Skip to Content

பகுதி 14

சாதிக்கிறோமோ அந்த அளவுக்கு அன்னை நல்ல முறையில் உபரி வருமானம் தருவார்கள்.

கணவர் : இதுவரை இப்படி நீ பேசியதில்லையே.

தாயார் : நடப்பவற்றைக் காணும்பொழுது அப்படிப் புரிகிறது. உங்களுக்குத் தெரிந்தவரை எடுத்துப் பாருங்கள். இதுவரை அவருக்கு 25 இலட்சம் என ஓர் ஆர்டர் வரும். இம்முறை அவருக்கு 50 இலட்ச ஆர்டர் வந்துள்ளது.

கணவர் : ஆமாம்.

தாயார் : அத்துடன் என்ன வந்தது?

கணவர் : 50 இலட்சம் இனாம் வந்திருக்கிறது.

தாயார் : இரண்டும் சமம்.

கணவர் : நாம் வேலை செய்தால் பணம் வரும் என்பது சரியாக இருக்கிறது. தொகை சமமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தாயார் : ஒருவருக்குச் சமமாக உபரி வருகிறது. அடுத்தவர்க்கு அது 2, 5, 10 மடங்கு வரும்.

கணவர் : விஷயம் மனத்தைப் பொருத்ததா?

தாயார் : மனத்தின் பக்குவத்தைப் பொருத்தது.

கணவர் : பக்குவத்திற்கு அளவில்லை.

தாயார் : பணத்திற்கும் அளவில்லை.

கணவர் : கண்ணால் பார்த்தபிறகும் நம்பமுடியவில்லையே.

தாயார் : நம்பமுடியாதவை நடப்பது நல்லெண்ணத்தால்.

கணவர் : நான் சமர்ப்பணத்தை மேற்கொள்கிறேன்.

தாயார் : சமர்ப்பணத்தை ஆரம்பிப்பது பெரிய விஷயம். சமர்ப்பணம் நம்மைத் தேடி வருவது நம் சமர்ப்பணத்தின் நல்ல அறிகுறி.

கணவர் : அப்படியென்றால்.....

தாயார் : நாம் மறந்த நேரம் சமர்ப்பணம் நம்மை நினைவுபடுத்தும்.

கணவர் : அது ரொம்ப பெரிய விஷயமாயிற்றே.

தாயார் : அவ்வளவு பெரிய விஷயம் ஒரு சின்ன விஷயத்தைப் பொருத்தது.

கணவர் : எந்தச் சின்ன விஷயம்?

தாயார் : ஒருவரிடம் போனில் பேச முடிவு செய்கிறோம். உடனே சமர்ப்பணம் நினைவு வருகிறது. சமர்ப்பணம் செய்தபின் பேச முடிவு செய்தால், அது சமர்ப்பணமாகவில்லை. எவ்வளவு முயன்றாலும் சமர்ப்பணம் பலிக்கவில்லை. சரி, சமர்ப்பணம் வாராது, பேசுவோம் எனப் பேசுகிறோம். பேசவேண்டும் என்ற ஆசையும், சமர்ப்பணமும் போட்டி போடுகின்றன. ஆசை ஜெயிக்கிறது. சமர்ப்பணம் தோற்கிறது. ஆசையை விட்டால் சமர்ப்பணம் ஜெயிக்கும். சமர்ப்பணம் ஜெயித்தால் தொடர்ந்து சமர்ப்பணம் நம்மை நினைவுபடுத்தும்வரை செல்லலாம்.

கணவர் : பேசும் ஆசை சமர்ப்பணத்தைத் தோற்கடிக்கிறது.

தாயார் : விஷயம் - பேசுவது - சிறியதாக இருக்கலாம். சமர்ப்பணம் பெரியதாக இருக்கலாம். நாம்

வேலைக்காரியிடம் சண்டை போடுவது, அடுத்தவர்க்குக் குறுக்கே பேசுவது, பொய் சொல்வது, 7 தோசை சாப்பிட்டபின் 8ஆம் தோசை சாப்பிடுவது, பேரம் பேசுவது போன்ற சிறு விஷயங்களில் தங்களைக் கட்டுப்படுத்த முடியாதவர் சமர்ப்பணத்தை இழக்கிறார். கட்டுப்பாடு சிறியதானாலும் கடைசியில் பார்க்கும்பொழுது கடவுளுக்குச் சமமாகும். கணவர் : நம்பிக்கை எழ நமக்கு உதாரணங்கள் குறைவில்லை. அத்தனையும் பார்த்தபின் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.

தாயார் : இதுவரை உலகம் வழிபாட்டை மேற்கொண்டது. ஒருவருடைய நம்பிக்கையை அனைவரும் ஏற்பது அது. அன்னை அவரவர்கட்கே நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கிறார். நாம் அதைச் சென்ற ஆண்டு கரண்ட் விஷயத்தில் செய்தோம்.

கணவர் : நினைவிருக்கிறது. மாலை 3 மணிக்குக் காற்றடித்து கரண்ட் போனபின் கரண்டைக் கூப்பிட்டோம் வரவில்லை. EBயில் ஒரு tower விழுந்துவிட்டதால் 3 நாட்களாகும் கட்ட, அதன்பிறகு கரண்ட் வரும் என்றார்கள்.

தாயார் : ஒருவர் நமக்கு அந்தச் சட்டமில்லை. அழைத்தால் கரண்ட் வரவேண்டும் என்றபொழுது, அனைவரும் அவர் அழைப்பார், கரண்ட் வரும் என எடுத்துக் கொண்டார்கள். அவரவரும் அழைக்கும் பொறுப்பை ஏற்பது அன்னைச் சட்டம் என்று அவர் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டு வீட்டிற்குப்போய் அழைத்தனர். 6 மணிக்குக் கரண்ட் வந்தது.

கணவர் : எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதைவிட நம்பிக்கை ஏற்படுத்த எதுவும் தேவையில்லை. இதன்மூலம் நான் மாற முனைகிறேன். கண் பார்வைபட்டால் பொருள்கள் நொறுங்குமே, அவர் என்ன ஆனார்?

தாயார் : அவர் பெயரைக் கேட்டாலேயே எனக்குப் பயம். அவருக்கு நம்மீது பிரியம். அவர் எந்த வகையில் சம்பந்தப்பட்டாலும் விபத்து, ஆபத்து, நஷ்டம் ஏற்பட்டபடி இருக்கும், நினைவிருக்கிறதா? அவர் பிறந்த நாளன்று நம் கார் சர்வீஸுக்குப் போயிற்று. காரை மேலே தூக்கினார்கள். 4 சக்கரங்களும் தரையிலும், கார் மேலுமிருந்தது. 1 நிமிஷத்திற்குமுன் அது நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?

