Skip to Content

பகுதி 13

வந்து ஏன் அனைவரும் கவலையாக இருக்கின்றனர் என விசாரித்தான். திருட்டைப் பற்றி அவனுக்குத் தெரியவில்லை என்பது தாயார் கவலை. "நான் 10 மூட்டை சிமெண்ட் எடுத்துப் போனேன். திருடு போனதாகத் தெரியவில்லையே'' என்றான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்ட்னர் விசாரித்தார். யார் திருடு போன தகவல் கொண்டுவந்தார் என்று விசாரித்தால், இவன் 10 மூட்டை வேலைக்கு வேறு இடத்திற்கு எடுத்துப் போனதைத் திருடு என்று கூறியுள்ளார் எனத் தெரிந்தது. மனம் குறையை ஏற்றால் குறை குறையில்லை எனத் தெரியும் என்பது இதனால் நிரூபணமாயிற்று.

பெரியவன் : அப்பாவுடன் வேலை செய்பவர் - நாயுடு - ஒரு சின்ன விசேஷம் நடத்தினார். பெரிய ஏற்பாடுகளெல்லாம் செய்து இருந்தார். விருந்தினரை உபசரிக்கச் செய்த ஏற்பாடுகள் பெரியது. ஒரே ஒருவர் வந்தார். அது ஆபீசில் வேலை செய்பவரில்லை; தெரிந்தவர்.

தாயார் : அவர் யார் வீட்டு விசேஷத்திற்கும் போகமாட்டார். அவர்கள் எப்படி வருவார்கள்?

சிறியவன் : பயங்கரமான ஏற்பாடம்மா.

பெரியவன் : அவர்களை எல்லாம் உள்ளன்புடன் எதிர்பார்த்தார்.

தாயார் : இன்று அவர்கள் வருவது, அன்று அவர் போனதைப் பொருத்தது.

கணவர் : நாயுடு ஏமாந்துவிட்டார். அவருக்கு வழியுண்டா? நான் சொன்னால் கேட்பார்.

சிறியவன் : நாயுடு அப்பாவைப் பார்க்க வந்திருக்கிறார்.

நாயுடு : வெளியில் போகலாம் என அழைக்க வந்தேன்.

கணவர் : வேறு விசேஷம் உண்டா?

நாயுடு : விசேஷம் ஒன்றுமில்லை.

கணவர் : கவலைப்படவேண்டாம்.

நாயுடு : எதற்குக் கவலைப்படவேண்டும்? வந்த நாயுடு போய்விட்டார். கணவர் அவருடன் வெளியே போகப் பிரியப்படவில்லை.

கணவர் : அவர் ஏதும் பிரச்சினை இருப்பதாக நினைக்கவில்லை.

தாயார் : அவர் தம் பிரச்சினையை உணரவில்லை, உணர்வதாகக் காட்டப் பிரியப்படவில்லை.

கணவர் : நாயுடு வேறு. அவர் பிரச்சினைக்குத் தீர்வுண்டா? இன்று அவர் மனம் மாறினால் நிலைமை மாறுமா?

தாயார் : மனம் மாறினால் விஷயம் மாறும்.

கணவர் : விசேஷம் கடந்துவிட்டதே.

தாயார் : பிரச்சினை மனிதனுக்குரியது, விசேஷம் சந்தர்ப்பம்.

கணவர் எழுந்து நாயுடுவைத் தேடிப் போனார். தனியே சந்தித்தபொழுது நாயுடு தம் கவலையை, குறையைக் கொட்டித் தீர்த்தார். கணவர் நிலைமை மாறும், அத்தனை பேரும் வருவார்கள் என்றும், இரகஸ்யம் இவர் மனதிலிருப்பதையும் கூறினார். பெரிய போராட்டத்திற்குப்பின் நாயுடுவிற்கு விஷயம் மனதில் பட்டது.

நாயுடு : அது சரி, இப்போ புரிகிறது. என்ன செய்வது?

கணவர் : தவற்றை உணர்ந்து மனத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நாயுடு : விசேஷம் கடந்துவிட்டதே.

கணவர் : பிரச்சினை உங்களுக்குத்தான், விசேஷத்திற்கில்லை.

இருவரும் வெளியிலிருந்து திரும்ப வந்தால் நாயுடு வீட்டில் 10 பேர்கள் ஆபீஸிலிருந்து வந்து பரிசுகளுடன் காத்திருந்தனர். சிலர் காரணம் கூறி வருத்தப்பட்டனர். மற்றவர்கள் ஒன்றும் பேசாமல் பரிசு கொடுத்தனர். ஒரு சிலர் அன்று வாராமல் பிறகு வருவதற்கு வெட்கப்பட்டனர். பலருக்கு வெட்கமில்லை. பெரிய விசேஷமாய் நாயுடுக்கு மனக்குறை தீரும் வகையில் ஆபீஸ் நண்பர்கள் பெருவாரியாய் வந்தது கணவருக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். மனைவி, மக்களிடம் இதைக் கூறும்பொழுது அக்கருத்து மனத்தில் ஆழமாய் அவருக்குப் பட்டுவிட்டது.

தாயார் : தான் எனும் அகங்காரம் தடையாக இருக்கிறது.

பெரியவன் : அம்மா, முதலியார் சொன்னது அதுதானே.

கணவர் : அவர் ரொம்ப தவறானவர்.

தாயார் : அவரைப் பணக்காரராகக் கருதுவதால், உலகம் அவரையே மதிக்கும், நம்மையில்லை.

கணவர் : முதலியார் செய்வது அத்தனையும் அனைவருக்கும் சரி. பார்ட்னருக்குத் துரோகம் செய்து வெளியிலனுப்பி நடுத்தெருவில் நிற்க வைத்ததுடன் அவன் கெட்டலைந்து மீண்டும் தன்னிடம் வரவேண்டும் என்பது எவ்வளவு கெட்ட எண்ணம்.

