DAILY MESSAGES                           

Series XVI

 

701)    The ideal for the youth NOW is to be a warrior of Truth and fortify it by earning through Truth. It is possible only when he denounces the hypocrisy of objectivity and the superstition of science.

             கொடுமையை சத்தியத்தின் பேரில் இழைக்கும் investigative journalism மனித குலத்தின் எதிரி.

702)    Investigative journalism degenerates into yellow journalism. It perpetrates cruelty to individual honesty in the name of Freedom and Truth thus making it a monster.

             சுதந்திரத்தின் பேரால் சுதந்திரத்தை அழிக்கும் கொடுமை பாவத்தைப் புண்ணியமாக்குவதாகும்.

703)    Objectivity is the generosity of the impersonal. The universally known objectivity may be called partisan-objectivity which means the facts will be true, the perspective will be subjective.

             விவரம் உண்மையாக இருப்பதால் கூற்று நேர்மையாக இருக்க முடியாது.

704)    The Token Act will discover the psychological DNA of the person.

             உடலின்  DNA பால் சுபாவத்தின் DNAயைக் காண Token  Act உதவும்.

705)    The 'sincerity' of the organisation cannot defend or foster the ideal.

             ஸ்தாபனம் லட்சியத்தைப் பாதுகாக்காது.

706)    Neutrality without strength invites hostility to annex it.

             வலிமையற்றவனுக்கு நடுவு நிலையில்லை.

707)    Sri Aurobindo and The Mother are Truth in the descent. There is no easier soul poise than to keep THEM inside as figures or Force.

             நம்மை நோக்கி வந்த இறைவனை இதயத்தில் ஏற்பதை விட சத்திய யுத்தமில்லை.

708)    No one, including Gandhiji, can accuse his enemy or rival of a method of which he himself is not fully guilty.

             தான் இழைக்காத குற்றத்தை எதிரி செய்வதாகக் கூறும் உரிமை மகாத்மா காந்தியுள்பட எவருக்குமில்லை.

          இலட்சியவாதி எதிரி கட்சி.

709)    Life coming round to our view is grace. It can also be selfishness organised enough to bend grace to its view.

             நாம் நினைத்ததெல்லாம் வாழ்வு நடத்துவது அருள். நடப்ப தெல்லாம் நம் சௌகரியப்படி அமைவது அருள் வாழ்வு மூலம் செயல்படுவதாகும். திறமையான சுயநலம் தன்னையே கடவுளாக வழிபட்டாலும் அது நடக்கும்.

             அருளையும் சுயநலமாக்கும் அன்பர்.

710)    Ruling the country or the world as an exercise of Power needs to be arbitrary and autocratic, maybe open or veiled.

             Naked POWER has not learned right.

             அதிகாரம் எதேச்சாதிகாரம்.

711)    Before the war the empires lived their imperial lives. After the war global political life became a nebulous reality. There was no real leader with knowledge of the required political culture. The US became the brute to rule over the situation.

             உலக அரசியல் போருக்குப் பின் எழுந்தது. அதற்குரிய பக்குவமான தலைவரில்லாததால் அமெரிக்கா ஆர்ப்பாட்டம் செய்கிறது. வசதி வந்தவுடன் மனிதன் அப்படி நடக்கிறான்.

712)    Man's sensation at death or accident is the strongest of vibrations in him. His next best attraction is for news.

             மரணம் மனிதன் மனத்தை ஆட்கொள்கிறது. அதற்கடுத்தாற் போல் அவன் நாடுவது செய்தி (news).

713)    Surrender is real when one is unable to think of the future or the results of his work.

             பலனையோ எதிர்காலத்தையோ நினைக்க முடியாத மனநிலை சரணாகதிக்குரியது.

714)    No surrender is possible to a mind that is not saturated with Silence.

             மௌனம் ஆட்கொள்ளாமல் சரணாகதியில்லை.

715)    நினைவு யோகத்திற்கு எதிரி.

          Memory keeps one on the surface, human, preventing him from entering into yogic consciousness.

716)    Honest folly can do as much harm as intense hostility.

             நேர்மையான மடையன் குரோதமான எதிரிக்குச் சமம்.

717)    Man who has fully moved to the mind finds the weight of his rationality more powerful than the physical force.

             அறிவு ஞானமானால் ஆயிரம் அடி செய்வதை ஒரு இதமான சொல் செய்யும்.

718)    Writing makes the body think.

             எழுத்து உடலின் வலிமை.

             எழுதினால் மனம் பெற்ற அறிவை உடல் பெறும்.

719)    Surrender makes the Psychic surface with its guidance, while thinking or reading is a bar to understanding.

             படிப்பும், சிந்தனையும் சைத்தியபுருஷன் மேலே வருவதைத் தடுக்கும். சரணாகதி சைத்தியபுருஷனை மேலே கொணரும். சிந்தனை தாராத எண்ணம் சைத்திய புருஷனால் செயலாக வெளிவரும்.

