Skip to Content

பகுதி 2

வழி நடத்தினால் (acts on will) சக்தி உற்பத்தியாகிறது. சக்திக்குச் சலனமுண்டு. அச்சலனம் வாழ்வெனப்படும். It is the plane of life. வாழ்வுக்கு ஞானமில்லை. ஆனால் ஓட்டம் உண்டு. உருவமில்லை. ஓட்டம் ஞானத்தைக் கிரகித்துக் கொள்ளும். ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் உறுதி சக்தி பெறும். ஞானம் சுருங்கும். சுருங்கும் ஞானம் ரூபம் பெறும். ஞானம் முழுவதும் உறுதியில் மறைந்து ரூபத்தில் அழிந்தால் ஜடம் ஏற்படும்.

பாதாளமும், பரமாத்மாவும்

சிருஷ்டியைச்  செய்வது மாயை.அதற்கு மூன்று  திறமைகளுண்டு Self-conception,Self-limitation,Self-absorption. தன்னிச்சையான சிந்தனை, தன்னை அளவுக்குட்படுத்துவது, தன்னையே தன்னுள் கிரகித்துக் கொள்வது.

- முதல் திறமை சச்சிதானந்தத்தை சிருஷ்டித்தது. அதை சத்என சிருஷ்டித்தது.

- இரண்டாம் திறனால் சத் என்பதை சத் எனவும், சித் எனவும், ஆனந்தமெனவும் வரையறுத்துக் கொண்டது.

- மூன்றாம் திறமையால் சித் தன்னைத் தன்னுள் கிரகித்துக் கொண்டதால் அது காரிருளாக மாறியது. அதற்கெதிரானது பரமாத்மா. (Consciousness by self-absorption has become Superconscient and Inconscient is its opposite). அவற்றைப் பரமாத்மா* எனவும், பாதாளம் எனவும் குறிப்பிடுகிறேன்.

- அது பரமாத்மாவாக இருந்தாலும், பாதாளமாக இருந்தாலும் அது பிரம்மமே.

_____________________________________________________________________________________ * இது பொருத்தமான சொல் அன்று. ஆனால் தவறாகாது.

-Superconscient பரமாத்மாஎனில் ஜீவியத்திற்கு எட்டாத உயரத்திலுள்ளது எனப் பொருள். இந்த இடைவெளியான உயரம் ஜீவியம் தன்னைக் கிரகித்துக் கொண்டதால் வந்தது. நாம் ஒரு வேலையில் நெடுநாள் ஈடுபட்டால் நாம் அந்த வேலையாகவே மாறி விடுகிறோம். நாம் ஏற்கனவே இருந்த நிலை நமக்குத் தற்சமயம் புரியாதது போலிருக்கிறது. பார்லிமெண்டில் மெம்பரானவர் அத்துடன் லயித்துவிட்டால், பழைய நிலைக்கும், புது நிலைக்கும் இடைவெளியேற்படும். புது நிலை புரியாத அளவுக்கு உயர்ந்துவிடும். Super-conscient என்பது ஜீவியம் உயர்ந்து மனித மனம் அறிய முடியாதபடி உயர்வது. இந்நிலையுள் ரிஷி, முனிவர், யோகி, தெய்வம், அக்ஷரப்பிரம்மம், புருஷோத்தமன் ஆகியவை பல கட்டங்களாக இருக்கின்றன.

- பாதாளம் என்பது இருள். இதற்கும் கீழே inconscience ஜட இருள் உண்டு. ஜட இருள் பரிணாம வளர்ச்சியால் பாதாளமாகிறது. பாதாளமும், பரமாத்மாவும் அடிமனத்தில் சந்திக்கின்றன. அல்லது அவையிரண்டும் சந்திக்குமிடத்தில் அடிமனம் உற்பத்தியாகிறது. இப்பாதாளத்துள் பரமாத்மா புதைந்துள்ளது. பரிணாமத்தால் அப்பரமாத்மா வெளிவரும். அப்படி வந்த நிலைகள் 1) ஜடம் 2) வாழ்வு 3) மனம் - மனிதன்.

பாதாளத்துள் பரமாத்மா புதைந்திருப்பதாலும், பரிணாமத்தால் பாதாளம் முடிவில் பரமாத்மாவாகும் என்பதாலும், பாதாளமும், பரமாத்மாவும் ஒன்று.

Yoga or Self- Protection

பூரணமான சிறப்பை, பிரம்மம் எய்தும் யோகம்

  • யோகம் என்பது இணைவது, மனிதனும் இறைவனும் இணைவது யோகம். அது சமாதி. சமாதி நிலையில் மேலே

புற்று எழும், உடலில் சூடு போட்டால் தெரியாது. இதை சமாதி எனவும், அதன் உச்சகட்டத்தை நிர்விகல்ப சமாதி என்றும் கூறுவர். இறைவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள விகல்பத்தை விலக்குவது நிர்விகல்ப சமாதி. இதன் நிலைகள் மூன்று. ஹடயோகம் உடலாலும், கர்மயோகம் பிராணனாலும், ஞானயோகம் எண்ணத்தாலும், ராஜயோகம் மனத்தாலும், தந்திரயோகம் அனைத்தாலும் மோட்சம் பெறுகின்றன.

ஜீவாத்மா என்பது நமது ஜீவன் முழுவதற்கும் உள்ள ஆத்மா. இதன் பகுதிகள் மனம், உயிர், உடலாகும். ஒவ்வொரு பகுதிக்கும், அப்பகுதிக்குள்ள ஆத்மாவுண்டு. உடல் என்பதை சமஸ்கிருதத்தில் அன்னம் என்பர். இதற்குரிய ஆத்மாவுக்கு அன்னமயப் புருஷன் எனப் பெயர். உயிருக்குப் பிராணன்எனப் பெயர். இதன் ஆத்மாவுக்குப் பிராணமயப்புருஷன் எனவும் மனத்தின் ஆத்மாவுக்கு மனோமயப்புருஷன் எனவும் பெயர். இவை ஜீவாத்மாவின் பகுதிகள். உடல், உயிர், மனத்திற்கு ஒவ்வொன்றிலும் மற்ற இரண்டும் உண்டு. உடலுக்கு உயிருண்டு. மனம் உண்டு. உயிருக்கு உடலும், மனமும் உண்டு. மனத்திற்கு உடலும், உயிரும் உண்டு. அனைத்திற்கும் ஆத்மாவுண்டு. உடல் உடலாகச் செயல்பட்டால் மனிதன் மண்ணாங்கட்டியாவான். உடலுக்குள் உயிரெழுந்தால் அவன் சுறுசுறுப்பாக இருப்பான். உடலுக்குரிய உயிரில் மனம் வெளிப்பட்டால் அவன் செய்யும் காரியங்களில் - உடலால் செய்யும் காரியங்களில் - அறிவு வெளிப்படும். அவனை crafts man என்கிறோம். தச்சன், கருமான், பத்தன் இதைச் சேர்ந்தவன். மனம் அறிவாக வெளிப்படுவதைப்போல் உடலில் ஆத்மா வெளிப்பட்டால், அது அன்னமயப் புருஷனாக இருக்காது. அது சைத்தியப் புருஷனாக இருக்கும். அது உடலுக்குரிய சைத்தியப்புருஷன் ( Physical Psychic being). அன்னமயப்புருஷன் மூலாதாரத்தில் உள்ளது. அது வளராத ஆத்மா. சைத்தியப்புருஷன் வளரும் ஆத்மா.

  • வளராத ஆத்மா மோட்சத்தை நாடும்.
  • வளரும் ஆத்மா திருவுருமாற்றத்தைத் தேடும்.