கணவர் : இப்பொழுது எங்கிருக்கிறார்?

தாயார் : பெரிய சம்பளத்தில் பெரிய வேலையிலிருக்கிறர். யோகம் செய்வதாகச் சொல்கிறார். பெருந் தொகையைத் தாமே முன்வந்து அளித்துள்ளார். அவர் தகப்பனார் இவரைக் கொடுமைப்படுத்தியதால் தாம் இப்படி மாறிவிட்டதாகக் கருதுகிறார். தகப்பனார் தற்சமயம் காலமாய்விட்டார். மனம் தங்கமாக இருக்கிறது. இந்த இராசிக்கும், இந்த மனத்திற்கும் தொடர்பு தெரியவில்லை.

கணவர் : நாமும் அதுபோல் மாறினால் நல்லது.

கிராமத்திலிருந்து கணவருடைய வயதான பெரியம்மாவுக்கு முடியவில்லை, படுக்கையாகிவிட்டார் என்று செய்தி வந்து அனைவரும் புறப்பட்டு போய் அவர் இறுதிக் காலம்வரை உடனிருந்து திரும்பி வந்துவிட்டனர். இறுதிச் சடங்குகளில் இக்குடும்பம் பங்கு கொள்ளவில்லை. அது வீட்டில் - குடும்பத்தில் - பெரிய

பிரச்சினையானாலும் கணவரும், மனைவியும் இவ்விஷயங்களில் தெளிவு உடையவர் என்பதால் இவர்கட்கு அது பிரச்சினையாயில்லை. பெரியவன் எலக்ட்டிரிகல் இன்ஜினீயர். அனுபவம் அதிகமில்லை என்றாலும் அபாரக் கெட்டிக்காரன். பார்ட்னர் டெல்லி போன பொழுது தற்செயலாய் ஒருவரைச் சந்தித்துப் பேசியபொழுது, power plant மின்சார திட்டத்தைப் பற்றிப் பேசியதாகவும், பார்ட்னர் பெரியவனுக்கு அது நல்ல சந்தர்ப்பம் என நினைத்ததாகவும் கூறினார். பேசியவர் பார்ட்னரை மிகவும் பாராட்டி, விரும்பியதால், கம்பெனி, அவருடைய தொடர்புகளைப் பற்றி அறிந்து தன்னிடத்திற்கு அழைத்துப்போய் தம் மனத்தைத் திறந்து பேசினாராம். "எனக்கு ஏராளமான தொடர்புகளுண்டு, திறமையுண்டு. ஆனால் எதுவும் கூடிவருவதில்லை. நீங்களும், நானும் கூடி வேலை செய்தால், கூடிவரும் என நினைக்கிறேன். எனக்கு வேண்டிய பிரெஞ்சுக்காரரிடம் நான் உங்களை அழைத்துப்போக விரும்புகிறேன்'' என்றாராம். பிரெஞ்சுக்காரரை பார்ட்னர் சந்தித்தார். அவர் இந்தியாவில் power plant போட பார்ட்னர் தேடுகிறார். நாணயமான பெரிய பார்ட்னர், 300 கோடி முதல் போடுபவர் தேவை. அந்தத் தொகை போடும் கம்பெனிகள் இந்தியாவில் சொற்பம். நாணயமானவர்கள் சொற்பம். பிரெஞ்சுக்காரருக்கு ஒரு நாணயமான பார்ட்னரை அறிமுகப்படுத்தி projectஐ எழுதி கான்ட்ராக்ட் கையெழுத்திடும்வரை பார்ட்னரை இவ்விரு பொறுப்புகளையும் ஏற்கமுடியுமா எனக் கேட்டார். பார்ட்னரைப் பார்த்தவுடன் பிரெஞ்சுக்காரர் நம்பிவிட்டார். தம் தொடர்புகள் - பாங்க் சேர்மன் - பிரெஞ்சுக்காரரைக் கவர்ந்தன. இரண்டையும் பார்ட்னர் ஏற்று வந்திருக்கிறார். சேர்மன்மூலம் 800 கோடி கம்பெனி முதலாளியை ஏற்கனவே பார்ட்னர் அறிவார். பெரியவன் திட்டத்தை எழுதுவான். பார்ட்னர் திட்டத்தை கான்ட்ராக்ட் முடியும்வரை நிறைவேற்றுவார் என்பது அவர் மனதில் உள்ளது. இதைச் செய்ய பார்ட்னருக்கு - கம்பெனிக்கு - 3% கமிஷன். திட்டம் $ 1 பில்லியன். சுமார் 6 மாதம் முதல் 12 மாதம் வரை இந்திய பார்ட்னர், பிரெஞ்சுக்காரர் இவர்களிடையே பார்ட்னருக்கும், பெரியவனுக்கும் வேலை. அவன் எழுதும் திட்டம் இருதரத்தாருக்கும்,

