DAILY MESSAGES                           

Series XVI

 

51)       Losing ego, one becomes the impersonal self or impersonal Brahman, not the psychic as in our yoga.

          அகந்தை அழிந்தால் அனந்த குண பிரம்மமாகலாம், சைத்திய புருஷனாக முடியாது.

52)       Travel educates culture. It educates the body to be alert.

          பயணம் அனுபவம். உடல் பயணத்தால் பக்குவம் பெறும்.

53)       Strategies to release the Infinite from the finite must be UNIQUE as the Overmind has taken the creation to the limits of uniqueness.

          பெரிய காரியங்கள் ஒருமுறை தான் நடக்கும். மீண்டும் மீண்டும் வாரா.

          நிகரில்லாதது திரும்ப வரமுடியாது.

54)       The faintest vestige of reserve of any kind will stall the project of releasing the infinity from the finite.

          வாய்க்காலில் ஒரு சருகு கலம் நீரைத் தடுக்கும்.

55)       The infection of the expansive gaiety of spirits will dominate the work before the Infinity emerges out of the finite.

          பெரியது சிறியதிலிருந்து வெளிப்படுமுன் சூழல் சூட்சுமத்தைக் கடந்து காரணத்தை அடையும்.

56)       The greatest resource of forethought disappears, letting the future become the present when HE overtakes us.

          அறிவு தன் மகுடத்தை மறந்த பொழுது அனந்தனின் அரவணைப்பு காலத்தைக் கடக்கும்.

57)       Acute awareness of material inadequacy, in higher personalities, releases the intensity of spirit in liveliness.

          குறையை அறியும் நிறைவு குதூகலமடையும்.

58)       Physical vital satisfaction can know it as invulnerable strength and court disaster.

          திருப்தியை திறமையாக மனம் கருதி அழியும்.  

59)       Man finds himself speaking low of everyone endlessly when he decides to be polite and never take note of others' deficiencies.

          திருந்த முயலும் பொழுது அனைவரையும் திட்டுவது இயல்பு.

60)       Criminality in a vastly educated mind of a noble man can be calm as well as civil even in killing a person.

          உயர்ந்தவன் குற்றம் உச்ச கட்ட மரியாதையுடன் வரும்.   

61)       Justice in life acts through the scruples of a criminal.

          வாழ்க்கை தன் தர்மத்தை குற்றவாளியின் மனச்சாட்சி மூலம் பூர்த்தி செய்யும்.

62)       Self-preservation is a source of crime, the higher the more heinous.

          தற்காப்பு குற்றத்தின் ஆரம்பம்.

63)       Enforced self-denial can create extraordinary virtue.

          தனக்கே பயன்படாத வாழ்வு பிறருக்குப் பயன்படுவது சந்தர்ப்ப விசேஷமான பண்பு.

64)       Forgetting, even if it is out of unconsciousness, helps the Force to act.

          மறந்தது மன்னிக்க முடியாததானாலும் மறதி மூலம் அன்னை செயல்படுவார்.

65)       Failure is failure of Faith.

          நம்பிக்கை போகாமல் தோல்வி வாராது.   

66)       For one who can reach his own depths, no problem needs more than one call.

          தன் ஆழத்தை தொடுபவனுக்கு எந்த பிரச்சினையும் ஒரு குரலில் தீரும். அக்குரல் நிலையாக இருப்பது யோகம்.  

67)       Coming to the end of one's faith, it breaks usually. Moving the mental faith to the emotion, its vigour rises. An emotional faith can so rise if moved to the sensation of the physical. It is done so by a vibration of the soul. Surrender at any stage can do better than all.

          நம்பிக்கை கைவிடும் நேரம் உள்ளம் மனதைக் காப்பாற்றும், உடல் உள்ளத்திற்கு உறுதுணை. ஆத்மா உடலையும் கைவிடாது. எந்த நேரம் சரணாகதியை மேற்கொண்டாலும், அந்த நேரம் பலன் சிந்தனையையும் கடக்கும்.

68)       Intelligent planning yields intended results. Non-planning by the intelligent idealist yields results of infinite dimension.