தாயார் : முதலியார் எண்ணம் கெட்டது. பலியானவன் அவனை நாடி வந்துவிட்டானே.

கணவர் : பணம். பணம் எட்டி உதைத்தாலும் கண்ணுக்குத் தெரியாது. உதை இதமாக இருக்கும்.

தாயார் : அந்த மனம் உடையவர்க்கும், கெட்டலையவேண்டும் என்பவர்க்கும் அன்னையில்லை.

கணவர் : நான் அவரைச் சொல்கிறேன். நான் அப்படி நடக்க மாட்டேன். ஆனால் மனம் அப்படியே நினைக்கிறது.

தாயார் : நாம் தவறு செய்து எதிரி பலியான பின் எதிரி கெட்டுப் போய் மீண்டும் நம்மை வந்து கெஞ்சவேண்டும் என்பது மனித சுபாவம், அது மாறவேண்டும்.

கணவர் : எப்படி?

தாயார் : நமக்கு எதிரி, கெட்டது செய்து கெட்டுப்போனாலும் நாம் அப்படி நினைக்கக்கூடாது.

கணவர் : நாம் அவர்கள் - எதிரி - நல்லபடியாக இருக்கவேண்டும் என நினைத்தாலும் நம்மைப் பாதிக்கும் என்கிறாயே.

தாயார் : எதிரிக்கு வாழ்வில் நல்லது செய்வது பெருந்தன்மை.

கணவர் : சூட்சுமத்தில் அதுவும் நம்மைப் பாதிக்குமே.

தாயார் : பாதிக்கும் என்பது உண்மை. அதுவும் மனப்பான்மையைப் பொருத்தது.

கணவர் : அது நாம் பார்த்தோமே. தாம் பொய் சொல், தம் அதிர்ஷ்டத்தை தவறு செய்து அழித்து, பிறகு முன்னுக்கு வர முயலும்பொழுது அரெஸ்ட் வாரண்ட் வந்ததை விலக்கியதும், அவர் சொத்துப் பெற முயன்றதும் என்ன ஆயிற்று? அதே அரெஸ்ட் வாரண்ட் உதவியவருக்கு வந்தது. அதேபோல் சொத்தும் வந்தது.

தாயார் : இரண்டும் அதேபோல் நடந்தன. வந்த அரெஸ்ட் வாரண்ட்டால் அரெஸ்ட் ஆகவில்லை. இருவரும் அப்படியே. கடன் வாங்கி சொத்து வந்தது. அதுவும் இருவருக்கும் ஒரே மாதிரி.

கணவர் : இவற்றையெல்லாம் பார்த்தால் உடனே மாறவேண்டும் எனத் தோன்றுகிறது. மாறுவது கஷ்டமா?

கணவர் மனமாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார். இனி மாறுவார் எனத் தாயாருக்குத் தோன்றியது.

தாயார் : அடுத்தவர் வீட்டில் போய் அவ்வளவு நாள் இருந்தது தவறு எனத் தோன்றவில்லை, கோடி ரூபாய் நஷ்டம் வைத்தது, பொறுப்பில்லாமல் வேலையை விட்டுவிட்டு வந்தது, நல்ல பணத்தைக் கறுப்புப் பணமாக்கியது, வம்புக்காரனைத் தூக்கிவிட்டது, ஆபத்தை விலைக்கு வாங்கியது, நல்ல திட்டங்களை நேரடியாக எதிர்த்தது, சம்பாதிக்கத் திறமையில்லாதது, எதுவுமே தப்பாகத் தெரியவில்லை. மீண்டும் அதுபோன்ற காரியங்களைச் செய்ய ஆர்வமாகப் பேசுவதையும் பார்த்தீர்களல்லவா?

கணவர் : இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தால் என்ன வரும்?

தாயார் : தெம்பில்லாமல் பொறுத்துக்கொண்டால் மீண்டும் வரும். அறிவோடு அர்த்தத்துடன் பொறுத்துக் கொண்டால் அத்தனையும் வரும்.

கணவர் : நீ சொல்பவர் எதையும் சாதிக்கவில்லை.

தாயார் : மற்றவர் எதையும் சாதிக்க விடமாட்டார். சும்மா பேசுவார். சிறிய புத்தி, சின்ன மனம், பொய் சொல்ல மாட்டார். காசு சம்பாதிக்க முடியாது. செலவே செய்ய மாட்டார். எந்தப் பெரிய காரியத்திற்கும் தடையாக இருப்பார், நல்லவர், எதையும் செய்யும் திறமையற்றவர். செய்த தவற்றை மீண்டும் செய்வேன் என்பவரை என்ன செய்ய முடியும்?

கணவர் : நீ சொல்பவரை எனக்குத் தெரியும். ரொம்ப நல்லவராயிற்றே. அவரே தேறமாட்டார் எனில் நான் எப்படித் தேறுவேன்?

தாயார் : நல்லவரா, கெட்டவரா என்பதும், தேறுவாரா, தேறமாட்டாரா என்பதும் வேறு. ஒன்று சுபாவம், அடுத்தது முடிவு. தேறவேண்டும் என முடிவு செய்தவர் தேறுவார். சுபாவம் சரியில்லை என்பது வேறு, அதை வலியுறுத்துவது என்பது வேறு. வலியுறுத்தினால் வழியில்லை, வலியுறுத்தினால் வலியுண்டு.

கணவர் : கோர்ட்டிற்குப் போய் ஜெயித்த கேஸை இப்பொழுது கிளறுகிறார்கள் எனில் என்ன செய்வது? தம்பிகட்குப் பங்கு கொடுக்கக் கூடாது என இவர் மனம் நினைக்கும்பொழுது இவர் பங்கை எடுத்துப்போக ஊழல் ஆபீசர்கள் நினைக்கிறார்கள்.