சர்க்காருக்கும் சம்மதமாக இருக்கவேண்டும். வெளிநாட்டு, உள்நாட்டு பார்ட்னர்கள் இலாபப் பங்கு வீதம், வேலையில் பொறுப்பு, 30 ஆண்டுகட்குரிய நிபந்தனைகள் எழுதப்பட்டு பார்ட்னர்களால் விவாதிக்கப்பட்டு இருதரத்தாரும் சேர்ந்து, பேசி, சம்மதப்பட்டு கையெழுத்தாகவேண்டும். நிபந்தனைகள் ஏராளம். 30 ஆண்டுகள் அறிவுக்கோ, கற்பனைக்கோ எட்டாத காலம். எப்படி எதை நிர்ணயம் செய்து கையெழுத்திடுவது? நாணயம், நம்பிக்கைக்கும் அளவுண்டல்லவா? அத்தனையும் சேர்மனும், பிரெஞ்சுக்காரரும் பார்ட்னரை நம்புவதால். விஷயம் ஒரு ஆண்டில் முடிந்தால் கமிஷன் 150 கோடி ரூபாயாகும். தொகை கற்பனைக்கே எட்டாதது. பார்ட்னருக்கு போகுமிடங்களிலெல்லாம் ராஜோபசாரம். நாணயம் பேசுகிறது. சம்பந்தப்பட்ட இருவரும் - பிரெஞ்சுக்காரரும், டெல்லி பார்ட்னரும் - நாணயத்திற்குப் பேர் போனவர்கள் என்பதால் வேலை என்பது உடலுழைப்பே. என்னவாகும் என்ற பயமில்லை. வீடு அடியோடு மாறிவிட்டது. அவரவரும் தம், தம் பங்கிற்கு உரியதைச் செய்ய ஆவலாக முன்வருகிறார்கள். அடிப்படை இல்லை, ஆனால் ஆர்வமிருக்கிறது. கறுப்பு நாய் வெள்ளை நாயாக மாறுவதுபோன்ற கட்டத்தில் வீடுள்ளது. குடும்பத்தில் பெரிய தலைகள் பழைய ஜீவியத்திற்குரியவை. கணவரின் பெரியம்மா காலமானது அந்த ஜீவியத்தின் அதிகாரம் நீங்கியது. அதற்கும் power plantற்க்கும் உள்ள தொடர்பைத் தாயார் மட்டும் கவனித்தார். குடும்பம் - கம்பெனி - தமிழ்நாட்டில் முதல் வரிசையிலிருந்து இந்தியாவின் முதல் வரிசைக்கு வரும் நேரம் வந்துவிட்டது. கணவரைப் பார்ட்னர் முழுவதும் நம்புகிறார். ஆனால் கணவர் முக்கியமான சமயத்தில் அசம்பாவிதமாகப் பேசிவிடுகிறார். அது அசம்பாவிதம் எனவும் அறியார். அதை மாற்றமுடியாது. மனைவி கணவனிடம் சொல்லக்கூடியதில்லை. சமர்ப்பணம்தான் செய்யலாம் என்று நினைத்தபொழுது கணவரே அந்தப் பிரச்சினையை எழுப்பினார்.

கணவர் : நான் பார்ட்னருடன் பேங்க் சேர்மனைப் பார்க்கப் போயிருந்தேன். என்னை சேர்மனுக்கு அறிமுகப்

படுத்தினார் பார்ட்னர். சேர்மன் என் படிப்பு, அனுபவம் பற்றிக் கேட்டார். Gold medalist என்று நான் கூறியதை சேர்மன் நம்பவில்லை போலும். நான் மெடலைக் கொண்டுவந்து காண்பிக்கிறேன் என்றேன்.

இச்சொல் மனைவியின் முகத்தைக் கறுப்பாக்கியதைக் கண்ட கணவர் "ஏன்? அது தவறா'' எனக் கேட்டார். கோல்ட் மெடல் எப்படிப் பேச்சிற்கு வந்தது என்றார் மனைவி.

கணவர் : நானே சொன்னேன். நானே சொல்லாவிட்டால் சேர்மனுக்கு எப்படித் தெரியும். அது தவறா? நான் எப்படிப் பேசவேண்டும் எனச் சொல், அதன்படி பேசுகிறேன்.

மனைவி : நாம் பேசவேண்டாம். சமர்ப்பணம் செய்தால் போதும். கணவர் : சமர்ப்பணம் செய்தால், கோல்ட் மெடல் வாங்கியது எப்படித் தெரியும்?

மனவி : நமக்கு கோல்ட் மெடலால் சேர்மன் அறிமுகம் ஆகவில்லையே.

கணவர் : அன்னையாலா?

மனைவி : பார்ட்னர்மூலம். அவரிடமிருந்து பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

கணவர் : நான் உன்னிடமிருந்து கற்கிறேன்.

மனைவி : இது பெரிய விஷயம். மனைவி கணவனுக்குக் கற்பிப்பது இல்லை.

கணவர் : பார்ட்னர்தான் என்னை அழைத்துப் போனார். இப்பொழுது என்ன செய்ய?

மனைவி : சமர்ப்பணம்.

கணவன் : சரி, செய்கிறேன். அதற்கு முன் பார்ட்னருடன் பேசுகிறேன்.

போனில் பார்ட்னருடன் பேசிவிட்டுத் திரும்பிய கணவர் முகம் மலர்ந்திருந்தது. ஏன் எனத் தெரியவில்லை.

மனைவி : என்ன விஷயம்?

கணவர் : நான் இனியும் சமர்ப்பணம் செய்ய வேண்டுமா?

மனைவி : என்ன நடந்தது?

கணவர் : நாங்கள் - பார்ட்னரும், நானும் - சேர்மனிடமிருந்து வந்தபின் பார்ட்னர் சேர்மனுடன் பேசியிருக்கிறார். பெரியவனைப் பார்ட்னர் மகன் என நினைத்தாராம். என் மகன் என பார்ட்னர் கூறியபொழுது, "அனுபவம் போதாது. அப்படிப்பட்டவர் நேர்மையாக இருப்பார்கள்'' என்று சேர்மன் என்னைப் பற்றிச் சொன்னாராம்.

மனைவி : சமர்ப்பணத்தைப் முழுவதும் செய்யவேண்டும்.

அன்னையின் அருள் செயல்பட ஆரம்பிக்கும்பொழுதே power plant வருகிறது எனில் மனதாலும், செயலாலும், உணர்வாலும், அனைத்துக் கரணங்களாலும் நாம் அருளின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதைக் குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் கலந்து பேசுவதில்லை.

கணவர் : சமர்ப்பணம் பலிக்கமாட்டேன் என்கிறது, எப்படி முழுவதும் செய்வது?

மனைவி : Serious vs silly; Truth vs falsehood; Selfless vs Selfish என்பன நாம் அறிந்தவை. Serious என்பதை நிதானம், பக்குவம் எனலாம், silly என்றால் சில்லரை, சபலம் ஆகும். உண்மையும், பரநலமும் தெரிந்தவை. இம்மூன்றையும் முழுமையாகப் பின்பற்றினால் போதும்.

கணவர் : எப்படிப் பொய் சொல்லாமலிருப்பது?

மனைவி : எல்லாரும் பொய் சொல்கிறார்கள். மட்டமானவர் சொல்லும் பொய்யை நாம் சொல்வதில்லை.

கணவர் : ஆம்.

மனைவி : நமது சமூகத்தில் அறிவில்லாதவரிடம் சொல்லும் பொய்யை விவரம் தெரிந்தவரிடம் சொல்ல முடியாது.

கணவர் : ஆமாம், அது சரி.

மனைவி : பொய் சொல்பவனும், பொய் சொல்பவனை நம்பமாட்டான், பொய் சொல்லாதவனை நம்புவான். பொய் சொல்பவனும் நெருங்கியவரிடம் பொய் சொல்ல மாட்டான். அனைவரும் நம்பவேண்டுமானால் எந்தப் பொய்யும் சொல்லக்கூடாதன்றோ?