ஆத்மா வளரக் கூடியதுஎன்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் முதலில் கூறியது. அதனால் பூரண யோகத்தை அவர் ஆன்மீகப்

பரிணாம யோகம் என்றார். மனம் வளராவிட்டால் உடலுக்கு ஆயுள் குறைவு. உயிர் வளராத காலத்தில் மனிதனுடைய சராசரி ஆயுள் 10 வருஷம் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். மனம் வளராத காலத்தில் அது 30 ஆண்டாக இருந்தது. மனம் வளரும் இக்காலத்தில் அது 70 ஆண்டைத் தொடுகிறது. இது உடலின் மனம். மனத்தின் மனமில்லை. உடலின் ஆன்மா வளர ஆரம்பித்தால் உடலுக்கு மரணமில்லை. வளராத ஆத்மாவுக்கு மோட்சம் உடல் மூலம் அல்லது உயிர் மூலம் அல்லது மனம் மூலம் பெறலாம். உடல் மூலம் பெற ஹடயோகமும், உயிர் மூலம் பெற கர்மயோகமும், உணர்ச்சி மூலம் பெற பக்தியோகமும், மனம் மூலம் பெற ஞான யோகமும் உதவும். இவையனைத்தும் ஒரு கரணம் மூலம் செய்யும் யோகம். தந்திரயோகம் ஓரளவு அனைத்து யோகங்களையும் இணைத்தது. அது பூரணயோகச் சாயல் உடையது. பூரண யோகத்தை ஒரு கரணத்தால் செய்ய முடியாது. எல்லாக் கரணங்கள் மூலமும், அதாவது ஜீவன் மூலம் மட்டும், செய்ய முடியும். தந்திரயோகம் ஹடயோக ஆசனங்களையும், பிராணாயாமத்தையும் கூடப் பயன்படுத்துகிறது. பூரணயோகம் இது போன்ற முறைகளை அறவே விலக்குகிறது. ஹடயோகம் மனிதனை உடலில் உள்ள ஆத்மாவாகக் கருதுவதால் அதை உடலில் ஆரம்பிக்கிறது. ரயிலும், விமானமும் வந்தபின் காசியாத்திரையைக் கால்நடையாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பிரம்மத்தின் பகுதியைப் பிரம்மமாக அறிந்த மனமே முடிவான கருவியான காலத்திற்கு அது உரியது. முழுப் பிரம்மத்தைக் கண்டபின், மனத்தைக் கடந்த சத்தியஜீவியம் கருவியாகும். அதனால் யோகத்தை அடியிலிருந்து - உடலிலிருந்து - ஆரம்பிக்காமல், உச்சகட்டத்திலிருந்து ஆரம்பிக்கலாம். மனத்திலிருந்து, மனத்தின் ஆத்மாவிலிருந்து - வளரும் ஆத்மா - ஆரம்பிக்கலாம். அது மனோமயப்புருஷனில்லை. சைத்தியப்புருஷன். சைத்தியப்புருஷன் சத்தியஜீவியப் பிரதிநிதி என்பதால் அங்கு ஆரம்பிக்கலாம். இம்மாற்றம் 30,000 ஆண்டுகளை 30 ஆண்டாக மாற்றும். இதன் கருவி சரணாகதி.

பூரணயோகம் சிறிய பாதை மூலம் பெரிய பலனையடைய வல்லது.

  • பாதை சிறியதானால் பலன் பெரியது.

  • தந்திரயோகத்தின் முடிவான பலனை முதலில் பெறக்கூடியது.
  • மனிதன் தன் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்தை இறைவனின் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்திற்கு முழுவதும் அர்ப்பணிப்பது சரணாகதி.
  • சரணாகதியால் அகந்தை கரைந்து ஆத்மாவாகிறது அது பிரபஞ்ச ஆத்மாவாகும்.
  • அவ்வாத்மா, பிரபஞ்ச வாழ்வை அனுபவிப்பது பூரண யோகம்.
  • மேலும் அப்பிரபஞ்ச ஆத்மா பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்ம ஆத்மாவாகும்.
  • அதைப் பெற நாம் ஆத்மாவைச் சரணம் செய்ததைப் போல் நம் சுபாவத்தையும் தெய்வீக சுபாவத்திற்குச் சரணம் செய்ய வேண்டும்.

The Synthesis of Yoga நான்கு பகுதிகளைக் கொண்டது. கர்மயோகம் முதற் பகுதி. ஞானயோகம் இரண்டாம் பகுதி. பக்தியோகம் அடுத்தது. பூரணயோகம் முடிவானது. இதில் 25 அத்தியாயங்கள் உள்ளன. மேலே எழுதியது முதல் அத்தியாயம் "பூரணயோகத் தத்துவத்தை" விளக்குவது.

இரண்டாம் அத்தியாயம் ஞானம் - பூரணயோக ஞானம்.

நாம் எதை ஆர்வமாக ஏற்கின்றோமோ நாம் அதுவாக மாறுவோம் என்பது அடுத்த அத்தியாயம்.

அடுத்த பகுதிகள் மனமும், சுபாவமும் தூய்மைப்பட வேண்டும், அப்படித் தூய்மையடைந்தால் Perfection சிறப்படையலாம். 

Perfection பெற்றால் சமத்துவம் எழும்.

சிறப்பையெய்திய ஆத்மா சமத்துவம் பெறுவது faith நம்பிக்கையெழுவது.

நான்கு கரணங்கள் கலந்து சுமுகம் பெறுவது அவசியம்.

பூரணயோகத் தத்துவத்தை அறிந்து, ஞானத்தால் இறைவனாக ஆஸ்ரயித்து, மனமும் சுபாவமும் தூய்மையானால் - அகந்தையழிந்து, இரட்டையொழிந்து - Perfection சிறப்படையும் ஆத்மா சமத்துவம் பெறு நம்பிக்கையால் செயல்பட்டால், சக்தியை நம்மில் செயல்பட அனுமதித்தால், மனம் சத்தியஜீவிய மனமாக உயரும் என்பது இந்த 25 அத்தியாயங்களின் சுருக்கம்.

சத்தியஜீவியத்தைப் பறிய அத்தியாயங்கள் ஏழு.

  • ஓர் அத்தியாயம் சத்தியஜீவியச் சுபாவத்தையும் அடுத்தது அதன் நிலைகளையும் கூறுகின்றது.
  • அடுத்தது யோகியின் மனம்.
  • சத்தியஜீவிய எண்ணம், எண்ணம் செயல்படும் வகை, சத்தியஜீவிய உணர்வு ஆகிய அத்தியாயங்கள் திரிகால திருஷ்டியில் முடிகின்றது. அதை சத்தியஜீவிய கால திருஷ்டி எனத் தலைப்பிட்டுள்ளார்.

இதன் சுருக்கத்தில் மனத்தின் மூன்று நிலைகளைக் கூறுகிறார். முதல் நிலை இன்று நாமுள்ள நிலை. ஜாக்கிரதா என்பது. இரண்டாம் நிலை நாம் மறந்துள்ள மனம். அதாவது "உலகத்து ஞானம் உள்ளே" என்பது. அறிய வேண்டியது அனைத்தும் அகத்துள் என்ற நிலை. உள்ளே போனால் உலகம் இருக்கிறது என்ற நிலை. திரிகால திருஷ்டி என்பது அதைக் கடந்தது. யோக முதிர்ச்சியில் முடிவாகக் கருதப்படுவது. இதுவரை திரிகால திருஷ்டி எனப்படும். பகவான் கூறும் திருஷ்டி இதுவரை உலகிலில்லாத மூன்றாம் நிலைக் காலத்திற்குரிய திருஷ்டி. இது அற்புதம். உலகம் திருவுருமாறி, தீமையழிந்த நிலையில் உள்ள திருஷ்டி. நாமறிந்த திரிகாலம் கடந்த காலத்தைப் போன்றது. அது முதல்நிலை காலத்திற்குரியது. முதல் நிலை காலத்தில் நாம் வாழ்கிறோம். இங்கு, காலம் கட்டம் கட்டமாக நகர்கிறது (successive movements). காலத்தைக் கடந்த நிலை - ரிஷியின் நிலை - அதி வேகமானது. ஆனால் முதல்நிலை காலத்தைப் போன்றது. ரிஷி நட்ட விதை உடனே மரமாவது போன்றது. அது Supramental Time Vision சத்தியஜீவிய திருஷ்டியாகாது.

