DAILY MESSAGES                           

Series XVI

 

151)  The unfamiliar attracts.

           புதியது ஈர்க்கும்.

152)  பண்பு மனத்தின் பணிவு.            

           Culture is inner humility.

153)  Mastery is not to possess greater information but the capacity to use it more intelligently.

           தெரிவது திறமையாகாது. தெரிந்ததை தெளிவாகப் பயன்படுத்துவது திறமை.

154)  The heart harbours only one person. The other person drops off himself when a newcomer occupies the emotions.

           உள்ளம் ஒருவருக்கே உரியது.

155)  Facts belong to memory. Ideas are understood by intelligence. Experience is for intuition.

           நினைவுக்குரியது விபரம். அறிவுக்குரியது எண்ணம்.

156)  Mother is a force that changes the horizontal growth into vertical expansion.

           காலத்தைக் கடந்ததாக மாற்றுவது அன்னை.

157)  If you sell a property and hand over the document and property to the buyer without demanding payment, I wonder whether anyone will volunteer payment. My surmise is none.

           விற்ற பொருளுக்கு விலையைக் கேட்காவிட்டால் கொடுப்பவர் உலகில் இல்லை.

158)  Democracy, education, and culture have not yet created men who would voluntarily pay taxes.

           தானே முன்வந்து சர்க்காருக்கு வரிகட்டுபவன் வாங்கிய பொருளுக்கு வலிய பணம் தருவான்.

159)  Details belong to memory, perspective demands changed attitude. The higher is not nobler or greater in any sense, but a newer and wider social view.

           பெரியது என்பதில்லை, புதியது என்பதுண்டு.

           The newer wider view demands greater energy to sustain and the intelligence must act in more exacting conditions.

160)  Demands on the quality of intelligence do not so much increase as the strength of nerves to sustain intelligence in a more demanding situation.

           விஷயம் பெரியதானால் தெளிவு சிதறும்.

161)  Sentiments fashion sensitivities. Collective emotions make them sacred.

           உணர்ச்சி சொரணையாகும். ஊர் நினைப்பு உள்ளத்தை உறுத்தும்.

162)  Sentiments and sensitivities are bars to rational culture.

           அறிவின் பண்பு ஆள உணர்வும் சொரணையும் உள்ளத்தை விட்டுப் போக வேண்டும்.

163)  Habits handed over is culture.

           பல நாள் பழகியது பண்பு.

164)  Culture preserves itself by insularity.

           பாதுகாத்தால் பண்பு வளரும்.

165)  The non-subject hours can make the child SEE what is RIGHT.

           பாடம் நடக்காத நேரம் குழந்தை எது சரி எனக் காண முடியும்.

166)  Intellectuality is like gossip while subtle knowledge spilled into the atmosphere is like the secret message the king receives.

           அறிவு பேசுவது அர்த்தமற்றது.

        ஆழ்ந்த சூட்சுமம் நினைப்பது அகிலம் முழுவதும் கேட்கும்.

167)  One can never fail if one is cheerfully right.

           நியாயமான சந்தோஷத்திற்குத் தோல்வியில்லை.

168)  To do things because they are right is better than result oriented discipline.

           சரி என்பதை செய்வது சரி, பலனுக்காக அல்ல.

169)  Not to insist on the right is right.

           சரி என்பதை வற்புறுத்தக் கூடாது.

170)  Result-oriented discipline may be good, but not the best.

           பலன் கருதும் கட்டுப்பாடு பண்பு தராது.

171)  Punishment-oriented discipline creates fear.

           தண்டனை பயம் தரும்.

172)  Education is to give end results that are self-explanatory.

           முன் தலைமுறையின் அனுபவத்தைப் பெறுவது கல்வி. மூலம் முன்னேற்றம்.

        முன் தலைமுறையின் மூலம் கல்வி.

173)  தவறு அழியாமல் தகுதி வாராது.

           Man rises positively. There is no progress lapsing into errors.

           சிறியதன் குறையை ஏற்கப் பெரியது மிகப் பெரியதாக வேண்டும்.

174)  Education means information as well as attitudes that keep life under one's control.

           விபரம் தெரிவது கல்வி. விஷயம் கட்டுப்படுவது பயிற்சி.

        விபரமும், விஷயமும் கல்வியும் பயிற்சியுமாகும்.

175)  Life education is to be always successful in spite of increasing demands on the strength and varieties of the changing situation.

           நிலைமை நினைப்பை மீறாதது வாழும் வழி.

176)  Soul's future life is hope.

           ஆத்மா வாழ விரும்புவது நம்பிக்கை.

177)  Can the child be led to do the right by itself, as he feels it to be right?

           எது சரி என குழந்தையே அறிய முடியுமா? அறியும் உணர்வு தர முடியுமா? 

178)  Matter discovers its own method.

           அறிவிருந்தால் கற்பிக்கும் வழி புலப்படும்.