கணவர் : பொய் சொல்ல திறமை வேண்டும். அதை மெய் சொல்லப் பயன்படுத்தலாம்.

மனைவி : பொய் நஷ்டம், மெய் ஆதாயம் என்பதைவிட மெய் நல்லது என்று சொன்னால் உயர்ந்தது. பொய் சொன்னால் தன்னம்பிக்கை போய்விடும்.

கணவன் : தன்னம்பிக்கை போனால் எல்லாம் போய்விடும்.

மனைவி : சில்லரையை யாரும் விரும்பமாட்டார்கள்.

கணவன் : அவனே பிரியப்படமாட்டான்.

மனைவி : சுயநலமியே சுயநலத்தைப் பாராட்டமாட்டான்.

கணவன் : வாழ்வில் இம்மூன்றும் அருளுக்குரியவை.

மனைவி : ஆழ்ந்து உடல் ஊறிய பொய் மெய்யாகத் தெரியும். பெரிய இடத்தில் பழகும்பொழுதுதான் அது பொய், மட்டம் எனப் புரியும்.

கணவர் : விரயத்தை பெருமையாக நினைப்பவர் பெரிய இடத்தில் பழகினால் விரயம் தவறு என உணர்வார். நாம் தண்ணீரை விரயம் செய்கிறோம். நமது ஊரில் நீர்ப் பஞ்சமில்லை. ஆனால் தண்ணீர்ப் பஞ்சம் எங்கும் இருக்கிறது. அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் தண்ணீர்ப் பஞ்சம் போகுமா?

மனைவி : நமக்குள்ள நம்பிக்கையைச் சோதனை செய்ய இது நல்ல சந்தர்ப்பம்.

கணவர் : நாட்டில் நீர்ப் பஞ்சம் போகவேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம்.

மனைவி : இரண்டிற்கும் பலன் ஒன்றே, நோக்கம் வேறாக இருக்க முடியும்.

கணவர் : எப்படி?

மனைவி : பலனே மாறுபடும்.

கணவர் : ஏன்?

மனைவி : நமக்கு நம்பிக்கை வேண்டும், உள்ள நம்பிக்கை வளரவேண்டும் என்பது நல்ல பிரார்த்தனை.

கணவர் : நாட்டில் மழை பெய்ய வேண்டும் என்பது நல்ல பிரார்த்தனையில்லையா?

மனைவி : நமக்குப் பரநலம் கொஞ்சம், சுயநலம் அதிகம். பரநலம் உள்ள அளவுக்குப் பலிக்கும்.

கணவர் : அவ்வளவு சுயநலமிகளா நாம்.

மனைவி : பிரார்த்தனை பலிப்பதில் தெரியும்.

கணவர் : சரி, என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம்?

மனைவி : செய்வது யாருக்கும் தெரியக் கூடாது.

கணவர் : ஏன்?

மனைவி : சுயநலம் வளர வழியில்லை.

கணவர் : சரி.

மனைவி : பிரார்த்தனையைவிடத் தண்ணீருக்குக் கவனம் செலுத்த வேண்டும்.

கணவர் : எப்படி?

மனைவி : சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும்.

கணவர் : சிக்கனம் கவனமாகுமா?

மனைவி : நீரைப் போற்றுவது போலாகும்.

கணவர் : மனதால் போற்றினால் போதாதா?

மனைவி : செயலுக்கு எண்ணத்தைவிட சக்தியுண்டு.

கணவர் : பிரார்த்தனை, சிக்கனம், சமர்ப்பணம், மூன்றும் நல்லது.

மனைவி : சிக்கனமாகச் செலவு செய்வதை மனத்தால் போற்றினால் அதிகப் பலனுண்டு.

கணவர் : சிக்கனமாகச் செலவு செய்தால் பிறருக்குத் தெரியுமே.

மனைவி : தெரியக் கூடாது என்பதில்லை, நம் வீட்டில் அனைவரும் செய்வார்களா?

கணவர் : பிள்ளைகளைச் செய்யச் சொல்வோம்.

மனைவி : அது தவறில்லை, நாம் செய்வது தெரிந்து அவர்களே பின்பற்றினால் நல்லது. எப்படிச் செய்தாலும் மழை பெய்யும். நாமிருவரும் எவரிடமும் சொல்லாமல் மனதாலும், செயலாலும், சமர்ப்பணத்தாலும் செய்ய ஆரம்பிப்போம்.

கணவர் : எத்தனைத் தடவைகள் சொன்னாலும் சமர்ப்பணத்திற்கும், பிரார்த்தனைக்கும் வித்தியாசம் நடைமுறையில் தெரியவில்லை.

மனைவி : சமர்ப்பணமும் பல அளவுகளிலிருக்கிறது.

கணவர் : எது சமர்ப்பணம்?

மனைவி : நினைவு வந்தவுடன் நாம் அச்செயலுக்குப் பொறுப்பேற்காமல் அன்னையைப் பொறுப்பேற்கச் சொல்வது சமர்ப்பணம்.

கணவர் : சரி, அதைச் செய்வோம்.

மனைவி : அது எளிதன்று.

கணவர் : ஏன்?

மனைவி : எண்ணம் நம்முடையதன்று.

கணவர் : புதிதாக இருக்கிறதே.

மனைவி : நம் எண்ணங்கள் என நாமறிவன பலரும் நினைப்பன.

கணவர் : அப்படி ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறாரா?

மனைவி : ஆம்.

கணவர் : அதற்கு என்ன செய்வது?

மனைவி : நம்மை எண்ணங்களிலிருந்து பிரிப்பது கஷ்டம்.

கணவர் : சட்டம் என்ன?

மனைவி : எண்ணத்தின் பின்னால் உணர்வும், செயலும் உள்ளன.

கணவர் : அவற்றை எப்படிப் பிரிப்பது?

மனைவி : அப்படிப் பிரித்து எண்ணம் மனதில் தோன்றியவுடன் சமர்ப்பணம் செய்தால் அடுத்த நிமிஷம் மழை பெய்யும். சுமார் 3, 4 நாட்கள் கணவரும், மனைவியும் மழையை சமர்ப்பணம், பிரார்த்தனை, கவனத்தால் நினைத்தவுடன் பிள்ளைகள் அதையே தாமாக எழுப்பி பின்பற்றவேண்டும் எனப் பேசினர். பெருமழை தொடர்ந்து பெய்தது. அந்த ஆண்டு குறை நிறைவாயிற்று.

கணவர் : நம் பிரார்த்தனை பலித்தது.

மனைவி : பிரார்த்தனை பலித்ததும் நம் அகந்தைக்கு வலிமையூட்டும்.

