DAILY MESSAGES                           

Series XVI

 

401)    Liberation is an upward movement. Surrender is a horizontal movement that spreads into the universe, maybe a spherical movement.

            மேலெழுவது மோட்சம். பிரபஞ்சம் எங்கும் பரவுவது சரணாகதி.

402)    Any service to the public can be done only against their will.

            நேரடியாக மனிதனுக்குச் சேவை செய்ய முடியாது. அவனை ஏமாற்றிச் செய்தால் உண்டு.

403)    To see all that he longs for from outside of him in the world, inside is wisdom.

            உலகில் மனிதன் தேடுபவற்றை எல்லாம் உள்ளே காண்பது ஞானம், விவேகம், ஞானசித்தி.

404)    If you don't return what you borrowed, Life will make you do so not with interest but in multiples of 100 or 1000 according to your strength.

            கடனைத் தராவிட்டால் வாழ்வு வட்டியுடன் வசூலிக்காது. பெற்றதன் பவுன் எடையை வசூலிக்கும்.

405)    என்ன நடக்கப் போகிறது என ஜாதகம் பார்ப்பதை விட என்ன நடந்திருக்கிறது என வாழ்வைச் சோதனை செய்து பார். அது இன்று உலகம் அறியாதது.

¾       மடமை ஜெயிக்கும்.

¾       குற்றம் குன்று போல் வளரும்.

¾    பெற்ற ஒரு ரூபாய்க்கு ஓராயிரம் திருப்பித் தருகிறோம்.

¾    யாரை அடக்கி ஆண்டோமோ, அவருக்குச் சேவகம் செய்கிறோம்.

                  Instead of learning the future, analyse the past life.

¾       What succeeded will be folly.

¾       For every rupee cheated, we have returned one lakh of sovereigns.

¾       We serve those whom we tried to dominate by cheating.

¾    We have organised our misfortune holding it up before us as an ideal.

406)        Let us be TRUE at least for one day in our entire life.

          ஒரு நாள் முழுவதும் உண்மை பேசிய நிறைவுடன் இறப்பது ஆன்மீக சேவை.

407)    In one area of your life try to fulfill one ideal of the world.

             ஒரு சிறு விஷயத்திலாவது ஒரு பெரிய இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

408)    The natural instinct in man to rejoice in killing was noticed by Lawrence of Arabia when he was forced to shoot a man he had earlier saved.

             கொலை செய்வது மனித இயல்பு.

409)    People of a community who have worked hard and slaved for survival will never be able to give a small help when asked.

             உயிரை விட்டு சம்பாதித்தவன் உயிர் போகும் பொழுதும் பிறர் கேட்டுவிட்டால் உதவ மறுப்பான்.

410)    Poverty makes vice virtue.

             இல்லாதவன் குற்றம் செய்யும் பொழுது திருப்தியடைகிறான்.

411)    சத்தியத்தின் ஜோதி சக்தியானால் பொய்யின் சாகஸம் அதன் புரட்டின் ஜாலம் சத்தியத்தின் முன் தலை வணங்கும்.

          The light of Truth putting forth its force cows down the infinite expressiveness of resourceful Falsehood which realises the need to submit and disappear.

412)    As men can be mean, life too can be mean. That happens only to those who are to abolish meanness.

             மனிதனைப் போல் வாழ்வும் மட்டமாக நடக்கும். மட்டம் தன்னையழிக்கும் நேரம் வந்த பொழுது யார் அதைச் செய்ய முடியுமோ அவரிடம் வந்து மோதும்.

413)    As inefficiency makes one lose his job, even efficiency does.

             வேலை திறமைக்கோ, தகுதிக்கோயில்லை, ஸ்தாபனத்துடன் இணையும் பாங்குக்கு வேலை கிடைக்கும்.

414)    No two people ever agree on anything in freedom.

             சுதந்திரத்தில் அடுத்தவர் பேச்சை எவரும் கேட்க மாட்டார்கள்.

415)    Meanness represents the strength or idealism of a noble person as his weakness or treachery. The infinite resourcefulness of falsehood comes to their rescue.

             எந்த குணமும் அனந்தமானது, அற்புதமான புதிய படைப் புடையது. மட்டமானவன் இலட்சியவாதியின் இலட்சியத்தை அவனுடைய குறையாகவோ துரோகமாகவோ பேசுவான்.

416)    Infinite physical energy expressing through very rich traditional culture can become genius of action.

             அமெரிக்கத் தாயாருக்குப் பிறந்த சர்ச்சில் னீவீறீவீணீக்ஷீஹ் ரீமீஸீவீ போரில் மேதையானார்.

417)    The soldier who returns from the war whole knows how many others lost their lives or limbs. The same phenomenon in life goes utterly unnoticed.