  • நாம் வாழும் காலம் முதல் நிலை காலம். நாம் ஓர் ஆபீசில் வேலை செய்வதை உதாரணமாகக் கூறலாம். இந்த வேலையில் பிரமோஷன் சீனியாரிட்டியால் வரும். கிளார்க், ஆபீசர், பெரிய ஆபீசர்என சர்வீஸ் பேரால் வரும்.
  • காலத்தைக் கடந்த நிலை பெரிய ஆபீசராக நேரடியாக வேலையில் சேர்ந்து இலாக்காத் தலைவராவது. அது பெரியது என்றாலும் ஆபீசர் வாழ்வாகும். அரசியல் அதிகாரம் பெற்றதாகாது.
  • பகவான் கூறுவது ( next plane) அடுத்த உயர்ந்த சத்தியஜீவியப் பரிணாமக் கட்டம். அது அரசியல். தொண்டன் தலைவனாகும் லோகம். இதுவரை ரிஷிகள் கண்டறியாத லோகம்.

1947 க்கு முன் நம்மவர் முனிசிபல் சேர்மனாக இருந்தனர். MLA யாக இருந்தனர். டெல்லி சட்ட சபையில் மெம்பராக இருந்தனர். மாநிலத்தில் மந்திரியாக, முதன் மந்திரியாகவும் டெல்லி சர்க்காரில் மத்திய மந்திரியாகவுமிருந்தனர். அவை வைஸ்ராய் தயவால் கிடைத்த பதவிகள். எலக்ஷன் மூலம் பெற்ற இடமானாலும், அடிமை நாட்டுத் தேர்தலில் அன்னியன் கொடுத்த சலுகை. இன்று அதே பதவிகள் சுதந்திரமான நாட்டில், நாம் நடத்தும் தேர்தலில், நாம் பெறும் பதவிகள். அதுவே பழைய மௌனம், ஞானம், திரிகால திருஷ்டிக்கும், ஸ்ரீ அரவிந்தர் தரும் மௌனம், ஞானம், திரிகால திருஷ்டிக்கும் உள்ள வித்தியாசம். உலகம் அறிந்த திரிகாலம் காலத்திற்குரியது. ஸ்ரீ அரவிந்தர் கூறும் திரிகாலம் முழுப் பிரம்மத்திற்கும், மூன்றாம்நிலை காலத்திற்கும் உரியது. ஆயிரமாண்டுமுன் உலகம் சுற்றியவருண்டு. இன்றும் உலகம் சுற்றுபவருண்டு. அதே வித்தியாசம் வாழ்வுக்கும் ஸ்ரீ அரவிந்தத்திற்கும் எல்லா இடங்களிலும் உண்டு.

மனிதனும், பிரபஞ்சமும்

மனிதன் தனித்த ஜன்மம். அவன் உலகத்தின் பகுதி. உலகம் பூமியின் பகுதி. பிரபஞ்சம் என்பது சூரிய மண்டலங்களைத் தன்னுள் பகுதியாகக் கொண்டது. ஸ்ரீ அரவிந்தம் பிரம்மம், பிரபஞ்சம்,

மனிதன் - Transcendent,Universal, Individual எனவும் கூறும் பொழுது மனத்தில் பிரபஞ்சம் என்பது பிரம்மம் அப்படி மாறியது, பிறகு பிரபஞ்சம் மனிதனாயிறு என்று கொள்கிறது. அதாவது மனிதனுள் பிரபஞ்சமும், அதனுள் பிரம்மமும் உள்ளது என்பது கொள்கை, அடிப்படை. மரபு சொல்வது வேறு. உடல், உயிர், மனம், ஆத்மாவாலான மனிதன் மரணத்தால் உடல் அழிந்து மண்ணோடு மண்ணாய் மக்கும். உயிர் ஆவியாகி உலவி ஆவியுலகத்திலிருக்கும். மனம் செய்த சிந்தனைகள் அழியா. அவை உலகத்தில் சூட்சுமமாகச் செயல்படும். ஆத்மா தவத்தால் மோட்சம் பெறும்.

ஸ்ரீ அரவிந்தம் கூறுவது: மனிதன் ஆத்மா. அதுவே பிரபஞ்சமும், பிரம்மமுமாகும். தன்னைக் கண்டு பிரபஞ்சத்தில் விரிந்து, பிரம்மமாக உயர்ந்து இவ்வுலகில், இவ்வுடலில், இதே உயிரில், இம்மனத்தில் வாழ்வது தெய்வீக வாழ்வுஎன ஸ்ரீ அரவிந்தம் கூறுகிறது.

அகந்தை Ego

சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து சிருஷ்டி ஏற்பட்ட பொழுது மனம் ஏகனான பரமாத்மாவை அநேகனாகப் பிரித்தது. இது பிரியாத பிரிவினை. பிரியாத பிரிவினையை பிரியும் பிரிவினையாக்குவது அகந்தை. மகனுக்குத் திருமணமாவதால் குடும்பம் பிரியும் அவசியமில்லை. தனிக்குடும்பம் போவதாலும், வெளிநாடு போவதாலும் பிரிய வேண்டாம். வீட்டிலேயிருந்தாலும், ஊரிலேயே இருந்தாலும் பிரியப் பிரியப்பட்டால் குடும்பம் பிரிந்துவிடும். பிரியப் பிரியப்படுவது, நான் வேறு, மற்றவர் வேறு என்ற எண்ணம் பிரிக்கும். அதுவும், அது போன்ற எண்ணங்களும், செயல்களும் அகந்தைக்குரியன. காலம் பிரிக்கும், மனம் பிரிக்கும். அவை கடுமையான - மீண்டும் சேர முடியாத - பிரிவினையன்று. அகந்தை பிரிப்பது, மீண்டும் கூடாது. அகந்தை அழியாமல் கூடாது.

சச்சிதானந்தம்

பணம் வைத்திருப்பவன் தொழிலாரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. அறிவுள்ளவன் புத்தகம் எழுதும் நிர்ப்பந்தம் உடையவனில்லை. பாடும் திறமையுள்ளவரை எவரும் பாட வேண்டும் எனக் கட்டாயப்படுத்த முடியாது. இது எல்லாக் கட்டங்களிலும் உண்டு. தானே பிரியப்பட்டால்தான் இது நடக்கும். சத்திலிருந்து, ஜடம்வரை, நாம் என்ன சாப்பிட வேண்டும், என்பதுவரை நிர்ப்பந்தமில்லை. நாமே உட்படுத்திக் கொள்ளாவிட்டால் கட்டாயமில்லை. பிரம்மம் சிருஷ்டிக்கும் என்ற கட்டாயமில்லை.

1) பிரம்மம் சிருஷ்டிக்க விரும்பியது.

2) அதனால் அது சத் (existence) ஆயிற்று.

3) பிரம்மத்திற்கு சிருஷ்டிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாதது போல் சத்திற்குச் சித்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. சத்தாகவேயிருக்கலாம். சித்தாக மாற சத் முடிவு செய்தால், அது தன்னையறிய வேண்டும் (must become conscious). சித் என்பதிலிருந்து சிந்தனை வந்தது. தான் யார் என சத் அறிய விரும்பினால் அவ்விருப்பம் அதைச் சித்தாக மாறுகிறது. Sat is existence.It can exist without knowing what it is.When Sat wants to know what it is-to become conscious of what it is-it becomes consciousness. மூளை மூளையாக இருக்கலாம், அறிவு பெறும் கட்டாயம் அதற்கில்லை. மூளை அறிவு பெற முடிவு செய்தால் அது பெற முடியும். அது அறிய ஆரம்பித்தால் மூளை அறிவாக மாறுகிறது.