179)  Energy, Will, organisation and skill give results.

           தெம்பு, அக்கரை, திறமை பலன் தரும்.

180)  ஒரு வேலையைப் பொறுப்பு வெற்றியாக்கும், பணமில்லை.

           It is responsibility that will make a work a success, not money.

181)  Teaching the attitude or information is basically the same, not very different. Attitude can teach attitude more readily.

           விபரம் அறிவதும், பழக்கம் கற்பதும் மாறுபட்டவையல்ல.

182)  Mother gives what one in a million gets. She gives what not even one in a million gets, surely not when one expects, but when one knows Her.

           கோடியில் ஒருவருக்குக் கிடைப்பதையும் அன்னை தருகிறார். எதிர்பார்ப்பவருக்கில்லை.

183)  We want from Mother this or that, while She is looking for one to whom She can give Herself.

           தன்னையே அளிக்க மனிதனைத் தேடும் அன்னையிடம் நாம் எதை எதையோ கேட்கிறோம்.

184)  She wants us to become Mother, but we do not even want to relate to Her.

           அன்னையாக மனிதனை மாற்ற அன்னை முயலும் பொழுது, நாம் அவர் தொடர்பை விலக்குகிறோம்.  

185)  Society's excess capacities are really excessive. They are seen in war times.  The most resourceful and most adorable of them is the courageous passion of people for the land.

           மனிதனுக்குள்ள உபரி போர் வரும் பொழுது தெரிகிறது. உயிரும், உடலும் ஆத்மாவாகிப் போரிடும்.  

186)  The vital falsehood of Satyagraha has converted the heroic sacrifice of devoted lives into internecine warfare of rage and frenzy.

           சத்தியத்தின் வீர மரணம் சத்தியாக்கிரஹப் பொய்யால் வெறியாட்டமாயிற்று.

187)  To respond to a vibration from outside is worse than giving way to our own urge, as it enters into the lower vital.

           தவறு செய்வதை விட பிறர் ஆசை காட்டுவதற்குப் பலியாவது மோசம்.

188)  What a man is to you is determined by how you treat him and what he is himself.

           ஒருவன் கொண்டு வரும் செய்தி அவனை நாம் நடத்துவதைப் பொருத்தது.

           Negroes are always proud about being the bearers of bad news. (p.347, Gone with the Wind.)

189)  One who has gone through the trials and tribulations of life will find in tales of war and famine exact parallels to what he has suffered inwardly.

           வாழ்வின் கடுமையை அனுபவித்தவர் போரால் சீரழிந்த நாட்டு வரலாற்றில் தன் அனுபவத்தைக் காண்பார்.  

190)  Human suffering, especially in the past, mostly consisted of the lack of modern conveniences and intentional human cruelty.

           இன்றைய வசதியில்லாத நாளில், கடுமையான உள்ளங்களின் கொடுமை மனிதனுக்குத் துன்பம் தந்தது.

191)  The majority of suffering is the one inflicted by the majority.

           வேதனை என்பது இயற்கையாக இருப்பதை விட அதிகாரம் செலுத்தும் காரமே அதிகம்.

        வேண்டும் என்று செய்யும் வேதனை பெரியது.

192)  வாழ்வில் துன்பத்தின் பெரும் பகுதி நெஞ்சில் உற்பத்தியாவது.

           Pain, in a large measure, resides inside.

193)  It is heroic not to complain of pain. Much pain is relieved when one shouts.

           வலியைப் பொறுத்துக் கொள்வது மனோ தைரியம். பொறுத்துக் கொள்வதால் வலி அதிகரிக்கும்.

194)  As the one who inflicts pain does not feel that pain, the subtle damages caused by one is felt neither by the one who gives nor the other who suffers.

           சூட்சுமமாக உயிரை எடுப்பவருக்கு தான் செய்வது தெரியாது. உயிரைக் கொடுப்பவருக்கும் தெரியாது.

195)  Which is a SINCERE moment?

― The hour where one sees one's own darkness ―

அகத்தின் இருள் தெரியும் நேரம் அன்னைக்கு உண்மையான நேரம்.

196)  Demands of self-justification are total and complete.

           தான் சரி என்பதே தலையாய தத்துவம்.

197)  Self-knowledge is self-destructive knowledge.

           உள்ளது தெரிந்தால் உயிரிருக்காது.

198)  He who justifies himself by the events of life, walks into the trap of Life justifying itself when he is crushed.

           நடப்பதை நமக்கு சௌகரியமாகக் கொண்டால், வாழ்வு நமக்கு அநீதி அளித்துத் திருப்திப்படும்.

199)  உடனே பலிப்பது உவந்தளித்தல்.

        For an immediate result you must come forward to give up your problem to Mother happily.

200)  பிரம்மார்ப்பணம் பிரம்ம ஜனனம்.

        Surrender to the Absolute takes birth in the Unity of Multiplicity ― The Timeless in Time.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000