DAILY MESSAGES                           

Series XVI

 

601)  ஆத்மாவைக் கடந்து, வளரும் ஆத்மாவுக்கு அன்னை வழி வகுத்தால், மனிதன் சம்பிரதாயம் மூலம் ஆவியை நாடி உயிரைப் பலி கொடுக்கிறான்.                    Mother leads us beyond the Soul to the evolving Soul, the Psychic being. Man seeks the vital spirit through funeral ceremonies and dies a victim to the vital being.

602)  Quest for knowledge is the urge of ignorance for the joy of emerging out of it as knowledge.

          அஞ்ஞானம் ஞானமாக மாறும் ஆனந்தம் பெறத் துடிப்பதே அறிவுத் தாகம் எனப்படும்.

603)    Name is the word that symbolises the subtle significances and signifies the occult essences of the inner forms that are invisible to the naked eye.

             சூட்சும ரூபத்தின் கண்ணுக்குத் தெரியாத சாராம்சத்தை சொல்லின் சப்தமாகக் குறிப்பது நாமரூபம்.

604)    Not to know what you have inwardly experienced in concentration is spiritual unconsciousness.

             தியானத்தில் ஆன்மா உள்ளே பெற்ற அனுபவத்தை அறியாததோ, மறந்துவிடுவதோ ஆன்மீக இருள்.

605)    பொய் சொல்லக் கூடாது என்று சொன்னால், பொய்யுடன் மனத்தின் ஆழத்தில் தொடர்பிருப்பதாக அர்த்தம்.

          You can be true. To say that one should not utter a lie is to have subconscious relationship with falsehood that is enjoyable.

606)    To be able to see all the world in one's mind is possible, as it was through the mind that the world was created. Once seen, one can proceed to change that world from inside the mind.

             மனத்தால் உலகை முழுவதும் காண முடியும். மனத்தினுள் காண முடியும். ஏனெனில் உலகம் மனத்தின் மூலம் சிருஷ்டிக்கப் பட்டது. கண்டால், கண்டதைக் கருத்தால் மாற்றலாம். மனத்துள் உலகம் மாறினால், புற உலகம் மாறும்.

607)    The mind experiencing infinity as a co-existence of infinite and finite forces, Time as a field where the Timeless expresses through it, is spiritual experience of the Absolute in the mind.

             கண்டத்துள் அகண்டமும், காலத்துள் காலத்தைக் கடந்தது மிருப்பதை மனம் அறிவது பிரம்ம ஜனனத்தைத் தரிசிப்பதாகும்.

608)    Man who is made of four parts, obviously, cannot accept one single activity to live by. He needs change and variety.

             எவ்வளவு உயர்ந்ததானாலும் மனிதன் ஒன்றையே ஏற்று, அதன் மூலம் மட்டும் வாழ்வது இயலாது. நான்கு பகுதிகளாலான மனிதனுக்கு மாற்றம் தேவை.

          ஒன்றையே ஏற்று வாழ முடியாது.

609)    கண்ணுக்குத் தெரியாதது மனத்திற்குத் தெரியும். மனம் அறியாததை ஆத்மா அறியும். ஆத்மா அறியாதது வளரும் ஆத்மாவுக்குப் புலப்படும்.

          Mind sees what is invisible to the eye. What the mind fails to see, the soul can see. The marvel that escapes the Soul is for the psychic.

610)    Questioning is mental initiative that externalises.

             கேள்வியை எழுப்பினால் மனம் புறத்தை நாடும்.

611)    The reverence and respect slaves and servants had for the master and his circumstances are really expressions of their solicitude to their lives, as death punishment was common for the least infrigement.

             பணக்கார முதலாளியின் ஆசனம், மிதியடி முதல் அடிமைக்கும், ஆட்களுக்கும் பவித்திரமானது. அது பக்தியால் ஏற்பட்டதல்ல, பயத்தால் எழுந்தது. சிறு குற்றத்திற்கும் சிரச்சேதம் என்பதால் பயபக்தி என்பது தலையைக் காக்கும் பண்பு.                   

612)    பொய் சொல்லுவதால் உலகம் ஒருவனை தள்ளி வைப்பதில்லை. அவன் தலைவனாகவுமாகிறான். மேல் நாடுகளில் பெண்ணின் நடத்தை நம் நாட்டில் ஆணின் நடத்தை போன்றது. நடத் தைக்காக ஆணையோ, பெண்ணையோ ஒதுக்குவது பழக்க மில்லை. அவர்கள் உயர்ந்தவராகவும் கருதப்படுவதுண்டு.

         Lying and immoral behaviour have not been causes for society to disregard    someone. Often such people rise to the top of society.

                   நடத்தையை ஒதுக்கி, உலகம் திறமையை  ஏற்கிறது.

613)    Seminars educate, but nowhere in the world of today are they structured to create results. Rather the members are disoriented.