4) பிரம்மத்திற்கு சிருஷ்டிக்கும் அவசியமில்லை. தானே இச்சைப்பட்டு சத்தாயிற்று.

5) சத்திற்குச் சித்தாகும் கட்டாயமில்லை. தான் சித்தாகப் பிரியப்பட்டதால் சித்தாயிற்று. இதைச் செய்ய அது தன்னை அறிந்தது.

6) சத் என்பது ஜீவன். அதகு ஜீவியமில்லை. ஆனந்தமில்லை.

ஜீவியம் ஜீவியமானபின் தன்னை அனுபவிக்கும் அவசியமில்லை.

திருமணம் செய்து கொள்ள எவருக்கும் கட்டாயமில்லை.

ஜீவனான ஜீவியம் தன்னை அனுபவிப்பது ஆனந்தம்.

ஜீவியம் தன்னை அனுபவிக்க முடிவு செய்வது ஆனந்தத்தை நாடுவது.

ஜீவியம் அகம். ஆனந்தம் புறம்.

7) சச்சிதானந்தம் என்றால் சத், சித், ஆனந்தமாகும்.

8) இது பிரம்மத்தின் முதல் நிலை வெளிப்பாடு.

9) சத் என்பதை சித், ஆனந்தமாகப் பிரிப்பது சத்தியஜீவியம். அதைச் செய்ய வைப்பது தெய்வீக மாயை.

10) சத், சித், ஆனந்தம் - அகம் சத்தியஜீவியம் - புறம்

அகம், புறமாகும் பொழுது சத் என்பது சத், சித், ஆனந்தமாக அதன் புறமான சத்தியஜீவியத்தால் பிரிக்கப்படுவது தெய்வீக மாயையின் செயல்.

முதலாளி கம்பனியை உற்பத்தி செய்ய டைரக்டர்கள் நிறைந்த போர்டையும், ஜெனரல் மேனேஜரையும் நியமித்து கட்டடங்களும் மெஷின்களும் நிறைந்த கம்பனியை ஆரம்பிக்கிறார்.

முதலாளி - பிரம்மம்

கம்பனி - சத்

டைரக்டர்கள் - சித்

கட்டடம் - ஆனந்தம்

- சத் செயல்படுவது சித்தால், அனுபவிப்பது ஆனந்தத்தால்.

- கம்பனி செயல்படுவது டைரக்டர்களால், அவர்கள் ஆனந்தப்படுவது கம்பனி என்ற கட்டடம், மெஷின் உற்பத்தி செய்வதால்.

பிரம்மம் சிருஷ்டிக்கிறது

பிரம்மா உலகை சிருஷ்டித்தார்என நாம் அறிவோம். பிரம்மா தெய்வீக மனத்திற்குரிய கடவுள். பிரம்மா சிருஷ்டித்தார் எனில், மனம் சிருஷ்டித்ததுஎனப் பொருள்.

உலகம் தற்செயலாய் சிருஷ்டிக்கப்பட்டதுஎன விஞ்ஞானம் கூறுகிறது.

கடவுள்என ஒருவர் உலகுக்கு அப்பாலிருக்கிறார். அவர் உலகை சிருஷ்டித்தார் எனவும் கூறுகின்றனர்.

கடைசி வாதத்திகுப் பதிலாக பகவான் கேள்வி எழுப்புகிறார் - ஏன் தீமை, கொடுமையைப் படைத்தார், அப்படிப்பட்ட உள்ளம் உள்ளவரா கடவுள்?

தற்செயலாய் எழுந்ததுஎனில் உலகம் ஒரு சட்டத்திற்குட்பட்டு உள்ளதை நாம் காண்கிறோம்.

பிறந்தவன் இறக்கிறான்.

பருவம் தவறாமல் வருகிறது.

தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு ஓடுகிறது.

ஒரு முறையும் பள்ளத்திலிருந்து மேட்டுக்கு ஓடுவதில்லை,

என்ற ஆயிரம் சட்டங்கள் செயல்படும் பொழுது

தற்செயலாய் சிருஷ்டிக்கப்பட்டது என்றால்,

எப்படி இரண்டும் ஒரே சமயத்தில் செயல்படும்?

இறைவன் தானே உலகமானான் எனக் கொண்டால் (hypothesis) அகண்டம் கண்டமாயிற்று என்றாகிறது. முடிவற்ற

இறைவன் சிறு அணுவானான் என்றாகும். அனந்தம் அணுவாக மாறும். மீண்டும் அணுவிலிருந்து அனந்தம் பரிணாமத்தால் வெளி வரும். இக் கொள்கையை உண்மைஎன நிரூபித்தால்,

1) தற்செயல் என்ற கருத்தும், மீற முடியாத சட்டம் செயல்படுகிறது என்பதும் இக் கொள்கைக்கு உட்பட்டு நாம் ஏற்கும்படி அமைகிறது.

2) இதற்குரிய வாதத்தால் இக் கொள்கையை பகவான் நிரூபிக்கிறார்.*

3) இதன் முடிவு மனம் உடலைவிட முக்கியமானதுஎன முடிகிறது.

4) அந்த மனம் பிரம்மா என்ற மனமில்லை, Supermind சத்தியஜீவியம் என முடிக்கிறார்.

5) முடித்தபின் அதுவே முடிவில்லை. சச்சிதானந்தம் அதற்கும் மேலுள்ளது என்கிறார்.

6) சத்தியஜீவியம் சிருஷ்டித்ததுஎன்ற வாதம் பிரம்மம் (Absolute) சிருஷ்டித்தது என்றாகும் என்கிறார்.

Indeterminates,Cosmic determinants,Indeterminable என்பது அத்தியாயத் தலைப்பு. புரியாதபுதிர் என்பது பிரபஞ்சத்திற்குரியது. அது எதனாலும் நிர்ணயிக்க முடியாத பிரம்மத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற விளக்கம் தத்துவத்தின் தலை சிறந்த நெறி. இவ்வத்தியாயம் தனிக்கட்டுரையாக விளக்கி எழுதப்பட்டுள்ளது.

மேற்சொன்னது இரண்டாம் புத்தகத்தில் முதல் அத்தியாயம். இரண்டாம் புத்தகம் ஞானமும் - அஞ்ஞானமும் ஆன்மீகப் பரிணாமம் செயல்படும் வகை என்ற தலைப்பையுடையது. இதன் முதற் பகுதி ( 14 அத்தியாயங்கள்) எப்படி ஞானம் அஞ்ஞானத்தினின்று பரிணாமத்தால் வெளிவருகிறது என்பது.

 

_____________________________________________________________________________________ * வாதம் சிக்கலானது. அத்தியாயம் விளக்கமாகப் பேசும். இவ்விளக்கத்தை இந்த அத்தியாயத்தின் (Book II,Chapter I) விளக்கமான கட்டுரையில் காணலாம்.

அதன் 14 அத்தியாயங்களை வரிசையாகக் காண்போம். அதன்முன் நூலின் அமைப்பைப் பார்த்தால், முதல் புத்தகம் சிருஷ்டி (ஞானம் அஞ்ஞானமாவது). இரண்டாம் புத்தகத்தின் முதற் பகுதி எப்படி ஞானம் அஞ்ஞானத்திலிருந்து வெளி வருகிறது என்பது. இரண்டாம் பகுதி எப்படி அப்படி வெளி வந்த ஞானம், ஆன்மீகப் பரிணாமத்தால் ஆன்மாவாகி, ஆன்மா வளர்ந்து சத்தியஜீவியமாகிறது என்பதாகும். மேற்சொன்ன முதல் அத்தியாயம்

- ரிஷிகள், விஞ்ஞானிகள் இருவரும் நம்பும் நாத்திகவாதத்திற்குப் பதில் சொல்வதுடன்,

- விஞ்ஞானிகள் திகைப்பை, தர்க்க ரீதியாக விலக்குகிறது.