             உயிரோடு திரும்பி வந்த சிப்பாய் உலகுக்கு ஆச்சரியம். ஊரில் அது போல் அழிபவரையோ, தப்பிப்பவரையோ எவரும் கண்டு கொள்வதில்லை.

418)    External disciplines have been effective by the ultimate punishment - say death - for the least of lapses - say a sleeping sentry.

             காவலில் தூங்கினால் உயிரைக் காவு கொடுப்பதே புறக்கட்டுப்பாடு. அகக் கட்டுப்பாடு அமிர்தமன்றோ!

419)    Property came into secure existence by hanging people who stole 2 shillings or more.

             எளிய திருட்டுக்குத் தூக்கு தண்டனை என்று சொத்து உலகில் எழுந்தது.

420)    Leaders of Strength or Idealism develop as individual personalities when they are not heeded. A time comes during his lifetime or after when the society awaken to the reality of what he represented when his popularity breaks all bounds.

             தகுதி வளரும் பொழுது தானே வளர வேண்டும். உலகம் ஏற்றால் உச்சிக்குப் போகலாம்.

             The take off point is the moment when the individual value becomes a social value in himself.

421)   

¾       Universalisation of ideas makes the poet immortal.

¾       Personal idea becoming impersonal social ideals makes an individual a   leader.

¾       Intellectual ideas changing into subtle truths in himself, a spiritual leader is accepted by the society.             

தான் என்பது ஊரானால், ஜடம் சூட்சுமமானால், எழுத்து எல்லையைக் கடந்தால், தலைவர், மகான், கவி பிறப்பர்.

422)  He who has the protection of his ideal and courage, even when he foolishly walks into any number of traps, is still protected.

          வலிய போய் வம்பு வளர்க்கும் மடமையையும் கடந்து இலட்சியமும், தைரியமும் காப்பாற்றுகின்றன.

423)    The infinity of resourcefulness of falsehood engages man's energies creatively and passes for life. Can we consider the same of Truth?

             பொய்யின் பிரம்மாண்டமான உலகம் மனித வாழ்வை மகத்தானதாக்கிற்று. அதுவே சத்தியமானால் எப்படியிருக்கும் என நினைத்துப் பார்க்கலாம்.

424)    At any given moment the movements at any level obey the process of creation. To know that is the ultimate wisdom of action.

             எந்த நேரமும் இறைவன் எங்கும் சிருஷ்டியில் செயல்பட்டது போல் செயல்படுகிறான். அவன் செயலை அறிவதே செயல் திறன் - ஆன்மீக விவேகம்.

425)    The golden age of anyone is the period when all his energies act by the organisation at their height.

             சக்தியை உயர்த்தி திறம்பட செயல்படுத்தும் நேரம் பொற் காலமாகும்.

426)    Courage, as any other great quality, is a protection on its own.

             கவசமான தைரியம் காப்பாற்ற எதிரியை எட்ட வைக்கும்.

427)    Eliminate the words from consecration, it will become enormously powerful.

             சொல்லை இழந்த சமர்ப்பணம் சொல்லொணா வலிமை பெறும்.

428)    The collective is not so much aware of opportunities as its hatred to individual eminence. It is shameless when threatened to seek the support of the same eminence that it earlier maligned.

             உயிரைக் கொடுத்து ஊர் ஒருவர் உயிரை எடுக்கும். தனக்கு ஆபத்து வந்தால் எவர் உயிரை எடுக்க முனைந்ததோ அவரையே வெட்கத்தை விட்டு காப்பாற்றச் சொல்லும்.

429)    The individual capacity changing into universal capacity is the potential power becoming the power of the process of change.

             சுயநலம் பரநலமானால், சொந்தத் திறன் பிறருக்குப் பயன்படும்.

430)    உலகில் உள்ளதெல்லாம் மண் என்றால், அவை பிரம்மம் என்பது எளிது.

          If everything is mud and clay, why not Brahman the Absolute?

431)    Promotion in politics and army is more by capacity than by seniority. In the Civil Service it is by efflux of time, as in the mental plane Time and not work gives the capacity.

             உடலுக்கு உழைப்பு, மனத்திற்குக் காலம், ஆன்மாவுக்கு உழைப்பும் காலமும் உணரும் நேரம் உண்டு.

432)    When the part pursues the whole that moves not, the whole is always is in the front without moving.

          எங்கும் நிறை ஆண்டவன் அசையாவிட்டாலும் ஜீவாத்மா அவனைத் தொடரும் பொழுது எப்பொழுதுமே தொலைவி லிருப்பான்.

433)    The moving part in pursuit of the non-moving whole always finds it ahead.

             அசையாத முழுமை துரத்தும் பகுதிக்கு அகப்படாது.

434)    The body that identifies with the disease is frightened to cure it as it would die along with the disappearing disease.

             வியாதியே தான் என நினைக்கும் உடல் வியாதியழிந்தால் உயிர் போகும் எனக் கருதுகிறது.