கணவர் : சந்தோஷப்படக் கூடாதா?

மனைவி : சந்தோஷப்படுவதிலும் உள்ள விஷயம் அகந்தை வளர்வது.

கணவர் : என்ன செய்யவேண்டும்?

மனைவி : நன்றி கூறவேண்டும்.

கணவர் : இப்போ சொல்லலாமா? எனக்கு மழை பெய்யும்பொழுது தோன்றவில்லையே.

மனைவி : தோன்றுவதுடன் உடல் புல்லரிக்கவேண்டும்.

கணவர் : எனக்கில்லை.

மனைவி : Power plantக்கும், மழைக்கும் சட்டம் ஒன்றுதான்.

கணவர் : அது பெரியதாயிற்றே.

மனைவி : நமக்குப் பெரியது, அன்னைக்கன்று.

கணவர் : அதற்கு நாளாகும், மழை உடனே பெய்யும்.

மனைவி : சமர்ப்பணம் பூரணமானால் நேரம் தேவையில்லை.

கணவர் : Projectற்க்கு 1 வருஷமாகுமே.

மனைவி : அது நமக்கு.

கணவர் : புரியவில்லை.

மனைவி : அனுபவத்தில் புரியும். சமர்ப்பணத்தைக் கவனித்தால், சமர்ப்பணத்திற்கும், நடக்கும் வேகத்திற்கும் உள்ள தொடர்பு தெரியும்.

கணவர் : கவனித்தால் மனதில் சமர்ப்பணம் வரவில்லை. கமிஷன் வருகிறது.

மனைவி : கமிஷனோ, project மனதில் வாராமல் சமர்ப்பணம் வரவேண்டும்.

பார்ட்னர் வந்தார். பிரெஞ்சுக்காரருடன் பேசியதைக் கூறினார். பிரெஞ்சுக்காரர் நம் பூர்வோத்திரத்தை விசாரித்தார். பேச்சு அன்னைக்கும் வந்தது. நானாகப் பேசப் பிரியப்படவில்லை. அவரே தமக்கும் அன்னை தெரியும் என்றார். "எங்களூர்க்காரராயிற்றே'' என்றார். அன்னை அவருக்குத் தெரியும் என்றவுடன் பார்ட்னருக்கு உள்ளே ஜில்' என்றதாம். கணவர் தமக்கு அப்படியில்லை என்றார். மனைவிக்கும் அப்படியில்லை. "கமிஷன் கைக்கு வர 1 வருஷமாகும். அதுவரை கொஞ்சம் கமிஷனை பாங்க்மூலம் முன்பணமாகத் தரலாமா?'' என்றார். கணவர் அதிர்ந்துபோனார். மனைவிக்கு

அன்னை நினைவு கண்களை நிரப்பியது. மறுப்பது சரியில்லை. ஏற்பதை நன்றியுடன் ஏற்க மனப்பக்குவமில்லை. எண்ணம் ஓடுவதைத் தடை செய்ய முடியவில்லை. பேச்சு மாறியது. ஆனால் எல்லோர் மனமும் நிறைந்தது. "எலிசபெத் பெம்பர்லியைக் கண்டு பிரமித்தது போன்ற உணர்வு இது'' என மனைவி நினைத்ததை பார்ட்னர் கூறினார். ஏதாவது ஒரு எண்ணத்தையாவது முறையாகப் பூரணமாகச் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்று மனைவி நினைத்தார். அது முகத்தில் ஒரு பொறியாக, பொன்னொளியாகத் தோன்றியது. எவரும் கவனிக்கவில்லை. அது பார்ட்னர் புருவத்தில் தெரிந்ததை மனைவி கவனித்தார். நெஞ்சு நிறைவதுபோல் சூழலில் பெருநிறைவு பெற்றது. சற்று நேரம் கழித்து சூழல் மாறி அனைவரும் பேச ஆரம்பித்தனர். கலகலப்பாக இருந்தனர். மனைவி மட்டும் இந்த நேரம் நடந்ததைக் கவனித்தார். பார்ட்னர் அதைக் கவனிக்கவில்லை என்றாலும் அந்த அனுபவம் அவரைத் தொட்டதை மனைவி கண்டார்.

பார்ட்னர் : The Life Divine படித்தேன். "நாம் எண்ணத்தை விஷயத்திலிருந்து பிரித்துவிடுகிறோம். அதுவே நாம் முதலில் செய்வது'' என்று வந்தது.

மனைவி : "அவனே ஆட்டம், அவனே ஆட்டக்காரன், அவனே அரங்கம்'' என்று ஓர் இடத்தில் வருகிறது. Himself the Play,Himself the Player,Himself the Playground. இவை மாயா, பிரகிருதி, லீலை, ஆகியவற்றைக் குறிக்கின்றன. மரபு இவற்றை வெவ்வேறாகக் காண்கிறது. ஒன்றாகக் காண்பது பூரணயோகம், ஸ்ரீ அரவிந்தம்.

பார்ட்னர் : இதை ஓர் உதாரணத்தின்மூலம் கூறமுடியுமா?

மனைவி : எண்ணம், செயல், ஆனந்தம், மூன்றும் சேர்ந்தது வாழ்வின் முழுமை. மூன்றும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன. எண்ணமே செயல், செயலே ஆனந்தம்,

ஆனந்தமே எண்ணம். நாம் மனத்தால் செயல்படுவதால் இவற்றைப் பிரித்துவிடுகிறோம். பிரிக்காவிட்டால் மனம் செயல்பட முடியாது.

பார்ட்னர் : உதாரணம்.

மனைவி : வெளிநாட்டிலிருந்து மகன் திரும்பவந்தால், சொல்லாமல் வந்தால், பார்த்ததும் ஆச்சரியம் நம்மை மலர வைக்கிறது. எண்ணம் தோன்றுவதில்லை, என்ன செய்கிறோம் என நினைப்பதில்லை, தெரிவதில்லை. "எனக்கு ஒரே சந்தோஷம், ஒன்றுமே தோன்றவில்லை'' என்பது எண்ணம், செயல், ஆனந்தம், மூன்றும் ஒன்றாவது.

பார்ட்னர் : புரிகிறது.

மனைவி : பொதுவாக அப்படியிருப்பதில்லை. எப்படி வந்தான் எனத் தோன்றுகிறது. அப்படிப் பிரித்துப் பார்த்தால்தான் நம்மால் செயல்பட முடிகிறது. எழுந்துபோய் அவனைப் பிடித்து அழைத்து வருகிறோம் என்று தெரிவது செயல் தெரிவதாகும். பார்ட்னர் : மூன்றும் ஒன்றாக இருப்பது சைத்தியப்புருஷன், ஸ்ரீ அரவிந்தம்.