தாயார் : ஊழல் ஆபீசர்கள், இவர் மனத்தின் ஊழலைக் காட்டுகிறது. சூழல் பலமாக இருப்பதால் அந்த ஊழல் ஆபீசர்கள் அனைவரும் மாற்றலாகிப் போய்விட்டனர்.

கணவர் : இரண்டு பக்கமும் சக்தி வேலை செய்கிறது.

தாயார் : நாம் எந்தப் பக்கமிருக்கிறோம் என்பதே கணக்கு. நாம் வறுமையைப் பிரச்சினை என்கிறோம். அது போக செல்வம் வருவதால் ஏராளமான பிரச்சினைகள் உண்டு. குடி மலிவது பணம் பெருகுவதால்தான்.

கணவர் : கொஞ்சமாகக் கொடுத்து அதிகமாகப் பெற நினைப்பதே பிரச்சினைக்கு ஆரம்பம்.

தாயார் : அது அகந்தையில் உள்ளது. பிறரைத் துன்புறுத்தி சந்தோஷப்பட விரும்புபவர், துன்புறுத்த முடியாவிட்டால், துன்பம் அனுபவிக்கிறார். முகம் வாடிப் போகிறது.

கணவர் : அவர் கெட்டவர் என்பது வேறு. ஏன் அப்படி?

தாயார் : சந்தோஷம் நாடுபவர், பெறும் திறன் அற்றவரானால், தம்மால் முடிந்த வகையில் பெற முயல்கிறார்.

கணவர் : எந்த வகை?

தாயார் : பிறரைச் சந்தோஷப்படுத்தி தாம் சந்தோஷம் அனுபவிக்கும் மனமில்லை. பிறரைக் கொடுமைப்படுத்தி சந்தோஷப்படலாம். அதற்குண்டான வலிமையில்லை. ஏமாற்றம் வருத்தம் தருகிறது.

கணவர் : எவரையும் கொட்ட முடியவில்லை என்ற கஷ்டமா?

தாயார் : நம்மால் முடிந்த அளவில் சந்தோஷம் பெற முடியவில்லையே என்ற வருத்தம். மட்டமான - தவறான - மனிதரை இப்படிப்பட்டவர் ஆதரிப்பார்கள்.

கணவர் : ஆமாம். அது ஏன்?

தாயார் : வலிமையற்ற கெட்ட மனிதர், வலுவான கெட்ட மனிதரைப் பார்த்து அவர்கள்போல் தாமிருக்க முடியவில்லையே என வருத்தப்பட்டு, அவர்களை ஆதரிப்பார்கள்.

கணவர் : பார்ப்பதற்கு அது நம்பமுடியாமலிருக்கும்.

தாயார் : அத்துடனில்லை. 10 பேர் மத்தியில், ஆபீசில், பொது இடங்களில் இந்த வலுவானவர்கள் தங்களை ஆதரிப்பவர்களை அவமானப்படுத்துவார்கள். அப்படி அவமானப்படுத்தினால் அவமானப்படுபவர்கள் சிரித்து மழுப்புவார்கள். அடுத்த நிமிஷம் அவர் பின்னால் போவார்கள்.

கணவர் : இவற்றையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். எனக்குப் புரியவில்லை.

தாயார் : உலகத்து இரகஸ்யம் ஒன்று இங்குண்டு. சிறியது பெரியதை விரும்பி நாடும். அவமானம் பொருட்டன்று. அவமானப்படுத்தினால் பெருமைப்படுவார்கள்.

கணவர் : என்ன பலன் கிடைக்கும்?

தாயார் : அவமானப்படுபவனுக்கு பொக்கிஷம் போன்றது நஷ்டமாகும். இந்த இடத்தில் நஷ்டம் வந்தபிறகும் அவனால் ஏற்கமுடியாது, மாற முடியாது.

கணவர் : நாம் அப்படியிருக்கக் கூடாது. பெரிய இடம் எனில் எல்லாமே தாமே மாறிவிடுகின்றன.

தாயார் : அப்படிப்பட்டவர்க்கு அன்னையில்லை, அடியோடில்லை.

கணவர் : நானும், பிள்ளைகளும் அப்படியிருக்கிறோம். நாங்கள் மாற முயல்கிறோம்.

தாயார் : மாறினால் சமர்ப்பணம் பலிக்கும்.

கணவர் : நீ சமர்ப்பணத்தைப் பற்றிப் பேசினால் எனக்கு கொஞ்சநஞ்சம் புரிந்ததும் போய்விடுகிறது.

தாயார் : பருத்தி புடவையாகக் காய்த்தது, வெட்டிக்கொண்டு வா எனில் கட்டிக்கொண்டு வருவான், எள் என்றால் எண்ணெயாக நிற்கிறான் என்பவை சமர்ப்பணத்திற்குப் பொருந்தும். நாம் ஒரு வேலை செய்கிறோம் என்றால் அந்த வேலைக்குரிய பலன் கிடைப்பது வழக்கம். அந்த வேலையின் பின்னால் உலகமே இருப்பதால் அந்த உலகம் பலிப்பதும், அதன்பின் பிரம்மமும், பிரம்ம ஜனனமும் இருப்பதால் அவை பலிப்பதும் சமர்ப்பணத்தாலும், சரணாகதியாலும் நடப்பவை. ஒரு ஸ்தாபனத்திற்கு வேலை செய்ய வந்தவர் சமர்ப்பணத்தால் அதன் உச்சிக்கு வருவதும்,

சரணாகதியால் அந்த ஸ்தாபனத்தையே தனக்குரியது ஆக்கிக்கொள்வதும் சமர்ப்பணம் பிரம்மத்தையும், பிரம்ம ஜனனத்தையும் வெளிப்படுத்துவதாகும்.

கணவர் : இவையெல்லாம் பெரிய விஷயங்கள்.

தாயார் : சமர்ப்பணமும், அன்னையும் பெரிய விஷயங்கள்.

