சுயஞானம் மனதில் சொந்த பிரம்மத்திற்கும், பிறருக்கும் உண்டு.அது அதை உயர்த்தி சொந்தமாக உணரும் ஐக்கியத்தை நாடுகிறது. பகுத்தறிவு சத்திய ஜீவிய ஞானமாகிறது.

Page No:. 66:

தெய்வீக வாழ்வின் சில சட்டங்களைக் காண்போம்.

  • சத்பிரம்மம், தூய வாழ்வு, வேதாந்த அடிப்படை.
  • புலன்கட்கு அது தெரியாது.
  • புலன்கள் சலனத்தையும் ரூபத்தையும் அறிய வல்லன.
  • ரூபம் கலப்படம்.
  • ரூபத்துள் சென்றால் அது கரையும். சலனம் கரையாது மிஞ்சும்.
  • இடத்தில் ஜடத்தின் சலனம். காலத்தில் சலனம் ஆகியவை வாழ்வுக்கு அவசியம்.
  • ஏதோ ஒரு சமயம் மரணத்தையும் மாற்றத்தையும், ரூபத்தையும், செயலையும் கடந்த அசையாத, மாறாத ஒன்றைக் காண்கிறோம்.
  • ஞானம் நம் முதல் குரு. பகுத்தறிவு பலன் பெற வருகிறது.
  • ஞானம் உள்ள லோகத்தில் மரணமில்லை என்பதால் ஞானம் அமரத்துவத்தைப் பற்றிக் கூறுகிறது.

Page No:. 67:

  • ஞானம் வாழ்வை விட ஜீவனைப் பற்றிப் பேசுகிறது.
  • வேதாந்தம் இதை நானே அவன், நீயே அது ,  சர்வம் பிரம்மம்   இந்த ஆத்மா பிரம்மம் என்று கூறுகிறது.

Page No:. 68:

நம் சுபாவம் அறியும்படி ஞானம் தர அதனால் முடியவில்லை.

மேல்மனம் பகுத்தறிவுக்குரியது, ஞானத்திற்கல்ல.

உபநிஷத காலத்தில் ஞானமழிந்து, பகுத்தறிவு மேலோங்கியது.

  • ரிஷிகள் நீ என்ன நினைக்கிறாய் எனக் கேட்பதில்லை, உனக்கென்ன தெரியும்? எனக் கேட்கிறார்கள்.

Page No:. 69:

  • பகுத்தறிவு ஞானத்திற்குட்பட்டது.

Page No:. 70:

  • புருஷன், ஆத்மா, சத்பிரம்மம், தூய வாழ்வு ஆகியவை முக்கியம் பெறுகின்றன.

சுருக்கம்: Chapter VIII - வேதாந்த ஞானம்.

1.            பாதாளத்தையும், பரமாத்மாவையும் சேர்த்து பிரம்மத்துடன் இணைய பகுத்தறிவு புலனை விட்டகன்று பிரம்ம ஐக்கியத்தை நாடுகிறது.

2.            வேதாந்தம் பிரம்ம ஞானத்தின் மூலம் உலகை அறிய முயல்கிறது.

3.            மேல் மனத்தின் பின்னால் ஞானத்தின் மூலம் நாம்  அதைக் காண்கிறோம்.

4.            இவ்வழி வேதாந்தம் கண்டவை நானே அவன், நீயும் அவனே, ஆத்மா பிரம்மம், சர்வம் பிரம்மம்.

Chapter IX

சத் புருஷன்

Page No. 71:

  • அகந்தையினின்று விலகி, உலகை விழிப்பான கண்களால் ஆர்வமாகக் கண்டால் பெரும் சமுத்திரமான சக்தி, அனந்த சலனமாகத் தெரிகிறது.
  • கட்டுக்கடங்காத இந்த சலனம் நம்மை புறக்கணிக்கவில்லை.
  • நமக்கு சிறியது, பெரியது உண்டு.

நல்லது கெட்டது உண்டு.

சிருஷ்டியில் வலிமையை உற்பத்தி செய்யவும், எளிமையை உற்பத்தி செய்யவும் ஒரே சக்தி தேவைப்படுகிறது.

நமக்கு நாம் முக்கியம்.

அனைத்துமான இந்த சாகரம் முக்கியமில்லை.

அகந்தையழிந்தால் இந்நிலை தலைகீழே மாறி உண்மையான வாழ்வு எழும்.

Page No. 73:

  • செயலில் வெளிப்படும் சக்தியே வாழ்வு (Existence)என்பது உண்மை.

Page No. 74:

  • பகுத்தறிவு, அனுபவம், ஞானம், கற்பனை ஆகியவை முடிவில்லை எனக் கூறுகின்றன. ஆரம்பத்திற்கு முன்னும், முடிவுக்குப் பின்னும் மேலும் காலம் இடம் உள்ளது.
  • அனந்தமான சக்தி, அனந்தமான வாழ்வு* இரண்டும் காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டவை.பகுத்தறிவு தூய்மையானால் அது இவற்றைக் கடந்து செல்லும்.காலமும் இடமும் ஜீவியத்தின் அம்சங்கள்.
  • நாம் வாழ்வை * கூர்ந்து நோக்கினால், காலமும், இடமும் மறைந்து விடும்.

காலமும் இடமும் மனத்தால் (psychological) எழுபவை. மனம் சலனமடைந்து காலம் ஏற்படுகிறது. மனம் பரவலாக வளர்ந்து இடம் ஏற்படுகிறது.

காலம்:  காலத்தைக் கடந்தது, அனைத்தையும் உட்கொண்ட எந்த நேரமும் புதுமையான சலனம்.

இடம்:   அனைத்தையும் தன்னுட்கொண்ட, அனைத்தையும் ஊடுருவும் புள்ளி.

அதற்கு அளவு இல்லை.

சத்தியத்திற்கும், நாம் காண்பதற்கும் பெரிய முரண்பாடுள்ளது, நாம் மனித மொழியைக் கடந்த நிலையில் பேசுவதால் அப்படித் தோன்றுகிறது.

  • வாழ்வு* கற்பனையா?
  • தோற்றத்தைச் சலனமாக்கினால், நமக்கு விளக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
  • சலனம் உண்டு என்றால் சலனமற்ற நிலையும் உண்டு.
  • சக்தி பூரண வாழ்வு*, செயலல்ல.
  • அது உண்மையானால் இரண்டில் ஒன்று உண்மையாகும்.

1) விளக்கமுடியாத தூய வாழ்வு*.

2) விளக்க முடியாத தூய செயல்.

  • செயல் மட்டுமே உண்மையானால், வாழ்வில்லை*, சூன்யமே முடிவு.
  • தூய பகுத்தறிவு இதை மறுக்கிறது.

Page No. 75:

  • விளக்க முடியாத, அனந்தமான, காலத்தைக் கடந்த, இடத்தைக் கடந்த வாழ்வு* உண்டானால், அது தூய பிரம்மம்.
  • இந்த பிரம்மம், ரூபம், குணம், அளவைக் கடந்தது.
  • இது எண்ணத்தால் அடையக் கூடியதல்ல.

முழு ஐக்கியத்தால் மட்டும் அடையலாம்.

  • சலனம் என்பது (relative) உலகைச் சார்ந்தது.அது பிரம்மத்தின் பகுதி.
  • உலக விஷயம்(relative). பிரம்மம் இவற்றோடுள்ள ஐக்கியங்கட்குள்ள வித்தியாசத்தை வேதாந்தம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

இயற்கையின் தோற்றங்கள் தங்களுக்குள்ள ஆகாயத்தினுள் நுழைந்தால் தற்பொழுதுள்ள ரூபத்தையும் நிலையையும் இழந்து விடுகின்றன.

Page No. 76:

  • அசையாததிலிருந்து சலனம் எழுவது என்றும் உள்ளது.
  • ஆரம்பம், முடிவு இல்லாத எந்த நேரமும் புதியதான சலனமான காலத்தைக் கடந்ததில் நாம் இதைக் கருத முடியாது.
  • காலத்துள் உள்ள தொடர்ந்த சலனத்துள் முடிவற்றதாக நகர்வதை நாம் இது எனலாம்.

ஆரம்பம், நடு, முடிவு என்பது காலத்துள் உள்ளவை.

  • இவ்வளவும் கூறுவது பகுத்தறிவு. நாம் அதை ஏற்க வேண்டிய அவசியமில்லை.
  • நாம் வாழ்வை* மனதால் சிந்திக்காமல், நாம் காண்பதைக் கொண்டு அறிய முயல்வோம்.
  • தூய்மையான பார்வை வாழ்வு* சலனம் எனக் காட்டுகிறது.
  • காலத்தில் சலனம், இடத்தில் சலனம் மட்டும் உண்டு. அவை அகமும், புறமுமாகும்.
  • காலம் உண்மை, அது நீள்வது உண்மை.
  • காலம் என்பது மனத்துடையது (psychological); இடமும் அப்படியே.
  • இடத்தின் பின்னால் போகலாம், காலத்தின் பின்னால் போக முடியாது. ஏனெனில் காலம் என்பது நாம்.
  • கடந்தவை முழுவதும் நிகழ் காலத்திற்குள் உள்ளன. நிகழ்காலம் எதிர்காலத்தின் ஆரம்பம்.
  • பிறக்குமுன் அழிவும் ஆரம்பம்.
  • இருப்பது காலத்தைக் கடந்தது, பிரிக்க முடியாதது, தொடர்ந்து நகர்வது; அது பிரிக்க முடியாத ஜீவிய சலனத்தைத் தாங்கிச் செல்கிறது,( i.e.) இடம்.
  • காலம் என்பது மட்டும் உண்டு. அது பிரம்மம். சலனம் என்பது ஜீவன்.

Page No. 77:

  • பகுத்தறிவுக்கும் ஞானத்திற்கும் இடையேயுள்ள முரண்பாடு உண்மையில்லை.ஞானம் உண்மை. அது முழு அனுபவத்தின் எல்லையில் நின்று விடுகிறது.
  • ஞானம் சலனத்திலுறைவது காலம்.
  • இச்சலனம் நம் ஜீவனின் அம்சமான செயல்.
  • நம்முள் இச்சலனத்துள் கலக்காத ஒன்றுள்ளது.
  • நாம் அதனுள் சென்று வதியலாம்.
  • பகுத்தறிவு நமக்கு ஏற்கனவே அதைக் கொடுத்து விட்டது.
  • அது தூய வாழ்வு*, காலத்தைக் கடந்தது, இடத்தைக் கடந்தது, விளக்க முடியாதது, காலத்தால் பாதிக்கப்படாதது, இடத்துள் நுழையாதது, ரூபத்தைக் கடந்தது, அளவு, குணத்தைக் கடந்தது, பிரம்மம் மட்டும் உள்ளது.

Page No. 78:

  • தூய வாழ்வு* என்பது கற்பனைக் கருத்தல்ல, உண்மை.
  • இது அடிப்படை சத்தியம்.
  • சக்தியும், சலனமும் உண்மை.
  • உயர்ந்த ஞானம் இவற்றைக் கடந்து செல்லும். ஆனால் இதை அழிக்காது.
  • தூய வாழ்வு*, உலக வாழ்வு*; ஜீவனின் உண்மை, சலனத்தின் உண்மையாகும்.

இவை இரண்டு அடிப்படை உண்மையாகும்.

  • இவற்றிடையேயுள்ள தொடர்பை அறிவது ஆன்மீக விவேகம்.
  • ஒருமை, பன்மை என்பது போல் ஸ்தாணு, சலனம் என்பவை பிரம்மத்தை நாம் மனத்தால் அறிவதாகும் (psychological representations).
  • பிரம்மம் ஸ்தாணு, சலனத்தைக் கடந்தது, ஒருமை, பன்மையைக் கடந்தது.
  • உலக வாழ்வு* சிவபெருமானுடைய ஆனந்தத் தாண்டவம்.
  • நம்மால் பிரம்மத்தை நினைக்க முடியாது என்பதால் நாம் சிவனையும், காளியையும் ஏற்று காலம், இடம் என்றால் என்ன? வாழ்வு*டன் இவற்றின் தொடர்பென்ன எனக் காண வேண்டும்.
  • பகுத்தறிவும் ஞானமும் வாழ்வு* என்றால் என்ன என்று கூறின. மேலும் அவை சக்தி, சலனத்தைப் பற்றிப் பேச வேண்டும்.
  • சக்தி என்பது பிரகிருதியா? அல்லது பிரகிருதி சித்துடைய சக்தியா?

சுருக்கம்:  Chapter IX -  சத் புருஷன்.

1)            வாழ்வு* என்பது சக்தி. பகுத்தறிவு அதைக் கடந்த ஒன்றுளது எனக் கூறுகிறது. அது காலம், இடத்தைக் கடந்தது.

2)            அது பிரம்மம். பகுத்தறிவு கூறியதைக் கடந்து செல்வோம்.

3)            வாழ்வு* சலனம். சலனம் காலம், இடமாகும். இரண்டும் உண்மை. காலத்தைக் கடந்தது உண்மை. காலம் பிரம்மம், சலனம் என்பது ஜீவன்.

4)            ஞானம் சலனத்தை ஏற்றால் காலம் ஏற்படுகிறது.

5)            அது நம்முள் உள்ளது. நாம் அதனுள் சென்று தங்கலாம்.

6)            தூய வாழ்வு*, உலக வாழ்வு* என்பவை ஜீவனுடைய உண்மை, சலனத்தின் உண்மை.

இரண்டும் அடிப்படை உண்மைகள்.

7)            அவற்றிற்குள்ள உறவையறிவது விவேகம்.

8)            ஸ்தாணு, சலனம், ஒருமை, பன்மை என்பவை மனம் ஏற்பவை, பிரம்மம் இவற்றைக் கடந்தது.

9)            இப்பொழுது வாழ்வு* என்பதை அறிவோம். சக்தியென்பது என்ன?

10)          வாழ்வு* சக்தி. அதைக் கடந்ததுண்டு. அது எனப்படும். நாம் அதனுள் சென்று வாழ முடியும்.

Chapter X

சித்  சக்தி

Page No. 79:

  • தோற்றம் நிறை வாழ்வு தோற்றமழிந்தால் சக்தியாகிறது.

          அது சுய அனுபவம் பெற ரூபம் பெறுகிறது.

          முன்னோர் அதை அனந்தமான சமுத்திரம், ஹிருதய சமுத்திரம் என்றனர்.

  • ஜடம் அப்படிப்பட்ட சக்தி.

ஜடத்துள் மனம் சிக்கியுள்ளது.

இது மூளையுள் செயல்படுகிறது.

ஜடம் ஜடத்துடன் தொடர்பு கொள்வதால் உருவம் பெறுகிறது.

மனம் எதிரொலிப்பதால் ஜடம் ஏற்படுகிறது.

ஜட சக்தியின் முதல் நிலை சப்தம் (இது ஜடம் இடத்துள் நீள்வதால் ஏற்படுவது).

சப்தம் மட்டுமிருந்தால் ரூபம் ஏற்படாது.

அதை தடை செய்து, சுருக்கி, நீண்டு, கலந்து நிலையான உறவை ஏற்படுத்தி இருதலைப்பிலும் பலன் ஏற்படுத்த வேண்டும்.

ஜட சக்தி அதன் முதல் நிலையை மாற்றி இரண்டாம் நிலையில் ஆகாயமாகிறது.

அதன் முக்கிய குணம் சக்தி சக்தியுடன் தொடர்பு கொள்வது.

தொடர்பே எல்லா ஜட உறவுக்கும் அஸ்திவாரம்.

ரூபம் உண்மையில் ஏற்பட நிலையான சட்டம் தேவை.

ஓளி, மின்சாரம், நெருப்பு, சூடு முன்றாம் நிலை.

நிலையான ஜடம் ஏற்பட இதுவும் போதாது.

நிலையான கவர்ச்சி, வெறுப்பு நீரை ஏற்படுத்துகிறது.

மண், பிருத்வி, திடமான ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையது.

இது ஐந்தாம் நிலை.

Page No. 81:

  • நம் புலன் உணர்வுகள் அனைத்தும் பஞ்ச பூதங்களைப் பொருத்தது.

 சப்தம் என்ற உணர்வு அதிர்வை ஏற்பதால் வருகிறது.

அதிர்வுள்ள  லோகத்தில் தொடர்பு கொள்வதால் தொடு உணர்ச்சி எழுகிறது.

ஒளியின் செயலால் ஒளியின் நெருப்பின், சூட்டின் சக்தியால் ஏற்பட்ட ரூபங்களால் பார்வையெழுகிறது.

நாலாம் அம்சம் ருசியையும், ஐந்தாம் அம்சம் வாசனையையும் தருகிறது.

அனைத்தும் சக்தியோடு சக்தி அதிர்வால் தொடர்பு கொள்வதால் ஏற்படுவது.

சக்திக்கும் முடிவான மாற்றத்திற்கும் பாலமாக அமைவது இதுவே.

  • ஜீவியத்தை விளக்குவது பாக்கியாக இருக்கிறது.

சக்தி சக்தியுடன் தொடர்பு கொள்வதால் உணரும் ஜீவியம் எப்படி ஏற்படுகிறது என விளக்க முடியாது.

  சாங்கியம் பூதங்கட்குப் பின்னால் மகத், அகங்காரம் உள்ளன என்றது. அவை ஜடமான சக்திகள் அல்ல.

மகத் என்பது அகண்ட பிரபஞ்ச சக்தி.

அடுத்தது அகந்தையின் உருவம்.

இவ்விரு தத்துவங்களும், அறிவும் ஜீவியத்தில் செயல்படுகின்றன. இது சக்தியால் செயல்படுவதில்லை. செயலற்ற ஆத்மா (conscious soul) வால் செயல்படுகிறது. ஆத்மாவில் செயல்கள் பிரதிபலிக்கும். அப்பிரதிபலிப்பால் ஜீவிய வண்ணம் ஏற்படுகிறது.

  • எப்படி விவரித்தாலும் ஜீவியம் என்பது சக்தி.

இயற்கையை ஜட சக்தி எனலாம்.

அல்லது விழிப்பான தத்துவம் எனலாம்.

உலகில் பொருள்கள் இருக்கும் தத்துவம் ஒன்றுண்டு. சக்தி அசைந்து ரூபம் பெறுவது அத்தத்துவம். உருவம் பெறாத சக்திகள் சந்தித்து மாறுவதால் எல்லா ரூபங்கள் உருவாகின்றன. ஒரு ரூபம் அடுத்த ரூபத்தில் படுவதால், உராய்வதால் உணர்ச்சி ஏற்படுகிறது.

Page No. 82:

  • விஞ்ஞானம் அதே முடிவுக்கு வந்துளது.

         ஞானமும், அனுபவமும் இப்படி விஞ்ஞானமும் தத்துவமும் பேசுவதை ஆமோதிக்கின்றன.

         நாம் உலகை ஜீவியத்தின் செயல் எனலாம்.

          அவ்வகையிலும் செயல் வருகிறது.

செயலில் சக்தி அசைகிறது. அது சக்தியின் லீலை.

உலகின் அடிப்படைத் தத்துவமிது.