             கருத்தரங்கு படிக்காதவனுக்குப் பாடம் கற்பிக்குமிடம். பலன் தரும் வகையாக அது இதுவரை அமையவில்லை. கேள்வியை எழுப்பும் அளவுக்கு உறுப்பினர்கட்கு சிந்தனையில்லை.

614)    Every complaint is a disapproval of what we are inwardly.

             நாமிருப்பது நமக்குப் பிடிக்கவில்லை என்பதை குறை கூறுவதன் மூலம் அறிவிக்கிறோம்.

615)    Culture is disciplines observed more in the breach.

             கட்டுப்பாட்டை மீறும் பாங்கே பண்பெனப்படும்.

616)    What we call physical limitation is not the inherent one, but what we impose upon ourselves.

             கிணற்றில் நீரில்லை என்றால் என்ன செய்ய முடியும் என்பது முடிவல்ல. உடல் உணர்வால் நெகிழ்ந்தால் வறண்ட ஊற்று சுரக்கும்.

617)    சொல்லாமல் செய்ய வேண்டியதை சொல்லிச் செய்ய முயன்றால், காரியம் கெட்டுப் போகும்.

          What is to be accomplished silently when explained loses the energy of accomplishment in expression.

618)    An intellectual vision can see the objects of the earth as expressions of energy. So also a philosophical conception can see them as creations of Reality.

             உலகம் சக்தியாலானது என்பதை அறிவு காண்பது போல், ஞானம் உலகம் பிரம்ம மயமானது எனக் காணும்.

619)    Collected energy seeks expression. When it is allowed to express we are in that plane. That energy saved and expressed at higher planes is consecration.

             தெம்பு வெளிப்பட முனைவதை அனுமதிப்பது நாம் அதற்குட்பட்டவராவோம். சமர்ப்பணத்தால் தெம்பு உயர்ந்த நிலையில் வெளிப்படும்.

620)    Regret is mind's way of seeking the totality.

             தவறானதை செய்யும் மனம் முழுமையை நாடி வருத்தப்படுகிறது.

             வருத்தம் தவற்றின் முழுமை.

621)      நம்மை மீறிப் போய் விட்டது என்றால் நமக்கு      முடியவில்லை எனப் பொருளில்லை, பிரியமில்லை என்றாகும்.

          Nothing is beyond us, if we choose to exert.

             Beyond me means beyond my willingness.

622)    Frustration and despair are for the Force, not for the Being.

             கையொடிந்து விட்டது, நம்பிக்கை போய் விட்டது என்பது பிரகிருதிக்கு, ஜீவனுக்கில்லை.

623)    Genius is not born out of seminars or committee work.

             பலர் சேர்ந்து ஒரு வேலையைச் செய்யலாம். மேதாவிலாசம் விவாதத்தால் பிறக்காது.

624)    Onc cannot induce genius in others, especially in those who are unaspiring.

             அறிவையோ, ஞானத்தையோ பிறருக்குக் கொடுக்கலாம். மேதா விலாசம் தானே பிறக்க வேண்டும்.

625)    An ideal school can be a miniature of the future society that gives life education on the foundation of health education. By actively introducing the student to all dynamic streams of society as a token, the boy becomes a rare product.

             உடல் வளம், மன வளத்தால் வாழ்வு சிறக்கும் படிப்பைப் பள்ளி மாணவனை சமூகத்துடன் இணைத்துத் தயார் செய்ய முடியும்.

626)    Language organises the personality through organising the mind, thus becoming an instrument of effective life.

             மனிதனை மொழி ஜீவனுள்ள பிரஜையாக உருவாக்குவதால் அவன் வளம் பெறும் கருவியாக அது அமையும்.

627)    Life is lived in the mind, not outside in society, as home differs from the mere building of an empty house.

             வாழ்வு மனத்தால் வாழ்வது, ஊரிலில்லை. குடும்பத்திற்கு ஜீவனுண்டு, கட்டிடமான வீட்டிற்கில்லை.

628)    You cannot understand a person fully as long as you reply to his statements or desire to reply.

             பதில் பேசுபவருக்கு, பேச நினைப்பவருக்குப் புரியாது.

          புரியாதவன் பேசுவான்.

629)    Learning the essentials, no time is necessary. Learn them from the first principles.

             மூலத்தை கற்க நேரம் தேவையில்லை.

630)    What matters to man is himself, neither the revolution in the country nor the struggle for life of another.

             நாட்டின் புரட்சியோ, அடுத்தவர்க்கு உயிர் போவதோ மனிதன் கண்ணில் படாது. அவனுக்கு அவனே முக்கியம், அவன் மட்டுமே முக்கியம்.

631)    It is easier to see the unity with others or the universe inside. A businessman seeing inside his own unity with the business or society will find the results outside.

             ஒற்றுமையை உள்ளே எளிதில் காணலாம். ஒற்றுமையை உள்ளே கண்டால், பலன் வெளியே தெரியும்.