          கேட்டால், கேட்டதெல்லாம் பெறலாம். கேட்க முடியவில்லை எனில் நினைக்காததெல்லாம் பெறலாம்.

69)       எதிரி கையால் கொட்டுப் பெறுவது உடல் பெறும் ஞானம்.

           A closed mind opens in the body and invites the enemy to teach through   punishment.

70)       Not to resent the past is to outgrow it. Better not to remember it.

          உறுத்தல் கர்மம். மறதி விடுதலை.

71)       நாட்டை ஆள விரும்புபவன் முதலில் வீட்டை ஆள வேண்டும்.

             Power in the unit is undeniable power in the whole.

72)       Any mean low motive or act can be given a generous construction and then be transformed.

          எந்த இழிவையும் உயர்வாகக் கருதி உயர்த்தலாம்.

73)       One can transform one's own lowness or meanness. One can be a field for another's transformation, not a compelling force.

          திருவுருமாற்றம் திருவுள்ளம்.

          பிறர் மாற உதவலாம். பிறரைக் கட்டாயமாக மாற்றக் கூடாது, முடியாது. அது மனத்தின் பிடிவாதம்.

74)       The perfection of the positive has all the strength to overcome the negative as well as all the mental resources to put it off.

          நல்லதின் வலிமை நாட்டை ஆளும்.

75)       Problems will cease if one does not stop growing is a rule of life. Problems become universal opportunities when one begins to grow in his being.

          வளரும் ஆன்மா வாழ்க்கைப் பிரச்சினையை உலகின் வாய்ப்பாக மாற்றும்.  

76)       To get rid of the problems of life forever, one should outgrow the illusion of the ego of altruism.

          அகந்தை சேவையுள் மறைந்துள்ள வரை வாழ்வுப் பிரச்சினைகள் அகலா.

          பிரச்சினையழிய சேவையின் மாயை அழிய வேண்டும்.  

77)       To give is to receive.

             To receive is to give.

          சிறியது கொடுப்பது பெறுவது.

          பெரியது பெறுவது கொடுப்பது.

             Offering is to receive blessings.

          சகலமும் பெறுவது சரணாகதி.  

78)       Any act however noble it is can be falsely presented in a mean light.

          மெய்யைப் பொய்யாக்கும் பொய் உலகுக்குரியது.

79)       A problem is a problem and looms largely only as long as we are inside it. The moment we are able to come out of its structure the problem dissolves.

          பிரச்சினைக்குரிய மனநிலை உள்ளவரை அது நம்மைப் பிடித்து உலுக்கும். வெளியே வந்தால் பிரச்சினை கரையும்.

80)       Cultural restraint is natural freedom. Eloquent eagerness to be expressive  is the uneasy inner awareness of the outer awkwardness.

          நாணம் நயமிகு சுதந்திரம். பேசத் துடிப்பது தோன்றும் அவலட்சணத்தின் மறையும் வேகம்.

          மறைக்க முடியாததை மறைக்கும் பண்பு அறிவின் தீட்சண்யத்தை அழகாக மாற்றும்.

81)       Problems are for the Becoming. Growth opportunities are for the Being of Becoming. Being escapes problems, can avail of growth if it chooses.

          பிரச்சினை வாழ்வுக்கு. வளரும் சந்தர்ப்பம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு. துறவறத்திற்குப் பிரச்சினையுமில்லை, வளரும் சந்தர்ப்பமுமில்லை.

          வாழ்வுக்குப் பிரச்சினை. ஆத்மாவும் வளர்வது ஸ்ரீ அரவிந்தம்.

82)       A Token Act makes one learn FULLY the doing of any act so that the infinite in it emerges. It is like a mechanic learning to repair any part of a machine in a workshop. It does not teach him the designing of it or the theory of it.

             Token  ACT ஐக் கற்றுக் கொண்டால் எந்த வேலையையும் சரிவர செய்யலாம். வேண்டுமெனில் தத்துவத்தையும் அறியலாம்.

83)       பிரிவது சிருஷ்டி; சேர்வது பரிணாமம்.

             Creation by division; evolution is by unity.

84)       Walking exercises some parts. There is no exercise that can exert all parts simultaneously. Feeling or thinking exercised deeply to touch the physical consciousness can, at that level, be said to be an exercise that exerts all parts. No saint is known to be unsound in health.