நம் உள்ளுறை அனுபவம் இதை ஆமோதிக்கிறது.

எல்லா செயலும் மூவகை சக்தியால் எழுகின்றன.

ஞான சக்தி, பிராண சக்தி, கிரியா சக்தி என்பவையிவை.

நாம் அமைதியாக இருக்கும்பொழுதும் இம்மூன்று சக்திகள் அசையாமலிருக்கின்றன.

  • இச்சலனம் எப்படி ஏற்பட்டது?

இச்சக்தி வெளியிலிருந்து வருகிறது என்பது இல்லையெனக் கண்டோம்.

இச்சக்தி என்றும் உள்ளது, அனைத்தின் சாரம் என்பதை நாம் ஏற்கவில்லை.

எப்படிச் சலனம் ஏற்படுகிறது?

  • ரிஷிகள் சக்தி வாழ்வினுள்* உள்ளது என்றனர்.

பிரம்மனும் சக்தியும், சிவனும் காளியையும் பிரிக்க முடியாது.

இச்சக்தி செயல்படலாம், செயல்படாமலிருக்கலாம்.

இது அறிவுக்குப் பொருத்தமானது. நாம் இதை ஏற்கலாம்.

சக்தி வாழ்வினுள்* நுழைந்தது என்பதை ஏற்க முடியாது.

சாங்கியம் புருஷனும் பிரகிருதியும் மாறி மாறி அமைதி, செயலென இருக்கின்றன எனக் கூறுகிறது.

Page No. 83:

  • வாழ்வினுள்* சக்தியிருப்பதால் எப்படி யார் அசைக்கின்றனர் என்ற கேள்வி எழாது.

          தொடர்ந்து அது செயல்படாவிட்டாலும், தொடர்ந்து மீண்டும் மீண்டும் எழுகிறது.

  • ஏன் என்ற கேள்விக்குப் பதில் தேவை.

ஏனிந்த சலனம்?

வாழ்வுக்கு ஜீவனில்லையெனில் ஜீவியம் ஜடத்திலிருந்து எழுகிறது எனில் ஏன் என்ற கேள்விக்குப் பதில் வருகிறது.

பிரம்மத்தை ஏனிருக்கிறாய் என நாம் கேட்க முடியாது.

Page No. 84:

  • வாழ்வு* ஜீவனுள்ளது எனில் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

          ஜீவன் சக்தியின் பிடியிலிருப்பது எனில் ஜீவன் பிரம்மமாக முடியாது.

  • பிரகிருதிக்குக் கட்டுப்படும் பிரம்மம் பிரம்மமாகாது.

நாம் பிரம்ம சக்தி (absolute force) யைக் கருத வேண்டும், பிரம்ம ஜீவனில்லை.

சக்திக்கும் ஜீவியத்திற்குமுள்ள தொடர்பென்ன?

நாம் மயக்கத்திலிருந்து எழுவதை (consciousness) ஜீவியம் என்று கூறும் அர்த்தமற்றதை விட்டுவிடுவோம்.

இது மேல் மனம்.

அடி மனமும், பாதாளமும் பெரியவை.

நாம் இங்கு ஆரம்பிக்க வேண்டும்.

Page No. 85:

  • நாத்திகம் ஜீவியம் என்பது ஜடத்தைச் சேர்ந்தது என்கிறது.

ஜீவியத்தை நம் உடலுறுப்புகளினின்று பிரிக்க முடியாது என்கிறது.

ஜீவியம் உறுப்பைப் பயன்படுத்துகிறது என்பதை மறுத்து, உறுப்பின் பலன் என்கிறது.

மூளை எண்ணத்தை ஏற்படுத்தவில்லை.

இன்ஜின் மின்சாரத்தால் செயல்படுகிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.

சக்தி முந்தையது, மூளை  உறுப்பு  யல்ல.

  • தமஸ் உள்ள இடத்தில் மனத்தின் ஜீவியம் உண்டா எனக் கேட்கலாம்.

பிரபஞ்ச ஆழ்மனம் உறுப்பில்லாததால் இருந்தும் செயல்பட முடியவில்லை எனலாமா?

வாழ்வு* அனைத்தும் அப்படியல்லவா? செயல்பட உறுப்பற்றது.

உறங்குவதனுள் புருஷன் மறைந்தில்லையா?

Page No. 86:

  • பாதாளம் மேல் மனம் போன்றது.

அடிமனம் பெரியது.

அடிமனம் ஆழ்மனத்தைவிடப் பெரியது.

அதனால் பரமாத்மா இருக்கிறது எனலாம்.

அடிமனம் பரமாத்மாவை எட்டித் தொட்டு மீண்டும் ஆழ்மனத்தையடைகிறது.

Page No. 87:

  • உடலின் செல்லில் செயல்படும் உணர்ச்சி (vital consciousness) யுண்டு.

நமக்கு விருப்பு வெறுப்புண்டு.

மனத்திற்கு அவையில்லை. மிருகங்களில் உணர்ச்சி மேலும் முக்கியமானது.    தாவரங்களில் இது உள்ளுறை உணர்வாக இருக்கிறது.

எனவே மனத்தின் கீழே (sub-mental) உணர்ச்சி (vital consciousness). இது ஆரம்பத்தில் மனம் போல் வேலை செய்கிறது. ஆனால் இது வேறுவகையாக அமைந்துள்ள து. அது தன் அனுபவத்தைப் பெறுவது வேறு வகை. பரமாத்மா மனத்திலிருந்து வேறுபடுவது போல் இதுவும் மனத்திலிருந்து வேறுபடுகிறது.

  • இந்நிலைகள் பிராணிகளுடன் முடிந்து விடுகிறதா?

அப்படியானால் வேறு உலகத்திலிருந்து ஜடத்தை விட மாறுபட்ட சக்தி பூமிக்குள் வந்திருக்க வேண்டும். ஜடத்துள் இல்லாதது எப்படி வெளி வர முடியும்?

Page No. 88:

  • ஜீவியம் எனில் அதற்கு ஒரு காரணமிருக்க வேண்டும், அறிவு வேண்டும். சொந்த ஞானம் தேவை.

அப்படியானால் பிரபஞ்ச விழிப்புள்ள சக்தியை நம்பலாம்.

மிருகத்திற்குத் தெளிவான திறமையுண்டு.

ஜடப்பொருளிலும் அறிவுள்ளது தெரிகிறது.

Page No. 89:

  • விரயம் என்பதை விளக்க வேண்டும்.

பிரகிருதியின் முழு இலட்சியம் தெரிந்தால் விரயம் என்பது இல்லையெனக் கொள்ளலாம்.

  • பிரகிருதிக்கு அறிவுண்டு என இதுவரை ஏற்க முடியவில்லை.

இனி அம்மறுப்பில்லை.

மனித ஜீவியம் பிரகிருதியின் ஜீவியம்.

உலகைப் படைக்கும் சக்தி அறிவுள்ள ஜீவனுள்ள சக்தி.

சக்தியில் வெளிப்படும் வாழ்வு* ஜீவன், தன்னையறியும் ஜீவன்.

சிறப்பான ரூபத்துள் சிறப்பாக ஜீவன் வெளிப்படுவதே நோக்கம்.

சுருக்கம்: Chapter X - சித் சக்தி.

1.   தோற்றம் ரூபமாகவும் சக்தியாகவும் மாறுகிறது.

2.   ஐம்புலன்கள்

3.   மகத்தும் அகங்காரமும் ஆன்மாவில் பிரதிபலிப்பதால் ஜீவியம் எழுகிறது.

4.   ஏனிந்த சலனம்?

      உலகைப் படைக்கும் சக்தி ஜீவனுள்ளது. அந்த சக்தியில் வெளிப்படும் வாழ்வு* ஜீவன்.

      சிறப்பான ரூபத்துள் சிறப்பு வெளிப்படுவது இலட்சிய நோக்கம்.

சித் சக்தி

Chapter X

விளக்கமான சுருக்கம்

1)            சக்தி ரூபமாக வெளிவருகிறது. அதன் நோக்கம் சிறப்பான ரூபம்.

2)            ஜடமும் அதன் பஞ்ச பூதங்களும் அப்படிப்பட்ட சக்திகள்

                ஐந்து பூதங்கட்குரிய ஐந்து புலன்கள் உருவாகின.

3)            சக்தி  சக்தியை சந்தித்தால் ரூபம் எழுகிறது.

                ரூபம் ரூபத்தைச் சந்தித்தால் உணர்ச்சி எழுகிறது. உணர்ச்சி ஜீவியமாகும்.

4)            எப்படி ஜீவியத்தை விவரித்தாலும் அது சக்தியே.

5)            விஞ்ஞானம், ஞானம், அனுபவம் இதை ஆமோதிக்கிறது.

6)            உலகை ஜீவியச் செயலெனால் செயல் உண்டு.

                செயல் சக்தியின் சலனம். இந்த சலனம் எப்படி ஏற்பட்டது?

7)            சக்தி என்பது ஜீவன். அது அசையாமல் அல்லது அசைந்திருக்கலாம்.

                இவ்விளக்கத்தை நாம் ஏற்கலாம்.

8)            சக்தி என்றும் உள்ளதல்ல; ஆனால் என்றும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வருவது.

9)            இரு கொள்கைகள்.

                ஜட வாழ்வு* ஏன் என்ற கேள்வி எழாது.

      ஜீவனுள்ள வாழ்வு*  சக்தி உறுப்புக்கு முந்தையது.

10)          ஜடம் பொருள்களில் மனம் உண்டா?

                தாவரத்திலும், உலோகத்திலும் மனம் உண்டு.

11)          சக்தி ஜீவனுள்ளது.

12)          ஜீவனுள்ள சக்தி ஜீவனுடையது.

Chapter XI

ஆனந்தம்  பிரச்சினை

Page No. 91:

  • இந்த ரூபங்களாலான உலகை சிருஷ்டிக்க எப்படி பிரம்மம் ஜீவிய சக்தியை அனுப்பியது?

                அது ஆனந்தத்திற்காக மட்டுமேயாகும்.

  • முடிவான வாழ்வு* தன்னையறிந்தது. அதன் சுபாவம் ஆனந்தம்.

Page No. 92:

  • பிரம்மம் அனுபவிக்கும் சுய ஆனந்தம் பிரம்மம் சுய ஆனந்தத்தால்  அதைப் பெற்றிருப்பதால்  மட்டுமல்ல. அந்த ஜீவன் அசையாது, சலனமற்றது.

              அப்பிரம்மத்தின் சக்தி அளவிறந்த ரூபங்களை சிருஷ்டிக்கும் திறனுடையது      என்பதால்,    அதன் ஆனந்தமும் அளவு கடந்து மாறும் சுய  ஆனந்தமாக  இருக்கும்.

                இதுவே சக்தியின் சிருஷ்டியின் நோக்கம்.

  • இருப்பதிலெல்லாம் தன்னையறியும் சக்தியுண்டு.

                அதற்கு மூல காரணம் தன்னையறியும் சக்தி.

                அதே போல் எல்லாவற்றிலும் வாழ்வின் ஆனந்தமுண்டு.

                அதன் மூலகாரணம் அந்த ஆனந்தம்.

  • தீமை, வலியை விளக்க வேண்டும்.

Page No. 93:

  • வலியிருப்பதே பிரச்சினை, இது தார்மீகப் பிரச்சினை.

Page No. 94:

  • கடவுள், சச்சிதானந்தம் எப்படி வலியை சிருஷ்டித்தது.

                கர்மம் தரும் விளக்கம் சரியில்லை.

  • தீமையும், வலியும் பிரபஞ்சத்திற்கு வெளியில் உள்ள கடவுள் ஏற்படுத்தியது என்பது பொருத்தமாகாது. ஏனெனில் சச்சிதானந்தம் தவிர வேறு எதுவுமில்லை.

                 தீமையென இருந்தால் அதை அவனுடைய சிருஷ்டியில் அனுபவிப்பது அவனே.

Page No. 95:

  • அவனே வலியை அனுபவிப்பதால் தர்ம சங்கடம் பாதி குறைந்து விடும்.

                இது பொய்யான விளக்கம்.

                அனைத்தையும் உட்கொண்ட ஏகனை தொடர்பு கொள்பவன் எனக் கூற  முடியாது.

                ஐக்கியத்தின் மூலமாகவே விளக்க வேண்டும்.

Page No 96:

  • முதலில், நம் உலகம் தர்மத்திற்குக் கட்டுப்பட்டதில்லை.

                ஜட சுபாவம் தர்மமாகாது.

                புலியை, புயலை நாம் குறை கூறுவதில்லை.

                குறை கூறுவது, நம்மீது குறை காண்பதே தர்மத்தின் அஸ்திவாரம்.

  • புலியைக் கண்டு மான் பயப்படுவது சொந்த ஆனந்தத்திற்கு ஆபத்து வந்து பதுங்குவதாகும்.

                மனிதன் தன்னை உணர்ந்து வெளிப்படுத்துகிறான்.

                அது அவனது பிறப்புரிமை.

                தன் செயலுக்கெதிரானதை அவன் வெறுக்கிறான்.

                அது மனிதனுக்குத் தீமை.

                மனிதன் மனவளர்ச்சி பெறும்பொழுது அவன் எண்ணங்கள் மாறி உயர்கின்றன.

Page No 97:

  • தர்மம் பரிணாமத்தில் ஒரு கட்டம்.

                மூன்று நிலைகட்கும்  மனிதன், விலங்கு, தெய்வம்  பொதுவானது    சச்சிதானந்தம் தன்னை வெளிப்படுத்துவது.

                ஆரம்பத்தில் வேகம் தர்மத்திற்குட்படாது. (non-ethical)

                விலங்குக்கு தர்மமில்லை. (infra ethical)

                அறிவுள்ள மிகையான மனிதனுக்கு தர்மம் பிடிக்காது. (anti-ethical)

                நாம் தர்மத்தைக் கடந்த உயர்ந்தவராக வேண்டும்.(Supra-ethical)

  • இந்த எல்லா நிலைகட்கும் பொதுவானதை நாம் அறிய வேண்டும்.
  • விழிப்பான சக்தி வாழ்வுக்குரியது. அது ரூபம் பெற்ற ஆனந்தம் தேடுவது மூன்று நிலைகட்கும் பொதுவானது.
  • அதுவே பிரச்சினையின் ஆணி வேர்.

Page No. 98:

  • சச்சிதானந்தத்தின் அடிப்படையில் ஒரு விடை கிடைக்குமா?
  • பிரபஞ்ச ஜீவியம் மனித ஜீவியத்தினின்று வேறுபட்டது.

          எனவே நாம் நாடி நரம்பால் அனுபவிக்கும் மகிழ்ச்சி பிரபஞ்ச ஆனந்தத்திலிருந்து வேறுபட்டது.

           வலியும் வருத்தமும் வெளியிலிருந்து வருகின்றன.

           ஆனந்தத்திற்கு காரணம் தேவையில்லை.

           ஆனந்தம் காரணத்தின் பின்னுள்ள காரணத்துள் எழுகிறது.

           ஜீவனின் ஆனந்தம் சலனத்தின் (ஜீவியத்தின்) ஆனந்தமாகிறது.

           அப்பொழுது அது சக்தி நகரும்பொழுது உடன் நாடுகிறது.

           அதன் உருவங்கள் பல. வலியும் மகிழ்ச்சியும் அவற்றைச் சேர்ந்தது.

           அவற்றை positive, negative எனலாம்.

           ஜடத்தில் இது ஆழ்மனத்திலுள்ளது.

           மனத்தைக் கடந்து இது பரமாத்மாவில் உள்ளது.

           இது மனமும் வாழ்வும் சலனத்தால் தம்மை சித்திக்க வேண்டும் என்கிறது.

          அதற்கு தன்னையறியும் திறன் வளர்வதாகப் பொருள்.

          ஆரம்பத்தில் இது இரட்டையாகும், தூய்மை குறைந்தது.

Supreme Delight of Being இல் தன்னையறிய முயல்வதால் தூய்மை வளர்கிறது.

          அந்த ஆனந்தத்திற்கு காரணமில்லை, சுயமானது.

          சச்சிதானந்தம் அப்படியே செயல்படுகிறது.

          சச்சிதானந்தம் பிரபஞ்சத்தை மனிதனில் அறிய முயல்கிறது.

ரூபத்திற்குக் கட்டுப்படாத ஜீவியத்தை ரூபத்தில்  உடலில், மனத்தில்  சித்திக்க சச்சிதானந்தம் முயல்கிறது.

அதே போல் சச்சிதானந்தம் சுயமான, பிரபஞ்ச, பொருள்களுக்குக் கட்டுப்படாத ஆனந்தத்தை பொருள்களில், நிகழ்ச்சிகளில், மனிதரில் காண முயல்கிறது.

மனிதன் ஆனந்தத்தை மறந்து அப்பொருள்களை நாடி ஏமாந்து போகிறான்.

நாம் சுதந்திரமானவர், பிரம்மத்திற்குட்பட்டவர்.

நாம் பொருள்களை ஆனந்தம் உள்ளவையாக நாடினால் சச்சிதானந்தம் வரும்.

பொருள் ஆனந்தத்தைத் தரும் என்பது உண்மையல்ல.

ஆனந்தம் பொருள் மூலம் வெளிப்படுவதால் பொருள் ஆனந்தத்திற்குட்பட்டது.

Page No 99:

                அகந்தையான மனிதனில் ஆனந்தம் விஷமாகிறது.

                தெய்வீக ஜீவியம் வெளிவரும்பொழுது விஷம் எரிகிறது.

                இத்திருவுருமாற்றம் நடக்கும்.

      உடல் உணர்வும், உள்ளத்து உணர்வும் அடிப்படையில் ஜீவனின் ஆனந்தம்.

                உணர்ச்சியால் ஆனந்தத்தை வெளியிட முடிவதில்லை.

                அகந்தை, பிரிவினை, அறியாமை அதைத் தடுக்கிறது.

சுருக்கம்: Chapter XI  ஆனந்தம்  பிரச்சினை.

1)            பிரம்மம் புதிய ஆனந்தத்தைத் தேடி சிருஷ்டியை நாடிற்று.

2)            வலியும், தீமையும் தார்மீக எண்ணங்கள்.

3)            வாழ்வும், மனிதனும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவரில்லை.

4)            தர்மம் பரிணாமத்தில் ஒரு கட்டம்.

5)            ஆழ்மனமோ, பரமாத்மாவோ தர்மத்தாலானவையில்லை.

                அவற்றிற்கும், மனிதனுக்கும் பொதுவானவை எது எனக் காண்போம்.

6)            ஜீவனின் ஆனந்தம் சலனத்தின் ஆனந்தமாவது மூன்றுக்கும் பொது.

                Delight of being changing into delight of becoming. 

7)            பிரபஞ்சத்தை மனிதனில் வெளியிட சச்சிதானந்தம் முனையும்பொழுது இதையே செய்கிறது.

8)            பொருள் சம்பந்தப்படாத ஆனந்தத்தைப் சச்சிதானந்தம் பொருளில் வெளிப்படுத்த முனைகிறது.