632)    Love that rises in response to a refusal or unavailability is a vital sensation. The moment the refusal becomes a seeking in utter obedience to the law,  love disappears never to return.

             இல்லை என்பதாலோ, மறுப்பதாலோ எழும் காதல் ஓர் உணர்வு, காதலில்லை. மறுப்பு விருப்பாக மாறிய அதே நேரம் அது மறையும், திரும்ப வாராது.

633)    Consecration of one's maximum capacity, better still maximum frustration is best.

             அதிகபட்சத் திறமையை சமர்ப்பணம் செய்வது நல்லது. அதைவிட அதிகபட்ச ஏமாற்றத்தைச் சமர்ப்பணம் செய்யலாம்.

634)    No time is needed to acquire any level of consciousness if the right attitude and right strategies are there.

             மனமும் முறையும் சரியானால் எவரும் எந்த நிலையையும் உடனே எட்டலாம்.

635)    Without harnessing energy and upgrading it to the maximum possible height, no good work of any description can ever be done.

             பெற்றதைப் போற்றி, பெரியதாக்கி உயர்த்தினால் பெரிய காரியங்களைச் செய்யலாம். வரும் சக்தியை வருவது போல் செலவு செய்பவனால் எதுவும் சாதிக்க முடியாது.

636)    Relationships that cannot be suffered have a chastening effect.

             அறுக்க முடியாத பந்தம் முரட்டுத்தனத்தைக் குறைக்கும்.

637)    Getting out of the prison of the surface mind and moving into the evolving being, one can retain the right to that movement.

             ஒருமுறை மனத்திலிருந்து விலகி ஜீவனை எட்டினால், அந்த உரிமை நம்மை விட்டுப் போகாது.

638)    Concentration is energy that by its intensity reaches its previous stage -- Spirit reaches Sat. Consecration is an act which leads the part to the whole through the method of surrender.

             தியானத்தில் சக்தி பூரணமாகி முன் நிலையை அடைகிறது. ஆத்மா, சத்தை அடைகிறது. சமர்ப்பணம் என்பது சக்தியின் செயல். சரணாகதி மூலம் பகுதி முழுமையை அடைய உதவும்.

639)    A well that is emptied is again fully recharged from outside. Infinity self-replenishes.

             கிணற்றை இறைத்துக் காலி செய்தால் வெளியிலிருந்து நீர் அதை நிரப்புகிறது. பிரம்மம் தன்னைத்தானே நிரப்ப வல்லது.

640)    Printing out a page does not exhaust the plate. It can print infinite pages out of that one plate.

             ஒரு பக்கம் அச்சடித்தால் அச்சு தீராது. ஓராயிரம் பக்கமும் அச்சடிக்கும்.

641)    The fan does not exhaust the air in the room. So the infinity is not depleted by emptying.

             காற்றை விசிறி விலக்குவதில்லை என்பது போல் அனந்தம் செலவால் குறையாது.

642)    One is limited; Oneness is not.

             பிறந்தவன் இறப்பான். மனிதகுலம் அழியாது. மனிதன் அழிவான்.

643)    Love of a woman surpasses all other loves that arise of possessiveness, such as love of power or money.

             அனைத்தையும் கடந்தது காதல். கருத்தையும் கடந்தது.

             Love of money excludes love of women.

644)    பசி கொடுமை. பசிக்காத பொழுது சாப்பிடுவதும் கொடுமை.

          Hunger is a curse. To eat when you are not hungry is equally a curse.

645)    There is nothing that cannot be explained, if the listener is willing.

             கேட்க ஆர்வமுள்ளவனுக்கு சொல்ல முடியாதது இல்லை.

646)    நேரமில்லை என்பது காலத்திற்குக் கட்டுப்பட்டவனுக்கு. காலம் புரிந்தால் கட்டுப்பட ஆரம்பிக்கும். காலம் கட்டுப்பட்டால் நேர மில்லை என்பதில்லை.

          'No time' is the problem of one who is in Time. Understanding Time, it begins to come under one's control. For one who has mastered Time, the question of 'No Time' does not arise.

          நேரத்திற்கு அளவில்லை.

647)    முடிவற்றது மட்டுமல்ல அனந்தம். அனந்தம் முடிவானதுமாகும். முடிவற்றதும், முடிவானதுமானது அனந்தம் என்பது மாயா வாதிக்கு ஊர்த்துவ தாண்டவமாயிற்று.

          Infinite is not only endless but is also finite.

648)    Anything like goodness or folly becoming absolute, touches the Absolute.

             எது பூரணமானாலும் பிரம்மத்தைத் தொடும்.

649)    Observance in the breach is the soul of Non-Being.

             போர் சமாதானத்தின் உயிர்.

          மெய் பொய்யின் ஜீவநாடி.

650)    An ideal is subconsciously sustained by its opposite.

             பரத்தையர் பத்தினிக்குப் பாதுகாப்பு.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000