          ஆழ்ந்த சிந்தனை உடலுக்கு உரம் தரும்.

85)       மனம் பிரியத்தால் பக்குவப்பட்டு மலர்வது அன்னை வாழ்வில் அதிர்ஷ்டமாக வெளிப்படுவதாகும்.

           Love in the heart ripening to equality of humility is Mother expressing in life as luck.

          பிரியம் பக்குவமாகி அடங்குவது அதிர்ஷ்டம்.

86)       உன் உலகம் முழுவதும் உன் அழைப்புக்குள் அடங்கியது என்ப- தால், பிரச்சினைக்கு வழியேது?

             As your entire life is enveloped by a calling from your depths, no problem of your life can ever survive such a calling.

87)       Status will have no compunction or sense of unfairness of its meanness in asking people below to deny themselves opportunities that are their rightful privilege that are life-exceeding rights.

          தாழ்ந்தவன் தம்மை மீறிப் போகும் தகுதியை விட்டுவிட வேண்டும் என வெட்கமின்றி கேட்பது அந்தஸ்தின் சொந்த உரிமை. 

88)       The urge to answer a fool effectively even if it is in the mind, effectively ties you to his wisdom.

          மடையனுக்கு உறுத்தும்படி பதில் கூறத் துடிப்பது மடமை.

             The fool in one activates the fool in the other. 

89)       Expediency when it is efficient can reach national heights serving a nationally popular cause, as Rajaji did.

          சந்தர்ப்பவாதமான திறமை நாட்டின் தலைமைப் பதவியைக் கூட எட்ட முடியும். ராஜாஜி அதையும் செய்தார்.

90)       God has not one role, but several roles, not successively but simultaneously is the vision of Unity.

          நாமம், ரூபம் அநேகம். அவை ஒரே சமயம் இருப்பதைக் காண்பது ஐக்கியம்.

91)       God comes to me with the face of man. I see the man, not God.

          மனித ரூபத்தில் வரும் ஆண்டவனை நான் மனிதனாகக் காண்கிறேன்.

92)       Bondage is an illusion. Liberation from bondage is an illusion too.

          தளையில்லை. அதனின்று விடுதலையுமில்லை.

93)       The surface being includes all that we are, even the body.

          உடலும் மேல் மனத்திற்குரியது.   

94)       To be able to see God in any man is God-Vision. To see the man himself as God is best.

          எந்த மனிதனிலும் இறைவன் உள்ளான். அந்த மனிதனே இறைவனன்றோ!  

95)       Reading the writings of great men, one can know them. It cannot make them great.

          பெரியவர் எழுதியதைப் படித்துப் புரிந்து கொள்ளலாம். அது ஒருவரை பெரியவனாக்காது.

96)       Compensation for Service

·         When you get for another what anyone else can get, compensation goes by market rate.

·         Creating new income out of your facility which no one else can create, you split the proceeds equally.

·         If yours is one of the many facilities for one to create a NEW unknown income, you get a nominal fee of 1/2 %, as he gets when he does a similar service.

·         The successful result depends on the GENEROSITY of the recipient to willingly pay one's due.

97)     Ego is destructive. It destroys through love when it loves or through anger when it is angry.

        அகந்தை அழிக்கும். அன்பானாலும், ஆத்திரமானாலும் அகந்தை அழிக்கும்.

        அகந்தையின் அன்பும் அழிவு தரும். பொறாமை மூலமும் பிரியத்தின் மூலமும் அகந்தையால் அழிக்க மட்டுமே முடியும்.

98)     பிரச்சினை தீர்வது நம்பிக்கை வளர்வது. 

           Receding problems is rising faith.

99)     The outer finite is inner Infinite.

           அகம் புறத்தை அனந்தமாக்கும்.

100)  Life is smooth when it survives securely. A major item missing compels it to restore it at the peril of survival. At the other end arise moments when a little effort pushes it to the next plane. At a further stage arise occasions when one is compelled to progress, failing which he will lose what he has.

           அதிர்ஷ்டத்தைப் பெற மறுப்பவனின் துர்அதிர்ஷ்டம்.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000