மனைவி : அது முழுமை. ஒரு தரமாவது அனுபவிக்கவேண்டும்.

கணவர் : எல்லாச் செயல்களும் அப்படியிருப்பது யோகம்.

மனைவி : மனம் மேலேயிருந்தால் பிரிந்து செயல்படும்.

பார்ட்னர் : சைத்தியப்புருஷன் மேலேயிருந்தால் ஆனந்தம் செயலாக, எண்ணமாக, அவற்றுள் கலந்துவிடும். அது தெய்வீக உணர்வு.

மனைவி : சமர்ப்பணம் முழுமையாகும்பொழுதுள்ள உணர்வு அது.

கணவர் : அப்படியென்றால் சமர்ப்பணத்திற்கும் எனக்கும் காத தூரம்.

மனைவி : பக்தி, நம்பிக்கையிருந்தால் ஒரு செயல் காணலாம். அதைக் காணும் நேரம் நமக்கு இறைவன் வரும் தருணம். அது இறைவன் வரும் தருணமன்று, நம் வாழ்வின் எல்லைக்குட்பட்ட தருணம்.

கணவர் : அது வந்தபின், அது power plantஇல் வரவேண்டும்.

பார்ட்னர் :Power plant வந்ததால்தான் நமக்கு பக்தி ஏற்பட்டுள்ளது. நமக்கு ஆதாய மனப்பான்மை.

மனைவி : அது பிரிந்தால், அதைக் கடந்து சமர்ப்பணம் பலிக்கும்.

கணவர் : மனம் ஆதாயத்தைத் தாண்டிப் போக மறுக்கிறது.

மனைவி : ஆதாயம் என்பது சரி. ஜடம் என்று பார்த்தால் தத்துவம் புரியும்.

கணவர் : எது ஜடம்?

மனைவி : விஷயம் என்று வந்ததும் மனம் விஷயத்திலிருந்து எண்ணத்தைப் பிரிக்கிறது என்கிறோம். மனம் ஜடமானால், மனம் விஷயத்திலிருந்து ஜடத்தைப் பிரிக்கிறது. ஜடத்தை ஆதாயம் என நினைக்கிறோம்.

பார்ட்னர் : நாம் ஜடமாக இருப்பதால் ஜடம் புரிகிறது. மனமாகவும் ஆகவில்லை.

மனைவி : சரி.

பார்ட்னர் : எண்ணமற்ற செயல் சிறந்தது. ஆனந்தமே எண்ணமாகவும், செயலாகவும் முழுமை பெறுகிறது.

மனைவி : விஷயம் என்பது ஆனந்தம், ஆச்சரியம். செயலும், எண்ணமும் அதனுள் உள்ளது.

பார்ட்னர் : எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பது அதுதானா?

மனைவி : எண்ணம் எழாமல், செயல் தெரியாமல் எழும் ஆனந்தம் முழுமை.

பார்ட்னர் : தன்னை மறந்த பரவசம்.

மனைவி : தன்னை மறந்த பரவசம் சரி. தானறிந்த பரவசம் முழுமை. தன்னை மறந்தது unconscious ஆகக் கூடாது.

பார்ட்னர் : Conscious Ananda is complete act.. அன்னை நினைவு ஆனந்தமானால் அதனுள் நம் ஆனந்தமும், செயலும், எண்ணமும் அடக்கம். அழியாத நினைவு தவறாத சமர்ப்பணம். நினைத்துச் செய்வது பகுதி. தோன்றும்முன் செய்வது முழுமை. நினைவு மையம் மனத்திலிருந்து நெஞ்சுக்குப் பின்னால்போய் நிலைக்கவேண்டும்.

மனைவி : செயல் வாழ்வு, நினைவு யோகம்.

பார்ட்னர் : நாம் வாழ்ந்தாலும், யோகம் செய்தாலும் இருக்க வேண்டிய நிலை அதுவே.

மனைவி : தீயசக்தி மாறி பக்தி பெறுவது, வாழ்வில் விலக வேண்டியது விலகுவதாகும். நடைமுறையில் பெரிய தலைகள் உருளும்.

கணவர் : அது மரணமில்லையா?

மனைவி : நமக்கு மரணம், வாழ்வில் உயர்ந்த ஜீவியம் உதயமாவதாகும்.

கணவர் : பயமாக இருக்கிறது.

பார்ட்னர் : பயம் சரியில்லை.

மனைவி : பயம் சிறியது, ஆனந்தம் பெரியது. எண்ணத்தைக் கடந்து செல்வது முழுமையானால் மனத்தைக் கடப்பதாகும்.

பார்ட்னர் : மனத்தைக் கடந்தால் சத்தியஜீவியமாயிற்றே.

மனைவி : ஆமாம்.

பார்ட்னர் : நமக்கு முழுமையில்லை, முழுமை தெரியாது. எண்ணம் மனம், முழுமை சத்தியஜீவியம்.

கணவர் : சுலபமாகத் தோன்றுகிறதே.

மனைவி : செய்வதற்கு அவ்வளவு சுலபமன்று. சுலபமாகச் செய்தால் சித்தி. அதைவிட அருள் சித்தித்தது என எடுத்துக் கொள்ளலாம்.

பார்ட்னர் : சித்தி நம் முயற்சி, அருள் ஆண்டவன் தருவது.

மனைவி : ஆமாம். அருள் பெறுவது சித்தி. சித்தி பெறுவது அருளால்.

கணவர் : கேட்க நன்றாக இருக்கிறது.

மனைவி : அதுவே மனிதனுக்குப் பெரிய விஷயம்.

பார்ட்னர் : புரிவது, கேட்பது, கேட்க ஆசைப்படுவது, ஆகியவை நமக்கு முடிவான கட்டங்கள். நடப்பது அன்னையால் மட்டும் நடக்கிறது. Power  plant அரை நிமிஷம்கூட மனத்தைவிட்டு அகலாதது கொஞ்ச நாழியாக மனத்தில் வரவில்லை.

மனைவி : மனத்தில் வரவில்லை எனில் அன்னை எடுத்துக் கொண்டார்.

கணவர் : நம்மையே அன்னை எடுத்துக்கொண்டால் நல்லது.

மனைவி : கொடுத்தால் அன்னை எடுத்துக்கொள்வார்.

பார்ட்னர் : புரிவதற்கும், செய்வதற்கும் ஏகப்பட்ட தூரம்.