9)            மனிதன் பொருளை நாடி வலியைப் பெறுகிறான். மகிழ்ச்சியைப் பெறுபவரும் உண்டு.

10)          பொருள்கள் சுதந்திரமான மனிதனின் ஆனந்தத்தைப் பிரதிபலிக்கின்றன.

                சிறைப்பட்ட மனிதன் பொருளை ஆனந்தமெனக் கொண்டு நாடி ஏமாறுகிறான்.

Chapter XII

ஆனந்தம்  விடை

Page No: 100:

  • ஆனந்தத்திலிருந்து அனைத்தும் பிறந்தன, ஆனந்தத்தால் அவை உயிர் வாழ்கின்றன, வளர்கின்றன, ஆனந்தத்தில் வந்து முடிவடைகின்றன உபநிஷதம்.

உலக வாழ்வை* தூய, அனந்தமான வாழ்வால்* நிர்ணயிக்க நாம் மாயையை ஏற்க வேண்டும்.

Page No: 101:

  • உலகம் மாயை. ஒரு சிருஷ்டி மறைந்தாலும், ரூபமும், உலகமும் அழியாதவை.

Page No: 102:

  • வாழ்வின்* பொருள், சாரம் என்பவை பொய்யல்ல.

உலகம் அதன் சாரமான சத்தியமில்லை.

உலகம் தோற்றத்தின் சத்தியம் அதன் பன்மையான உருவம்.

  • உலகம் சக்தியின் சலனம். அதையறியாமல் நகர்கிறது.
  • உலகம்: அவனே ஆட்டம், அவனே ஆடுபவன், அவனே அரங்கம், மாயை, பிரகிருதி, லீலை.

      இந்த மூன்று அம்ச பார்வையில் நாம் ஆரம்பிக்க வேண்டும்.

Page No: 103:

  • அசையாத ஜீவனின் ஆனந்தம் மாறும் அனந்தமான பிரகிருதியின் ஆனந்தமாவது அடிப்படை.

      நம் உண்மையான ஆத்மா தன்னையறியும் ஏகனான சத் புருஷன்.

Page No: 104:

  • உண்மையில் நாம் பகுக்க முடியாத முழு ஜீவியம், முழு ஆனந்தம், முழு ஆனந்தம்.

       நாம் மேலே ஒரு கதிர்.

       பின்னால் அகன்ற பாதாளமும், அகன்ற பரமாத்மாவும் மேல்மன அனுபவத்தைப் பெறுகிறது.               

       இத்தொடர்புகளை ஏற்று அவற்றை ஜீரணித்து சிருஷ்டிக்குரிய அனுபவமாக்குகிறது.

  • மனோமயத்தின் பின் ஆனந்தமயம் உள்ளது. நம் சத்தியம் அடியில் உள்ளது.

Page No: 105:

  • வலியை, சந்தோஷத்தை ஏற்கும் அவசியமில்லை. நம் இஷ்டப்படி செய்யலாம். இது பெரிய சித்தி.
  • மனிதன் புறத்திலிருந்து விடுபட்டு அகத்தில் சுதந்திரம் பெறுகிறான்.

Page No: 106:

  • மந்திர மயக்கத்தில் இதைக் காண்கிறோம். நாம் இதையே விழிப்பில் பெறலாம்.

Page No: 107:

  • மனம் ஆணவத்திலிருந்து விடுபட்டு சுமுகமாக சுதந்திரமானால் அதுவே ஆத்மாவுக்குரிய சித்தி. ஜடத்தையும் ஆணவத்தையும் மனம் வெல்வதாகும்.

Page No: 108:

  • ஜீவனின் எல்லாப் பகுதிகட்கும் அச்சுதந்திரம் வந்தால் முழுசுதந்திரம் வரும்.

Page No: 109:

  • நேரடியாக வலி, சந்தோஷம் ஆகியவற்றை ஆனந்தமாக மாற்றலாம். மனிதனுக்கு அது சிரமம்.
  • முழு சச்சிதானந்தம் ஜீவராசிகளில் பிரபஞ்சத்தில் எழுவதற்கு சமத்துவம் தேவை.

Page No: 110:

  • மனிதன் பிரபஞ்ச ஆத்மாவாக வேண்டும்.

Page No: 111:

  • இது சத்புருஷனுடைய லீலை.

சுருக்கம் : Chapter XII ஆனந்தம்  விடை.

1)            சத்புருஷன் விஷயத்தில் உலகம் மாயை.

                உலகம் சாரமான சத்தியமில்லை. தோற்றமான சத்தியம்.

2)            மாயா, பிரகிருதி, லீலை = அவனே ஆட்டம், அவனே அரங்கம், அவனே ஆடுபவன்.

3)            மாறாத ஆனந்தம் மாறும் ஆனந்தமாக மாறுவதே அடிப்படை.

4)            நாம் ஜீவியத்தாலும், ஆனந்தத்தாலும் நிரம்பியுள்ளோம். வலியை, சந்தோஷத்தை ஏற்கும் அவசியமில்லை.

5)            சுதந்திரமான, ஆணவமற்ற, சுமுகமான மனம் அகந்தையை வென்றது.

6)            எல்லா பகுதிகளும் சுதந்திரம் பெற்றால் ஜீவன் சுதந்திரம் பெறும்.

7)            மனிதன் பிரபஞ்ச ஆத்மாவானால் வலி ஆனந்தமாகும்.

Chapter XIII

தெய்வீக மாயை

Page No: 112:

  • பல்வேறு இடங்களிலும் நாம் காண்பது ஒரு வாழ்வு*, ஒரு சக்தி, ஒரு ஆனந்தம்.  இது நான் என்று கூறுகிறது. பல்வேறு சுயரூபங்கட்கும், சுயசக்தியை வெளிப்படுத்துகிறது. சிருஷ்டிக்கப்படுவதே அதே.

Page No: 113:

  • உலகில் எழுவதெல்லாம் அது தவிர வேறெதுவுமில்லை.

                மனிதனில் பிரம்மம் வெளிப்படுவதே அதன் முடிவான இலட்சியம்.

                சிருஷ்டி, சுயமாக கிரஹிப்பது, பரிணாமம் என்ற மூவகைச் செயல்கள் உலகின் புதிருக்கு விடை.

  • நமக்கு சத்தியம் தெரியும். சத்தியம் எப்படி தோற்றமாயிற்று எனத் தெரியாது.

Page No: 114:

  • அது பிரபஞ்ச ஜீவியத்தில் சுயநிர்ணயமான சக்தி.

                அது அனந்த வாழ்வின்* தன்னையறியும் தனிமை.

       தன்னுள் ஓர் சத்தியத்தைக் கண்டு, அதன் செயலாற்றும் சக்தியை அவ்வுண்மை  சித்திக்கும்படி அனுப்புகிறது.

                இந்த சக்தி சிருஷ்டிக்குத் தலைவன்.

Page No:115:

  • அனந்த ஜீவியம் அனந்தமாகச் செயல்பட்டால் அனந்த பலன் வரும்.

ஒரு சத்தியத்தை மட்டும் சித்திக்க வேறு ஒரு சக்தி தேவை.

அப்படித்தான் உலகை சிருஷ்டிக்க முடியும்.

இந்த சக்தியை வேத ரிஷிகள் அறிவார்கள். அவர்கள் அதை மாயை என்றனர்.

மாயையெனில் புரிய, உள்ளடக்க, அளவீடு செய்ய, ரூபம் தர, பெயரும் உருவமும் தருவது என்றாகும்.

சாரமான அசையாத சத்தியத்தை மாயை அசையும் சத்தியமாக ஓழுங்காக செயல்படும்படி மாற்றுகிறது.

(Supreme Being) சத் புருஷனில் எல்லாம் எல்லாவற்றுள்ளும் பிரிவினைத் தடையின்றியிருக்கிறது. ஒன்று பலவிலும், பல ஒன்றிலும் உள்ளது போல் மாயை இதை மாற்றுகிறது. அதுவே சிருஷ்டி.

அது லீலை.

ஜீவன் ஜீவனோடும், ஜீவியம் ஜீவியத்துடனும், ஆனந்தம் ஆனந்தத்துடனும் லீலையால் பகிர்ந்து கொள்வதால் மாயை இதைச் செய்ய முடிகிறது.

மனம் மனிதனை  பிறர் அனைவரிலும் உள்ளதைப் பார்க்க அனுமதிக்கிறது.

அனைவரும் அவனில் உள்ளதைக் காண அனுமதிப்பதில்லை.

மாயையை அஞ்ஞானத்தில் ஏற்று கடந்து ஞானத்திற்குப் போக வேண்டும்.

Page No: 116:

  • அஞ்ஞான மாயைக்கும், ஞான மாயைக்கும் உள்ள தொடர்பை எண்ணத்தில் அத்துவைதியாலும், நம்பிக்கையற்றவராலும் காண முடிவதில்லை.

அதனால் அவர்கள் Overmind தெய்வீக மனம் உலகை சிருஷ்டித்ததாக நினைக்கின்றனர். மனம் என்பது கருவி, சிருஷ்டிக் கர்த்தாயில்லை.

தத்துவம் :

1)            நமக்கும் மேல் உலகுக்கும் சம்பந்தமில்லை.

2)            நமக்கும் மேல் உலகத்திற்கும் ஓர் தொடர்புண்டு.

3)            பகவான் ஸ்ரீ அரவிந்தர்:

                மேல் லோகத்தின் (Real Idea) முழு எண்ணம் நம் லோகத்தில்   வெளிப்படுகிறது.

Page No: 117:

  • உலகில் உள்ள அனைத்தும்பின் சத்தியம் உண்டு.

                இலட்சியம் தோற்றத்தை எழுப்புகிறது.

                அதனால் தோற்றம் இலட்சியத்தைப் போயடைய முயல்கிறது

Page No:118:

  • உலகை அறிய மனம் போதாது.

                அனந்த ஜீவியம் முதலில் அனந்த ஞானமாக வேண்டும்.

                அதற்கு எல்லாம் அறிந்தது எனப் பெயர்.

                மனம் அறிவின் கருவியில்லை.

                மனம் அறிவை நாடும் கருவி.

                மனம் அறிவதைச் சொந்தமாகப் பெற முடியாது.

                மனம் பிரபஞ்சத்தை அதன் வாழ்வை* நடைமுறை வாழ்வுக்களிக்கப் பயன்படுகிறது.

                மனம் தெரிந்து வாழ்வை நடத்தும் சக்தியல்ல.

                அதனால் மனம் உலகை சிருஷ்டித்திருக்க முடியாது.

                அனந்தமான, எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல மனம் சத்திய ஜீவியமாகும்.

                மனம் கண்ணாடி, உள்ளதைப் பிரதிபலிக்கும்.

                இருப்பதை, இருந்ததை மனம் பிரதிபலிக்கும்.

                வாய்ப்பை அதனால் உற்பத்தி செய்ய முடியும்.

                முன்கூட்டிச் சொல்ல மனத்தால் முடியும்.

Page No: 119:

  • அனந்தமான மனம் அனந்த குழப்பத்தை ஏற்படுத்தும்.

                இது உடனே நடக்கக் கூடியது, முடிவானதல்ல.

Page No:  120:

  • ஊடுருவிச் சென்றால் சுயஜீவனின் அடிப்படையிலுள்ள சட்டம் தெரிகிறது.

                சொந்த ஞானத்தை இச்சட்டம் கூறும்.

                பகுத்தறிவு தூதுவனே.

                பகுத்தறிவுக்கும் சட்டத்திற்கும் மூலம் ஞானம்.

                சக்தி, ஜீவியமான ஜீவனை நாம் சிந்தனையால் எட்ட முடியும்.

     பகுத்தறிவைப் பயன்படுத்தாவிட்டால், நாம் உள்ளே போய் ஜீவியத்தைக் காணலாம்.

                ஞானம் அரியாசனத்தில் அங்கு காத்துள்ளது.

சுருக்கம்: Chapter XIII - தெய்வீக மாயை.

1)            நமக்கு சத்தியம் தெரியும். அது எப்படி தோற்றமாகிறது என அறிய முடியாது.

2)            அனந்த ஜீவியம் அனந்த பலன்களைத் தரும். அளவோடு செயல்படும் கருவி தேவை.

3)            அசையாத சத்தியத்தை அசையும் சத்தியமாக்குவது மாயை.

4)            அனைத்தும் அனைத்திலுமிருப்பதைச் செய்வது மாயை.

5)            மனம் ஒரு பகுதியை மட்டும் பார்க்கிறது.

6)            தத்துவம் குறையானது. பகவான் கூறுவது பரிணாமத்திற்குரியது.

7)            மனத்தால் பிரபஞ்சத்தை விளக்க முடியாது. அது சத்திய ஜீவியத்தால் தான் முடியும்.

8)            பகுத்தறிவு செயல்படாவிட்டால், ஞானம் பின்னால் காத்திருப்பதைக் காணலாம்.

Chapter XIV

சத்திய ஜீவியம்  சிருஷ்டி கர்த்தா

Page No. 122:

                                                                                                                                      Para (1)

(1)      மனத்தை விட உயர்ந்த கருவி ஒன்றுண்டு.

அது ஞானமும், உறுதியிலானது.

அந்த ஞானம் சுறுசுறுப்பானது, உறுதி ஞானமுடையது.

அது உலகை சிருஷ்டித்தது.

மேலே சச்சிதானந்தம்  ஒன்று, ஏகன்  உள்ளது.

கீழே இருளில் மனம், வாழ்வு, ஜடம்  அநேகன், பல, பன்மை  உள்ளது. 

நாம் கூறும் இது இடைப்பட்டது, சத்திய ஜீவியம் எனப்படும்.

(2)     சத்திய ஜீவியம் முழுவதும் நாமறியாததில்லை.

இது ஜீவனுக்கு மட்டும்  சத்புருஷனுக்கு மட்டும்  உரியதல்ல.

பிறருக்கு எடுத்துரைக்க முடியாததல்ல.

எல்லா வகையிலும் சத்திய ஜீவியம் நம்மை விட மாறுபட்டதல்ல.

நாம் பிறந்தது சத்திய ஜீவியத்தினின்று.

நம் பிறப்பு  இதிலிருந்து  புரியாத புதிரல்ல, ஆன்மீகப் புதிருமல்ல.

முழு முயற்சி செய்தாலும் புரியாது என்பதல்ல. 

(3)           நாம் அதை எட்டிப் பார்க்கலாம்.

                எண்ணி அதை நாம் மனதால் அறியலாம்.

(4)           அவை  சத்திய ஜீவிய எண்ணம், உறுதி  நமக்கு எட்டாத உயரத்திலிருப்பதை நாம்       காணலாம். என்றாலும் அவை நம் ஜீவனின் உயர்ந்த நிலையாகும்.

                அதனால் நாம் அதை எட்டலாம்.

(5)           அமானுஷ்ய அனுபவம் எழும் நேரமுண்டு.

                திடீரென ஞானோதயம் எழுவதுண்டு.

                ஞானம், நாம் நம்மைக் கடந்து, ஜோதிமயமான உலகில் நுழையும் நேரம்.

                இது நாளடைவில் ஆன்மா ஓளிபெற்றுயுயர்வதாகும்.

(6)           நாம் மீண்டும் நம் நிலைக்கு வருகிறோம்.

                ஞானத்திற்கும் நமக்குமிடையே பல வாயில்கள் உள்ளன.

                நாம் அவற்றைத் திறந்து வைக்கலாம்.

                அவை உடனே மூடிக் கொள்பவை.

                நம்மால் அவற்றை மீண்டும் திறக்க முடியும்.

(7)           மனிதன் தேடுவது மோட்சம்  ஆத்மா பரமாத்மாவில் கரைவது.

                ஆத்மா தன்னையழித்து மோட்சம் பெற முனையாமல், தன்னை பிரம்மத்தில் பூர்த்தி செய்ய       முனைந்தால், அதுவே உயர்ந்த இலட்சியம், முடிவு என ஆகும்.

                நாம் சத்திய ஜீவியத்துள் நிலையாக வாழலாம்.

                இதுவே முடிவான, அதியுயர்ந்த மனித சிகரம்.

                சிருஷ்டியிலும், சிருஷ்டிக்கும் ஜீவனுக்கும் இதுவே முடிவு.

                மனிதன் பரிணாம வளர்ச்சி பெறுவதால் இதை எட்ட முடியும்.

(8)           இதுவே மூலமான எண்ணம்.

                இதுவே முடிவானசுமுகம், சத்தியம்.

                உலகில் நாம் படிப்படியாக நம் ஆத்மாவைக் காண முயல்வதின் முடிவு இது.

                இதை நோக்கி நாம் ஆன்மீகப் பரிணாமத்தால் செல்கிறோம்.

சச்சிதானந்தத்திற்கும் நமக்குமிடையேயுள்ள சத்திய ஜீவியம் உலகை சிருஷ்டித்தது. அது நம் வளரும் ஜீவனின் சிகரம். நாம் அதையடைந்து அங்கே நிலையாக இருக்கலாம்.

Page No. 122:

Para (2)

(1)           நாம் திரும்பி வந்தபின் இந்நிலையை எடுத்துக் கூற முடியுமா என ஐயுறலாம்.

                இந்நிலையின் தெய்வீக சக்தியை நாம் விளங்கும்படிக் கூற முடியுமா அல்லது பயன்படும்படி        நம்மை இந்நிலைக்கு உயர்த்தப் பயன்படுமா  த் தரமுடியுமா என்பது ஐயம்.   

(2)           மனமும் சத்திய ஜீவியமும் செயல்படும் வகை, அவற்றின் அமைப்பின் சாரம், நேர் எதிராக       இருப்பதால் இந்த ஐயம் எழுகிறது.

                மனமும் சத்திய ஜீவியமும் எதிரெதிராக அமைந்துள்ளதால் ஐயம் ஏற்படுவது இயற்கை.

Page No. 123:

Para (3)

(1)           நமக்கும் சத்திய ஜீவியத்திற்கும் எந்தத் தொடர்புமில்லாவிட்டால் இவ்வனுபவத்தை எடுத்துக் கூற இயலாது.

                சத்திய ஜீவியம் ஞான திருஷ்டியாக மட்டுமிருந்தாலும்  செயலாற்றும் திறனுடையதாக       இல்லாவிட்டால்  நம் ஞானம் ஆன்மீகத் தெளிவு மட்டும் அதனால் பெற முடியும்.

                உலகில் சத்திய ஜீவியம் வந்து உலகை சத்திய ஜீவியமாக மாற்ற அது பயன்படாது.

(2)           சத்திய ஜீவியம் உலகை சிருஷ்டித்தது.

                அதனால் அது வெறும் ஞானமாக மட்டுமில்லை.

                அது ஞானத்தின் சக்தியும் கூட.

                அதனால் ஞானத்திற்கு செயல்படும் திறன் தர முடியும்.

(3)           மனமும் சத்திய ஜீவியத்தால் சிருஷ்டிக்கப்பட்டது.

                எனவே மனம் என்பது சத்திய ஜீவியம் வளர்ந்து தன்னை லிமிட் செய்தது.