- ஆன்மா ஆதி அந்தமற்றது, அசைவற்றது, அழிவற்றது, பிறக்காதது, இறப்பில்லாதது என்பது எப்படி மனம் கண்ட ஒருதலைக் காட்சிஎனவும் எடுத்துக் கூறுகிறது.

- பிரம்மத்தின் முழுமை, காலத்தின் மூன்று நிலைகள், மௌனம், ஐக்கியம், ரூபம், சிருஷ்டி, ஆகியவற்றிகு உள்ள நிலைகள் இரண்டல்ல, மூன்றுஎன அறிவைக் கடந்த நிலையை அறிவுக்கு எட்டும்படிக் கூறுகிறார்.

- மாயையின் மூன்று நிலைகள், மாயையின் மூன்று திறன்களை பிரம்மத்தின் மூன்று நிலைகளுடைய சக்தியாக விவரித்து மாயை என்பது இல்லாததில்லை, இருப்பதிலேயே சிறந்தது, அது பிரம்மத்தின் ஜீவியம் என 8 அல்லது 10 வகைகளாக அறிவு ஞானமாக முதிரும்படிக் கூறுகிறார். ஐன்ஸ்டீனும், கோபர்னிகஸ்ஸும் விஞ்ஞானத்தில் ஏற்படுத்திய அடிப்படைப் புரட்சிகள் பெரியவை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆன்மாவில் ஏற்படுத்தும் புரட்சி அவற்றை, சூரியமண்டலத்தின் முன் எறும்புப் புற்றாக்குகிறது.

- நூல் நம் ஆத்மா ஜீவியத்தில் ஏற்படுத்தும் புரட்சியை மனம் பரந்து விரிந்து விரும்பி மலர்ந்து ஏற்பது பக்தி. அது பலிப்பது சித்தி. இப்புரட்சியை மேற்கொள்ள முன் வருபவர்கள் மனத்தை இழந்து தோல்வியடைகின்றனர். அத்தோல்வியும் வாழ்வின் பெரு வெற்றியாகும். தோற்க மறுப்பவர் புரட்சி வீரர். தோல்வி தோற்றால் ஆத்மா மலரும்.

மலர்ந்த ஆத்மா வளரும். அது பரிணாம வளர்ச்சி. ஆன்மீகப் பரிணாமம் உலகம் கற்பனை செய்யாத கருத்து. ஆரம்பத்தில் இது புரியா விட்டாலும், மனம் கேள்வியின்றி ஏற்றுக் கொண்டால் நாளடைவில் நூல் புரியும். புரியவில்லை என்ற நிலை விலகி அழியும்.

இந்த நோக்கத்துடன் மற்ற முக்கியமான சிக்கல்களை அவிழ்க்கும் . வகையில் அடிப்படையான விளக்கங்களை எழுதுகிறேன்

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா

-------------------------------------------------------------------------

மாயா, பிரகிருதி, சக்தி

ஒரு முதலாளி கம்பனியை ஆரம்பித்தால் மானேஜர் ஒருவரை நியமிக்கிறார். தொழிலாளிகள் வேலையைச் செய்கிறார்கள். மகாத்மா காந்தி சுதந்திரத்தைப் பெற ஓர் இயக்கம் ஆரம்பித்த பொழுது காங்கிரஸ் என்ற கட்சிக்கு ஒரு தலைவரிருந்தார். தொண்டர்கள் வேலையைச் செய்தனர். குடும்பத்தலைவர் எண்ணத்தைத் தலைவி நிறைவேற்றுகிறார். பிள்ளைகள் மேலும் பூர்த்தி செய்கின்றனர் என்பவை வழக்கு. எடிசன் 1100 புதுப் பொருள்களை - பல்ப் போன்றவற்றைக் - கண்டுபிடித்து கம்பனி ஆரம்பித்துத் தானே மானேஜராகவும் இன்ஜீனீயராகவும் தொழிலாளியாகவும் வேலை செய்து அவற்றைப் பதிவு செய்து (patented) இன்று உலகப் பிரசித்தி பெற்றதாக General Electric என்ற கம்பனியை நிறுவினார்.

- மனிதன் சிந்திப்பான்.

சிந்தனை சிருஷ்டியுடையது.

சிந்திக்கும் மனிதனை, பிரம்மம் எனவும் சிந்தனையால்

சிருஷ்டிக்கும் திறனை, மாயை எனவும் கூறினர்.

- மனிதன் செயலாற்ற சாட்சியாய் நிற்பான்.

செயலை நிறைவேற்றுவான்.

செயலாற்றும் மௌனமான நிலையைப் புருஷனெனவும் அத்திறனை பிரகிருதி எனவும் கூறினர்.

- மனிதனால் சிந்தித்து சிருஷ்டி செய்து, மௌனமாக அத்திறனால் செயலை முடிக்கவும் முடியும். இருநிலைகளையும் ஏற்ற அவனை ஈஸ்வரன் எனவும் அவனது திறனை சக்தி எனவும் கூறினர். சிந்தனையால் சிருஷ்டி செய்வது முதல் நிலை.

மௌனமாயிருந்து செயலை முடிப்பது இரண்டாம் நிலை.

சிந்தனையால் சிருஷ்டி செய்து தீவிரமாகச் செயலை முடிப்பது. முதல் இருநிலைகளும் சேர்ந்த மூன்றாம் நிலை.

இம்மூன்று நிலைகளும் ஒருவருக்கே உரியது.

பிரித்துப் பார்க்கும் மனம் மூன்றையும் வெவ்வேறு நிலைகளாகக் கருதி இல்லாத சிக்கலை எழுப்பி முடிச்சு அவிழவில்லை எனத் திகைக்கிறது.

முதலாளி - பிரம்மம்

மேனேஜர் - புருஷன்

தொழிலாளி - ஈஸ்வரன்

என்று நாம் கொண்டால் முதலாளி ( conceptively creates) சிந்தனையால் கம்பனியை சிருஷ்டிக்கிறார். மேனேஜர் (dynamically executes) தீவிரமாகச் செயல்பட்டு முதலாளியின் சிந்தனையை நிறைவேற்றுகிறார். தொழிலாளி (conceptively creates and dynamically executes ) முதலாளி சிந்தனையால் சிருஷ்டித்ததையும், மானேஜர் செயலால் பூர்த்தி செய்வதையும் சேர்த்துச் செய்கிறான். எடிசன் முதலாளியாகவும், மானேஜராகவும், தொழிலாளியாகவுமிருந்தான். எனவே இந்த மூன்றும் இறைவனின் மூன்று அம்சங்கள், மூன்று வேறு நபர்களில்லை என்பது ஓரளவு விளக்கும் உதாரணம். மாயை என்பது பிரம்மத்தின் சக்தி, பிரகிருதி புருஷனின் சக்தி, சக்தி ஈஸ்வரனின் சக்தி. ஆகையால் பிரம்மம், புருஷன், ஈஸ்வரன்,மாயா, பிரகிருதி, சக்தி எனக் கூறும் ஆறும் இறைவனின் 6 திருமுகங்கள், ஆறு அம்சங்கள்.

  • இறைவன் ஒருவனே.
  • அவன் அம்சங்கள் ஆறு.

பரமாத்மாவும், ஜீவாத்மாவும்

நமது ஆன்மீக மரபு பரமாத்மா அழிவற்றது, ஜீவாத்மா பரமாத்மாவில் அழிவது எனக் கூறுகிறது. ஜீவாத்மாவுக்கு நம் மரபு அமரத்வம் தரவில்லை. ஸ்ரீ அரவிந்தர் பரமாத்மா பிரபச ஆத்மாவாகி, ஜீவாத்மா ஆயிற்று. ஜீவாத்மாவினுள் பிரபச ஆத்மாவும், பரமாத்மாவும் புதைந்துள்ளனர் என்கிறார். பிரதமர், MPஆக ஆரம்பித்து பார்லிமெண்ட்டில் மெஜாரிட்டி கட்சித் தலைவராகி பிரதமரானார். அதனால் MPயினுள் கட்சித் தலைவரும், பிரதமரும் புதைந்துள்ளனர் எனலாம்.