கணவர் : நமக்கில்லை.

தாயார் : இல்லை என்றால் இல்லை, உண்டு என்றால் உண்டு.

கணவர் : தலை சுற்றுகிறது.

தாயார் : நமக்குண்டு, இல்லை என்பது நமக்கில்லை. நமக்கு வேண்டியவை நமக்குண்டு. ஒரு மகசூல் தவறியதால் நிலமே வேண்டாம் என சொல்வது தரித்திரம்.

கணவர் : 85,000 வருமானமானாலும் நீ சொல்லி நான் ஏற்கமாட்டேன் என்பது தரித்திரத்தின் சின்னம். அதுவும் உன்னால் 100 ரூபாய் முழுசாக வசூல் செய்ய முடியவில்லை என்றபொழுது.

தாயார் : நாம் செய்யக் கூடாது, செய்தால் ஒட்டிக்கொள்ளும், தரித்திரத்தின் பாஷையை வரிசையாக எழுதி விலக்க முயலலாம்.

கணவர் : தொடாமலே ஒட்டிக்கொள்ளும்பொழுது எப்படித் தொடுவது?

தாயார் : எந்தச் செயலும் அன்னையுள்ளார் என்பதைக் கற்றுக்கொண்டால் போதும்.

கணவர் : வம்புக்காரர்களை வேண்டியவர்களாக நினைத்து வலியப் போய் உதவாமலிருந்தால் தொந்தரவே வாராதோ?

தாயார் : அதில் தேறியாகவேண்டும், கடினம், அவசியம் செய்யவேண்டும்.

கணவர் : பிள்ளைகள் எல்லாம் போய்விட்டார்களே இப்பொழுது எனக்கு விளக்கம் சொல்லேன். indulgence,enjoyement அழிவு, ஆனந்தம், என்ன தொடர்பு?

தாயார் : மேருந்தால் இரண்டும் ஆனந்தம், கீழிருந்தால் இரண்டும் அழிவு. நடுவிருந்தால் choice,discipline கட்டுப்பாடு வேண்டும். இதைப் பிள்ளைகட்கே சொல்லலாம். இப்பொழுது சொன்னால் வேட்டை ஆடுவார்கள். மனம் பக்குவப்பட்டால் சொல்லலாம்.

கணவர் : பாக்டரி, கம்பெனியில் நடப்பவை எதுவும் நம்பமுடியவில்லையே. பார்ட்னர் தகப்பனார்போல் இருக்கிறார்.

தாயார் : அவர் முனைந்து அன்னையை ஏற்க முயல்கிறார். நிறைய விஷயங்கள் சொல்லாமல் வைத்திருக்கிறார். சொல்லாதவரை நல்லது. நல்லதை வலியுறுத்துகிறார். அதிர்ஷ்டம், விஷயம், நாம் எங்கிருக்கிறோம் என்பது. Higher consciousness, மேலேயிருக்கிறோமா,lower consciousness  கீழேயிருக்கிறோமா என்பதே.

கணவர் : சரியாக மறுபடியும் சொல்.

தாயார் : கீழேயுள்ளவர் (lower consciousness) எப்பொழுதும் அடம் பிடிப்பார்கள். அவர்களை வேண்டியவராகக் கொண்டால் அவர்களுடைய அடம் உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கும்.

கணவர் : அதுவும் பார்த்தோம். தஞ்சாவூரில் கண்டோம். தமக்கையைவிட முடியாமல் ஆஸ்பத்திரிக்குப் போனார்.

தாயார் : அந்த ஆபத்துகளில் சேரக்கூடாது.

கணவர் : சேராமலிருக்க முடியவில்லையே.

தாயார் : ஆப்பரேஷன்தான் வரும். Nightmare வரும். நல்ல response கொடுத்தால் பூகம்பம் வரும்.

கணவர் : கீழேயிருந்தால் வற்புறுத்தத் தோன்றுமா?

தாயார் : தம்மைப் பெரிய பக்தராக வைத்துக்கொள்வார்.

கணவர் : தொந்தரவு low consciousness இல்லை. அன்னையைத் துணைக்குக்கொள்வதால் என்று சொல்லு.

தாயார் : அதுவே அகங்காரம். அகங்காரம் lower consciousnessதானே.

கணவர் : எனக்கு ஒரு வழி சொல்லேன்.

தாயார் : பார்ட்னர் மாதிரி மனமும், அன்னைமீது பூரண நம்பிக்கையும் இருந்தால் போதும்.

கணவர் : பார்ட்னர் வைரமாயிற்றே, நான் அதுபோல் ஆக முடியுமா?

தாயார் : அவர் பெற்ற அதிர்ஷ்டத்தைக் கொடுத்திருக்கிறாரே, அவர்போல ஆக வேண்டாமா?

கணவர் : அதுவும் சரி. எங்கே ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது?

தாயார் : ஆசையும், ஆனந்தமும் மனிதனுக்கு முக்கியம். தாழ்ந்தவன் ஆசையை நாடுகிறான். உயர்ந்தவன் ஆனந்தத்தைத் தேடுகிறான். ஒரு நிமிஷம்கூட மனிதன் அனுபவிக்கத் தவறுவதில்லை.

கணவர் : வர வர, அது எனக்குப் புரிகிறது.