                சத்திய ஜீவியம் அடிப்படை ஜீவியம்.

                அது சச்சிதானந்தத்திற்கும் நமக்கும் இடையே தொடர்பு ஏற்பட செயல்படுகிறது.

                கீழிறங்கி வர முடியும் என்பதால் பாதை திரும்பினால் மேல் எழ முடியும்.

(4)           மனமும், சத்திய ஜீவியமும் அடிப்படையான சாரத்தில் ஒன்றாக இருக்க வேண்டும்.

                மனம் அதன் சத்திய ஜீவியத்துள் வித்தாக இருக்க வேண்டும்.

                மனம் அதன் தோற்றத்தில் சத்திய ஜீவியத்தை விட மாறுபட்டதாக இருக்கலாம்.

                எதிரானதாகவுமிருக்கலாம்.

                செயல்படும் பாணியிலும் அப்படியிருக்கலாம்.

(5)           அதனால் நம் முயற்சி சத்திய ஜீவியத்தை மனத்திற்கு விளக்கும் முயற்சி  அறிவுக்குப்       புறம்பானதல்ல.

                அர்த்தமற்றது, பலன் தராது என முடியாது.

                நாம் இரண்டையும்  ஒப்பு நோக்கி, வேறு படுத்திப் பார்க்கலாம்.

                மனம் புரியும்படி சத்திய ஜீவியத்தை எடுத்துக் கூற முடியும்.

(6)           நம் எண்ணங்களும், முயலும் வகையும் அரைகுறையானவையாக இருக்கலாம்.

                இருப்பினும் அது நல்ல பலனைச் சுட்டிக்காட்ட முடியும்.

                ஒரளவு நாம் வெற்றி காண முடியும்.

(7)           மேலும், மனத்தால் ஒரளவு உயர முடியும்.

                மனத்திற்கு மேலே சத்திய ஜீவியத்தொடர்புள்ள நிலைகள் உள்ளன.

                அவற்றை மனம் அறிவாலோ, ஞானத்தாலோ அடையலாம்.

                நேரடியாகவும் அனுபவிக்கலாம்.

                சத்திய ஜீவியத்திலேயே நிரந்தரமாக வாழ, அங்கிருந்து செயல்பட மனிதன் இன்னும்       தயாராகவில்லை.

                முழு முயற்சி செய்தால் சத்திய ஜீவியத்தை அறியலாம். அங்கு சென்று அதை அனுபவிக்கலாம். நிரந்தரமாக அங்கு தங்க மனிதன் இன்னும் தயாராகவில்லை. 

Page No. 123:

                                                          Para (4)

(1)           முன்னோர்கள் இதைப் பற்றி என்ன கூறியுள்ளனர் என நாம் காண முயல்வோம்.

                இந்த லோகத்திற்கு ஒரு பெயர் தேவை.

                ஆராய்ச்சியை எங்கு ஆரம்பிப்பது என்று தெரிய வேண்டும்.

                இதை Supermind சத்திய ஜீவியம் எனலாம்.

                Supermind என்ற சொல்லை மனதைக் கடந்தது, உயர்ந்த மனம் என்று கொண்டால் அடிப்படைத் தவறு எழும். சத்திய ஜீவியம் மனம் தலைகீழ் மாறிய நிலை. அதனால் அச்சொல் சரிவராது. என்றாலும் வேறு வழியில்லாமல் அதைப் பயன்படுத்துகிறார்.

                Supermind சத்திய ஜீவியம் சரியான சொல்லில்லை.

Page No. 124:

           Para (5)

ஏன் சத்திய ஜீவியம் என்ற சொல் சரியில்லை.

சச்சிதானந்தம் சிருஷ்டிக்க முடியாது என்பதால் சத்திய ஜீவியத்தை சிருஷ்டித்து அதன் மூலம் சிருஷ்டித்தது.

சச்சிதானந்தம் என்பது தன்னை அகமாக்கி, புறத்தை ஏற்படுத்தியது (objective).

அப்புறம் சச்சிதானந்தம். மேலும்

                                சத்து, சித்து, ஆனந்தம் அகமானால், புறம்

                                சத்தியம், ஞானம் அனந்தமாகும்.

சத்திய ஜீவியம் என்ற சொல் சத்து, சித்து இவற்றின் புறத்தைக் குறிக்கும்.

ஆனந்தத்திற்கு புறம் அனந்தம். அது விட்டுப் போகிறது.சி

(1)           வேதத்துள் சத்திய ஜீவியத்தின் முக்கியத்துவம் மறைபொருளாகக் காணப்படுகிறது.

(2)           அக்கருத்துக்களானவை:

- நம் ஜீவியத்தைக் கடந்து பரவி நிற்கும் அகண்ட பரப்பு.

- இதில் ஜீவனின் சத்தியம், அதன் வெளிப்பாடுடன் கலந்து தெரிகிறது.

- திருஷ்டியின் சத்தியம், உருவகம், அமைப்பு, சொல், செயல், சலனம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

- எனவே இது சலனத்தின் பலன்; செயல், வெளிப்பாட்டின் பலன், தவறில்லாத சட்டத்தின் பலன் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

- இவற்றைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்.

1.  அகண்ட அனைத்தையும் அறிவால் உட்கொள்ளும் ஜீவியம். 

2.  ஜோதிமயமான சத்தியமும் சுமுகமும். 

3.  சட்டம், செயல்களுடைய சத்தியம். 

      ஜீவனுடைய சுமுகத்தை வெளிப்படுத்தும் ஞானம். 

மேற்சொன்னவை வேதம் மறைபொருளாக நமக்கு உணர்த்துபவை.

(3)           தெய்வ இரகஸ்யம் சத்திய ஜீவியத்துடையது.

                தெய்வம் சத்திய ஜீவியத்தில் பிறந்தது.

                தெய்வங்கள் சொந்த வீடு சத்திய ஜீவியம்.

                உண்மையில் தெய்வங்கள் சத்திய ஜீவியத்திலேயே உறைகின்றன.

                தெய்வங்கள் பெற்ற ஞானம் சத்தியம்  ஜீவியம்.

                அவர்களுடைய செயலுக்கு பிரம்ம உறுதியுண்டு.

(4)           இந்த சித்சக்தி வேலை செய்கிறது, சிருஷ்டிக்கிறது.

                இதற்கு நேரடி ஞானம் உண்டு. இந்த ஞானம் சத்திய ஜீவியத்தைப் பெற்றது.

                செய்ய வேண்டிய காரியத்தின் சாரம், சட்டத்தை இது அறியும். 

                (இந்த ஞானம், ஞானமுடைய உறுதி. அது தவறுவதில்லை, தடம் பிறழ்வதில்லை. செய்கையிலும், பலனிலும் தவறாது. இயல்பாக வெளிப்படுத்தி, பூர்த்தி செய்து கொள்ளும். செயலை திருஷ்டியால் கண்டு, அதைத் தவறாமல் பூர்த்தி செய்யும்.)

(5)           சத்திய ஜீவியத்தில் ஒளியும் சக்தியும் இணைந்தவை.

                ஞானமும், உறுதியும் எழும் அலைகள் ஒன்று போன்றவை.

                அவை தவறற்றவை.

                முயன்று, தடுமாடி செய்வதில்லை.

                பலன் வருமுன் அறிந்தது.

(6)           இறைவனின் சுபாவத்திற்கு இரு அம்சமுண்டு.

i.     இயல்பாக எழுந்து தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் அதன் மூலத்திலிருந்து

                சுய ஏற்பாடு தானே எழுந்து ஆதி சத்தியத்தை வெளிப்படுத்துகிறது.

ii.     சுயமான ஒளியின் சக்தி அதனில் பிறப்பிலேயே உள்ளது.

                அதுவே சுய ஏற்பாடு இயல்பாக எழுந்து தவிர்க்க முடியாதபடி பூரணமாவது.

வேதம் சத்திய ஜீவியத்தின் அகண்ட சுபாவம், சத்தியக் கூறு, சுமுகம், செயல்படும் தன்மை, தெய்வங்களுக்கும் அதற்குமுள்ள தொடர்பு ஆகியவற்றை மறைபொருளாகச் சுட்டிக் காட்டுகிறது. 

Page No. 125:

Para (6)

(1)           இங்கு கூறப்போவது இரண்டாம் பட்சமான ஆனால் முக்கியமான விவரங்கள்.

(2)           பார்வை, குரல் ஆகியவற்றைப் பற்றி வேதம் கூறுகிறது.

                கண் உதவியற்ற பார்வை, காது தேவையற்ற குரல், சத்திய திருஷ்டி, சத்தியக்குரல் என்பதாகும்.

                Revelation, Inspiration, ஞானோதயம், பக்தி ஆர்வம் எனக் கூறப்படுகிறது.

(3)           வேதம் இருநிலை சத்திய ஜீவியத்தைக் குறிப்பாகக் கூறுகிறது.

                காலத்தைக் கடந்த சத்திய ஜீவியம் (comprehending , ஹிரண்ய கர்ப்பம்).

                காலத்திற்குட்பட்ட சத்திய ஜீவியம் (apprehending , விராட புருஷன்)

ஞானோதயம், பக்தி ஆர்வம் பற்றி வேதம் சுட்டிக் காட்டுகிறது.

Page No. 125:

Para (7)

(1)           சத்திய ஜீவியம் இடைப்பட்டது எனவும், மேலிருந்து கீழே வர உதவுவது எனவும், அதே       காரணத்தால், கீழிருந்து மேலே போக உதவும் என்றும் அறிகிறோம்.

(2)           மேலுள்ள ஐக்கியத்தாலான சச்சிதானந்தம்.

                கீழுள்ளது பிரிவினையாலான மனம். மனம் ஐக்கியத்தை நாடினால் எல்லாப் பகுதிகளையும்       சேர்த்துப் பார்க்கும். தொகுப்பு ஐக்கியமாகாது.

(3)           இடையே இருப்பது சத்திய ஜீவியம்.

                இது இரு பிரிவாக 1) காலத்தைக் கடந்தும், 2) காலத்துள்ளும் என இருக்கிறது.

மேலே சச்சிதானந்தமும், கீழே மனமும்இடையில் சத்திய ஜீவியமும் உள்ளன.

Page No. 125:

                                                                                          Para(8)

(1)           மேலே ஒருமையில் உறையும் சச்சிதானந்தம் (ஏகன், one) நிலைத்தது, மாற்றமற்றது.

                கீழே பூவுலகம் (Many அநேகன்), மாறியபடி உள்ளது, நிலையாக எதையும் எட்ட   முடிவதில்லை.

                இடையே சத்திய ஜீவியம். இதனால் (Many-in-One, One-in-Many) சிருஷ்டி துண்டு செய்யாமல்       வேறுபடுத்துகிறது (differentiates without dividing) அங்கத்தைப் பிரிப்பதில்லை, அம்சத்தைப்       பிரிக்கிறது.

                ஆரம்பத்தில் இந்த ஒன்று பல்லாயிரக்கணக்கான பலவற்றைத் தன்னுட்கொண்டிருந்ததால்       இப்பொழுது வெளிப்படுத்த முடிகிறது  இதுவே சிருஷ்டி.

(2)           இவ்விடைப்பட்ட சத்திய ஜீவியம் எல்லா சிருஷ்டியையும் முதலிலிருந்து கடைசிவரை       செய்கிறது. இதுவே ஆதியும், அந்தமும்.

                இது (differentiation) பிரிக்காமல் வேறுபடுத்துவதற்கு ஆரம்பம், அவற்றை ஒன்று சேர்க்கும்       கருவி, மூலம், நாம் எட்டக்கூடிய அனைத்து சுமுகங்களையும் சாதிக்க வல்லது.

(3)           சத்திய ஜீவியம் (one) ஏகனை அறியும்.

                ஒன்றிலிருந்து அதனால் பலவற்றை வெளியே கொண்டு வர முடிகிறது.

                பலவற்றை வெளிப்படுத்துகிறது.

                வேறுபடுத்தும் பொழுது ஒருமையை இழப்பதில்லை.

கூட்டுக்குடும்பம் எத்தனை சிறு பகுதியாகப் பிரிந்து எங்கெல்லாமிருந்தாலும் குடும்பம் பிரிவதில்லை. எந்த நேரமும் ஒன்று சேரும்.

(4)           சத்திய ஜீவியமிருப்பது, பிரம்மம் உண்டு எனப் புரிய உதவும்.

கடையில் பொருள்கள் விற்றால், வாங்குபவருண்டு எனவும், செய்யும் பாக்டரி உண்டு எனவும் அறியலாம். பாக்டரி பகுதி, கடை பகுதி, வாங்குபவர் பகுதி என்பதால் இவை அனைத்தும் சேர்ந்த மொத்தம் சமூகம் உள்ளது.

                                சத்திய ஜீவியத்துள் ஐக்கியம் ஒருமையாக இருக்கிறது.

                                பன்மை, பல ஜீவாத்மாக்களாக இருக்கிறது.

ஒருமை, பன்மையுடைய சத்திய ஜீவியமிருப்பதால், ஒருமையையும், பன்மையையும் கடந்து அறிவுக்கெட்டாத பிரம்மம் உண்டு எனக் கொள்ளலாம். 

(5)           அதுவே பிரம்மம், Absolute.

Page No. 126:

Para (9)

(1)           இதுவரை சொல்லியவை எளிதில் புரியாத தத்துவங்கள்.

(2)           நாம் சச்சிதானந்தம் என்கிறோம்.

                அதே சமயம் சத், சித், ஆனந்தம் என்ற மூன்றைச் சேர்த்து ஒன்றாக்குகிறோம்.

                அவை மூன்றும் ஒன்று என்கிறோம்.

(3)           இது மனம் செயல்படும் வகை.

(4)           ஐக்கியமான சச்சிதானந்தத்திற்கு இது ஒத்து வராது.

(5)           சத் என்பது சித், இரண்டும் வேறல்ல.

                சித் என்பது ஆனந்தம், இரண்டும் வேறல்ல.

(6)           வேறுபாடில்லை எனில் உலகம் சச்சிதானந்தத்திலிருந்து எழ முடியாது.

(7)           சச்சிதானந்தம் மட்டும் உண்மையானால், உலகம் இருந்திருக்க முடியாது.

(8)           ஐக்கியமான ஜீவியம் உலகத்தில் தேவைப்படும் பிரிவினையை உற்பத்தி செய்ய முடியாது.

(9)           அதனால் சச்சிதானந்தம் உலகை சிருஷ்டித்தது என்பதை ஏற்க முடியாது.

உலகம் பல ஜீவராசிகளாலானதாலும், சச்சிதானந்தம் பிரிவினையை அனுமதிக்காததாலும் சச்சிதானந்தம் உலகை சிருஷ்டித்தது என்பதை ஏற்க முடியாது.

Page No. 126:

Para (10)

(1)           மனம் பகுதியையறியும்

                பகுதிகளின் தொகுப்பையறியும்.

                அதற்கடுத்த முழுமையை கருதும் திறன் மனத்திற்கில்லை.

ஒரு கடிகாரத்தை பிரித்தால் 50 பகுதிகளுண்டு. 50 பகுதிகளையும் ஒரு கூடையில் ஒன்று விடாமற்போட்டால் அது கடிகாரமாகாது. (பகுதிகளின் தொகுப்பு முழுமையாகாது.) பகுதிகளும், அவற்றின் தொகுதியும் ஒரு level இல் உள்ளன. அவற்றைக் கடிகாரமாகச் சேர்த்தால் அது சூட்சுமம் சேர்ந்து வேலை செய்யும்.

(2)           கடிகாரம் என்ற மெஷன் அதன் பகுதிகளோ, அவற்றின் தொகுப்போ உள்ள plane இல் இல்லை.       அப்படிச் சேர்க்கும் பொழுது கடிகாரம் உருவம் சூட்சுமமாக அடுத்த plane க்கு வந்து விடுகிறது.       பகுதிகளின் தொகுதி பகுதிகளின் தொகுப்பு. முழுமை கடிகார உருவம். அவ்வுருவம்       பகுதிகளில்லை. அவற்றை ஒன்று சேர்ப்பவன் மனதில், சூட்சுமமாயிருக்கிறது.

(3)           இங்கு ஐக்கியத்திற்கெதிரான துண்டுப் பிரிவினையுண்டு.

                இந்த பிரிவினையால் ஐக்கியத்தை எட்ட முடியாது.

                ஐக்கியமில்லாமல் உலகமில்லை.

                எனவே உலகம் சிருஷ்டிக்கப்படவில்லை எனக் கூறுகிறது.

உலகம் ஐக்கியத்தாலும், பிரிவினையாலும் ஆனது. இங்கு ஐக்கியத்திற்கு வழியில்லை. 

எனவே, கீழுலகமான மனம் உலகை சிருஷ்டிக்கவில்லை எனக் கொளலாம். 

Page No. 127:

Para (11)

(1)           மனம் சிருஷ்டிகர்த்தா என்பதற்குப் பதிலாக கருவியெனக் கொண்டால் கீழ் உலகம் எழுப்பும்       பிரச்சினை மறையும்.

(2)           மனம் ஆராயும் கருவி, மனம் ஞானக் கருவியில்லை.

(3)           ஒரு முழுமையின்றி மனம் ஒரு பகுதியை வெட்டி எடுத்து அதை முழுமை எனப் பாராட்டும்.

(4)           மனம் பகுதிகளையேயறியும்.

(5)           மனம் முழுமையை அறியாது. பகுதிகளின் தொகுப்பை முழுமையாகக் கொள்ளும்.

(6)           முழுமையென ஒன்றிருந்தால் அது எதன் பகுதி என மனம் கேட்கும்.

                எதன் பகுதியாக இல்லாத முழுமையை மனம் கருத சம்மதிக்காது.

(7)           மனம் தன் ஆராய்ச்சியை அறியும். ஆராய்ந்த பொருளையறியாது.

                பெரிய விழாவுக்குப் போய் வந்த எளியவர்க்கு,அவன் போனதும், அவனை வரவேற்றதும்       தெரியும். விழாவைத் தெரியாது. மிகப்பெரிய இடத்து மிகப்பெருவிழாவில் பங்கு கொண்ட மிக       எளியவனுக்கு அங்கு தான் செய்தவை மிக விவரமாகத் தெரியும். விழாவைப் பொதுவாகப்       புரியுமே தவிர விவரமாகப் புரியாது.

(8)           அதிகபட்சம் மனம் நம்மை பெரு விஷயத்தை அறிய பயிற்சி தரலாம்.

மனம் முழுமையை அறியாது. பகுதிகளையும், அவற்றின் தொகுப்பையும் மட்டுமே அறியும்.

Page No. 128:

Para (12)

(1)           ஒன்றான (one) சச்சிதானந்தத்திலிருந்து உலகம் எழுந்தது.

                மீண்டும் அதனுள் அனைத்தும் சென்று மறைகிறது.

                அது நம் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டதல்ல.

(2)           நாம் காலத்தில், இடத்தில் வாழ்கிறோம்.

                சச்சிதானந்தம் அனைத்தையும் தன்னுட்கொள்ள காலத்தையும் இடத்தையும் கடக்க வேண்டும்.