Divine and Undivine இறைவனும் அசுரனும்

நமது உடலில் வாய் உணவை உட்கொள்கிறது. வயிறும், குடலும் அதை ஜீரணம் செய்கின்றன. ஜீரணமாகாதவை வெளியேறுகின்றன. மூச்சு உள்ளே சென்று ஆக்ஸிஜனால் இரத்தத்தைச் சுத்தம் செய்து, அசுத்தமான காற்றை வெளியேற்றுகிறது. வியர்வை விசர்ஜனம். வாய் நாம், பெருங்குடல் நாமல்ல என்றோ உள்ளே போகும் காற்று நாம், வெளியே வரும் காற்று நாமல்ல என்றோ கூற முடியாது. வாயும், மூக்கும், குடலும் நாமே. குடலில்லாமல் உயிர் வாழ முடியாது. வேண்டியது, வேண்டாதது என உலகை இரண்டாகப் பிரித்தால்,

  • வேண்டாதது என்பது தற்சமயம் வேண்டாதது, எப்பொழுதுமே வேண்டாததில்லை.
  • எதுவுமே ஒரு சமயம் நமக்கு வேண்டியிருக்கும். அது பர்சனாலிட்டியின் அளவைப் பொருத்தது.

  • அனுபவம் அதிகமாக அதிகமாக ஊரில் எவரும் ஒரு சமயம் நமக்கு இன்றியமையாதவராய் விடுவார் எனப் புரியும்.
  • பல்வேறு வகையான சொத்து, பதவி, அதிகாரம் அதிக நாள் அனுபவித்தவருக்கு இரண்டு விஷயம் புரியும்.

- எவரும் எந்த நேரமும் அவசியமாய் விடுவர். - எவரும் எந்த நேரமும், நேரம் அவர்க்கு சாதகமாகி விட்டால், நம்மை முழுவதும் அழிக்க முடியும்.

  • circumconscient, சூழலின் ஜீவியமறிந்தவர் நம்முள்ளே உள்ள எதுவும் வெளியிலுள்ள எதையும் கவர்ந்து ஆபத்து விளைவிக்கலாம்என அறிவர். அவர்கள் எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார். எவரையும் எதிர்க்க மாட்டார்.
  • அடுத்த கட்டத்தில் ஆன்மீக விவேகமுள்ளவர் எவரும், சூழலின் ஜீவியம், கரணங்களின் ஜீவியம் (intraconscient) ஆகிய இடங்களில் உள்ள எதுவும் நமக்கு திருவுருமாற உதவும்என அறிவர்.
  • அதனால் உலகில், பிரபஞ்சத்தில் நமக்கு இன்றியமையாதது என ஒன்றில்லை என்பது ஆன்மீக ஞானம்.

இவற்றை பகவான் எடுத்துரைக்கக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

- வேண்டாததை அனுபவிக்காதவனுக்கு வேண்டியதின் ஆழ்ந்த ருசியான அனுபவமில்லை. வறுமையை அனுபவித்தால் வசதியின் அருமை தெரியும்.

- இறைவன் நாடும் ஒருமையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? வேண்டாதது இறைவனுக்கு வேண்டியது என்பதால் நமக்கும் வேண்டியதே.

- வலியை அனுபவிக்காதவன் ஆனந்தத்தின் முழுமையை அறிய முடியாது.

- உலகம் இறைவனின் ஆனந்தலீலை என்று அறிய வேண்டாதது இருக்கக் கூடாது.

- தீமையை விலக்குபவன் நன்மையையும் விலக்குவான்.

- பேர்ஆனந்தம் பெற வேண்டி பெரிய இருளை இறைவன் ஏற்படுத்தினான்.

- வேண்டாததுஎன நாம் அறிவது நம் அறியாமை அறிவது.

- குறுகிய அளவு ஜீவனிலில்லை, அகந்தையில் உள்ளது.

- எதிரானதை அனுபவிக்காமல் முழு ஞானத்தை அறிய முடியாது.

- அறியாமை அறிவைவிடப் பெரியது.

இறைவனே உலகமானான் என்பது கொள்கையானால், வேண்டாதது வர முடியாது.

புத்தர், சங்கரர், பகவான் ஸ்ரீ அரவிந்தர்

இதுவரை உலகில் புத்தரைப் போன்ற அறிஞர் (thinker) பிறக்கவில்லை என்று உலகம் கூறுகிறது. அதையே பகவானும் கூறுகிறார். புத்தரையும் சங்கரரையும் பற்றிப் பேசும் பொழுது ஸ்ரீ அரவிந்தர்,

  • சங்கரர் புத்தரை விடப் பெரிய அறிஞர் ஆனால்
  • புத்தர் அவரை விடப் பெரிய ஆத்மா,

என்று கூறுகிறார். உபநிஷதம் கூறுவது புத்தருக்கு ஒத்துவரவில்லை. அதனால் அவர் செய்த தவம் அவரை நிர்வாணம் எய்த உதவியது. எட்டுப் பாதைகளை அவர் உலகுக்கு அளித்தார். தீமையைக் கடக்க, அதிலிருந்து தப்பிக்க பௌத்தம் அகந்தையிலிருந்து விலகும் பாதையைக் காட்டுகிறது. மனம் அகந்தையிலிருந்து விலகினால் அகந்தை கரைகிறது என்று கண்டார். அதே போல் மனம் சத் புருஷனிலிருந்து (Self) விலகினால் சத் புருஷனும் கரையும் என்றார். அகந்தையை மனம் உற்பத்தி செய்ததால், மனத்தால் அகந்தையைக் கரைக்க முடியும். சத் புருஷனை அகந்தை உற்பத்தி செய்யவில்லை. அகந்தை உற்பத்தியாவதன் முன் சத்புருஷன் உற்பத்தியானதால் அதை

மனத்தால், மனத்தின் விசாரத்தால் கரைக்க முடியாதுஎன பகவான் கூறுகிறார். அகந்தையையும், தீமையையும் வென்ற பௌத்தம் கடவுளில்லை என்றது. புத்தர் பிரபஞ்ச வாழ்வு (existence) என்ன என்பதை ஆராய மறுத்ததால் அவர் கூறுவதை நாம் ஏற்க முடியாதுஎனக் கூறுகிறார். புத்தரை சங்கரர் கடந்து சென்றார். அவரை வென்றார். உலகம் மாயை என்றார். உலகம் புத்தரைக் கைவிட்டு சங்கரரை ஏற்றது.

  • சங்கரர் மாயைஎனக் கூறுவது சரியில்லை.
  • ஞ்ஞானத்தை சங்கரர் மாயை எனக் கூறுகிறார்என பகவான் கூறுகிறார்.

சங்கரர் புத்தரைக் கடந்து வந்ததைப் போல ஸ்ரீ அரவிந்தர் சங்கரரைக் கடந்த வகையை இரண்டாம் புத்தகம் 5, 6 அத்தியாயங்கள் கூறுகின்றன.

ஞானம், ஞ்ஞானம்

மனிதன் உலகை அறிய முயல்கிறான். அவனுக்குள்ள பெரிய கருவி மனம். மனம் பிரிக்கும் கருவி. இதனால் முழுமையைக் காண முடியாது. பகுதியைத்தான் காண முடியும். மனம் ஒரு பகுதியைக் கண்டால், காணாத பகுதியிருக்கும். அது எஞ்சியிருக்கும். இதை duality, இரட்டை என்கிறோம். ஒளி, இருள்; மெய், பொய்; பிரம்மம், சிருஷ்டி; வலி, ஆனந்தம்; மௌனம், சப்தம் என்பவை அது போன்ற இரட்டைகள். அதனால் சிருஷ்டியில் மனம் எதைக் கண்டாலும், அதற்கு எதிரான இரட்டை உடனே எழும். சத் என்பதை நாமறிந்த மாத்திரம் அசத் எழுகிறது. அப்படி எழுந்த இரட்டைகள் ஏராளம். தாழ்ந்தது, உயர்ந்தது; நல்லது, கெட்டது; ஆண், பெண்; என்பன போன்றவை அவை.