435)    The whole of our life is learnt from above, but we want to learn Science and Spirit from below.

             வாழ்வை கல்வியால் அறிகிறோம். விஞ்ஞானத்தையும், ஆன்மீகத்தையும் அனுபவத்தால் அறிய முயல்கிறோம்.

436)    There is no limit to knowing facts. Given as facts, years of experience are abridged into hours or minutes. Internet offers ALL physical facts necessary to develop subtle knowledge.

             அனுபவம் நீண்டது, அறிவு குறுகியது. ஆயிரமாண்டு அனுபவம் ஆறுமாதத்தில் விபரமாகக் கிடைக்கும். இன்டர்நெட் சூட்சும ஞானமும் தரும்.

437)    Approach of death expands the hero-warrior as it brings to the surface the vital being that is desirous of meeting its not-self.

             ஆத்மா அனந்தனை சந்திக்கும் நேரம் என்பதால் வீரன் மரணத்தால் வீறுகொண்டெழுகிறான்.

             மரணம் வீரனுக்கு மோட்சம்.

             ஞானம் பிராம்மணனுக்கு மோட்சம்.

             உற்பத்தி வைசியனுக்கு மோட்சம்.

             சேவை சூத்திரனுக்கு மோட்சம்.

             இந் நான்கு மோட்சத் தகுதி பெற்றவன் சாதகன். அவன் வீரத்தால் உற்பத்தியை சேவையாக சாதிப்பது ஞானம்.

             தோல்வியற்ற உற்பத்தியின் சேவைக்குரிய வீரம் பூரணயோக ஞானம்.

          Courage that produces in Truth for the service of others needs the knowledge that is integral.

438)    Energy comes only from Will. The body and mind are only instruments.

             சக்தி ஆண்டவனுடையது, மனிதன் வெறும் கருவி.

439)    The ideas of The Life Divine are intelligible to the mind that aspires to rise to Supermind, not to the one that seeks to affirm intellectuality.

             மனம் சத்தியஜீவியத்தை நாடினால் Life Divine  புரியும். மனமே முடிவு என்பவர்க்குப் புரியாது.

440)    Your greatest accomplishment can be traced back to your early life in a positive quality. Trace so its opposite and remove it. You will become the spiritual whole.

             இன்றைய பெரிய சாதனைக்குரிய நல்ல குணம் சிறு வயதிலிருந்தது போல் அதற்கெதிரானதைக் கண்டு விலக்கினால் மனிதன் முழுமை பெறுவான்.

441)    Organisation of administration enables the capital to control the entire nation. Subtle organisation and psychological administration enables a single inner being to preside over all humanity.

             தலைநகர் சூட்சுமமாக அகத்திற்குள் வந்தால் மனிதகுலம் ராஜ்யமாகும்.

442)    One moves to a higher centre by adopting its attitudes for action.

             மனம் சத்தியஜீவியத்திற்குப் போக அதன்படி நடக்க வேண்டும்.

             எங்கு போக வேண்டுமோ அதன்படி நடக்க வேண்டும். 

             We are what we do.

443)    Life has no way of engaging all the energy of a genius.

             உலகம் மேதைகளை முழுவதும் பயன்படுத்துவதில்லை.

444)    When you have a solution to a problem, it is better to surrender it than to implement it. When a solution is not found, what can we do? The search can be surrendered.

             அறியாமை அறிவைத் தேடுவதற்குப் பதிலாக தன்னை சரணம் செய்வது சமர்ப்பணம்.

445)    The supramental value serves the personal interest through its impersonal truth.

             பரநலம் சுயநலமாகும் பொழுது மனிதன் சத்திய ஜீவியத்தைத் தொடுகிறான்.

446)    Genius is the same as most other men but with a self initiative which is always awake.

             மேதையும் மற்றவர்களும் ஒன்றே. ஒரே வித்தியாசம் மேதைக்கு சுயம்பிரகாசம் உண்டு. சுயமாகச் செயல்பட முடியும்.

447)    மனம் பணத்தை நோக்கிப் போனால் மனிதர்கள் நம்மை விட்டுப் போவார்கள்.

          Money eliminates people.

             People come to you because you are human.

448)    Public opinion goes by the success of the present. Idealism seeks a long term goal. To combine both forever is not yet possible for the unfolding divinity.

             எந்த நேரமும் எவரும் முழுமையாக ஏற்க வேண்டும் என்ற இலட்சியத்தை இறைவன் இன்னும் உலகில் எட்டவில்லை.

449)    As life is partial and is a field of ignorance nourished by falsehood, everlasting popularity in its entirety cannot be the goal now.

             பகுதியான வாழ்வு முழுமையான பலன் தராது.

450)    When a concession to a rule becomes a rule, the rule will be overruled.

             சலுகை சட்டமானால், சட்டத்திற்குச் சலுகையும் இருக்காது.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000