தாயார் : அனுபவிப்பதே வாழ்க்கை. அனுபவிக்காமல் வாழ முடியாது. பரம்பரையாக அனுபவிப்பது தவறு என்பது கருத்து. கருத்து எதுவானாலும் நடப்பது அனுபவிப்பதே. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்பது பழமொழி The heart never grows old,it grows richer and sincere . ஸ்ரீ அரவிந்தம் அனுபவிப்பதை ஆமோதிக்கின்றது. அனுபவிப்பது நல்லதாக உயர்ந்ததாக இருக்கவேண்டும். அதிகாரம் செய்வதற்கு அலாதிப் பிரியமுண்டு. கொடுமை செய்ய விரும்புகிறவர் ஏராளம். கேலி செய்வதில் எவரும் விலக்கில்லை. அன்பாகப் பழகினால் அதிகாரத்தைவிடப் பிரியம் எழும். கனிவு இதயத்தை, கொடுமையைவிட நிரப்பும். பாராட்டுவது கேலியை விட ஆனந்தம் தரும். கெட்டதைவிட்டு நல்லதிற்கு மாற முடியுமா என்பதே கேள்வி. அனுபவித்தபடி இருக்கவேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

கணவர் : நாம் நல்ல பழக்கங்களை மனதளவில் ஏற்கவேண்டும். மட்டமான மனிதராக இருக்கக்கூடாது. அதில் பெருமைப்படக் கூடாது என்பதே நீ சொல்வது.

தாயார் : அதை ஏற்பது அதிர்ஷ்டத்தை ஏற்பது. தானே அதை அறிவது self-awarenessஆன்மா தன்னை வாழ்வில் உணர்வது. பார்ட்னரைப் பார்த்து நாம் கற்க வேண்டும். பார்ட்னர் நம்மைப் போற்றுகிறார். அவருக்குள்ள நல்ல குணங்கள் பெரியவை, நினைக்க முடியாது. அன்னை நமக்குப் பார்ட்னராக வந்திருக்கிறார்.

கணவர் : அதுவே சரியா, தெரியவில்லை.

தாயார் : எங்கு அன்னை நேரடியாக வர முடியவில்லையோ, அங்கு அடுத்தவர்மூலம் வருகிறார். தரித்திரம் அப்படி வருபவரைக் கொடுமைப்படுத்தும், தூற்றும், சந்தேகப்படும், துரோகம் செய்யும்.

கணவர் : அன்னையை அறிவது அதிர்ஷ்டம், ஏற்பது அருள், போற்றுவது பேரருள் எனக் கூறலாம் போலிருக்கிறதே.

தாயார் : அன்னை காட்டிக்கொடுக்கவில்லை, ஊட்டிவிடுகிறார். மனிதன் அவர் விரலைக் கடிக்கிறான்.

கணவர் : பிள்ளைகளிடம் வேலை அதிகமாக இருக்கிறது.

தாயார் : வேலை உள்ளேயிருக்கிறது, பிள்ளைகளிடமில்லை.

கணவர் : எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது எப்பொழுதும்.

தாயார் : படிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும், நடைமுறையைப் பார்க்கவேண்டும், அன்னையை எல்லா இடங்களிலும் காணவேண்டும், காண்பதை மனம் ஏற்கவேண்டும்.

கணவர் : ஒரு மனிதனைப் பின்பற்றலாம், அன்னையைப் பின்பற்ற முடியாது.

தாயார் : பார்ட்னரை ஏற்றுக்கொள்ளுங்கள்.

கணவர் : பார்ட்னர் உன்னிடம் கற்றுக்கொள்கிறார். நான் உன்னை ஏற்கவேண்டும். மனம் மனைவியை ஏற்க மறுக்கிறது. 85,000 இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றவர் போலிருக்கிறது. நான் சரியில்லை எனத் தெரிகிறது. மாற மனம் வரவில்லை.

தாயார் : என்னை விடுங்கள், அன்னையைப் பாருங்கள்.

கணவர் : அன்னை எனக்குத் தெரியவில்லை. மனிதரைத் தெரிகிறது.

தாயார் : சரி, போவோம்.

கணவர் : போகவும் மனமில்லை, ஏற்கவும் முடியவில்லை, இதுதான்choice என்பதா? நாம் இப்படியிருந்தால் பிள்ளைகள் எப்படியிருப்பார்கள்?

தாயார் : நாம் செய்வது நமக்கே திரும்பிவருவதை நாம் அறியவில்லை.

கணவர் : தெரியாதது பாதி; தெரிந்தாலும் பொருட்படுத்தாது மீதி.

தாயார் : துரோகம், அலட்சியம், சூன்யம் போன்றவற்றைக் கருதாமல் பண வரவைக் கருதுவோம்.

கணவர் : எதைச் சொல்கிறாய்?

தாயார் : 20 ஆண்டுகள் சேவை, புதுப் பாடமுறையைச் சாதித்தது. பலனைக் கண்டுபிடித்தவர் தங்களுக்குப் பணம் ஏராளமாக வரக் காத்திருக்கிறது என்று அறியவில்லை.

கணவர் : பணம் வருமா? சேவைக்குப் பணம் வருமா? வசூல் செய்யலாம் என்பதா?

தாயார் : பணம் வரத் தேவையானவை இரண்டு.

  1. அடிப்படையான சாதனை.
  2. பணத்தைச் சரிவரப் பயன்படுத்துவது.

இவற்றுள் முதற்பகுதியை இவர்கள் சிறப்பாகச் செய்துவிட்டார்கள். இரண்டாம் பகுதியைப் பின்பற்றினால் பணம் சுலபமாக வரும்.

கணவர் : தானே வருமா?

தாயார் : எப்படி வந்தால் என்ன? வரும். தானேயும் வரும்.

கணவர் : என்ன செய்யவேண்டும்?

தாயார் :

  1. முதலில் பணம் வரும் என நம்பவேண்டும்.
  2. அதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். சாதனைக்குப் பணம் உண்டு என்பது முக்கியம்.
  3. கணக்கெழுத வேண்டும்.
  4. பணம் வரத் தேவையான சக்தி நம் சேவை விரிவடைவது.
  5. விரயம் செய்யக்கூடாது.
  6. தாராளமாகச் செலவு செய்யவேண்டும்.
  7. வேலையில் ஈடுபாடு அதிகரிக்கவேண்டும்.
  8. பணம் உற்பத்தியாகும் இடங்களில் உற்பத்தி செய்யவேண்டும்.

