DAILY MESSAGES                           

Series XVI

 

201)  Growth is exercising one's abilities from the higher plane in the reverse.

           திறமை உயர்ந்தால் திரும்பும்.

202)  The long dull inactive interregnum quietly collects strength and ripens it for rich mature action.

          எதுவும் செய்யாத நேரம் எல்லாம் தயாராகும் வேளை.

203)  One who makes progress at his best will value the errors he committed and was forced to commit.

           குறையின் அவசியம் நிறைவின் பூரணத்தில் தெரியும்.

204)  கொடுமை இறைவனின் பெருமை.

        Tyranny is God's hour of pride.

205)  பாவம் அழிவது தவம். பாவம் புண்ணியமாவது திருவுருமாற்றம்.

        Tapas wipes off sins. Transformation transforms sin into virtue.

206)  தவம் ஆத்ம மோட்சம். யோகம் பிரபஞ்சம் பெறும் பூரண மோட்சம்.

        Evolution offers Delight of existence to the evolving Soul.

        ஆத்மா பிரபஞ்சத்திற்கு மோட்சம் தருவது யோகம்.

207)  In any constructed philosophy there will be as much fallacy as in Buddha or Shankara.

           மனம் புனையும் தத்துவம் மாயையிலிருந்து தப்பாது.          

208)  Doing moving to knowing and finally Being is to shift inside.

           செயல் ஜீவனாவது புறம் அகமாவது.

209)  The finite becoming the Infinite moving from Time to Simultaneity is instantaneous miraculousness.

           காலம் தன்னுள் காலத்தைக் கடந்தால் அற்புதம் அதே நேரம் நடக்கும்.

210)  பாவம் ரூபமாவது பரிணாமம்.

        Perfect form is that where force evolves into form.

211)  The dynamism of the ego expressing in freedom its destructive propensities of others makes for cruelty.

            அகந்தைக்கு அழிக்கும் ஆர்வம் கொடுமையை உற்பத்தி செய்கிறது.

212)  Freedom to act is freedom to be what they are inmost.

           கேட்க ஆளில்லை என்றால், தன்னை மயிரிழையும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

213)  Surrender is the grace of Spirit, the Spirit inside.

           சரணாகதி அந்தராத்மாவின் அருள், ஆத்மாவின் அந்தரங்கம் தரும் அருள்.

214)  The destructive ego would rather prefer to obey than dissolve itself.

           அழிக்கும் அகந்தை அடங்கினால் பணியும், கரையாது.  

215)  Any relation that bothers us ― friend, partner, brother, etc. ― will cease to be so when we consider them as persons outside the relationship.

           உறவு தொந்தரவு செய்யும் அளவுக்கு மனிதன் தொந்தரவு செய்ய மாட்டான்.

216)  Surrender in Time is submission. Surrender in Timelessness is partial to the Part, which is Being. Surrender in Simultaneity is the Surrender of the part which is aware of the whole.

           மனிதன் தன்னை இறைவனாக அறிந்து இறைவனின் முழுமைக்கு சரணடைவது சரணாகதி.   

217)  Gita's surrender is in Timelessness. Here, surrender is in Simultaneity of Time.

           கீதையின் சரணாகதி காலத்தைக் கடந்தது. காலத்துள் காலத்தைக் கடந்தவனுக்கு செய்வது பூரண சரணாகதி.  

218)  The Gita's surrender is the surrender of the soul to the Being, Purushothama. Here one surrenders the whole Being to the evolving Brahman.

           ஜீவனின் பகுதியான ஆத்மாவை பிரம்மத்தின் பகுதியான புருஷோத்தமனுக்கு சரணம் செய்வது கீதை. ஜீவனின் முழுமை பிரம்மத்தின் முழுமைக்கு சரணடைவது பூரணயோகம்.  

219)  The whole world is built by the patient discipline of hard labour, but was created by those who broke all disciplines.

           சாதனைக்குக் கட்டுப்பாடு. சிருஷ்டி கட்டுப்பாட்டை உடைப்பதில் குறியானது.  

220)  Surrender takes one from the surface to the subliminal.

           மேல் மனத்திலிருந்து அடிமனத்திற்குப் போவது சரணாகதி.

221)  Comparison that is culturally odious is an instrument of progress.

           அடுத்தவரைப் பார்த்து முன்னேறுவது அழகு.

        அவரவர் செய்வது அவரவர்க்கு அழகு.

222)  A principle can be objective, not a person. No objective person is born yet.

           தத்துவம் நியாயம் பேசுவது போல், மனிதன் பேச முடியாது.

223)  The distance of selfish parents creates in children great potentials that, by their intense dislike of their parents, conquer the world, as in Churchill.

           சுயநலமான பெற்றோரின் வெறுப்பும் பராமுகமும் குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் மேதாவிலாசத்தைப் பரி மளிக்கச் செய்யும்.

224)  Surrender is the one move by which ALL movements are released.

           உலகை அசைக்கும் ஒரு சலனம் சரணாகதி.

225)  No one can be a good father or good son or good this or that without being a good person. The world is fortunate to have only a few of them.

           மனிதன் நல்லவனாக இருப்பது வாழ்வுக்கு முக்கியம். அது மிகச் சிரமம். யோகத்திற்கு அதுவும் போதாது.

