Skip to Content

16. பரம்பரை வழி வந்த நோய்

ஒரு குடும்பத்தில் பலருக்கு ஒரு தலைமுறையில் ஆஸ்த்மா இருக்கிறது. அடுத்த தலைமுறையிலும் அது குழந்தைகளுக்கு வருகிறது. அன்னையிடம் அவர்களுள் ஒருவர் வந்தபின் 90% வியாதி குறைகிறது. மிச்சம் அப்படியேயிருக்கிறதென்றால், மிச்சமான அந்த 10% வியாதியை அருள் எப்படிக் குணப்படுத்தும்?

வியாதி என்பது உடலைப் பற்றியதானாலும், உணர்வுக்கும், அறிவுக்கும் வியாதியுடன் தொடர்புண்டு. போன தலைமுறையிருலிந்து தொடர்பு வந்து, அடுத்த தலைமுறைக்குப் போகிறதென்றால், அது உடலைப் பொருத்தது. உடற்கூறு அப்படி (constitutional defect) இருக்கிறது என்றுதான் பொருள். மேலும் உடலிலுள்ள வியாதிக்கு வேர் சூட்சும உடலிலிருக்கும். சூட்சும உடலில் வியாதியின் வேர் அழிந்தால்தான் உடலிலிருந்து நோய் அறவே விலகும். சூட்சும உடலில் பல பகுதிகள் உள. மனதிற்கும், உணர்வுக்கும் சூட்சுமம் உண்டு. அதுபோல் உடலில் (physical body) சூட்சுமம் மூலாதாரத்தில் இருக்கிறது. அந்தச் சக்கரத்தில் வியாதி அழிந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

அருள் 90% வியாதியைத் தானே குணப்படுத்துவது பொதுவான வழக்கம். அதைத் தொடர்ந்து அன்பரின் முயற்சி அருளைப் பெற முயன்றால், மீதி 10% வியாதியும் ஒழியும். பொதுவாக 90% அழியத் தேவையான முயற்சி அடுத்த 10% அழியத் தேவை. அன்பர் இதில் வெற்றியடைய தாம் பல காரியங்கள் செய்யலாம்.

  1. இதுவரை குணமானது போதும் என்று மனம் முடிவு செய்தால், அந்த முடிவே பலிக்கும். மீதியும் போக வேண்டுமானால், அறிவு தன் முடிவை மாற்றி, மீதியும் அறவே போகவேண்டும்; அதை ஒழிக்க முடியும் என்று புது முடிவை எடுக்க வேண்டும். (Reinforce by hourly consecration*) (*Hourly Consecration - சமர்ப்பணம்).
  2. ஆஸ்த்மா மூச்சு சம்பந்தப்பட்டதானதால் தினமும் முடிந்த அளவு மூச்சு உள்ளே போகும்பொழுதும், வெளியே வரும்பொழுதும் ஒளியாக இருப்பதாக கற்பனை செய்தல் வேண்டும். (Lungs) முழுவதும் ஒளியால் நிரப்பப்பட்டதாக கற்பனை செய்தல் நலம். தினமும் பல முறையும் நினைக்கலாம்.
  3. மூச்சுக்குரிய சூட்சுமச் சக்கரம் நாபிக்குப் பின்னால் முதுகு எலும்பில் இருப்பதால், அந்தச் சக்கரத்தில் ஒளியைக் கற்பனை செய்ய வேண்டும். இது மூச்சைத் தூய்மைப்படுத்தும்.
  4. மூலாதாரம் ஒளியால் நிரம்புவதாகக் கற்பனை செய்தால் உடலின் சூட்சுமப் பாகங்கள் ஒளியால் நிரம்பி, வியாதியின் வேர் உடலின் சூட்சுமத்தில் அற்றுப்போகும். அதையே தீவிரமாகச் செய்தால், உடலை ஒளி ஊடுருவும்பொழுது, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் நோய் அழியும்; அடுத்த தலைமுறையில் உள்ளவர்கள் நோயும் அழியும்.
  5. ஹிருதயத்திற்குப் பின் உள்ள ஆன்மாவில் ஒளியை நிரப்பினால் ஆன்மீக ஒளி பெருகும்போது, அந்த வியாதி கர்மபலனால் ஏற்பட்டிருந்தால், கர்மத்தின் வேரை அழிக்கும்.
  6. இந்தப் பல்வேறு இடங்களில் ஒளியை நிரப்புவதற்குப் பதிலாக, அன்னையின் உருவத்தைக் கற்பனை செய்தால் அதிகப் பலன் உண்டு.

இது ஒரு முழு முயற்சி. பலித்தால் பூரண குணம் கிடைக்கும். சமர்ப்பணத்தை மேற்கொண்டு மணிக்கு ஒரு முறை வியாதியை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், பெரும்பலன் உண்டு.

அதற்குப் பதிலாக மணிக்கு ஒரு முறை என்பதை விட்டு, மணியடிக்கும்பொழுது அதாவது 10 மணி, 11 மணி, 12 மணிக்குச் சமர்ப்பணம் செய்ய மேற்கொண்டால் முழுப் பலனிருக்கும். 10 மணி என்றால், 9.59, அல்லது 10.1க்கு செய்வது 10 மணியாகாது. வினாடி முள் 59ஐத் தாண்டி 60ஐத் தொடும் க்ஷணம் செய்வதே முழுப் பலன் கொடுக்கும். ஒரு நாளில் நாம் விழித்திருக்கும் 15, 16 மணி நேரத்தில் இதுபோல் வினாடி தவறாமல் 5, 6 முறை சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக 15, 16 மணியும் தவறாமல் அதைச் செய்யும் நாளில் வியாதியின் சுவடுகூட இருக்காது. சமர்ப்பணம் என்பது ஒரு வினாடி (Mother) அன்னை என்று நினைப்பதுவே. அதுவே இந்த முறைக்குப் போதும்.

நாம் அன்னையை ஏற்றுக்கொண்டதால் வியாதியின் சம்பந்தப்பட்ட (here it is breath and the chakra behind the stomach) சக்கரத்தில் அன்னையை உருவகப்படுத்தி, மூலாதாரத்திலும் அதையே செய்து, மூச்சின் பாதையை ஒளியால் நிரப்பி, ஆன்மாவிலும் அன்னையைக் கண்டு, ஒவ்வொரு மணி அடிக்கும் வினாடியில், வினாடி தவறாமல் அன்னையை நினைவுகூர்ந்தால், மீதியுள்ள வியாதி தனக்குக் குணமாவதுடன், தன் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும், அடுத்த தலைமுறையில் நோயுற்றவர்களுக்கும் குணம் ஏற்பட்டு, உடலின் சூட்சுமத்திலும், ஆன்மாவின் அஸ்திவாரத்திலும் வியாதி பரம்பரையையும், கர்மத்தின் ஆதியையும் இழக்கும்.

*******

Comments

In the last para is written

In the last para is written as (here it is breadth and chakra behind the stomach) . If I am correct it should be breath instead of breadth.



book | by Dr. Radut