கணவர் : இவையெல்லாம் இவர்கட்குத் தெரியுமா?

தாயார் : தெரியும், முழுவதும் தெரிவது எளிது. அவர்கள் பராமுகமாக இருக்கிறார்கள்.

கணவர் : நாம் ஏன் இதைப் பின்பற்றக் கூடாது?

தாயார் : செய்யலாம். அவர்கள் முதற்பகுதியை முடித்து விட்டார்கள். நாம் அதை இன்னும் செய்யவில்லை.

கணவர் : இப்பொழுது செய்வோம்.

தாயார் : செய்யலாம். தெரிந்ததை முடிப்பது நல்லது.

கணவர் : மனம் முக்கியம்.

தாயார் : மனம் ஏற்று, தெரிந்ததை முடித்தால் ஆரம்பமாகும். பள்ளிக்கூடத்திற்குப் பணம் வந்தது எப்படி என நினைவிருக்கிறதன்றோ?

கணவர் : 3, 4 வருஷங்கள் வேலை நடந்து, அனைவரும் பாராட்டும் நிலைக்கு வந்தபின் அதன் முக்கியஸ்தர் மனத்தால் பெரும்பணம் ஈட்டலாம் என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. இப்போராட்டம் 1 1/2 வருஷமாக நடக்கிறது. முக்கியஸ்தருக்குப் பணம் எனில் நன்கொடை.

தாயார் : நன்கொடை என்பது வசூல் செய்வது. நான் சொல்வது பணம் நம்மைத் தேடி வருவது.

கணவர் : அது நீ சொன்னது, நினைவிருக்கிறது. அவர் நன்கொடையை விட்டு நல்லெண்ணத்தை ஏற்கிறேன் என்று ஒரு நாள் வாயால் சொன்னார்.

தாயார் : அடுத்த 10 நிமிஷத்தில் வந்த போன் ஓராண்டிற்குத் தேவையான பணத்தைக் கொண்டு வந்தது.

கணவர் : பள்ளிக்குப் பணமா?

தாயார் : பணம் வந்தது, பள்ளிக்கு என்றதன்று. நாம் பள்ளிக்குத் தரலாம், விசேஷம் மனத்தின் முடிவு. உடனே பெரும் பணம் வருவது நாம் கருதவேண்டியது.

கணவர் : நமக்கு அப்படி நடக்குமா?

தாயார் : பள்ளியைப்போல் சாதனை, முக்கியஸ்தரைப்போல் முடிவு இருந்தால் வருவது சிறியதாக இருக்காது.

கணவர் : ஏன்?

தாயார் : இதுவரை நடந்தது (மனதில்) பெரிய வேலை. பெரிய வேலைக்குப் பெரிய பலன், சிறியதில்லை.

கணவர் : பள்ளிக்கு அப்படியா?

தாயார் : இதுவரை பள்ளியில் செலவு செய்ததற்குச் சமமாக வந்துள்ளது.

கணவர் : அது பெரியது.

தாயார் : பெரியதை எதிர்பார்த்தால் சிறியது வரும். எதிர்பார்க்கக் கூடாது.

கணவர் : என்ன செய்யவேண்டும்?

தாயார் : நாம் மனத்தில் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும்.

கணவர் : அதற்கு அவ்வளவு சக்தியா?

தாயார் : செய்து பார்த்தால் தெரியும். ஒரு வேலை என்று போனால் நாம் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறோம். பார்க்கப்போனால், யார் நம் வேலையைக் கெடுக்கக்கூடியவர்கள், அவர்களிடம் இருந்து எப்படி நாம் நம்மைக் காப்பது என அறிவது வேலையை விட முக்கியம்.

கணவர் : பொறாமைக்கார எதிரிகளைச் சொல்கிறாயா?

தாயார் : அதிலிருந்து தப்ப முடியாவிட்டால், ஆரம்பிக்க முடியாது. அது அவசியம். நமக்கு எதிரிகள்,

  1. பொறாமைக்காரர்கள்,
  2. நாம் செய்யும் வேலை சமூகத்தில் யாரை பாதிக்கின்றதோ அவர்கள்,
  3. நம் வேலை எந்தத் தீய சக்திக்கு ஆபத்தோ அது,
  4. நமது புதிய ஜீவியத்திற்கு எதிரான பழைய ஜீவியம்.

கணவர் : இவையெல்லாம் தத்துவங்களாக இருக்கின்றன.

தாயார் : பொறாமைக்காரர் புரியும். நாம் லஞ்சம் கொடுக்காமல் காரியத்தை முடிக்கிறோம். அதனால் லஞ்சம் பெறுபவரால் நமக்கு எதிர்ப்பு வரும். லஞ்சம் தருபவராலும் வரும். நல்ல பொருளை (product) உற்பத்தி செய்கிறோம். தரக்குறைவான பொருளை உற்பத்தி செய்பவர்கள் எதிரிகள். சமூகத்தை ஒட்டிப் போகவில்லை, அதனால் சமூகமே எதிரி. சத்தியத்திற்கு வேலை செய்கிறோம், அதனால் பொய் எதிரி.

கணவர் : உலகமே நமக்கெதிரியானால் எப்படிப் பிழைப்பது?

தாயார் : அன்னை நம் பக்கம். அதை மட்டும் நம்பவேண்டும்.

கணவர் : இவர்களிடமிருந்து எப்படித் தப்புவது?

தாயார் : நாம் சரியாக இருக்கிறோம் என்ற பெருமை அவர்களைத் தூண்டும்.

கணவர் : அடக்கம் வேண்டும்.

தாயார் : அடக்கம் அவசியம். அடக்கத்துடன் பொறுமையும், சமர்ப்பணமும் வேண்டும்.