                எனவே சச்சிதானந்தம் நாமறியாத வகையில் உலகை உட்கொண்டிருக்கிறது.

[Cheque  பணத்தை உட்கொள்கிறது. நாம் விற்ற வீட்டை பணம் பெற்றுள்ளது. பணமும் செக்கும் வீட்டைத் தம்முள் கொண்டிருக்கும் வகை வீட்டிலிருந்து மாறுபட்டது.]

(3)           சச்சிதானந்தம் சொல்லைக் கடந்தது, சிந்தனையையும் கடந்தது.

                சூன்யவாதிக்கு அது காலியான சூன்யமாகத் தெரியும்.

                அதுவே, எதிராக நினைத்தால் நம்மால் புரிந்து கொள்ள முடியாதபடி ஆனால்    சூன்யமாகாதபடி, நிறைவாகவும் தெரியும்.

[நமக்குப் பயன்படாதது ஒன்றுமில்லாததாக மனத்திற்குத் தெரிவதுண்டு. சூன்யவாதி அப்படி சச்சிதானந்தத்தைக் கருதுகிறான்.

காதல் வயப்பட்டவன் உபயோகமற்ற பெண்மை வரித்தால் அனைவரும் அவளிடம் அப்படி என்ன இருக்கிறது? எனக் கேட்கும்பொழுது அவளிடம் அனைத்துமிருக்கிறது  என்பான். எவளிடம் உலகம் எதையும் காணவில்லையோ அவளிடம் அனைத்தையும் காண்பது காதல். இவை ஓர் அம்சம். சச்சிதானந்தம் அனைத்துமாகும]

(4)           அனாதி காலத்தில் (Existence) வாழ்விருந்தது. அது தவிர வேறில்லை என உபநிஷதம் கூறுகிறது.

                ஆரம்பத்திற்கு முன்னும் பின்னுமிருப்பதை நாம் ஒன்று எனவும் கூற முடியாது.       அதுஎன்றாலும் அர்த்தப்படாது. அது காலத்தைக் கடந்தது.

[ஆத்மாவின் அகம் காலம், புறம் இடம். ஆத்மா (Existence) வாழ்வின் அகம், அதன் புறம் சத்தியம். காலம் ஆத்மாவுக்குட்பட்டது. ஆத்மா (Existence) வாழ்வுக்குட்பட்டது. எனவே ( Existence, சத்) வாழ்வுக்கு முன்னிருப்பது காலத்தைக் கடந்ததாகும்.]

   

                நாம் நாடுவது மூலம், ஆதியான மூலம்.

                இரண்டாவதாக மனம் அதையறிவது எழுகிறது.

                பரந்து, அழியும் நிலையில் ஆதி மனத்திற்குக் காட்சி தருகிறது.

                மனம் ஐக்கியத்தை அப்படியே காணும்.

                மூன்றாவதாக அழிவைத் தடுத்து அனைத்தையும் இழுத்துப் பிடித்து அற்புதமாக்கும் நிலை.

                இவ்வழி ஐக்கியத்தை நிலை நிறுத்துவது, சுமுகத்தை ஏற்படுத்துகிறது.

                மனம் குழப்பத்தைக் காணுமிடம் இம்மூன்றாம் நிலை சிறப்பைக் காண்கிறது.

                அதுவே சத்திய    ஜீவியம்.

கிராமத்து மிராசுதார் பையனை வீட்டில் வைத்திருக்கலாம், கல்லூரிக்கு அனுப்பலாம்.

(1)           முதல் நிலை: வீட்டில் தகப்பனார் போல விவசாயம் செய்வான்.

(2)           கல்லூரியில் சீட்டாடி, சூதாடி, தன்னை அழித்துக் கொள்வான்.

(3)           கல்லூரியில் பட்டம் பெற்று தன்னை அழிக்காமல் காப்பாற்றி பெரிய வேலைக்கு வருவான்.

(1)யை சச்சிதானந்தமெனவும், (2)யை மனமாகவும், (3)யை சத்திய ஜீவியமாகவும் கொள்ளலாம்.

Page No. 128:

Para (13)

(1)           பிரம்மம் தன்னை சத்திய ஜீவியமாக வெளிப்படுத்துகிறது.

                அதன் இரு குணங்கள் (i) தன்னுள் அடக்குவது (ii) அபிவிருத்தி செய்வது.

(2)           இதை சத்திய ஜீவியம் எண்ணம் மூலம் செய்கிறது. இந்த எண்ணத்துள் செயலாற்றும் உறுதி       கலந்திருப்பதால் இதை முழு எண்ணம் (Real Idea) என்கிறோம். முழு எண்ணம் அல்லது சத்திய       எண்ணம் அல்லது உறுதியுள்ளது எனலாம். எப்படி சொன்னாலும் இந்த எண்ணம் தானே தன்னை நிறைவேற்றிக் கொள்ளும் தன்மையது. நினைத்தால் உடனே நடக்கும் என நாம்   அதைக் கூறுகிறோம். 

(2)           சச்சிதானந்தத்துள்ளிருந்து சத்திய ஜீவியம் முழு எண்ணத்தால் சத்து, சித்து, ஆனந்தத்தை உற்பத்தி செய்கிறது.

(3)           சத்திய ஜீவியம் வேறுபடுத்துகிறது, பிரிப்பதில்லை.

(4)           மனம் மூன்றிலாரம்பித்து அவற்றை ஒன்றாய்ச் சேர்க்கிறது.

                சத்திய ஜீவியம் ஒன்றிலாரம்பித்து மூன்றை உற்பத்தி செய்கிறது.

                மூன்றை ஒன்றிலிருந்து(manifests)  வெளிப்படுத்துகிறது.

                வெளிப்படுத்துவது மூலம் அபிவிருத்தி செய்கிறது.

                சத்திய ஜீவியம் அறியும்  மூன்றுள்ளது என அறியும்  அறிந்து அவற்றைத் தன்னுள்       அடக்குகிறது.

                இருப்பினும் ஐக்கியத்தை விடவில்லை.

(5)           வேறுபடுத்துவது மூலம் உள்ளேயுள்ளதை வெளிக் கொண்டு வருகிறது.

                வெளிவருவது சக்தி வாய்ந்த தெய்வம்.

                இந்த தெய்வம் மற்ற அம்சங்களைத் தன்னுட் கொண்டது.

                அல்லது மற்ற அம்சங்களை வெளிப்படையாக தன்னுட் கொண்டது.

                மற்ற அம்சங்கள் வெளிப்பட இம்முறையைக் கையாள்கிறது.

                (இது சத்திய ஜீவியம் சச்சிதானந்தத்திற்கு செய்வது).

(6)           எல்லா தத்துவங்களிடையேயும் எல்லா வாய்ப்புள்ள இடங்களிலும் சத்திய ஜீவியம் இதே       முறைப்படி செயல்படுகிறது.

                இம்மூன்று அம்சங்களை  One, many, One in Many வெளிப்படுத்துவதே சத்திய ஜீவியம்       சிருஷ்டிக்கும் முறை.

(7)           சத்திய ஜீவியம்

i.     அபிவிருத்தி செய்யும் சக்தி.

ii.     பரிணாமம்

iii.    வெளிப்படுத்துதல் ஆகிய மூன்று திறமைகளைப் பெற்றுள்ளது.

அத்திறன்கள்

i.     சிருஷ்டி (கிரகித்துக் கொள்ளுதல்)

ii.     சூழ்ந்து தன்னுள்ளேயடக்கிக் கொள்வது.

iii.    உள்ளே புதையும்படிப் பெறுவது என்று மூன்று திறன்களை தங்களுள் பெற்றிருக்கின்றன.

(8)           சிருஷ்டி முழுவதும் இரண்டு (involution) நிலைகளுக்கிடையே ஏற்படுவதாகச் சொல்லலாம்.

                ஆன்மாவுள் மேலே உலகம் உள்ளடங்கியுள்ளது.

                ஜடத்திற்குள்ளே உலகம் கீழே உள்ளடங்கியுள்ளது.

                சிருஷ்டி ஆன்மாவுக்கும் ஜடத்திற்கும் இடையே உள்ள சலனம்.     

சத்திய ஜீவியம் ஒன்றிலிருந்து மூன்றை சிருஷ்டிக்கிறது. சிருஷ்டி ஜடம் முதல் ஆன்மா வரை செயல்படுகிறது.

Page No. 129:

Para (14)

(1)           எப்படி (Real Idea) முழு எண்ணம் சிருஷ்டிக்கிறது?

                (இதுவே process of creation , சிருஷ்டி ஏற்பட்ட வழி, ரிஷிகள் சொல்லாதது).

                இதன் அம்சங்கள் மூன்று.

i.     முழு எண்ணம் தத்துவம், சக்தி, ரூபம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

ii.     காலத்தைக் கடந்த சத்திய ஜீவியத்தில் இவை பிரம்மத்திலுள்ள மீதி அனைத்தையும் உள்ளடக்கியது.

iii.    காலத்திலுள்ள சத்திய ஜீவியத்தில் அவை அனைத்தும் பின்னால் உள்ளன.

(2)           எனவே all is in each and each is in all.

(3)           ஒவ்வொரு வித்துவும் தன்னுள் அனைத்து அனந்தத்தையும் அதன் வாய்ப்புகளையும்       கொண்டுள்ளது, ஆனால் ஒரு சட்டத்தை, ஒரு முடிவை தன் உறுதியால் பின்பற்றுகிறது. அதாவது சத் புருஷனுடைய ஞானம்  சக்தி வெளிப்பாடு அதன் ரூபத்தை நிர்ணயிக்கிறது.

                சத் புருஷன்  அதன் ஞானம்  சக்தி  தான் செய்வதையறியும்.

(4)           வித்து தன் ஜீவனுடைய சத்தியம்.

                அதை இந்த வாழ்வு (self-existence) தன்னுள் காண்கிறது.

                அந்த வித்தின் சுய திருஷ்டி, இந்த சுய செயலின் சத்தியம்.

                இதுவே இயல்பான அபிவிருத்திக்குரிய சட்டம். இதுவே உருவகத்திற்கும் செயலுக்குமுரிய       சட்டம்.

                சுயதிருஷ்டி இதை உறுதிப்படுத்துகிறது. மூல சத்தியத்தின் முறையைப் பின்பற்றுகிறது.

(5)           பிரகிருதி என்பது சத்புருஷனுடைய வேலை.

                தன்னுள் கண்ட சத்தியத்தை சுபாவம், சொரூபமாக வெளிப்படுத்துகிறது.

                Seer-will என்பது (Conscious-Being) சத்புருஷனுடைய ஞானசக்தி.சி

முழு எண்ணம் (சத்திய எண்ணம் அல்லது ஞானமும் உறுதியும் உள்ள எண்ணம்) எப்படி உலகை சிருஷ்டித்தது என்பது சிருஷ்டியின் இரகஸ்யம்.

Page No. 129:

                 Para (15)

(1)           சத்திய ஜீவியத்திற்கும் மனத்திற்கும் அடிப்படையான வேற்றுமை எது?

(2)           நாம் நம் எண்ணம் நம்மிலிருந்து வேறுபட்டது எனக் கருதுகிறோம்.

(3)           முதற் காரியமாக நாம் செய்வது நம்மை எண்ணத்தினின்று பிரிப்பது.

(4)           சத்திய ஜீவியத்தில் எண்ணம் என்பது ஜீவியத்தின் கதிர்.

                எண்ணம் ஜீவியத்தால் செறிவு பெற்றது.

                மேலும் எண்ணம் ஜீவன் தன்னால் செறிந்ததாகும்.

                சிருஷ்டிக்க இயலாததிலிருந்து, சிருஷ்டிக்கும் சக்தியாய் எழுவது எண்ணம்.

(5)           எண்ணம் சத்தியத்திலிருந்து எழுகிறது அல்லது சத்தியமான எண்ணத்தினின்று எழுகிறது.

                அதுதானே பரிணாம வளர்ச்சியடைகிறது.

                சொந்த சக்தியால் அவ்வளர்ச்சி பெறுகிறது.

                எண்ணம் தன்னையறியும், தானே வளரக்கூடியது, தன்னுள்ள உறுதியால் வளரும், தன்னுள்ளே உள்ள சத்தியத்தை தானே சித்திக்க வல்லது.

(6)           இதுவே சிருஷ்டியின் இரகஸ்யம், பரிணாமமாகும்.

முழு எண்ணம் தானே தன்னுள்ளேயுள்ள இரகஸ்யத்தை சித்திக்க வல்லது. இதுவே சிருஷ்டியின் இரகஸ்யம், பரிணாமம் எனப்படும்.

Page No. 130:

                                           Para (16)

(1)           மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு:

                மனதில் ஜீவன், ஜீவியம் (ஞானம், உறுதி) பிரிந்துள்ளன.

                சத்திய ஜீவியத்துள் அவை மூன்றும் ஒன்றாகச் செயல்படுகின்றன.

(2)           ஒவ்வொன்றிற்கும் தனித்தனிப் பலன் உண்டு.

i.     ஜீவன் பொருளாக(substance) வெளிப்படுகிறது.

ii.     ஜீவியம் ஞானமாக வெளிப்படுகிறது. (காலத்திலும், அப்பாலும் எண்ணத்தை நிர்ணயிக்கிறது).

iii.    உறுதி தானே தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது.

(3)           சத்திய ஜீவியத்தில் எண்ணம் என்பது சத்தியம் தன்னைச் சுயமாக ஓளிவிடச் செய்கிறது.

                மனத்தின் எண்ணம் கற்பனை போன்றதில்லை.

                தானே தன்னைச் செயல்படுத்திக் கொள்ளும் சுய ஞானம்.

               It is Real-Idea அது முழு எண்ணம், ஜீவ எண்ணம், சத்திய எண்ணம்.

முழு எண்ணம், மனத்தின் எண்ணம் போலல்லாமல், தன்னைத் தானே பூர்த்தி செய்துகொள்ளக் கூடியது.

Page No. 131:

Para (17)

(1)           சத்திய ஜீவியத்தில் எண்ணம், உறுதியின்று பிரியவில்லை. மேலும் எண்ணம் பொருள் (Substance) உடனும் இணைந்துள்ளது.

(2)           மனம் எண்ணத்தை இரண்டாகப் பிரித்து, பிறகு எண்ணத்தை நம்மிடமிருந்தும் பிரிக்கிறது.

எண்ணமும் உறுதியும் சத்திய ஜீவியத்தில் ஒன்றாக இருக்கின்றன. பொருளும் சேர்ந்துள்ளது. 

Page No. 131:

                                                                                                                                                           Para (18)

(1)           சத்திய ஜீவியத்தில் ஞானம் இரண்டாகப் பிரியவில்லை. எண்ணம் உறுதியுடன் மோதவுமில்லை.

Para (19)

                எண்ணம் ஜீவியத்துடனும், ஜீவனுடனும், ஜீவனுடைய பொருளுடனும்     ஐக்கியப்பட்டிருப்பதால் எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன்    ஆண்டவன் என்கிறார்கள். கடவுளை உலகிலிருந்து பிரித்ததால் பிரச்சினை ஏற்படுகிறது. 

                எல்லா மாறுதல்களிலும் சுயபூர்த்தியே ஜீவன் தேடுவது. எனவே சுமுகம் அந்த ஆழத்திலுள்ளது.

இறைவன் வேறு, உலகம் வேறு என்பதால் பிரச்சினை வந்தது. அவை சேர்வது ஸ்ரீ அரவிந்தமாகும்.

Chapter XV

உயர்ந்த சத்திய ஜீவியம் 

Page No. 132:

Para (1)

1)            சத்திய ஜீவியத்தை நாம் புருஷனுடைய (Divine Being) சுபாவமாகக் கருத வேண்டும்.

                புருஷனுக்கு (Divine Being) இரு நிலைகள் உள்ளன.

i.     பிரம்ம சுயவாழ்வு.*

ii.     தன் உலகைச் சிருஷ்டிக்கும் கர்த்தா.

நாம் இரண்டாம் நிலையை மட்டும் கருத வேண்டும்.

2)            இதையே நாம் கடவுள் எனக் கூறுகிறோம்.

3)            இது இஷ்ட தேவதையில்லை. அது personal. (சிறப்பானது)

4)            ஆனால் personal element யைப் புறக்கணிக்க முடியாது.

5)            Impersonal (பொது) என்பது வாழ்வின்.* ஒரு அம்சம்.

6)            இறைவன் என்பது அனைத்து வாழ்வாகும்.* (All-Existence)

                ஆனால் அது ஒரு வாழ்வும்* (One Existence) ஆகும்.

இறைவன் தனித்த சத்புருஷன் (Conscious-Being)

இறைவன் என்பது ஒரு ஜீவன் (Being)

7)            இந்த அம்சத்தை நாம் இந்த அத்தியாயத்தில் கருதவில்லை.

8)            பொதுவான மனத்திற்குரிய சத்தியத்தை (impersonal psychological truth) நாம் ஆராய்வோம்.

இந்த அத்தியாயத்தில் சத்திய ஜீவியத்தின் பொதுவான மனத்திற்குரிய சத்தியத்தைக் கருதுவோம். 

 

Page No. 132:

Para (2)

1)            பிரபஞ்சத்தில் சத்திய ஜீவியம் எங்கும் பரவியுள்ளது.

                இது ஓழுங்கை நிலைநாட்டும் சுய ஞானமுடையது.

                ஒன்று பலவானபின் அவற்றுள் சுமுகத்தை நிலைநாட்டும் சக்தியிது.

2)            இது இல்லாமல் பிரபஞ்சம் குழப்பமான இடமாக இருக்கும்.

3)            இச்சக்தி சுயமாகப் பிறப்பில் சத்திய ஜீவியம் பெற்றுள்ளது.

Page No. 133:

Para (3)

1)            காலமும், இடமும் சிருஷ்டிக்கு அவசியம்.

2)            தத்துவ ஞானிக்கு காலமும், இடமும் வெறும் தத்துவம், உண்மையில்லை.

3)            உலகிலுள்ள அனைத்தும் சத்புருஷனுடைய உருவமாதலால், காலமும் இடமும் அவனே.

4)            கடவுளின் கற்பனையின் அகம் காலம்.

                கடவுளின் கற்பனையின் புறம் இடம்.

5)            மனம் தன்னிடத்திருந்து காலத்தையும், இடத்தையும் கண்ணுறும்.

கடவுள் செய்யும் கற்பனையின் அகம் காலம், புறம் இடம். 

 

Page No. 133:

Para (4)

1)            மனம் நிகழ்ச்சியால் காலத்தை அளக்கிறது.

2)            இடத்தை ஜடத்தால் மனம் அளக்கிறது.

3)            காலமும், இடமும் பிரபஞ்ச சக்தியின் இரு அம்சங்கள்.

4)            மனத்தை விட உயர்ந்த ஜீவியத்திற்கு காலம் (eternal present) என்றும் உள்ள நிகழ்காலமாகத் தெரியும்.

                அந்த ஜீவியத்திற்கு இடம் அனைத்தையும் உட்கொண்ட புள்ளியாய் தெரியும்.

