Skip to Content

01 . முன்னுரை

1988இல் தினமும் சமாதி புஷ்பங்களை ஓர் அன்பருக்கு நான் அனுப்புவதுண்டு. அவற்றுடன் ஒரு செய்தியும் (message) அனுப்புவதுண்டு. அவ்வன்பர் அச்செய்திகளை தொகுத்து வைத்துள்ளார் எனக் கேள்விப்பட்ட பொழுது தொடர்ந்து தினமும் செய்திகளை எழுத ஆரம்பித்தேன். சுமார் 300 அல்லது 400 ஆனபின் அன்பர் புதுவை வந்துவிட்டதால் செய்திகளை அனுப்ப வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று.

பலரும் அச்செய்திகளின் பிரதிகளைக் கேட்டபொழுது 1990 முதல் நான் எழுத ஆரம்பித்து 5000 செய்திகட்கு மேலாக எழுதினேன். அவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. முதல் 2000 செய்திகளை தமிழில் மொழிபெயர்த்து இங்கு "யோக வாழ்க்கை - சுருக்கம்" என வெளியிடுகிறோம்.

"யோக வாழ்க்கை விளக்கம்" என்ற நூலின் முதல் மூன்று பகுதிகள் மேற்சொன்ன செய்திகளில் முதல் 600க்கு விளக்கத்தையும் தாங்கி வருகின்றன. இந்நூலில் விளக்கமில்லாமல் செய்திகள் மட்டும் வருவதால் இதை சுருக்கம் எனக் குறிப்பிட்டேன்.

இவ்வையாயிரம் செய்திகளுள் சுமார் 700 ஸ்ரீ அரவிந்தர், அன்னையின் கருத்துகள். அவை நூலில் # -எனக் குறிப்பிடப் பட்டுள்ளன. மற்றவை இரு பகுதிகளானவை. ஒன்று பகவான், அன்னை கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்வுக்குரிய கருத்தை தெரிவிப்பவை. மற்றது பொதுவாக வாழ்வுக்குரியது.

(உ.ம்.)

ஸ்ரீ அரவிந்தர், அன்னையின் கருத்து

  • # உடல் படும் துன்பம் உண்மையானதல்ல.

அவர்களுடைய கருத்தை வாழ்வுக்குரியது போல் மாற்றி எழுதியவை.

  • *** உலகில் துன்பமில்லை என்ற கருத்தை மனம் நிரந்தரமாக ஏற்றுக்கொண்டால் நல்லது. அது மனத்திற்கு ஆன்மீகத்தை அளித்து பேரின்பத்தை நிலைநாட்டும்.

வாழ்வுக்குரிய பொதுக் கருத்து

  • ** நெடுநாள் நீடித்த காரியம் முடியும் பொழுது, நாம் ஒரு விஷயத்தை அறிகிறோம். அது உணர்வைப் பற்றியதாகவோ, நோக்கத்தைப் பற்றியதாகவோ இருக்கும்.

ஸ்ரீ அரவிந்தர் அல்லது அன்னையின் கருத்து

  • * அகந்தையின் உணர்வுகள் ஆன்மாவுக்கு உழைப்பதில்லை.

 

March 24, 99

பாண்டிச்சேரி

- கர்மயோகி



book | by Dr. Radut