அத்துடன் போன கணவர் 10 நாட்கள்வரை மேற்சொன்னபடி பேச வரவில்லை. வேலையாக இருந்தார். ஒரு நாள் வந்தவர் தம்

பழைய நண்பனைச் சந்தித்த விஷயத்தைச் சொன்னார். தம் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்களை நண்பனிடம் கூறியிருக்கிறார். அவனுக்கும் ஓரளவு தெரியும். அவனுக்கு உதவி செய்ய இவர் துடித்துவிட்டார். அவன் கேட்ட உதவி சிறியது, செய்வது எளிது. செய்வதாக வாக்குக் கொடுத்துவிட்டார். அந்த உதவி இவரை ஆபத்திற்குக் கொண்டு போகும் என இவருக்குத் தெரியவில்லை. அந்த நண்பன் பொதுவாகக் கோள் சொல்பவன். இவர்மீது சொல்லிய கோள் அதிகம். இவருக்கு சில தெரியும், பல தெரியா. தெரிந்தாலும் பொருட்படுத்தமாட்டார். மட்டமானவர்க்கு, கெட்ட எண்ணமுள்ளவர்க்கு, உதவி செய்தால் நம் வேலை கெடும் என அறிவார். இந்த நண்பனுக்குக் கெட்ட எண்ணம் என இவர் மனம் ஏற்காது. தாயார் இதைப் பற்றிப் பேசினால் எடுபடாது. அவர் சட்டப்படிப் பேசக்கூடாது.

கணவர் : பாலு லைசென்ஸ் வாங்க முடியவில்லை என்றான். நான் வாங்கித் தருகிறேன் என்றேன். 2 வருஷமாக நடக்கிறான், பாவம். நீ என்ன சொல்கிறாய்?

தாயார் : சரி, பார்ப்போம்.

கணவர் : ஏன் நான் செய்தது சரியில்லையா? நான் இரண்டு நாளைக்குமுன் பார்ட்னர் தம்பியைப் பார்த்தேன். அவர், "நமக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்பொழுது இந்தப் பரம வைரி டிபார்ட்மெண்ட் தலைவராக வந்திருக்கிறான்'' என்றார். அதுவே நமக்கு முக்கியமான டிபார்ட்மெண்ட்.

தாயார் : எப்பொழுதிலிருந்து?

கணவர் : 4 நாட்களாக.

தாயார் : 4 நாட்களுக்குமுன் வீட்டில் எதுவும் விசேஷம் இல்லையே.

கணவர் : கம்பெனியிலும் விசேஷமில்லையே.

பெரியவன் : அப்பா, உங்கள் நண்பரைப் பார்த்தேன். வீட்டிற்கு வரச் சொன்னார்.

கணவர் : உதவி செய்கிறேன் என்றால் வந்து பெற்றுக் கொள்வானா, வீட்டிற்கு வரச் சொல்கிறான். கொஞ்சம்கூட மரியாதையில்லை. இவனுக்கு உதவ நினைத்ததால்தான் எதிரி வந்தானோ?

தாயார் : நேரம் ஒத்து வருகிறதே. கணவர் : நம்ம லைசென்ஸுக்கு ஆபத்து வருமா? எப்படி இவனிடமிருந்து தப்புவது? செய்தது தப்பு என பிரார்த்தனை செய்கிறேன்.

சிறியவன் : அப்பா, உங்கள் நண்பர் போனில் கோபமாகப் பேசினார். உங்களுக்காக வீணாகக் காத்திருந்தாராம். இனி வரவேண்டாம் எனக் கோபமாகக் கூறிவிட்டார்.

கணவர் : அன்னை பெரிசு, நான் ஆபத்திலிருந்து தப்பினேன்.

தாயார் : இந்த சக்திகள் நமக்கெதிராகப் போய் தாக்குவதைவிட நாமே போய் வம்பை விலைக்கு வாங்குவதே அதிகம்.

கணவர் : இவன் விஷயத்தில் நானேதானே உதவிக்குப் போனேன்.

தாயார் : எதிரி வெளியில் இல்லை, உள்ளே இருக்கிறான். "பிறர் தர வாரா'' என்று சங்க இலக்கியம் கூறவில்லையா? பழைய தலைவர்கள், முதலாளிகள், ஆசிரியர்கள், குரு, குடும்பத்தில் பெரியவர்கள், என மனம் இதமாக அவர்களை நாடுவது இயற்கை. அதனால் ஆபத்து வரத் தவறாது.

கணவர் : ESI டைரக்டரால் வந்த தொந்தரவுக்குக் காரணம் அதற்குமுன் அவர் அண்ணனுக்குக் கம்பெனி முதலாளி எழுதிய கடிதம் என்றொருதரம் பேசினோம்.

தாயார் : கம்பர் விழா கொண்டாடுபவரைப் பாராட்டி தமிழ் உரைநடையைப் பற்றி கம்பெனி முதலாளி கடிதம் எழுதினார். அவர் தம்பி 5 வருஷங்கள் கழித்து 1 1/2 இலட்சம் அபராதம் போட்டுவிட்டார். அது கம்பெனி முதலாளிக்குப் புரியுமா? அந்தக் கம்பெனிக்கு வந்த அத்தனைத் தொந்தரவுகளும் முதலாளியே தேடிப் போனவைதாமே.

  1. பழைய முதலாளிக்கு உதவினார், மகசூல் போயிற்று.
  2. பழைய ஆசிரியருக்குச் சமாதி புஷ்பம் அனுப்பினார், வீட்டு மேல் கேஸ் வந்தது.
  3. பழைய தலைவருக்கு வீடு இனாம் கொடுக்க நினைத்தார், சொத்து மேல் கேஸ் வந்தது.
  4. பழைய நண்பனுக்குக் கைமாற்றுக் கொடுத்தார், மானம் போயிற்று.

கணவர் : இவையெல்லாம் நல்ல குணங்களாயிற்றே.

தாயார் : யோகம் குணங்களைக் கடந்தது.

கணவர் : சமர்ப்பணம் செய்ய முடியாதோ?

