#1
|
|||
|
|||
பரம்பொருள்
நான் சில நாட்களாக லைப் டிவினை படித்துகொண்டு வந்தேன். படித்தபின் மனம் அமைதியாக இருக்கும். கொஞ்சம் புரிந்தது, நிறைய புரியவில்லை. தமிழில் இந்த புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துகொண்டு இருந்தேன். மதர் சென்டரில் அப்பாவின் பரம்பொருள் புத்தகம் கிடைத்தது. புத்தகத்தை திறந்து பார்த்த போது அதன் font size பிடித்து போய் படிக்கவேண்டும் என்று தோன்றியது. படிக்க ஆரம்பித்தேன், படிக்க ஆரம்பித்த நாட்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மறக்க இயலாது.
என் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது பூக்கடையில் வெள்ளைரோஜவில் purple கலர் சாயம் ஏத்தி purple white rose கொத்தாக அடுக்கி கொண்டு இருந்ததை பார்த்தேன். பூவை வாங்கி mother ரூமில் வைத்துவிட்டேன். மாலை பிரேயர் பண்ணும்போது பூவை பார்த்தேன், அப்போது தான் புரிந்தது நான் காலையில் இந்த கலர் combination இல் ஒரு பில்டிங்கை பார்த்து ரசித்து மதரிடம் சொன்னது நினைவில் நின்றது. இன்னொரு சம்பவம், நான் எப்போதும் பறிக்கும் செம்பருத்தி பூ செடிக்கு அருகில் சென்றபோது, எனக்கு உடம்பு சரியில்லை பறிக்கவேண்டாம் என்ற வார்த்தை மனதில் விழுந்தது. செடியை பார்த்தபோது இரண்டு பூக்களை தவிர நிறைய மொட்டுக்கள் மலர முடியாமல் காய்ந்து இருந்தது. அதனையும் மீறி பறித்து பூஜை ரூமில் வைக்க போனபோது உள்ள வைக்க வேண்டாம் என மனதில் தொண்றியது. அதனால் பூவை ஹாலில் உள்ள அன்னை படத்திற்கு முன் வைத்து விட்டேன். பிறகு ஒரு porcelain பாத்திரத்தை எடுத்தபோது கை தட்டியதுபோல் சுக்கு நூறாய் உடைந்தது. சுதாரித்து பூவிற்கு பிடிகவில்லை என நினைத்து பூவை எடுத்துவிட்டேன். அன்று மதியம் ஒரு friend திட்டிக்கொண்டு எனக்கு போன் பண்ணுகிறாள். வாக்கியமாய் மனதில் விழுகிறது. முதலில் நான் என்னுடைய நெகடிவ் thought என்று நினைத்தேன். அனால் அடுத்த சில நிமிடம்களில் அவளுடைய தொலைபேசி அழைப்பை ஏற்றேன். அவளுடன் பேசும்போது, அது நெகடிவ் thought இல்லை, அவள் நினைத்த thought என்று புரிந்தது. அன்று இரவில் நான் சீக்கிரம் தூங்கிவிட்டேன், இடையில் 12 .30 மணி அளவில் நன்றாக விழித்து விட்டேன். எனது அம்மா மற்றும் என் சகோதரி என்னை பற்றி பேசுவது போல் தெரிந்தது. உடனே என் கணவரிடம் இது பற்றி கூறினேன், நைட் 12 .30 ,காலையில் போன் பண்ணி பேசலாம் என்றார். காலையில் இந்தியாவிக்கு கால் பண்ணி விசாரித்தபோது இரவு 10.00 மணிக்கு என்னையும் என் குழந்தைகளை பற்றியும் பேசிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. என் கணவர், பக்கத்தில் இருக்கிற நான் என்ன நினைக்குறேன் என்று தெரியலை, இந்தியால பேசுறது கேட்கிறதா என்றார். அப்பாவின் புத்தகத்தில் உண்மை என்பது சத்திய ஒளியாக பிரகாசிக்கிறது. என் சின்னசிறு உலகத்தின் மிக பெரிய வெளிச்சம் நீங்கள். அன்று முழுவதும் மனம் விழிப்பாக இருந்தது thank you அப்பா. |
The following 10 users say they have read this useful post by Santhibala: | ||
akashma27 (19-03-2019), Elango N (14-08-2013), M.Priya (03-10-2012), P.Natarajan (01-02-2016), R.Sharmila (13-12-2020), Sathya Asokan (16-08-2019), Sriram25 (16-06-2013), Suganthi Jayaraman (26-04-2012), Thirumal Jayaraman (01-03-2013), vidya_muthulakshmi (10-05-2012) |
Thread Tools | Search this Thread |
Display Modes | |
|
|