720)    Concentration on the mental psychic eliminates the movement of the mental energies. Mind becomes SILENT. The mentality detaches from action by analysis and moves to ego and Purusha by concentration or to the psychic by consecration.

             மனம் யோசனை மூலம் சலனத்திலிருந்து விடுபட்டு மௌன மாகி, தியான மூலம் அகந்தையையும், புருஷனையும் அடைகிறது. சமர்ப்பணத்தால் சைத்தியபுருஷனை அடைகிறது.

721)    I am now energy in movement.

             நான் என்பது பிரகிருதி, செயல், செயலின் சக்தி.

722)    Action is mind thinking or feeling an emotion.

             சிந்தனை, உணர்வு போன்றவை நம் செயல்கள். நாம் இன்று செயலாய், செயலின் சக்தியாக இருக்கிறோம்.

723)    To think is to detach from mental action.

             செயலுடன் ஒன்றியிருப்பதிலிருந்து நாம் நம்மை கவனிப்பதால் - சிந்திப்பதால் - விலகுகிறோம்.

724)    செயலிலிருந்து விலகினால் அகந்தையாவோம். மேலும் விலகி னால் புருஷனாவோம். நிஷ்டை புருஷனாக்கும். சமர்ப்பணம் சைத்திய புருஷனாக்கும்.

             Detachment makes us ego and Purusha by concentration, Psychic by consecration.

725)    Sat is Being. Its objective -- Satyam -- as well as its experience – Spirit -- is Force.

             சத் ஜீவன். அதன் புறமான சத்தியமும், அனுபவமான ஆன்மாவும் சக்திகள். அவை ஆன்மீக சக்திகள் Spiritual Force.

726)    Supermind is Truth-conscious.

             Supermind is Consciousness-Force.

             Supermind is the nature of Sachchidananda.

             Supermind is Truth, Vast, Rhythm.

             Supermind is Spiritual Force.

             Supermind is in Timelessness.

             Supermind is the causal plane of cosmos.

             Supermind splits into two and creates Mind in between.

             சத்தியஜீவியம் என்பது சத்தியத்தின் ஜீவியம்.

             சத்தியஜீவியம் சித்-சக்தி.

             சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தின் சுபாவம்.

             சத்தியம், ரிதம், பிருஹத் என்பது சத்தியஜீவியம்.

             சத்தியஜீவியம் என்பது சத்திய சக்தி.

             சத்தியஜீவியம் காலத்தைக் கடந்தது.

             சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து மனம் ஏற்படுகிறது.

             சத்தியஜீவியம் காரண தேகம், பிரபஞ்சம்.

727)    Constant upward movement demands constant detachment.

             இருப்பதிலிருந்து விடுபட்டால் மேலே போகலாம்.

728)    The very first response to The Mother is calm in the mind that develops into a Silence.

             மனம் அமைதியுற்று மௌனமாவது அன்னையை ஏற்பது.

729)    Doing is ages away from knowing.

             புரிவது பூலோகம் செய்வது சுவர்க்கம்.

730)    Expectation is the exercise of the mind that cannot understand the present to understand the future.

             நடப்பதை அறியமுடியாத மனம், நடக்கப் போவதை அறியமுயலும் அறிவீனம் எதிர்பார்ப்பது.

731)    The soul that needs to meet other souls, acting through mind and vital mistakes that movement as a longing for company.

             ஆத்மா அடுத்த ஆத்மாக்களை நாடுவதை மனம் தவறாக மனிதர்களை நாடுவதாகக் கொள்கிறது.

732)    Money is a product of Time. Understanding how money is produced helps. Understanding how Time is created helps. Understanding how Time creates money is final.

             பணம் காலத்தில் உற்பத்தியாவது. எப்படி பணம் உண்டாகிறது என்ற விளக்கம் காலம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது என்பதையறிய உதவும். எப்படி காலம் பணத்தை சிருஷ்டித்தது என்பது முடிவான ஞானம்.

733)    To realise the eternity of the Eternal in successive Time is to move to the plane of simultaneity of Time-eternity and Timeless-eternity.

             காலத்துள் காலத்தைக் கடந்ததைக் காண்பது ஈஸ்வரனை சிருஷ்டிக் கர்த்தாவாகக் காண்பதாகும்.

734)    மறை பொருளான சக்தியை மனத்திற்குக் கொண்டு வருவது மந்த்ரம்.

          Mantra brings to the surface the hidden power of the soul.

735)    ஏகம் ஏவ துவித்தியம்

             Ekam evadvityam

             There is one without a second.

736)    Nothing matters when survival is threatened.

             உள்ளது எந்த நிமிஷமும் போய்விடும் என்ற நிலையில் எதுவும் உரைக்காது.