மனைவி : வாழ்வுக்கும், அன்னைக்கும் உள்ள தூரம்.

பார்ட்னர் ஒரு பார்ட்டிக்குப் போயிருக்கிறார். அங்கு வந்த பெரிய மனிதர்களில் 10,000 பேர்கள் வேலை செய்யும் கம்பெனி முதலாளி ஒருவர். அது நெடுநாளைய கம்பெனி. இப்பொழுது தொழிலாளிகள், சர்க்கார் ஆதரவோடு அராஜகம் செய்கிறார்கள். இதுவரை முதலாளிகள் போலீஸ், சர்க்கார் பணத்தாலும், தொழிலாளிகளை மடக்கினர். இனி அதற்கு வழியில்லை. அன்று முதலாளி செய்ததை இன்று தொழிலாளிகள் செய்கிறார்கள். முதலாளி கதிகலங்கி இருக்கிறார். பாங்க் சேர்மன் மற்றும் சில நண்பர்கள் பார்ட்னரை அறிவார்கள். பொதுவாகப் பார்ட்னர் பேசியதிலிருந்து அவர்கள் சில விஷயங்களைப் பின்பற்றிப் பலன் பெற்றிருக்கின்றனர். அப்படி 2, 3 பேர்கள் பார்ட்னரைச் சூழ்ந்துகொண்டு இந்த முதலாளிக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா எனக் கேட்டனர். ஏற்கனவே சில கட்டங்களில் பார்ட்னர் சொற்கள் இவர்கள்மூலம் அவருக்கு எட்டி நிலைமை சீர்திருந்தியதை அவர்கள் பார்ட்னரிடம் கூறவில்லை. பார்ட்னருக்குப் பதில் தெரியும். விபரம் தெரியாமல் தத்துவம் பேசும் விஷயமில்லை இது. தொழிலாளிகள் தேதி குறித்துவிட்டனர். அதற்கு இன்னும் 7 நாட்களிருக்கின்றன. இந்த நேரம் இப்பெரு முதலாளி பார்ட்டிக்கு வந்திருப்பது ஆச்சரியம். இதுபோன்ற இடங்களில் அவருக்கு மறைமுகமாக advice விஷயம் கிடைப்பதுண்டு. அதனால் வந்திருக்கிறார். பார்ட்னர், "நிச்சயமாக சத்தியம் ஜெயிக்கும். அதில் சந்தேகமில்லை'' என்று தம் நண்பர்களிடம் கூறியுள்ளார். அந்த முதலாளிக்கு இந்தச் செய்தி போயிருக்கிறது.

அவர் அதை ஏற்றுக்கொண்டார். தொழிலாளிகள் குறித்த தேதியை வரையறையின்றி ஒத்திப் போட்டுவிட்டனர். அதனால் பார்ட்னர்மூலம் தகராற்றைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை முதலாளிக்கு வந்துவிட்டது. பார்ட்னரைப் பார்க்க விரும்பினார். பார்ட்னர் போகவில்லை. முதலாளியே பார்ட்னரை வீட்டில் வந்து சந்திப்பதாகக் கூறியபொழுது பார்ட்னர் 3 மணி அவகாசம் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். இத்தனையும் கூறியபின் என்ன செய்யலாம் எனப் பார்ட்னர் கேட்டார்.

தாயார் : தகராற்றைத் தீர்க்கலாம். ஆனால் நாம் அங்கு நேரடியான தொடர்புகொள்ளக் கூடாது. தகராறு தீர்ந்தால் நம்மை அடியோடு மறந்துவிடுவார்கள். நமக்குக் கஷ்டம் வரும்.

பார்ட்னர் : என்ன சொல்லலாம்?

தாயார் : வழி சொல்லலாம். அத்துடன் விலகிக்கொள்ள வேண்டும்.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, முதலாளி பார்ட்னரைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். பார்ட்னர், கணவர், மனைவியை அறிமுகப்படுத்தினார். இவர்கள் மூலமாகவேதான் அன்னையை அறிந்தேன் என்றவுடன் முதலாளி கணவர் பக்கம் திரும்பிவிட்டார். கணவர் மனைவியைக் காண்பித்தார்.

முதலாளி : இத்தகராறு தீருமா?

தாயார் : அன்னையை நம்பினால் தீரும். நம் பக்கம் நியாயம் இருந்தால் தீரும்.

முதலாளி : என்ன செய்ய?

தாயார் : நியாயத்திற்குப் புறம்பான வழியை விலக்கி பிரார்த்தனை செய்தால் பலிக்கும்.

முதலாளி : தேதி ஒத்திப்போட்டவுடன் எனக்கு நம்பிக்கை வந்தது (பார்ட்னரை நோக்கி) என்னுடன் கம்பெனிக்கு வருகிறீர்களா?

பார்ட்னர் : எனக்கு உங்கள் விபரம் தெரியாது. நான் வந்து என்ன செய்வேன்.

முதலாளி : அம்மா வருவார்களா?

தாயார் : யாரும் வேண்டாம். விஷயம் கூடிவரும்.

கொஞ்ச நாழிகை பேசிக்கொண்டிருந்துவிட்டு முதலாளி போய்விட்டார். மறுநாள் பேப்பரில், தொழிலாளிகள் இரு கட்சியாகப் பிரிந்து ஒரு கட்சியை சர்க்கார் ஆதரிப்பதாகவும், அதனால் ஸ்டிரைக் வாபஸ் ஆகிவிட்டதாகக்' கூறியது. பொதுவாகக் காரியம் முடிந்துவிட்டால், முடிந்தது என' பலன் பெற்றவர் சொல்வது வழக்கம் இல்லை. இந்த முதலாளியும் சொல்லவில்லை. ஆனால் 1 வாரம் கழித்து பார்ட்னருடன் தொடர்புகொண்டு மேலும் அன்னையைப் பற்றி அறிய விரும்பினார். தாயார், பார்ட்னர் முதலாளியைப் போய்ப் பார்க்கக் கூடாது. அவர்தான் இவரை வந்து பார்க்கவேண்டும்' என்று முடிவாகக் கூறியதால் பார்ட்னர் போகவில்லை. அதன்பிறகு முதலாளி பல முறை போனில் பேச முயன்றபொழுது பார்ட்னர் வீட்டில்லை. அது விஷயமாக மூவரும் கலந்து ஆலோசித்தனர்.

கணவர் : முதலாளி நாட்டிலேயே பெரியவராயிற்றே, நாம் எப்படிப் போகாமலிருக்க முடியும்?