5)            ஏதோ ஒரு சமயம் நமக்கு காலம், இடம் அழிந்து உணர்வேற்படுவதுண்டு.

6)            கடந்தது (Transcendent) காலத்தை, இடத்தை எப்படிக் காணும்?

                அதனால் காண முடியாது என மனம் நினைக்கும்.

காலத்தையும் இடத்தையும் கடந்த ஜீவியம் உண்டு. மனத்திற்கு அது எட்டாது.

Page No. 134:

Para (5)

1)            சத்திய ஜீவியம் எப்படிக் காலத்திற்கு வெளியிலிருந்து காலத்தைப் பார்க்கிறது என அறிய வேண்டும்.

2)            தொடர்ந்த நிகழ்ச்சிகளில்லாவிட்டால் வாழ்வில் முன்னேற்றமிருக்காது.

                உலகம் உயர்ந்த சுமுகமான தவறுதலில்லாத ஆனால் மாற்றமற்ற மியூசியம் போலிருக்கும்.

3)            காலம் செயல்களை ஏந்திச் செல்ல, இடம் செயல்கள் நிகழ அனுமதிக்க, காலத்திற்கும் செயலுக்குமிடையே ஒரு சுமுகம் இயல்பாக ஏற்பட்டுள்ளது.

காலமும் செயலும், இடமும் நிகழ்ச்சியும் சுமுகமாக செயல்பட உதவுவது சத்திய ஜீவியம். 

 

Page No. 135:

Para (6)

1)            காலம் செயல்படும்வகை மனத்திற்கு அதிர்ச்சி தருகிறது.

2)            உள்ளிருந்து இயல்பான சுமுகம் நிகழ்ச்சிகளால் எழுகிறது.

                பிணக்கு தோற்றத்திற்குரியது.

3)            சத்திய ஜீவியம் உள்ளிருந்து எழும் சுமுகத்தைக் காண்கிறது.

4)            மனம் பிணக்காகக் காண்பது. சத்திய ஜீவியத்திற்கு சுமுகம் பயில்வதாகத் தெரிகிறது.

5)            மனம் ஒரு நிகழ்ச்சியை மட்டும் காண்பதால் பிணக்கு தெரிகிறது.

                சத்திய ஜீவியம் அனைத்தையும் ஒரே பார்வையில் காண்பதால் அதற்கு சுமுகம் தெரிகிறது.

6)            மனத்தால் முழுமையைக் காண முடியாது.

மனம் தொடர்ந்த காலத்திலும் இடத்திலும் காணும் பிணக்கு சத்திய ஜீவியத்திற்கு சுமுகமாகத் தெரிகிறது.

Page No. 135:

Para (7)

1)            சத்திய ஜீவியம் எல்லா ரூபங்களையும் காண்பதுடன் எல்லாவற்றை ஊடுருவிப் பரவுகிறது.

2)            சத்திய ஜீவியம் எல்லா நிகழ்ச்சிகளுள்ளும் வீற்றிருக்கிறது.

3)            உள்ளிருந்து ஒரு என்ஜின் போல் இயக்குகிறது என கீதை கூறுகிறது.

சத்திய ஜீவியம் எல்லா நிகழ்ச்சிகளிலும் உள்ளேயிருந்து என்ஜினாக இயக்குவதாகக் கீதை கூறுகிறது.

Page No. 136:

Para (8)

1)            ஒவ்வொரு செயலும் உள்ளிருந்து இயக்கப்படுகிறது.

2)            ஞானம் இல்லாவிட்டாலும், செயல்கள் ஞானத்தால் செயல்படுகின்றன.

3)            இது மனத்தின் அறிவில்லை. சுய ஞானமுள்ள சத்திய ஜீவியம்.

                சுய ஞானம், சுய வாழ்வுடன்(Existence) இணைந்துள்ளது.

4)            மனம் யோசனை செய்வது போல் யோசனை செய்யாமல் சத்திய ஜீவியம் இயல்பாகச்       செயல்படுகிறது.

ஜடமான பொருள்கள் அறிவற்றவையாகத் தோன்றினாலும் சத்திய ஜீவியம் அவற்றுள்ளிருந்து யோசனையின்றி இயல்பாகச் செயல்படுகிறது.

Page No. 136:

Para (9)

சத்திய ஜீவியம் முதலில் பிரபஞ்சத்தில் வெளிப்படுகிறது. இது காலத்தைக் கடந்தது (comprehending). 

இது அசையாத நிலையில் அனைத்தையும் அறிவதால், செயலிலும் அனைத்தையும் அறிகிறது.

Page No. 137:

Para (10)

1)            மேற்சொன்னதில் (comprehending Supermind) ஞானி, ஞானம், ஞானத்தாலறிவது ஆகிய மூன்றும் ஒன்றே.

2)            நம் மனம் இவற்றைப் பிரிக்கிறது.

                பிரிக்காமல் மனத்தால் பார்க்க முடியாது.

                பிரிக்காத நிலையில் மனம் செயலற்றுப் போகும்.

3)            நான் என்னையே அறிய முயன்றாலும் பிரித்துப் பார்க்காவிடில் மனம் புரிந்து கொள்ள முடியாது. (ஆற்றைக் கடந்த 10 பேர்).

4)            நான், அறிவு, அறிந்தது மூன்றும் ஒன்றே. இதுவே மனத்தின் சிக்கல். புறப்பொருள்களில் சிக்கல் வளரும்.

5)            பூமி சூரியனைச் சுற்றி வருவதை நாமறிவது போல் இதையறியலாம். நடைமுறையில் இந்த ஐக்கியத்தை மனம் பின்பற்ற இயலாது.

சத்திய ஜீவியத்தில் ஞானி, ஞானம், ஞானமறிவது மூன்றும் ஒன்றாய் உள்ளது.

Page No. 137:

Para (11)

1)            சத்திய ஜீவன் இவ்வைக்கியத்தால் செயல்படுகிறது.

2)            சத்திய ஜீவியத்தில் ஞானமும், உறுதியும் ஒன்றாகச் செயல்படுகிறது.

 

சத்திய ஜீவியத்தில் ஞானமும், உறுதியும் வேறல்ல, ஒன்றே. ஒன்றாகச் செயல்படுகிறது.

Page No. 138:

Para (12)

1)            ஆராயும் மனத்தின் தவற்றிலிருந்து தப்பிக்க காலத்தைக் கடந்த சத்திய ஜீவியத்தின் ஐக்கியத்தை நாம் ஏற்று வலியுறுத்துவது அவசியம்.

2)            மரம் விதையினின்று எழுகிறது.

                அதனுள் மரம் ஏற்கனவே அடங்கியுள்ளது.

                நிலையான சட்டம். எவரும் மறுக்க முடியாதது.

                மரம் எனும் உருவம் எழும் வகை, எவருமறிந்தது.

3)            மனம் இதையறியும்.

                முளைப்பது, வளர்வது, இனத்தைப் பெருக்குவது ஆகியவற்றை மனம் பாகுபாடு செய்து ஆராய்ந்து அறிகிறது.

4)            மரத்தை விதையால் விளக்குகிறது.

                விதையை மரத்தால் விளக்குகிறது.

                இது இயற்கையின் சட்டம்.

                இதனால் நாமறிவது ஒன்றில்லை.

                ஒரு புதிரை ஆராய்ந்து மனம் எழுதியுள்ளது.

5)            ஒரு பயனுள்ள ஆராய்ச்சி.

                மனம் இதை முடிவாகக் கொள்வதால் ஆணவத்தின் தவறுகள் எழுகின்றன.

[கடையில் துணி விற்கிறது. நாம் வாங்குகிறோம். அத்துடன் நம் கடமை முடிகிறது. துணி உற்பத்தியாகுமிடத்தையோ, ஏன் ஆலை துணியை உற்பத்தி செய்கிறது என்பதோ நமக்குரியதல்ல. நாம் நாட்டிலிருந்து விலகுகிறோம். கடை புரிவதால் நாம் யார் எனப் புரியாது.]

மனம் செயலை முழுமையினின்று பிரிப்பதால் நாம் கடவுளினின்று பிரிகிறோம்.

Page No. 138:

Para (13)

[இந்தப் பாராவில் வரும் கருத்து மிக அடிப்படையானது. புரியும். இது முன் பாராவிலும் வந்தது. மீண்டும் விளக்கமாக இப்பாராவின் கருத்துகளை வரிவிடாமல் கீழே எழுதுகிறேன். அதற்குமுன் கருத்தை மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்.

கடையில் துணி விற்கிறது. நாம் வாங்குகிறோம். வாங்குவதுடன் நம் கடமை முடிந்து விடுகிறது. விற்பதுடன் கடைக்காரன் வேலை முடிந்து விடுகிறது. இவ்வழி நாம் ஊரிலிருந்தும், உலகிலிருந்தும் பிரிகிறோம். நாளைக்கு கடையில் துணி வராவிட்டால், நமக்கு என்ற செய்வது எனத் தெரியாது. கடைக்காரனுக்கும் புரியாது. இது நமது இன்றைய பிரிந்த நிலை  மனம் செயல்படும் வகையிது.

சத்திய ஜீவியம் இதற்கு எதிரான வகையில் செயல்படும். மனிதனைக் கடையிலிருந்தும், ஊரிலிருந்தும், நாட்டிலிருந்தும் சத்திய ஜீவியம் பிரிக்காது. மனிதன் தன்னை நாட்டுடன் இணைத்து நாட்டின் பகுதியாகக் காண்பான். நாட்டில் சர்க்கரை, அரிசி, துணி உற்பத்தியைக் கவனிப்பான். மற்றும் படிப்பு, அரசியல் அனைத்தையும் கவனித்து மனத்தால் பங்கு கொள்வான். தான் நெசவாளியானால் துணி உற்பத்தியைப் பற்றி தன் பங்கை அறிவான். இது அவனுக்கு அறிவு. நாட்டில் எப்படி துணி உற்பத்தியாகிறது என்பதை அவன் அறிவதால் மனத்தால் நாட்டின் வாழ்வில் பங்கு கொள்கிறான்.  மனிதன் இப்படி சிந்திக்க அவனுக்கு படிப்பு, அறிவு, நாட்டுப்பற்று, தேவை. அப்படித் தனிமனிதன் மாற நாடு மிகவும் உயர்ந்திருக்கவேண்டும். அந்த நாட்டில் துணிப் பஞ்சம் வாராது. எந்த பஞ்சமும் வாராது. அவன் எந்தத் துணியை உடுக்கிறானோ அந்தத் துணி நாட்டில் அதிகமாக உற்பத்தியாகும்.]

1)            சத்திய ஜீவியம் மாறாக வேலை செய்கிறது.

2)            மரமும், விதையும் மனம் காணும் வகையில் மரமாகவோ, விதையாகவோ இருக்க முடியாது.

                [உலகம், ஊர், சமூகமில்லாவிட்டால், ஆலை ஏற்பட்டு துணி கடைக்கு வாராது. ஒருவர் அதை வாங்கிப் பயன்படுத்த முடியாது. நாம் அப்படி வரும் மாற்றங்களைக் கவனிப்பதில்லை. கவனிக்கவில்லை என்பதால் இல்லையெனக் கூறுகிறோம். அது மனம் செய்யும் தவறு.]

3)            மரமும், விதையும் மரமும், விதையுமாக இருப்பதற்குக் காரணம் பிரபஞ்சம்.

                பிரபஞ்சமில்லாவிட்டால் மரமும், விதையும் உற்பத்தியாக முடியாது.

4)            பிரபஞ்சத்திற்குரிய சட்டத்தை மரத்திற்கு நாம் பயன்படுத்துகிறோம்.

5)            மரம் விதையாவதும், விதை மரமாவதும் பிரபஞசத்தைப் பொருத்தது  காற்று, வெய்யில், மழை.

6)            குறிப்பிட்ட சட்டம், பொது சட்டத்திலிருந்து எழுகிறது.

7)            மரம் விதையை விளக்க முடியாது. விதை மரத்தை விளக்க முடியாது. Climate, காற்று, வெய்யில், மழை ஆகிய பிரபஞ்சம் அவற்றை விளக்கும்.

8)            கடவுள் பிரபஞ்சத்தை விளக்குவார்.

9)            சத்திய ஜீவியம் மரம், விதை, பிரபஞ்சம் அனைத்தையும் ஊடுருவியிருப்பதால் அவற்றின் ஐக்கியத்துடனிருப்பதால் அனைத்தையும் விளக்குகிறது. மனம் விதை, மரம் இரண்டையும் காண்பதால் மனத்தால் அவற்றை முழுவதும் விளக்க இயலாது.

10)          எனது முழுமையும், தனிமையும் ஒன்றே.

மனம் பகுதி, சத்திய ஜீவியம் முழுமை. மரம், விதை மூலம் நாம் இதையறிகிறோம்.

Page No. 139:

Para (14)

1)            இந்த ஒருமையில் ஜீவன் பிரிக்கப்படுவதில்லை, அனைத்தையும் சமமாகத் தழுவுகிறது.

2)            இது காலத்தில், இடத்தில் பிரம்மம் செயல்படுவதாகும். இது பூரண ஐக்கியத்துடன் ஒரு பக்கம் இணைந்தும், மையமோ, பாதியோ இல்லாமல், காலம் இடத்தைக் கடந்து செயல்படுகிறது.

3)            எவ்வளவு பரவினாலும் இந்த ஐக்கியம் துண்டாடவோ, குறையவோ முடியாது.

4)            "அனைத்திலும் பிரம்மம் இருக்கிறது, அனைத்தும் பிரம்மத்திற்குள்ளிருக்கிறது, அனைத்தும் பிரம்மம்" என்பது மூவகையான சத்திய ஜீவிய சூத்திரம். 

சத்திய ஜீவிய சூத்திரம் இப்பாராவில் விளக்கப்பட்டு மூவகையாக எழுதப்பட்டுள்ளது.

Page No. 139:    

Para (15)

காலத்திலுள்ள சத்திய ஜீவியம் (apprehending supermind) ஒன்றான ஜீவியத்தை பிரிக்காமல் பிரித்து மூன்றாக்குவதால் மனம் செயல்பட முடிகிறது.

Page No. 140:

Para (16)

1)            இதுவே ஞானி, ஞானம், அறிவது எனவும் அதேபோல் மற்ற அனைத்தையும் பிரிக்கிறது.

2)            அன்பு, செலுத்துபவர், பெறுபவர்

                சக்தி, செய்பவர், செயல்

                பிரம்மம், மாயை, சிருஷ்டி என அவை பிரிகின்றன.

Page No. 140:

Para (17)

1)            இந்த ஆத்மாவில் ஞானம் செறிந்துள்ளது.

                இது புருஷன் (Conscious Being, சத் புருஷன்).

தன்னிடமிருந்து போய் செயல்படும் பிரகிருதியை இது காண்கிறது.

இது எல்லா ரூபத்திலும் தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறது.

2)            புருஷன் தன் சக்தியுடன் செயலுள் நுழைகிறான்.

                அப்படி நுழைந்து சுயபிரிவினையை மேற்கொள்கிறான். (apprehending Supermind).

3)            ஒவ்வொரு ரூபத்திலும் புருஷன் பிரகிருதியுடன் உறைகிறான்.

                தன்னை மற்ற ஜீவன்களில் காண்கிறான்.

                அப்படி செயற்கையான நடைமுறை மையத்தினின்று காண்கிறான்.

4)            அனைத்திலும் ஆத்மா ஒன்றே. ஒரே சத் புருஷன்.

சத்திய ஜீவியத்தில் ஞானமும் செயலும் இணைந்துள்ளன, பிரிந்தில்லை.

Page No. 141:

Para (18)

மனிதனுக்கு சுதந்திரம் உண்டு.

அவன் ஞானத்தில் அல்லது அஞ்ஞானத்திலிருந்து செயல்படலாம்.

சத்திய ஜீவியத்திலுள்ள வரை அஞ்ஞானமில்லை.

Page No. 141:

Para (19)

இனி வருவது apprehending Supermind. அது எளிது.

சுருக்கம்: Chapter XV  உயர்ந்த சத்திய ஜீவியம்.

  • காலமும், இடமும் சிருஷ்டிக்குத் தேவை.
  • மனம் தன்னை சூழலிலிருந்து பிரிப்பது போல் சத்திய ஜீவியம் பிரிப்பதில்லை.
  • மரத்தையும், விதையையும் பிரபஞ்சம், இறைவன் மூலம் முழுமையாக அறியலாம்.
  • ஞானி, ஞானம் அறிவது சத்திய ஜீவியத்தில் ஒன்றாகவும், மனத்தில் பிரிந்தும் உள்ளன.
  • இது வரை கூறியது சத்திய ஜீவியம். இனி கூறப்போவது காலத்துள் உள்ள சத்திய ஜீவியம். அது எளிமையானது.

Chapter XVI

சத்திய ஜீவிய மூன்று நிலைகள் 

Page No. 142:

Para (1) & (2)

1)            இதுவரை ஈஸ்வரன் என்பதை எந்த அளவு புரிந்து கொண்டோம் எனப் பார்ப்போம்.

2)            வாழ்வு* அனைத்தும் ஒரே ஜீவன் என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

3)            இந்த ஜீவனைக் கடவுள் எனக் குறிப்பிடுகிறோம்.

4)            இறைவன் அடிப்படையான சுபாவம் ஜீவியம்.

       அவனுக்கு செயல்படும் சுபாவம் என்று சக்தி, உறுதி, ஆனந்தம்.

நிலையாக இருந்தால் அது ஆனந்தம், செயல்படுவது ஆனந்தம் பூரிப்பது. 

5)            இறைவனின் லீலை பிரபஞ்சம். 

அகந்தைக்குப் பின்னால் நம் ஜீவன் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறது. 

6)            பின்னால் செயல்படும் அடிப்படையான ஜீவனை முன்னால் கொண்டு வருவது தெய்வீக வாழ்வு. 

பின்னணியில் அடிப்படையான ஜீவன் எப்பொழுதும் ஆனந்தம் அனுபவிக்கிறது. அதை முன்னுக்குக் கொண்டு வருவது தெய்வீக வாழ்வு.

Page No. 143:

Para (3)

1)            சச்சிதானந்தம் ஐக்கியம்.

      மனம் பிரிந்த நிலையில் உள்ளது. இவையிரண்டும் எதிரானவை.

2)            இடையில் உள்ள சத்திய ஜீவியத்தால் தெய்வீக வாழ்வு சாத்தியமாகும்.

3)            சத்திய ஜீவியம் அடிப்படையான உண்மையால் செயல்படுகிறது.

4)            சச்சிதானந்தம் ஐக்கியமானது, வாழ்வு காலம் இடத்திலுள்ளது. அதனால் இடைப்பட்ட நிலை தேவைப்படுகிறது.

5)            காலம் அகத்துள் சிருஷ்டித்ததை, இடம் புறத்தில் செயல்படுத்துவதை நாம் காரண காரியம் என்கிறோம்.

6)            காரண காரியம் தெய்வீக சட்டம்.

7)            இந்த சட்டத்தின் அடிப்படை தானே சத்தியத்தை உருவாக்குவது டி.ஞு. முழு எண்ணம். 