737)    சொரணை என்பது பிழைக்க வழியுள்ளவனுக்குத்தான்.

          Sensitivity is for those who can survive.

738)    All that we see and live is in the gross plane. Our thoughts, feelings, dreams, imagination are in the subtle plane. We do not know the causal plane of the evolving Soul. Gross life, subtle spirit and causal Supermind.

             வாழ்வு ஜடம், ஆன்மா சூட்சுமம், சைத்தியம் காரணம்.

739)    The respect shown to evil by not attacking it is an indispensable strategy for action. It is a wisdom that recognises the infinite scope of Good.

             எதிரியை சீண்டாமலிருக்கும் பொறுமை செயலுக்கு அவசியம். தீமை திருவுருமாறும் பொழுது உலகை விடப் பெரியதாகும் என்ற ஆன்மீக ஞானம் இன்று தீமையைச் சீண்ட சம்மதிப்பதில்லை. தீமைக்குத் தீர்வில்லை. தீண்டினால் தீராத ஆபத்துண்டு.

740)    Russell recognised the sincerity of Russians behind all the brutality as Mother did.

             அளவு கடந்த கொலை, கொள்ளை, கொடுமைக்குப்பின் ரஷ்யர்களிடம் உண்மையுண்டு என்று அன்னை கூறியதை ரஸ்ஸலும் கூறுகிறார்.

741)    Insincerity of Man is endless. They emerge in his altruistic service, artificial compassion to the animals, his own self-righteousness which is inverted inferiority.

             மனத்தின் பொய்யிக்கு அளவில்லை. சேவை, மிருகங்கட்கு அனுதாபம், தான் நேர்மையானவன் என்ற உணர்வு ஆகிய வற்றுள் அது வெளிப்படும்.

742)    The true personality of Man surfaces when he, basing himself on his prejudice, objectively collects accurate facts to prove the truth of his prejudice as truth.

             பொய்யை நிலை நாட்ட உண்மையைக் கருவியாக்குவது மனிதத் திறமையின் சிகரம்.

743)    Post-war hysteria was the finest excuse for infinitely talented crooks on either side in extensive indulgence of poisonous venemous discoveries to their own inner delight.

             கோணலும் குதர்க்கமும் அனந்தமான உலகில் நேரம் வரும் பொழுது பாவம் சாஸ்திரமாக வளர்கிறது.

744)    Subtle science remains unexplored today as science was long ago, though earlier civilisations have laid all the foundations and even created a few branches of those sciences.

             சூட்சும லோகத்தை சாஸ்திரமாக ஆராய்ச்சி செய்து அவசியம். அது விஞ்ஞானத்தைத் துரும்பாக்கும்.

745)    Millions of people are killed in wars, riots, etc., but the conscience of humanity will not permit ONE single individual to be killed or tortured or experimented upon.

             தானே அழியும் உயிர் ஏராளமானாலும், நாமே ஓருயிரை அழிக்க சம்மதிப்பதில்லை.

746)    There are excellent methods of extraordinary success in several fields unknown to the world outside. A book that collects them or an organisation that espouses them will be a great service.

             இல்லை என்ற நிலையைக் கடந்து உண்டு என்பதை எட்டிய பின், உலகம் அவற்றை அறியாதது துர்அதிர்ஷ்டம். ஒரு ஸ்தாபனமோ, புத்தகமோ அதைச் செய்யலாம்.

747)    One way of increasing the earning capacity enormously for a MISER or a SELFISH person is to feel an emotional expansiveness to give away all he earns.

             ஏராளமாக சம்பாதிக்க ஒரு கருமி அல்லது சுயநலமி விரும்பினால் அவர் மனம் தான் சம்பாதிப்பதை எல்லாம் சந்தோஷமாகப் பிறருக்குக் கொடுக்க விருப்பப்பட வேண்டும்.

748)    யார் யார் எப்படி மாற வேண்டும் என ஒருவர் கூறுவாரானால், அவர் மாற சம்மதிப்பது அத்தனை பெயரையும் மாற்றும்.           

             One who desires others to change at various points will be able to achieve it by his own inner change appropriately.

749)    The inhuman cruelties organised by the state police in communist and Nazi regimes were the mental conditions of communities in earlier centuries. Even today man the individual, in utter freedom, will act like that. These regimes take us a thousand years ago.

             கம்யூனிஸ்ட், நாஜி நாடுகளின் கொடுமை 1000 ஆண்டுக்கு முன்னாலிருந்த நிலைமை. இன்னும் அதிகாரமுள்ள இடம் எல்லாம் அக்கொடுமை குறையவில்லை.  

750)    The uncivilised behaviour of the so-called civilised nations created the central insecurity in the communist countries which led to barbarism.

             நல்லவனின் குறை கெட்டவனை மேலும் கெட்டவனாக்குகிறது.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000