226)  Society is a self-conscious collective entity which expresses its sub-conscious fulfillment through its conscious individuals who complete it in culture through institutions and organisations.

           மனிதகுலம் மக்கட் பண்பால் ஸ்தாபனங்கள் மூலம் தன் ஆழ்ந்த பரிணாம வளர்ச்சியை தனிமனிதனைப் பூர்த்தி செய்யச் சொல்கிறது.

227)  Surrender when it works is unconscious. Conscious surrender is for Ishwara to Shakti.

        மனிதனுடைய சரணாகதி வெல்லும். இறைவனுடைய சரணாகதி இயற்கையை இறைவனாக்கும்.

228)  Surrender never tries to know.

           சரணாகதி பலனை நாடாது, அறிய முயலாது.

229)  The very best of methods is the easiest too.     

        உலகை வெல்லும் சரணாகதி உள்ளதில் உயர்ந்தது. உயர்ந்தது என்பதால் எளியது.

230)  The scope of Surrender is as vast as the Unity of the Absolute in the relative.

        சரணாகதியின் அரங்கம் பிரபஞ்சத்தில் பிரம்ம நடனம்.

231)  The routine man of conformity, of social custom or moral codes can never be a member of the revolutionary corps.           

        நாலு பேர் நடுவில் ஓடுபவன் ஓடலாம். நல்லதோ பெரியதோ அவனுக்கில்லை.

232)  Excess energy of any action excludes the moral code.  

        ஆர்வம் அதிகமானால் சட்டம் விலகி வழி விடும்.

233)  The ardour of the hero on the battlefield and that of the child for his toy is of the same pattern. If there is any difference it is in the intensity.       

        திருவுள்ளமும் திருடனின் உள்ளமும் ஒன்றே.

        திருடன் திருவுள்ளத்தின் திருவுருவம்.

234)  Evolution is a lamp becoming the Sun.             

        அறிவின் தீட்சண்யம் ஆண்டவனின் திருவுள்ளமாவது பரிணாமம்.

235)  Churchill's life was the burning end of an increasing urge to fight and kill.

      போருக்கு தினவெடுக்கும் வீரம் ஊருக்குக் கட்டுப்படாது.

236)  Excessive energies, especially of a vibhuti, are a law unto themselves. It is not for them to put themselves under the restriction of values.

        பெரிய ஆத்மா சின்ன மனிதன் சட்டத்திற்கு உட்படாது.

237)  Desire when transformed is delight giving energy.

        திருவுருமாறிய ஆசை ஆனந்த ஊற்றான சக்தி.

238)  விதையாகவே இருக்க விரும்பும் விதை வீணானது. மலரும் பெருமை அதற்கில்லை.           

        Conformity is Non-growth, death organised. Allow them to enjoy their ossified death. 

239) The leader flouts the conventions from within. The Avatar wipes off all the conventions and ensures none are created anew.

           ஊருக்கு உட்பட்டு சட்டத்தை மீறுபவன் தலைவன். அவதாரம் அனைத்து சட்டத்தையும் அழிக்க வந்தது.

240)  The urge is not anathema. The Avatar makes the urge the law.  

           கட்டு மீறி செயல்படுவது கடவுளின் கடமை.

241)  That which stands in the way of the great crossing the border into eternity is the foolish purpose they hold on to.

        இலட்சியம் பெரியதின் மகத்துவத்திற்குத் தடை.        

242)  பாவத்தை புண்ணியமாகச் செய்பவன் பெரிய ஆத்மா.           

        The great soul loves sins as he can do it as virtue.

243)  Sinful virtue and virtuous sin are the ways of the world.

          பாவத்தைப் புண்ணியமாகவும், புண்ணியத்தைப் பாவமாகவும் செய்வது மனித வாழ்வு.

244)  A peaceful life is one without change. Still what invigorates life is constant change.

        மாற்றத்தால் வளரும் வாழ்வில் நிம்மதி தேடுபவனுக்கு மாற்றம் எதிரி.

245)  Integrality is the individuality of the essentiality in expression.

          பிரம்மம் ரூபத்தில் பாவமாக வெளிப்பட முயலுதல் பிரம்ம ஜனனம்.

246)  Dharma is the personal duty that will uphold the cosmic order.   

        பிரபஞ்சத்தைத் தாங்கும் சொந்தக் கடமை தர்மம்.

247)  When the obvious is imperceptible but the desire for its knowledge is there, mind asks for proof.

          இருப்பது இல்லாததானால் நிரூபணம் தேவை.

248)  Mastery of His knowledge enables him to see the crystal clear validity of other philosophies as perfect wholes of the part they are.    

        எந்த தத்துவமும் எப்படி எழுந்தது என்ற தெளிவு ஸ்ரீ அரவிந்தம் புரிவதைக் காட்டும்.

249)  One who wants to be everything to everyone has nothing, nor anything anyone has.             

        எல்லோரையும் திருப்தி செய்யப் பிரியப்படுபவருக்கு எவரிடம் உள்ள திறமையும் இல்லை எனப் பொருள்.  

250)  The ideal that is valid is the ideal that recognises social, better still, personal power.

          அதிகாரத்தை ஏற்கும் இலட்சியம் அலட்சியப் படுத்தப்படாது.          

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000