8)            அப்படி உருவாக்குவது சித்சக்தி; ஞானம்  உறுதி.

9)            மனம் இந்த சக்தியைப் பெற்றதில்லை.

சத்திய ஜீவியம் முழு எண்ணத்தின் மூலம் காரண காரியத்தால் செயல்படுகிறது.

Page No. 144:

Para (5) & (4)

1)            எனவே மனத்தை விட உயர்ந்த கருவியிருக்க வேண்டும்.

2)            இது சச்சிதானந்தத்தின் சுபாவமான சத்திய ஜீவியம்.

3)            சித்சக்தி இதில் ஞானம்உறுதியாகிறது.

4)            அவை காலத்தையும் இடத்தையும் ஏற்படுத்துகின்றன.

5)            எனவே சத்திய ஜீவியம் என்பது சத் புருஷன். 

சத் புருஷன் தன்னையே தான் நிர்ணயித்துக் கொள்ளும் ஞான லோகத்திற்கு வந்து சத்திய ஜீவியமாகிறான். 

காலத்தையும், இடத்தையும் கடந்ததில் கண்ட சத்தியங்களை காலத்திலும் இடத்திலும் உருவாக்குவது சத்திய ஜீவியம் செய்வது  இது சிருஷ்டி. 

6)            இதை முழு எண்ணம் எனக் கூறுகிறோம்.

Page No. 144:

Para (6)

1)            இறைவனுடைய ஜீவியம் தன் சித்சக்தியாய் தன்னுள் அனைத்தையும் சிருஷ்டிக்கிறது.

அவற்றின் வளர்ச்சியைப் பரிணாமம் மூலம் கட்டுப்படுத்துகிறது.

இதை தன்னுள் உள்ள ஞானம்உறுதியால் செய்கிறது.

இதை Real - idea முழு எண்ணம், கடவுள் என்கிறோம்.

2)            கடவுள் எல்லாம் அறிந்தவர், எல்லாம் வல்லவர், எங்குமிருப்பவர்.

Page No. 145:

Para (7)

1)            ஜீவனின் வாழ்வு பூரணமானது.

2)            அதன் சக்தியும் பூரணமானது.

3)            அதனால் அதன் நிலைகளும் (poises) பல. 

4)            மனிதன் மேல் மனத்திலிருக்கிறான். அதனால் ஒரு நிலைக்குட்பட்டவன். 

5)            சத்திய ஜீவியம் எல்லா நிலைகட்கும் உரியது. குறிப்பாக 3 நிலைகள் உள. 

6)            முதல் நிலை ஐக்கியத்திற்குரியது கடவுள். 

7)            இரண்டாம் நிலை ஜீவன்கள் கலப்பது (Many in One)  ஜீவாத்மா.

8)            மூன்றாம் நிலை அஞ்ஞானத்துள்ளிருப்பது ஆணவம் அல்லது அகந்தை.

 

Page No. 146:

முதல் நிலை: காலத்தைக் கடந்த சத்திய ஜீவியம்.                                   Para (8)

இரண்டாம் நிலை: காலத்துள் உள்ள சத்திய ஜீவியம்.                               Para (9)     

 

Page No. 147:

மூன்றாம் நிலை: பூவுலகில் அகந்தை செயல்படுவது.                               Para (10)  

 

Page No. 148:

1)            அவித்யா முதற்பலன்.                                                                           Para (11)            

2)            (Many) பலவற்றை உண்மையெனவும் (one) ஏகனை பலவின் தொகுப்பு எனவும் கொள்கிறோம்.

3)            ஜீவாத்மா மற்ற ஜீவாத்மாக்களையறியலாம். இதனால் ஜீவாத்மா தனித்ததாகாது.

Page No. 148:

                இந்த மூன்றில் எந்த நிலையிலும் பொய்யில்லை.                             Para (12)

          உபநிஷதங்களும் இதைக் கூறுகின்றன.

Page No. 149:                                                                                                                   

                   Para (13)

மனிதன் இம்மூன்றில் ஒன்றை மட்டும் ஏற்பதால் பூசல் எழுகிறது.

அது மனம் செய்வது.

 சத்திய ஜீவியம் அதைச் செய்வதில்லை.

 

சுருக்கம்  Chapter XVI - சத்திய ஜீவியத்தின் மூன்று நிலைகள்.

 

1)            இதுவரை ஈஸ்வரன் என்றால் என்ன என்று கண்டதைக் காண்போம்.

2)            சத்திய ஜீவியம் என்பது புருஷன் தன்னைத்தானே நிர்ணயித்துக் கொள்ளும் ஞானம்.

3)            சத்திய ஜீவியம் எத்தனை நிலைகளிலும் இருக்கும். குறிப்பாக அவை மூன்று

i.     கடவுள்

ii.     ஜீவாத்மா

iii.    ஆணவம்

4)            இவை எதிலும் பொய்யில்லை.

5)            மனிதன் ஒன்றை மட்டும் ஏற்பதனால் பூசல்கள் எழுகின்றன.

Chapter XVII

Divine Soul

தெய்வீக ஆன்மா

Page No. 150:

Para (1)

சிருஷ்டியில் இறைவனைக் கண்டோம்.

இனி பரிணாமத்தில் அவனைக் காண வேண்டும்.

Page No. 151:

           Para (2)

தெய்வீக ஆன்மாவின் ஜீவியம் எப்படியிருக்கும்?

அது ஆதி சத்தியத்தில் எப்படி உறையும்?

சத்திய ஜீவியத்தின் இருபகுதிகள் வழி எப்படிச் செயல்படும்?

Page No. 151:

Para (3)

1.             தெய்வீக ஆன்மா சச்சிதானந்தத்தின் லீலையுள் உறையும்.

2.             ஜீவனில் அது தூய்மையான, அனந்தமான, சுயவாழ்வு* உடையதாக இருக்கும்.

3.             அதன் ஜீவியத்தில் அது அழியாத வாழ்வையுடையது.

அதற்கு மரணமில்லை, பிறப்பில்லை, உடலை மாற்றாது.

அதற்கு அஞ்ஞானமில்லை.

அது ஜடப்பொருளின் இருளில் கலந்ததில்லை.

4.             அதன் சக்தி தூய்மையான அளவற்ற ஜீவியமாகும்.

      காலம் கடந்த பிரகாசமான அமைதி அதன் அஸ்திவாரம்.

      மனத்தின் தவறால் பாதிக்கப்படாமல் எல்லா ரூபங்களுடனும் அது லீலை       செய்யும்.

5.             அதன் ஆனந்தம் அழியாதது, காலத்திற்கு உட்படாதது.

Page No. 151:

Para (4)

1.             அதன் ஜீவியம் எப்பொழுதும் பிரம்ம முன்னிலையிலிருந்து அனுபவம் பெறுவது.

2.             அறிவு பிரம்மம் உண்டு எனக் கூறுகிறது.

முடிவானதைக் கடந்து ஒன்றுண்டு என அறிவு பிரம்மத்தைக் காட்டுகிறது.

தெய்வீக ஆன்மா நாம் அறிவதை உணரும்.

3.             அசைவற்ற நிலையில் பிரம்மரூபம் சச்சிதானந்தம் என அறியும்.

சிருஷ்டியில் அது சச்சிதானந்த லீலை எனப் புரிந்து கொள்ளும்.

4.             தெய்வீக ஆன்மா தன் வெவ்வேறு நிலைகளில் பிரம்மம் எப்படி தன்னை மாறும் சுய ஞானத்தால் அறிகிறது என்பதை அறியும்.

ஒவ்வொரு நிலையிலும் பிரம்மம் தன்னை தன் ஜீவன், ஞானத்தால் எப்படி முழுமையாகப் பெற்றுள்ளது என தெய்வீக ஆன்மா அறியும்.

[பிரம்மம் (Transcendent) ஜீவன், ஞானமாகும்.

நமக்கு ஆயிரம் நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு நிலையையும் பிரம்மம் முழுமையாகப் பெறும் திறனுடையது.

அத்திறன் அதன் ஜீவன், ஞானத்தால் செயல்படுகிறது.

தெய்வீக ஆன்மா இவற்றை அறியும்.

உதாரணம்:

நாம் ஊருக்குப் போகிறோம்.

நமக்கு அது பிரயாணம்.

பிரம்மத்திற்கு அது நம் அசைவு.

நம் ஆசை, நம் அசைவால் பூர்த்தியாகிறது.

பிரம்மம் உத்தரவு தராவிட்டால் அது நடக்காது.

பிரம்மம் நம் ஆசையை ஏற்று அதற்கேற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறது.

அதாவது நம் ஆசையைப் பூர்த்தி செய்கிறது.

நம் ஆசையைப் பூர்த்தி செய்வதால் பிரம்மம் குறைவதில்லை, மாறுவதில்லை, அதிகப்படுவதில்லை.

மீண்டும் பிரம்மம் தன் நிலைக்குப் போகிறது.

இதை நாமறிவதில்லை.

தெய்வீக ஆன்மா கண்ணுறும், அறிகிறது.]

5.             பிரம்மத்தின் முன்னிலையில் தெய்வீக ஆன்மா இருப்பது ஒரு நேரம் நிகழ்வதில்லை. இடைவிடாது நாம் மூச்சு விடுவது போல் நடக்கிறது.

[மயக்கமுற்றவன் கோமாவிலிருப்பவன்  ஏதோ ஒரு நேரம் கண் விழிப்பான். நாம் எந்த நேரமும் கண் விழிப்பாக இருப்பதைப் போல் ரிஷி ஏதோ ஒரு நேரம் நிஷ்டையில் பிரம்ம தரிசனம் பெறுவான். ரிஷி ஏதோ ஒரு நேரம் பெறுவதை தெய்வீக ஆன்மா நிரந்தரமாகப் பெறும்.]

6.             தெய்வீக ஆன்மாவுக்கு அனந்த சுதந்திரம் உண்டு என்பது இடைவிடாமல் அது பிரம்மத்தின் முன்னிலையிலிருப்பதால் முடிகிறது.

Page No. 152:

Para (5)

தெய்வீக ஆன்மா சச்சிதானந்தத்தின் இரு நிலைகளிலும் இருக்கும்  One and the Many; கடவுள், ஜீவாத்மா; ஏகன், அநேகன்.

உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் அப்படியே வாழ்கின்றன.

அவை தம்மையறிவதில்லை. தெய்வீக ஆன்மா தன்னையறியும்.

Page No. 153:

Para (6)

1.             தெய்வீக ஆன்மா மாறுதல்களை சச்சிதானந்தத்திலிருந்து எழுவதாக அறியும். அவை வேறுபட்டவை, பிரிக்கப்பட்டவையில்லை.

2.             அதன் மையம் ஜீவன்.

3.             பெயர், ரூபம், உறுதி, சக்தி, சுயஞானம், வாழ்வு, சந்தோஷம் ஆகியவை சத் புருஷனின்று எழுவதாக அது அறியும்.

4.             அப்படி எழுபவை எதிரான இரண்டல்ல, ஒன்றான இரட்டை.

Page No. 154:

Para (7)

1.             சத்திய ஜீவியத்திற்கு மூன்று வகையான வாழ்வுண்டு.

2.             தெய்வீக ஆன்மா அம்மூன்றையும் சிந்தனை செய்து, கண்டு, உணரவல்லது.  

 

  • அனைத்தும் பிரம்மம்.
  • அனைத்தும் பிரம்மத்துள்ளிருக்கும்.
  • பிரம்மம் அனைத்துள்ளும் தனித்தன்மை பெறும்.

Page No. 154:

Para (8)

1.             முதல் நிலை ஒருமைக்கு அடிப்படை.

2.             இரண்டாம் நிலை பன்மையில் ஒருமை.

3.             மூன்றாம் நிலை (individuality) தனித்தன்மை.

Page No. 155:

Para (9)

1.      தெய்வங்களுக்கு இம்மூன்று நிலைகள் உண்டு. வேதம் இப்படிக் கூறுகிறது.

2.      அக்னி தெய்வங்கட்குத் தலைவன்.

அக்னி மற்ற தெய்வங்கட்குச் சமம்.

அக்னி மற்ற தெய்வங்களின் சேவகன்.

Page No.155:

Para (10)

தெய்வீக ஆன்மா மற்ற எல்லா ஆன்மாக்களுடன் எல்லா வகையான தொடர்புகளையும் பிரிவினையை விலக்கி, ஒற்றுமையுடைய அடிப்படையில் கொள்கிறது.

Page No. 156:

Para (11)

ஞானம், உறுதியிலும் தெய்வீக ஆன்மா அதே போன்ற தொடர்புகளை ஏற்படுத்துகிறது.

Page No. 156:

Para (12)

அனைத்தையும் தன்னுட்கொண்டிருப்பதால், ஒரு செயலில் ஈடுபட தெய்வீக ஆன்மா அச்செயலை முன்னிருத்தி, மற்ற அனைத்தையும் பின்னணியில் வைக்கிறது.

Page No. 157:

சத்திய ஜீவியம் தன் திறமைகளை வெளிப்படுத்துவதால் தெய்வீக ஆன்மாவுக்கு சுயசித்தி (தன்னையே தான் சித்திக்கும் திறன்) ஏற்படுகிறது.

சுருக்கம்  Chapter XVII  தெய்வீக ஆன்மா.

1.             இது சச்சிதானந்த லீலையில் உள்ளது.

2.             இது பிரம்மத்தின் முன்னிலையில் நிரந்தரமாக இருக்கிறது.

3.             ஏகனிலும் அநேகனிலும் ஒரே சமயத்திலிருக்கிறது.

4.             சத்திய ஜீவிய மூன்று நிலைகளை இது அறியும்.

5.             தெய்வங்கட்கு இம்மூன்று நிலைகள் உண்டு.

6.             தெய்வீக ஆன்மா ஒருமையடிப்படையில் செயல்படுகிறது.

7.             ஒன்றை முன் வைத்து, அனைத்தையும் மறைத்துச் செயல்படுகிறது.

8.             தெய்வீக ஆன்மாவுக்கு அதுவே சித்திக்க சத்திய ஜீவியம் தன் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

 

Chapter XVIII

மனமும் சத்திய ஜீவியமும்

Page No. 159:

Para (1)

1)            சத்திய ஜீவிய வாழ்வை விவரமாகக் கண்டோம்.

2)            நமக்கும் அதற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.

3)            அதனால் தெய்வீக வாழ்வு நம் உலகில் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

நமக்கும் சச்சிதானந்தத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

Para (2)

1)            சச்சிதானந்தம் (சa) அனந்தமான ஜீவன் (b)சித்சக்தி (c) சுய ஆனந்தம்.

நம் உலகத்தை சிருஷ்டித்தது இச்சச்சிதானந்தம்.

நம் மனம் சச்சிதானந்தம் குதர்க்கமாக மாறியது.

நாம் சச்சிதானந்தத்தைத் தெளிவாக விளக்கினோம்.

2)            தெய்வீக மாயை என்ன என்று விவரித்தோம்.

தெய்வீக மாயை சத்திய ஜீவியம், முழு எண்ணம்.

இதன் மூலம்  மேற்சொன்ன மூன்றின்  பிரம்மம், பிரபஞ்ச வாழ்வு* ரூபங்களை உருவாக்குகிறது, பிரபஞ்சத்தை ஆள்கிறது, ஒழுங்குபடுத்துகிறது, பிரபஞ்ச ஆனந்தத்தை அனுபவிக்கிறது.

மீண்டும் இவற்றைச் சுருக்கிச் சொன்னால்: உலகைப் படைத்த சச்சிதானந்தம் என்ன என்பதை நாம் விளக்கினோம். எப்படிப் படைத்தது எனவும் கூறினோம்.

3) சத், சித், சக்தி, ஆனந்தமென்ற 4 பெரிய அம்சங்கள் நாமறியும் மனம், வாழ்வு, உடலெனும் 3 பெரிய அம்சங்களுடன் எப்படி தொடர்பு கொண்டன என அறியோம்.

4) உலகில் எல்லாப் பிரச்சினைகளையும் மனிதனுக்கு எழுப்பும் இருண்ட மாயையை நாம் ஆராயவில்லை. எப்படி அது தெய்வீக மாயையினின்று வந்தது எனவும் அறியோம்.

5) இதைச் செய்யாமல் நம் ஐயம் அழியாது.

6) நம் உலகம் சச்சிதானந்தத்திலிருந்து வந்து அவனுடலுள் இருக்கிறது என அறிவோம். இறைவன் உலகில் ஈஸ்வரனாக இருந்து அனுபவிக்கிறான் எனவும் அறிவோம். நாமறியும் எதிரான இரட்டைகள் (வலி ஆனந்தம்) சச்சிதானந்தப் பிரதிநிதிகள் எனவும் அறிவோம்.

7) இறைவனுக்கு எதிரான அம்சத்திலிருக்கும்வரை நாம் தெய்வீக வாழ்வை அடைய முடியாது எனவும் அறிவோம்.

8) நம் நிலையை சச்சிதானந்தத்திற்கு உயர்த்த வேண்டும் அல்லது அதனுடன் பரிமாறிக் கொள்ள வேண்டும். இது பூவுலகத்தைத் துறப்பதாகாதா?

9) அப்படியானால் பூரண யோக இலட்சியம் மேலுலகத்தில் தான் பூர்த்தியாகும், நம் பூலோகத்திற்கில்லை என்றாகிறது.

நம்மை சச்சிதானந்தத்திற்கு உயர்த்தாமல், அல்லது அதனுடன் நம் நிலையை மாற்றிக்கொள்ளாமல் தெய்வீக வாழ்வில்லை. அதாவது தெய்வீக வாழ்வு பூலோகத்திற்கில்லை.

 

Page No. 160:

Para (3)

1) இறைவனுக்குப் புறம்பானது என நாம் நினைப்பதெல்லாம் சச்சிதானந்தம் சிருஷ்டித்ததே. சச்சிதானந்தம் ரூபங்களை உருவாக்க அவை அவசியமாயின.

2) இந்த ரூபங்கள் இறைவனுக்கு வெளியில் சிருஷ்டிக்கப்படவில்லை.

அவை இறைவனுள் உள்ளன.

அது சிருஷ்டியின் பகுதி.

3) அவற்றுள் இறைவனின் சக்தியில்லை என நாம் கூற முடியாது.

4) மனம், வாழ்வு, உடல் ஆகியவை அங்கு தூய்மையாக இருக்கும் எனக் கூற முடியும். அவை இறைவனின் சக்திக்கு உபகருவிகளாக இருக்க முடியும்.

5) எனவே மனம், வாழ்வு, உடல் இறைவனை வெளிப்படுத்தும் கருவிகளாக இருக்கும். மனித வாழ்வு குறுகியது. அதற்கும் கரணங்கள் முழு அனுபவம் பெற முடியாது.

6) இறைவனிடமிருந்து இக்கரணங்கள் பிரிக்கப்பட்டதால் இன்று அவை குறையாகச் செயல்படுகின்றன.