  • மனம் பகுதியை அறியும் கருவி என்பதால் இறைவனையும் பிரம்மத்தையும் - மனம் பகுதியாகவே அறிந்தது. வேதம், உபநிஷதம், கீதை ஆகியவை அப்படி அதிகபட்சம் இறைவனைக் கண்டு கொண்டதை அவர்கள் அக்ஷரப் பிரம்மம் என்றனர். அதுவே முடிவு என்றும் கூறினர்.

காமிரா படம் எடுத்தால், நாம் காணும் உலகில் ஒரு பகுதியைத்தான் படமாக எடுக்க முடியும். நாம் காண்பதே முழு உலகமில்லை, ஒரு பகுதிதான் என்பதால் காமிராவால் முழு உலகை அறிய முடியாது. அது கருவியின் குறை. வீடியோ காமிராவை விட அதிகமாக அறியும், அசைவைப் படம் பிடிக்கும் என்பது உண்மையானாலும், வீடியோவாலும் முழு உலகையறிய முடியாது. ராக்கட்டில் satellite மூலம் பூமியை முழுவதும் பார்க்க முடியும். மனம் காண முடியாத முழுமையை சத்தியஜீவியம் காண முடியும். சத்திய ஜீவியத்திற்கு இரட்டையில்லை, முழுமையுண்டு. அப்படி மனம் ஏற்படுத்திய அடிப்படையான இரட்டைகளில் சச்சிதானந்தத்தின் எட்டு அம்சங்கள் முக்கியமானவை.

சத்                                                    சித்                                      ஆனந்தம்

ஐக்கியம், சத்தியம்,             ஞானம், சக்தி                           அழகு, சந்தோஷம், அன்பு

நன்மை (goodness)

 

இவ்விரட்டைகள்

ஐக்கியம் * பிரிவினை (பகுதி)

சத்தியம் * பொய்

நன்மை * தீமை

ஞானம் * அஞ்ஞானம்

சக்தி * இயலாமை

அழகு * விகாரம்

சந்தோஷம் * கவலை

அன்பு * வெறுப்பு

சச்சிதானந்தம் என்பது இறைவன். இறைவனை இந்த எட்டு இரட்டைகளில் ஒன்றின் மூலம் விளக்கிக் கூறலாம். ஆனால் வேதம், உபநிஷதம், ஸ்ரீ அரவிந்தம் இறைவனை ஞானம் * அஞ்ஞானம் என்பதன் மூலமே கூறுகின்றன. மனிதன்

மனமுடையவன். மனமே அவன் உயர்ந்த கருவி என்பதால் மனம் பெறுவது ஞானம் என்பதால் ஞானம் * அஞ்ஞானம் என்ற இரட்டை பொருத்தமாக அமைகிறது. அடுத்த அத்தியாயம் ஞானமும் அஞ்ஞானமும். அதை எடுக்கும் முன் சங்கரர் மாயை என்று கூறுவது உண்மையில் அஞ்ஞானம்என இரு அத்தியாயங்களில் கூறுகிறார். கனவு பொய்யன்று என்பதால் அந்த உதாரணம் பொருத்தமாகாது. பாம்பு, பழுது என்பவை இல்லாதவையல்ல என்பதால் அவை மாயையாகாது, அறியாமையாகும் என்பது பகவான் கூறும் விளக்கம்.

பகவான் தத்துவம் முழுமை, முழு முதற் கடவுள் முடிவான சிருஷ்டி என்ற அடிப்படையுடையது. அதனால்,

- பிரம்மம் சிருஷ்டியில் எல்லா நிலையிலும், எல்லா நேரங்களிலும், எல்லா ரூபங்களிலும், பிரம்மமாகவேயிருக்கிறது.

- நாம் பிரம்மம், நம் செயல்கள் பிரம்மம்.

- நல்லது பிரம்மம், கெட்டது பிரம்மம்.

- ஞானம் பிரம்மம், அஞ்ஞானம் பிரம்மம்.

- பிரம்மம் ஆனந்தம் தேடி அஞ்ஞானத்தை சிருஷ்டித்து, அதனுள் மறைந்து, வெளி வருவது பிரம்மானந்தம் என்பதால் சிருஷ்டியில் அஞ்ஞானம் உள்ளது.

- சிருஷ்டிக்கு அஞ்ஞானம் தேவையில்லை; ஆனால் நாமுள்ள இந்த சிருஷ்டிக்கு அஞ்ஞானம் அத்தியாவசியம்.

- சிருஷ்டியின் இரகஸ்யம் புரிய ஞானம், அஞ்ஞானம் ஏற்பட்ட வகை, அவற்றுக்குள்ள தொடர்பு, அஞ்ஞானம் ஞானமாகும் வகை, உபநிஷதம், வேதம் கைக்கொண்டு விளக்கம் கூறிய முறை, பகவான் கூறுவது எப்படி அவற்றிலிருந்து வேறுபடுகிறது என்பவை நாம் அறிய வேண்டியவை.

  • முழுமையை முடிவாக அறிய வேண்டும் என்பதால் ஞானம், அஞ்ஞானம் என்ற விளக்கம் அதற்குச் சாதகமாக, பொருத்தமாக இருப்பது அவசியம்.

 

  • ஞானம் தன்னை அளவுக்குட்படுத்துவதால் அஞ்ஞானம் ஏபடுகிறது என்பது பகவான் கூறியது. அளவு அகன்றால் அஞ்ஞானம், ஞானமாகிறது. ஞானம் என்ற முழுமையை நாமடைய முடியும்.
  • வேதம், கடவுள், உலகம் என்று பிரித்து கடவுளை அறிவது ஞானமாகவும், கடவுளை அறியாதது அஞ்ஞானமெனவும் கூறுகிறது. வேத விசாரம் கடவுளில் ஆரம்பித்துக் கடவுளில் முடிவதால், உலகம் விலக்கப்படுகிறது. அதனால் முழுமைக்கு வழியில்லை.
  • உபநிஷதம் கூறுவது வேறு: கடவுளை அறிவது வித்யா, உலகை அறிவது அவித்யா என்று உபநிஷதம் கூறுகிறது. கடவுளும், உலகமும் பிரிக்கப்படுகின்றன. அவை சந்திக்க வழியில்லை. அதனால் முழுமை எழ வழியில்லை.
  • வேதம், உபநிஷதம், கீதை ஆகியவை மனம் என்ற கருவியைப் பயன்படுத்தின. மனம் பகுக்கும் கருவி. மனத்தால் முழுமையை அடைய முடியாது. அதனால் அவ்விளக்கங்கள் பூரண யோகத்திற்குப் பயன்படா.
  • மேலும் சத்தியஜீவியம் ஞானம், மனம் அதை மறக்காதவரை ஞானத்தின் கருவியாகும். அதை மறந்தால் அஞ்ஞானத்தின் கருவியாகிறது. அம் மறதியின் நிலைகள் ஏழு. அவ்வேழுவகை அஞ்ஞானம் நாம் அறிய வேண்டியது. அஞ்ஞானத்தைப் பூரணமாக அறிய நாம் ஞானத்தை, அதன் நான்கு வகைகளை அறிவது அவசியம்.

ஞானம் என்றால் இறைவனை உலகமாக அறிவது என்பது விளக்கம்.

1) இறைவனுடன் இரண்டறக் கலந்த நிலை ஞானம், உயர்ந்த நிலை ஞானம்.

2) அவனிடமிருந்து அகந்தையால் பிரிந்து நின்று தன்னை வேறாக அறிவது பிரிந்த நிலை ஞானம். இது கடைசி கட்டமான தாழ்ந்த நிலை.

3) இவற்றிடையேயுள்ளவை இரண்டு.