தாயார் : நம்மை நாம் என நினைத்தால் முதலாளியைப் போய்ப் பார்ப்பது சரி. முதலாளி அன்னையைப் பார்க்க வேண்டுமானால், அன்னை போகக் கூடாது.

பார்ட்னர் : நமக்கு கர்வம் வரும் இடமாயிற்றே.

தாயார் : கர்வமில்லாமல் அடக்கமாக இருப்பது நம் பங்கு.

கணவர் : ரொம்பக் கடினம்.

தாயார் : அடக்கம் உண்மையானால் கடினமாக இருக்காது. முதலாளி நம்மைத் தேடி வரவேண்டும் என்ற

எண்ணம் எதிர்பார்ப்பாகும். அது வந்தால் போய்ப் பார்ப்பதே மேல். நமக்குள்ள பலம் ஒன்றுதான். உலகம் அர்த்தமில்லாமல் பெரியது என நினைப்பதை நமது அன்னை ஞானம் பெரியதன்று என அறிகிறது.

பார்ட்னர் : இந்தத் தத்துவம் நான் படித்திருக்கிறேன். சரியாகப் புரியவில்லை. சூரிய மண்டலமும், எறும்புப் புற்றும் ஒன்று என்பது எப்படி?

தாயார் : நமது முகம் வளைந்த கண்ணாடியில் பெரியதாக வளைந்து தெரிந்தால், இது தோற்றம், உண்மையன்று எனத் தெரிவது எளிது.

கணவர் : முகம் மாறாமலிருப்பது தெரிகிறது. சூரிய மண்டலம் பெரியதாயிற்றே.

தாயார் : பிரம்மத்தின் பார்வைக்கு, சூரிய மண்டலம் பெரிதன்று. இது வாதம். வாதம் புரியும், அனுபவம் வேறு. வாதத்தை மனம் ஏற்றால் அதே அனுபவம் எங்குக் கிடைத்தாலும் பலன் தரும்.

பார்ட்னர் : வேறு உதாரணம்.

தாயார் : தேர்தல் ஜனாதிபதிக்கு ஓர் ஓட்டுதான். தேர்தல் அவர் சாதாரண குடிமகனே. வாதம் மனத்தெளிவு தரும். டாக்டருக்குப் பெரியவர், சிறியவர் இருவரும் நோயாளிகளே.

பார்ட்னர் : அது திருப்தியாக இருக்கிறது. அதை ஏற்கலாம். அதனால் பெருமைப்படாமலிருப்பது கடினம்.

தாயார் : புரிவது அறிவு, அடங்குவது தெளிவு, புரிவதைக் கொண்டு மனம் தெளிவை நாடினால் அடக்கம் வரும். இந்த ஸ்டிரைக் நின்றதும், காணாமல் போன ரூ.100/-

கிடைப்பதும் ஒன்றே. ஸ்டிரைக் முதலாளிக்குப் பெரியது, நமக்குப் பெரியது, அருளுக்கு அன்று.

கணவர் : அப்படியானால் power plant நாம் பெறும் கமிஷன் பெரிதன்று.

தாயார் : பெரிதன்று என அறிந்தால் அது வரும். பெரிது என நினைத்தால் தூரப் போகும்.

பார்ட்னர் : பணம், பதவி பெரிதென நினைப்பவர் சிறிய மனிதர் என்றால் அவர்களிடம்தான் அவை ஏராளமாகச் சேருகிறது.

தாயார் : அது போற்றுவதால் வரும் வெற்றி. அப்படி வரும் பணமும், பதவியும், அவர்கள் மனம் போலவேயிருக்கும். நாம் சொல்வது ஞானத்தால் வருவது. நேருவுக்குப் பதவி வந்ததுபோல்.

கணவர் : துரைசாமி அய்யர் 1920 வாக்கில் ஸ்ரீ அரவிந்தருக்கு இலட்ச ரூபாய் கொடுக்க முன்வந்ததுபோல்.

பார்ட்னர் : நாம் தேடாதது, நமக்குப் பெரிய விஷயம் வரவில்லையா?

கணவர் : பெரியது பெரியதுதான், சிறியது சிறியதுதான். நீ சொல்வது சிறியது பெரியதாவது.

பார்ட்னர் : எந்த நிலைப் பிள்ளைகள் எந்த உத்தியோகத்திற்கு வருகிறார்கள் என நாம் பார்க்கிறோம்.

கணவர் : ஆமாம், அவை உலகில் நடக்கின்றன.

தாயார் : உலகம் மாறியபின் மனிதன் மாறுவது அது. நாம் சொல்வது மனிதன் மாறுவதால் உலகம் மாறுவது.

கணவர் : சரி, சரி.

பார்ட்னர் : இந்த முதலாளிக்கு என்ன சொல்வது?

தாயார் : மற்றவர்க்குச் சொல்வதே அவருக்கும் சொல்ல வேண்டும்.

கணவர் : நான் யோகம் செய்யத் தயாரில்லை.

பார்ட்னர் : யோகத்திற்கும், யோக வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பலமுறை படித்திருக்கிறேன்.

கணவர் : எத்தனை முறை படித்தாலும் பயமாக இருக்கிறது.

தாயார் : சத்தியம், நிதானம், பரநலம் தவறாகுமா? பொய், அவசரம், சுயநலம் சரியாகுமா?

கணவர் : நீ சொல்வது யோகி செய்வதில்லை, யோகமில்லை எனக் கூறுவாயா?

பார்ட்னர் : வாழ்வனைத்தும் யோகம் என்றபின், எப்படி யோகமில்லை என்பது.

தாயார் : வாழ்வா, யோகமா என்பதைவிட, சரியா, தப்பா எனப் பேசலாம்.

கணவர் : அன்னையை வாழ்விற்காக ஏற்கலாம், யோகத்திற்காக ஏற்க முடியாது.

பார்ட்னர் : கல்லூரி மாணவனுடன் சிறு வயதில் படித்த கடைப் பையனை கவனித்தால் இன்று இருவரும் ஒத்துப்போக முடியாது. ஒத்துப்போக உயர்ந்த பண்பு தேவை. பெரிய இடத்திற்குப் போன சிறிய மனிதர்களில் நல்லவர்களை எடுத்து யாருடனாவது அவர்கள் சிறு வயது நண்பர், உறவினர் இருக்கிறார்களா, எத்தனை பேர் தேறுவார்கள் எனப் பார்த்தால் புரியும். நான் அன்னையை அறிந்த ஆரம்பத்தில் செய்த ஆராய்ச்சியிது.



book | by Dr. Radut