7) இறைவன் மனிதனில் விரிந்து செயல்படுவதால் இறைவனுக்கும், கரணங்கட்கும் உள்ள இடைவெளி மறையலாம். அவை சத்திய ஜீவிய கருவிகளாகலாம்.

 

நம் கரணங்கள் இறைவனின் கருவியாகும் வாய்ப்புள்ளது.

Page No. 161:

Para (4)

1)            இம்மாற்றம் அகத்திலும், புறத்திலும் ஏற்படும்.

2)            அகத்தில் பலர் இதை சாதித்துள்ளனர்.

3)            புறத்தில் இதுவரை எவரும் சாதிக்கவில்லை.

பூலோக வாழ்வு இன்பதுன்பங்களால் பாதிக்கப்பட்டதாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

Para (5)

 

1)            இந்த வெற்றியை அகத்திலும், புறத்திலும் பெறுவது முழுமை.

2)            இந்த இலட்சியம் மேல் உலகில் உள்ளது.

3)            அதை Real- Ideaமுழு எண்ணம் எனக் கூறுகிறோம்.

4)            இது இல்லாத இலட்சியம், இனி நாம் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில்லை.

Page No. 162:

Para (6)

1)            மனம் சிறைப்பட்ட அரசன்.

2)            மனம் பிரிவினைக்காக ஏற்பட்ட கருவி.

3)            ஒரு முழுமையைப் பகுதிகளாகப் பிரிப்பதை மனம் அறிந்தாலும் பகுதியை முழுமையாகக் கருதாமல் மனத்தால் செயல்பட முடியாது.

[பட்டம் கல்வியின் பகுதி. வேலைக்காக பெறுவது என்பதை மனம் பூரணமாக அறிந்தாலும் பட்டமே கல்வி, பட்டமே எல்லாம் என்று மனம் செயல்படுவதைக் காண்கிறோம்.]

4)            மனத்தின் இக்குணம் சிந்தனை, உணர்வு, செயல், வாழ்வு, இலட்சியம் என எல்லா இடங்களிலும் எழுகிறது.

5)            மனம் பகுதியை விட்டு முழுமையை நாடினால் தன் திறனை இழந்து விடுகிறது.

[கல்லூரிக்குப் போகாமல் வீட்டிலேயே படிப்பவனுக்குப் படித்தது போலிருக்காது. திருமணம் செய்து தாலி கட்டாமல் இருவர் ஒன்றாக வாழ்வது என்பது மனம் ஏற்க முடியாதது.]

6)            மனம் அனந்தத்தை அறிய முயன்றால் தன்னையிழந்து விடும்.

[அன்னை ஆசிரமத்தில் மட்டுமில்லை. எங்கும் இருக்கிறார் என்பதை மனம் ஏற்பது அனந்தத்தை ஏற்பது போலாகும். மயக்கம் வரும். மயக்கம் என்பது செயலற்ற நிலை.]

7)            மனம் அனந்தத்தை தன் உடமையாகப் பெற முடியாது. அனந்தம் மனத்தை அதன் உடமையாகப் பெறக் கூடியது.

[பெரும் பணம் எளியவனுக்கு வந்தால் அவனால் அதை ஆள முடியாது. அது அவனை ஆளும்]

8)            மனம் உயர்ந்து சத்திய ஜீவியமாகாமல் அனந்தத்தை உடமையாக்கிக் கொள்ள முடியாது.

மனம் பகுதியை அறியும், முழுமையை அறியாது.

அனந்தம் மனத்தை ஆட்கொள்ளும்.

Page No. 163:

Para (7)

1)            மனத்தின் சுபாவமும், சுதர்மமும் இறைவனால்  மாயையால்  கொடுக்கப்பட்டவை. அது அனந்தத்தை (infinity) கண்டமாக்குவது (finite).

2)            நடைமுறையில் மனம் அனந்தத்தை துண்டு செய்யும்பொழுது நம்மிடமிருந்து அனந்தத்தைப் பிரித்து விடுகிறது.

[மனிதனை பலன் கருதாமல் செயல்பட கீதை பணித்தால் அவன் வேலையில் ஆர்வத்தை இழந்து விடுகிறான். விலக்க வேண்டியது பலன் மீதுள்ள பாசம். அவன் விலக்குவது வேலை மீதுள்ள அக்கரை.]

அதனால் மனம் அஞ்ஞான மையம்.

மனம் துண்டு செய்து விநியோகம் செய்கிறது.

அதனால் மனம் உலகை சிருஷ்டித்தது என நாம் கொள்கிறோம்.

[முதலாளி மானேஜரை அனைவர்க்கும் சம்பளம் கொடுக்கச் சொன்னால் சம்பளம் வாங்குபவர்கள் மானேஜர் தன் பணத்தை சம்பளமாகக் கொடுப்பதாக நினைக்கின்றனர்.]

3)            தெய்வீக மாயை ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் புரிந்து கொள்கிறது.

4)            கண்டம் அகண்டத்தின் பகுதி. அகண்டமின்றி கண்டமில்லை. கண்டம் என்ற சிறியதும் அகண்டம் என்ற பெரியதுமிருப்பதால் இவை இரண்டையும் உட்கொண்ட ஒன்று இருக்க வேண்டும்.

[நல்லது, கெட்டது என்ற இரு பகுதிகளிருந்தால் இரண்டையும் உட்கொண்ட நியாயமிருக்கும்.]

5)            அது ஜீவியம். அங்கு அறியாமையில்லை.

6)            நாம் நாடும் இலட்சியம் Real-Idea முழு எண்ணம். அதை நாம் அடைய முயல்கிறோம்.

7)            இந்த இலட்சியம் என்றும் உள்ள சத்தியம்.

நாம் இந்த இலட்சியத்தை நம் வாழ்வில் சித்திக்க வேண்டும்.

நாம் இந்த இலட்சியத்தை உற்பத்தி செய்ய வேண்டியதில்லை.

அது ஏற்கனவேயுள்ளது.

i.    மனம் அகண்டத்தைத் துண்டு செய்ய ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டது. அதைச் செய்யும்பொழுது மனம் நம்மை அகண்டத்தினின்று பிரித்து விடுகிறது.

ii.    மனம் பிரித்து விநியோகம் செய்வதால், உலகை சிருஷ்டித்தது என நாம் நினைக்கிறோம்.

iii.   கண்டம், அகண்டமிருப்பதால் இவையிரண்டும் சேர்ந்த ஜீவியமிருக்க வேண்டும். அது நம் இலட்சியம்.

 

Page No. 164:

Para (8)

1)            அகம் புறமாகும் முதற் கட்டம் இது.

புருஷப் பிரகிருதி முதலில் பிரியுமிடம் இதுவே.

இப்பிரிவினையே இனி வரும் எல்லாப் பிரிவினைகட்கும் அடிப்படை.

மனம் மனிதனை இறைவனிடமிருந்து பிரித்ததே வாழ்க்கைப் பிரச்சினைகள் அத்தனைக்கும் காரணம்.

தானும் இறைவனும் ஒன்று என மனிதன் நினைத்தவுடன் பிரச்சினைகள் மறையும்.

2)            புருஷனும், பிரகிருதியும் இங்கு பிரிகிறார்கள்.

3)            ஒன்று பலவாகி, பலவற்றுள்ளிருந்து ஒன்று அவரவர் நோக்கத்தை அறிவது முடிவான செயல்.

பிரிவினைக்கு அடிப்படை பிரஞ்ஞா ஏற்படுத்தும் பிரிவினை, ஒன்று பலவாகிறது.

 

Page No. 165:    

Para (9)

1)            ஏகனுடைய அனந்தம் காலம், இடமாகிறது.

எங்கும் நிறைபவன் அநேகனாகிறான்.

பல புருஷர்கள் பல ஜீவராசியாகி ஏகனுடைய ஐக்கியம் பிரபஞ்ச ஐக்கியமாகிறது.

2)           ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஒரு தனி உலகை பிரகிருதியைப் பெறவில்லை.

அனைவர்க்கும் ஒரே பிரகிருதி.

ஒவ்வொரு புருஷனும் மற்ற புருஷர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்கின்றனர்.

3)     ஒவ்வொரு ஜீவாத்மாவும் மற்ற அனைத்து ஜீவாத்மாக்களுடன் தொடர்பு   

கொள்கின்றன.

அனந்தம் காலம், இடமாகி, ஏகன் அநேகனாகி, அநேகன் அனைத்துடனும் நெருங்கிய தொடர்பு கொள்கின்றன.

Para (10)

1)            ரூபம் மாறுவது ஜீவன் மாறுவதாகத் தோன்றுகிறது.

ஜீவனுடைய ஞானம், ஜீவனுடைய உறுதி மாறுவதாகத் தோன்றுகிறது.

2)            பிரிந்தாலும் அது ஒற்றுமையை இழப்பதில்லை.

அது மனத்தை ஒரு உபகருவியாக்குகிறது.

3)            உண்மையில் பிரிவினையில்லை.

ஆத்மா தன் விரிவுபடுத்தும் சக்தியைப் பயன்படுத்தி ரூபங்களும், சக்திகளும் வேறுபடுவதால் ஏற்பட்ட வாய்ப்பை லீலைக்குப் பயன்படுத்துகிறது.

ஆத்மா அவற்றால் பயன்படுத்தப்படுவதில்லை.

      இதுவரை பிரிவினையோ, அஞ்ஞானமோ ஏற்படவில்லை.

 

Page No. 166:

Para (11)

1)            இதுவரை ஐக்கியம் இழக்கப்படவில்லை என்பதால் அஞ்ஞானம் உற்பத்தியாகவில்லை. அஞ்ஞானம் எழ புது அம்சம் வரவேண்டும்  மனம் தன்னைத் தன் செயலில் இழக்க வேண்டும். அவ்வழி தெய்வீக மனம் விலங்கு மனமாகிறது.

2)            இப்புதிய அம்சம் அஞ்ஞானம்.

இது தன்னை மறக்கும் திறன்.

இது மனத்தை சத்திய ஜீவியத்தினின்று பிரிக்கிறது.

3)            அப்படிப் பிரிந்த மனம் ஒன்றை மட்டும் குறிப்பாகக் காண்கிறது. பிரபஞ்ச செயலைக் காண மறுக்கிறது.

அதனால் தனிப்பட்டதையும், பிரபஞ்ச செயலையும் அனந்தனின் பகுதியாகக் காண முடிவதில்லை.

4)            பிரிந்தவற்றைத் தொகுத்து, தொகுதியாக அதனால் காண முடிகிறதே தவிர ஆரம்பித்து ஐக்கியத்தை மீண்டும் பெற முடியவில்லை.

மனம் சத்திய ஜீவியத்தை மறந்து அஞ்ஞானத்தை உற்பத்தி செய்கிறது. இதற்கு மேல் மனத்தால் பழைய அனந்த ஐக்கியத்தைக் காண முடிவதில்லை. தான் பிரித்த, பிரித்தபின் தொகுத்த தொகுப்பையே முழுமையாகக் கொள்கிறது.

Page No. 166:

Para (12)

1)            மனம் பிரிக்கிறது. பிரிவினை முடிந்தபின் பிரித்த அணுக்களைச் சேர்க்கிறது.

2)            பிரிவினை கரைந்தால் மனம் அங்கு காண்பது சூன்யம். சத்திய ஜீவியம் சூன்யத்தைக் காண்பதில்லை. மீண்டும் பிரிவினைக்கு முன்னிருந்த தன் நிலையை அடைந்ததை அறிகிறது.

3)            எப்படிப் போனாலும்  முடிவற்ற பிரிவினை (அ) முடிவற்ற தொகுப்பு  ஜீவியம் முடிவில் தன்னையே, தன் ஜீவனையே வந்தடைகிறது.

4)            மனம் இவ்வுண்மையை ஏற்றால் பிரிவினை என்பதில்லை.

மனம் பிரித்தாலும் பிரிவினை மேலெழுந்தவாரியாகவேயுள்ளது. அடிப்படையில் பிரிவினையில்லை.

Page No.167:

Para (13)

1)            பிரிவினை இதுவரையில்லை என்றால், எங்கு பிரிவினை உற்பத்தியாகிறது?

2)            ஜீவாத்மா, மற்ற ஜீவாத்மாக்கள் தன் பகுதி என்பதைப் புறகணித்து, ஒரு செயலில் (காலம், இடத்தில்) தன்னை நிறுத்தி தான் வேறு எனக் கருதுவதால் பிரிவினை ஏற்படுகிறது.

3)            மற்ற ஜீவாத்மாக்களுடன் தனக்குள்ள தொடர்பை இப்படி மறுப்பதால் அத்தொடர்பை காலத்தில், இடத்தில் அடுத்து அடுத்து (in succession) காண்கிறது.

4)            பொருள் ஒன்றே, சக்தியைப் பிரிக்க முடியாது என்பதும் அழிகின்றன. எல்லா மனமும் ஒன்றே, எல்லா உடலும் ஒன்றே என்பதையும் ஜீவாத்மா இழக்கிறது.

மனம் தன்னைத் தன் செயலில் இழந்து, அடிப்படை ஒருமையை, ஐக்கியத்தை இழக்கிறது.

ஜீவாத்மா தான் தனி எனவும், மற்ற ஜீவாத்மாக்கள் வேறு என நினைப்பதால் மனம் ஒருமையை இழந்து தன்னைத் தன் செயலிலிழக்கிறது.

Page No. 168:

Para (14)

1)            மனிதன் உடலோடு ஐக்கியப்படுவதால் அறியாமை மேலும் வளர்கிறது.

நமக்கு மனம் உடலால் நிர்ணயிக்கப்படுவதாய் தோன்றுகிறது.

2)            மேலும் உயிருக்கு ஒரு மனம் உண்டு. மனம் உயிருடன் ஐக்கியமாகிறது.

3)            இதிலிருந்து நாம் பிரிந்தால், நாம் காண்பது பிராணமய புருஷன். இது முதற் சித்தி.

உடலிலிருந்து மனம் பிரிவதால் பிராணமய புருஷன் சித்திக்கிறான்.

Page No. 169:

Para (15)

1)            இதனால் உடலால் ஏற்படும் குறை விலகுகிறது. அதனால் மனத்தின் குறை முழுவதும் விலகுவதில்லை.

2)            மனம் பிராணனுடன் ஐக்கியமாவதினின்று விடுபட வேண்டும்.

Para (16)

1)            அப்படி விடுதலை பெற்ற மனம் மனோமயப் புருஷனைக் காண்கிறது. அம்மனோமயப் புருஷனை ஆத்மா என நாம் தவறுதலாக நினைக்கிறோம்.

2)            இம்மனம் மற்ற மனங்களுடன் உள்ள தொடர்பை அறியும்.

ஆனால் மனக்குறை இன்னும் விலகுவதில்லை.

பிராணனின்று விடுதலை பெற்றது போல் மனத்திலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.

Page No. 170:

Para (17)

1)            திரையைக் கிழித்தால் சத்திய ஜீவியம் தெரிகிறது.

2)            உலகம் என்ன என்பது இங்கு தெரிகிறது.

3)            இங்கு ஜீவாத்மாவின் தனிப்பட்ட பார்வை அழிகிறது.

4)            இங்கும் அஞ்ஞானம் அழியவில்லை என்றாலும் மனம் தான் சத்திய ஜீவியத்திற்கு உபகரணம் என்று உணர்கிறது.

5)            (One) ஏகன் அநேகனாக பிரிவினையை வலியுறுத்தாமல் ஐக்கியத்தை வலியுறுத்தி செயல்படுவதை மனம் அறிய முடியும்.

Page No. 171:

Para (18)

1)            ஜீவாத்மா தன்னைத் தனி, வேறு எனக் கருதுவதால், மற்ற ஜீவாத்மாக்களுடன் அதற்குள்ள தொடர்பு மறைகிறது.

இதனால் அகந்தையும், சுயநலமும் எழுகின்றன.

Page No. 172:

Para (18)

மனம் சக்தியைப் பிரித்து, பிரிந்த நிலையினின்று மற்றவற்றைப் பார்ப்பதால் வேதம் கூறும் (crooked) கோணல் புத்தி மனத்திற்கு எழுகிறது.

 

சுருக்கம் :  Chapter  XVIII - மனமும், சத்திய ஜீவியமும்.

Page / Para:

159/ 1  :  பூவுலகில் தெய்வீக வாழ்வு சாத்தியமா என்ற ஐயம் எழுகிறது.

159/ 2  :  நாம் உயர்ந்து சச்சிதானந்தத்தை அடைய வேண்டும். அல்லது நம் நிலையை சச்சிதானந்தத்துடன் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

160/ 3  :  மனம், உயிர், உடல் அறியாமையால் தம் மூலத்திலிருந்து அவை பிரிக்கப்பட்டன.

161/ 4  :  அகத்திற்குரிய வெற்றியைப் பெற்றவர் பலர். புறம் வெல்லப்படவில்லை.

161/ 5  :  இலட்சிய மனம் மேலுள்ளது. நாம் அதை இனி உற்பத்தி செய்ய வேண்டியதில்லை.       

162/ 6  :  மனம் பகுதியை அறியும். அனந்தத்தையறிய மனம் மேலே செல்லவேண்டும்.

163/ 7  :  மனம் உபகரணம். இது தெய்வீக மனம். இது தனிப்பட்ட செயலல்ல.

164/ 8  :  பிரஞ்ஞா புருஷப் பிரகிருதியைப் பிரிக்கிறது. காலம், இடத்தை உற்பத்தி   செய்கிறது. ஒன்றைப் பலவாக்கியது.

165/9 : புருஷன் பிரிந்தாலும் எல்லா ஆத்மாக்களிலும் சென்றடைவதால் தன் ஆதி ஐக்கியத்தை இழப்பதில்லை.

165/10:  பிரிவினை தொடர்ந்தாலும், ஐக்கியம் அழிவதில்லை.

166/11:  மனம் தன்னைத் தன் வேலையிழப்பதால், அவித்தை உண்டாகிறது.

166/12:  துண்டாடுவது சூன்யத்தில் முடிகிறது. அது சத்திய ஜீவிய நிலை.

167/13:  தன்னை மறந்து தன்னுடனும் வாழ்வுடனும் ஐக்கியமாவதால் அவித்தை    வலுப்படுகிறது.

168/14:  உடலோடு ஐக்கியமாவதால் அவித்தை பூரணமடைகிறது.

169/15:  உடலினின்று மனம் விடுபட்டால் பிராணமயப்புருஷன் சித்திக்கும்.

169/16:  பிராணனை விட்டு விலகினால் மனோமயப் புருஷன் சித்திக்கும். நாம் இதை ஆத்மா எனக் கருதுகிறோம். இதனாலும் பிற ஜீவாத்மாக்களை ஏற்க முடியாது.

170/17: திரையைக் கிழித்து, அறிவை விட்டகன்று, சத்தியத்தைக் காணலாம்.

171/18:  சுயஞானத்திலிருந்து நகர்ந்தால் சுய அறியாமை எழும். அதுவே குதர்க்கத்தின் வேர்.

172/19:  அறியாமையைப் பாராட்டுவதால் மனம் வேதம் கூறிய குதர்க்கத்தை பெறுகிறது.



story | by Dr. Radut