தாயார் : சமர்ப்பணம் செய்திருந்தால் இந்த வேலைகளுக்கு எல்லாம் போயிருக்கமாட்டார், கம்பெனி முதலாளி. அவருக்குச் சமர்ப்பணம் தோன்றவில்லை. தோன்றியிருந்தால் முடிந்திருக்காது.

கணவர் : ஏன்?

தாயார் : மனம் செய்யவேண்டும் என்பதைக் கைவிடாமல், எப்படிச் சமர்ப்பணம் பலிக்கும்?

கணவர் : நாம் செய்ய ஆசைப்படுவதைச் சமர்ப்பணம் செய்ய முடியாதோ?

தாயார் : ஆசையை விட்ட பிறகே சமர்ப்பணம்.

கணவர் : ஆசையைச் சமர்ப்பணத்தால் வெல்லலாம் என நினைத்தேன்.

தாயார் : ஆசையை விடுவது நம் வேலை. நம் வேலையை நாமே செய்யவேண்டும்.

கணவர் : ஆசையை விடாமல் சமர்ப்பணம் செய்து பார்த்தால்....

தாயார் : சமர்ப்பணமாகாது.

கணவர் : ஏன்?

தாயார் : அந்தச் சமர்ப்பணம் ஆசையைவிட உதவும்.

கணவர் : புரியவில்லை.

தாயார் : சிந்தனை எழுந்தால் சமர்ப்பணமில்லை. வேலை வந்தவுடன் சமர்ப்பணம் உடன் எழுந்தால் அது பலிக்கும். சிந்தனைக்கோ, உணர்ச்சிக்கோ இடையில் வேலையில்லை. இருந்தால் சமர்ப்பணம் பலிக்காது.

கணவர் : எனக்குச் சமர்ப்பணம் வாராது. பிரார்த்தனை வரும். பிரார்த்தனை பலிக்கும் என்பதால் எனக்குப் பிரார்த்தனை போதும். அன்னை பக்தன் என்பதால் எல்லாப் பிரார்த்தனைகளும் பலிக்க வேண்டுமல்லவா?

தாயார் : பிரார்த்தனையின் உண்மை பலிக்கும். பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறு பிரார்த்தனை பலிக்கும்.

கணவர் : அன்னை பலிக்கும் என்பது பொய்யா? நான் ஏமாந்து விட்டேனா?

தாயார் : பொய்யில்லை, ஏமாற்றமில்லை, புரியவேண்டும்.

கணவர் : புரியும்படிச் சொல்லேன்.

தாயார் : சொன்னால் புரியும், நடக்காது.

கணவர் : ஏன்?

தாயார் : சொல்வது புரிவதற்காக, நடத்துவதற்காக அன்று.

கணவர் : நடக்கின்றமாதிரி சொல்ல முடியாதா?

தாயார் : முடியாது, முடிந்தால் ஒரு முறைக்கு மேல் சொல்லக் கூடாது.

கணவர் : அந்த ஒரு முறை சொல்லேன்.

தாயார் : நடந்தவரைக்கும் அப்படிச் சொன்னதுதான்.

கணவர் : ஏன் என் பிரார்த்தனை பலிக்கக்கூடாது?

தாயார் : பிரார்த்தனை என்பது நம் ஜீவனுடைய தேவை.

கணவர் : பலிக்கவேண்டியதுதானே.

தாயார் : ஜீவனுக்கு வேண்டிய அளவில் பலிக்கும்.

கணவர் : அந்த அளவை நிர்ணயிப்பது யார்?

தாயார் : நாம்.

கணவர் : நான் அன்னையைத் தவறாகப் புரிந்துகொண்டேனா? கண்ணாடி போட்டுக்கொண்டால் எழுதப் படிக்கத் தெரியாதவர்க்குப் படிக்கத் தெரியும் என நம்புவதுபோல் புரிந்துகொண்டேனா?

தாயார் : கண்ணாடி கண்ணில் உள்ள கோளாற்றைச் சரி செய்யும். அறிவு தாராது.

கணவர் : எனக்கு எல்லாம் பலிக்கும் அன்னை வேண்டும்.

தாயார் : உள்ளேயுள்ள அன்னைக்கு எல்லாம் பலிக்கும்.

கணவர் : அன்னைக்கு லிமிட் உண்டு என்று சொன்னாயே.

தாயார் : நாம் அன்னையை அழைக்கும்பொழுது நமக்குள்ள

லிமிட் அன்னைக்குரிய லிமிட்டாகத் தெரிகிறது.

கணவர் : இந்த அன்னைக்கு லிமிட் இல்லையா?

தாயார் : நாமிருந்த இடத்தில் அன்னை வருவதால் லிமிட் இல்லை.

கணவர் : நான் உள்ளே அன்னையை நாடுகிறேன்.

தாயார் : உள்ளே நாடினாலும், வெளியே நாடினாலும், நாம்' நாடும்வரை லிமிட் உண்டு.

கணவர் : எப்படியும் வழி விடமாட்டேன் என்கிறாய்.

தாயார் : வழி விடுவது நாம்'.

கணவர் : நினைத்தனவெல்லாம் நடக்காதா?

தாயார் : அன்னை நினைத்தனவெல்லாம் நடக்கும்.

கணவர் : நம்முள் உள்ள அன்னை நினைத்தனவெல்லாம் நடக்குமா?

தாயார் : அன்னை கொடுப்பது அருள். ஒரு பெரிய ஸ்தாபனத்தில் இருந்தால் நமக்குரிய வருமானம் போக நாம் தேடாமல் வரும் வசதிகள் ஏராளம். நியாயமான முறையில் நமக்கு அப்படி வருவது நம் வருமானத்திற்குச் சமமாகும். அன்னை மாபெரும் ஸ்தாபனம். நாம் எந்த அளவுக்கு உழைத்து



book | by Dr. Radut