  • ஒன்று intution நேரடி ஞானம்.
  • Subliminal அடி மனம் பெறும் பிரபஞ்ச ஞானம்.

நாமுள்ள அகந்தை நிலையிலிருந்து அடி மனத்தில் பிரபஞ்ச ஞானம் பெற்று, அங்கிருந்து உயர்ந்து நேரடி ஞானமடைந்து, முடிவாக இரண்டறக் கலந்த ஞானம் பெறுவது யோகம்.

பூரணமான அஞ்ஞானம்

ஞானம் அஞ்ஞானமாக மாறும் நிலைகள் பல. அவற்றை ஏழு நிலைகளாகக் கூறுகிறோம். அஞ்ஞானம் பூரணமானால் சிருஷ்டி முடியும். பரிணாமம் ஆரம்பிக்கும். அது பூரணம்பெற, பரந்த பிரபஞ்சம் குறுகிய மனிதனாக வேண்டும். அடிமனம் மேல் மனமாகிறது. இம்மாற்றம் சிறப்பெய்த மேல்மனம் தலைகீழாக மாற வேண்டும். பரந்த அடிமனம் காலத்தாலும், மனத்தாலும் குறுகி, அகந்தையால் மேலும் சிறுத்து, சிறுமையின் முடிவு (கண்டம், infinitesimal) மேல்மனச் செயலானால் அஞ்ஞானம் பூர்த்தியாகும். சிருஷ்டியின் 8 நிலைகளில் ஒரு நிலையினின்று அடுத்த நிலைக்குவர தலைகீழ் மாற்றமுண்டு. இதை பகவான் reversal of consciousness தலைகீழாக மாறிய ஜீவியம் என்கிறார். இந்த மாற்றம் ஓர் அத்தியாயமாக விளக்கப்படுகிறது.

குறை, தவறு, பொய், தீமை

ERROR, MISTAKE, FALSEHOOD, WRONG, EVIL

இரண்டாம் புத்தகம் முதற்பகுதியின் 14 அத்தியாயம் இத்துடன் முடிகின்றன. மேற்கூறியவை அஞ்ஞானத்தின் இருண்ட பகுதிகள், இருள் திரண்டு கருமை, கடுமையாவது தீமை. எளிமையான மாறுபாடு சிக்கலான குதர்க்கமாவது தீமை என்கிறார் பகவான். Simple contrary becoming complex perversity. இங்கு,

  • சிருஷ்டியில் தீமை படைக்கப்படவில்லை.

  • அகந்தை பிரபஞ்சத்திலிருந்து பிரிந்து தனித்து வேறுபட்டு உலகை வேறாகக் காண்பதால் நோய், வலி, கவலை, மரணம், தீமை உற்பத்தியாயின என்கிறார்.
  • பிரிந்தது கூடினால் தீமை கரையும்,

என்பவை முக்கியக் கருத்துகள். தீமையைப் பற்றி அறிவு ஏற்கும் வகையில் கூறப்பட்ட ஒரே விளக்கம் இதுவே. உலகம் கேட்டறியாத விளக்கமிது. இந்த 14 அத்தியாயங்களில் ஞானம் எப்படி அஞ்ஞானத்தினின்று எழுகிறது, அஞ்ஞானம் எப்படி ஞானமாகிறது என்பது கூறப்படுகிறது. அடுத்து வரும் 14 அத்தியாயங்களில் ஞானம் பரிணாமத்தால் எப்படி ஆன்மாவாகிறது என்பது விளக்கப்படுகின்றது.

இரண்டாம் புத்தகம் இரண்டாம் பாகம்: ஞானம் ஆன்மீகப் பரிணாமத்தால் ஆத்மாவாகி வளர்வது, இப்பாகம். இதன் கட்டங்கள்,

இதுவரை நாம் ஞானம் என்றது, அஞ்ஞானத்திற்கு எதிரான ஞானம். இது மனிதனுக்குரியது, மனத்திற்குரியது, காலத்துள், மேல்மனத்தில் செயல்படுவது. இப்பகுதியில் பேசப்படும் ஞானம் பூரண ஞானம் (integral knowledge). மனிதன் பெறும் ஞானம் பொருள்களைப் பற்றியது, நிகழ்ச்சிகளைப் பற்றியது. பகுதியானது. பூரண ஞானம் சத்தியத்தைப் பற்றியது (Reality). சத்தியம் என்பது எல்லா உலகங்களையும் தழுவியது. இதை அடிமனத்தால் பெற வேண்டும். நாம் அறிவை மனத்தால் பெறுவது போல், பூரண ஞானத்தை சத்தியஜீவியத்தால் பெற வேண்டும். நாம் கண் விழித்துப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரைத் தெரிகிறது. பூரண ஞானத்தின் பார்வைக்கு பிரபஞ்சம் முழுவதும் தெரியும். இது காலத்திற்கு உட்பட்டதன்று. முக்காலமும் தெரியும் ஞானமிது. முதல் அத்தியாயம் இஞ்ஞானத்தை பெறும் வகைகளைக் கூறி, இஞ்ஞானத்தின் எல்லா அம்சங்களையும் விவரிக்கிறது.

- இதைப் பெற முக்கிய நிபந்தனை அகந்தை கரைவது.

- இந்த ஞானத்திற்கும் நமது அறிவுக்கும் உள்ள வித்தியாசம் மனித அறிவுக்கும் விலங்கின் அறிவுக்கும் உள்ளது. நாம் இந்த உலகையறிவோம், ஊரை அறிவோம். நம் வீட்டு நாய்க்கும் அறிவுண்டு. அதுவும் இந்த ஊரை அறியும். இவற்றிடையேயுள்ள வித்தியாசம் நாமறிவது.

நமது இலட்சியம் தெய்வீக வாழ்வென்பதால், இப்பூரண ஞானம் நம் வாழ்வில் வெளிப்பட வேண்டும். ஆதி மனிதன் உலகில் வாழ்ந்தான். நம் மனம் வளர்ந்து விஞ்ஞான அறிவு பெறு, நகரத்தில் வாழ்கிறோம். ஆதி மனிதன் காட்டில் வாழ்ந்தான். அவன் வாழ்வு விலங்கின் வாழ்வு. அதிலிருந்து நாம் வளர்ந்து விட்டோம். அதே போன்ற மாற்றம் அடுத்த கட்டத்தில் வரும். இப்பூரண ஞானம் எந்த வாழ்வில் வெளிப்பட வேண்டும்? வாழ்வு என்றால் என்ன?

  • புவி வாழ்வு ஒரு நிலை.
  • பிரபஞ்ச வாழ்வு அடுத்தது.
  • பிரபஞ்சத்தைக் கடந்த வாழ்வு அடுத்தது.
  • இவையனைத்தும் இணைந்த வாழ்வும் உண்டு.

நாம் 4ஆம் வாழ்வை மேற்கொள்கிறோம். புவியும், பிரபஞ்சமும், அதைக் கடந்த நிலையில் உள்ள வாழ்வில் பூரணஞானம் வெளிப்பட்டு அது சிறக்க வேண்டும். அது அடுத்த அத்தியாயம். துறவறம் வாழ்வை விலக்கியது. கிரகஸ்தன் புவிவாழ்வை மேகொண்டான். பூரணயோகி வாழ்வின் மூன்று நிலைகளையும் இணைத்து அதைப் பூரண ஞானம் மூலம் வாழ முடிவு செய்ததை விளக்கும் அத்தியாயம் இரண்டாம் அத்தியாயம்.

பாதாளமும், பரமாத்மாவும் ஐக்கியத்திகாக இணைய வேண்டும். அடுத்த கட்டத்தில் ஆன்மா வளர இணைய வேண்டும். இணைந்தது உயர வேண்டும். உயர்ந்தால் ஆன்மா பரிணாமத்தால் வளரும். அந்த வளர்ச்சிக்கு 7 வகை அஞ்ஞானம் 7 வகை ஞானமாக வேண்டும். இந்த

 

 



book | by Dr. Radut