Skip to Content

MJ_July-2016_01.ஸ்ரீ அரவிந்தம்-லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

II/1. Indeterminates, Cosmic Determinations and the Indeterminable

Page 300
Para 6

II/1. பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி
There is a first possible explanation. இதற்கான ஒரு விளக்கம் உண்டு.
It points to a self-organising dynamic Chance that is at work. அது சுயமாக முறைமையை மேற்கொள்ளும் ஒரு தற்செயல் நிகழ்வுக்கான சக்தி செயல்படுவதைக் குறிக்கிறது.
This paradox is necessitated by the appearance of inevitable order on one side. ஒரு புறத்தில் தவிர்க்க முடியாத முறைமை இந்தப் புதிரை அவசியமாக்கியுள்ளது.
On the other side there is unaccountable freak and fantasy in Nature. மறுபுறத்தில் காரணம் கற்பிக்க முடியாத, முறைகளைக் கடந்த கற்பனா இன்பம் பிரகிருதியில் உள்ளது.
The energy of Nature is an inconscient and inconsequent Force. இயற்கையின் சக்தி ஆழ்ந்து இருண்ட மற்றும் சீரற்ற ஒரு சக்தி.
It acts at random and creates this or that by a general chance. அது தொடர்பற்று செயல்பட்டு ஏதோ ஒன்றைப் பொதுவான தற்செயலால் சிருஷ்டிக்கிறது.
It creates without any determining principle. அது எந்த நிர்ணய விதியையும் பின்பற்றாமல் உருவாக்குகிறது.
Any determinations come in only as the result of a repetition. திரும்பத் திரும்ப நிகழும் விளைவால் மட்டுமே நிர்ணயம்அதில் எழுகிறது.
It is a repetition of the same rhythm of action. ஒரே சீர்ப்பிரமாணத்தில் மீண்டும் மீண்டும் எழும் செயல் அது.
But this implies that in the origin of things there is a boundless Possibility. ஆனால் இது விஷயங்களின் மூலாதாரத்தில் வரம்பற்ற சாத்தியங்கள் உள்ளதைக் குறிக்கிறது.
Or there is a womb of innumerable possibilities. அல்லது எண்ணற்ற வாய்ப்புகளின் கருமூலம் அங்குள்ளது.
They are manifested out of it by the original Energy. மூலமுதலான சக்தியால் அவை அதிலிருந்து வெளிவருகின்றன.
It is an incalculable Inconscient. அது வரையறுத்துணர முடியாத ஆழ்ந்த ஜடமான இருள்.
We are embarrassed to call it either an Existence or a Non-Existence. அதைச் சத் என்றோ அசத் என்றோ அழைப்பது நமக்கு தர்மசங்கடமாக உள்ளது.
The action of the Energy is unintelligible without some such basis. அப்படிப்பட்ட ஒன்றை அடிப்படையாகக் கொள்ளாவிட்டால் சக்தியின் செயல்பாடு அறிவுக்குப் புரிவதாக இல்லை
Yet there is an opposite aspect of the cosmic phenomenon. இருந்தாலும் அங்குப் பிரபஞ்ச நிகழ்வுக்கு எதிரான ஒரு பகுதி உள்ளது.
It appears to forbid the theory of a random action generating a persistent order. சீரற்ற செயல் சீரான முறைமையை எழுப்பச் செய்யும் தத்துவத்தை அது மறுப்பது போன்று தோன்றுகிறது.
There is too much of an iron insistence on Order. அங்கு முறைமை மிக அதிகமான அளவு வலிமையோடு வலியுறுத்தப்படுகிறது.
There is too much insistence on a law basing the possibilities. அங்குச் சாத்தியங்களை அடிப்படையாகக் கொண்ட சட்ட அளவுக்கு அதிகமாக வலியுறுத்தப்படுகிறது.
Rather there is an inherent imperative Truth of things. அங்கு விஷயங்களின் தவிர்க்க முடியாத சத்திய உள்ளார்ந்துள்ளது.
It is unseen by us. அதை நம்மால் பார்க்க முடிவதில்லை
But it is a Truth capable of manifold manifestation. ஆனால் அச்சத்தியம் பல்வகைப் பெருக்கமுடை வெளிப்பாட்டிற்கான திறன் கொண்டது.
It throws out a multitude of possibilities and variants of itself. தன் ஏராளமான சாத்தியங்கள் மற்றும் வேறுபாடுகளை அது வெளிப்படுத்துகிறது.
The creative Energy by its action turns them into so many realised actualities. சிருஷ்டிக்கும் சக்தி அதன் செயல்பாட்டால் அவற்றை மெய்யான நிகழ்வுகளாக மாற்றுகிறது.
This brings us to a second explanation. இது நம்மை இரண்டாவது விளக்கத்திற்கு அழைத்து வருகிறது.
There is a mechanical necessity in things. அது விஷயங்களில் இயந்திரத் தன்மைக்கான அவசியம் உண்டு என்பதாகும். 
Many mechanical laws of Nature are recognizable by us. இயற்கையின் பல்வேறு இயந்திரத் தன்மைக்கான சட்டங்களை நாம் அறிந்துள்ளோம்
The necessity might be some secret inherent Truth of things. அந்த அவசியம் விஷயங்களில் ஆழ்ந்து மறைந்துள்ள சத்தியமாக இருக்கலாம்.
It might govern automatically the processes we observe in action in the universe. அந்தச் சத்தியம் தன்னிச்சையாக பிரபஞ்சத்தில் நாம் காணும் செயல்களின் செய்முறைகளை ஆள்வதாக இருக்கலாம்
But a theory of mechanical Necessity by itself does not elucidate the variations. ஆனால் இயந்திரத் தன்மையின் அவசியம் எனும் கோட்பாடு வேறுபாடுகள் தோன்றுவதன் காரணத்தை நமக்கு விளக்குவதில்லை.
There is a free play of the endless variations which are visible in the evolution. அங்கு முடிவற்ற வேறுபாடுகளின் சுதந்திரமான லீலை உள்ளது. இவை பரிணாமத்தில் புலப்படக் கூடியவை.
There must be behind the Necessity a law of unity. அவசியத்திற்குப் பின் ஐக்கியத்தின் ஒரு சட்டம் இருக்க வேண்டும்.
It is associated with a coexistent but dependent law of multiplicity. அச்சட்டம் உடன்சார்ந்ததோடு ஒன்றியிருந்தாலும் பல்வகைப்பாட்டின் சட்டத்தை நம்பியுள்ளது.
Both insist on manifestation. இரண்டும் தங்கள் வெளிப்பாட்டை வலியுறுத்துகின்றன.
But the unity of what, the multiplicity of what? ஆனால் எதன் ஐக்கியம், எதன் பிரிவினை?
Mechanical Necessity can give no answer. தவிர்க்க முடியாத இயந்திர இயக்கத் தன்மையால் இதற்கு எவ்வித பதிலும் தர முடியாது.
The stumbling-block is emergence of consciousness out of the Inconscient. ஜட இருளிலிருந்து ஜீவியம் எழுவது முட்டுக்கட்டையாக உள்ளது.
In an all-pervading truth of inconscient mechanical Necessity, it has no place. ஜட இருளின் செயலான இயந்திர இயக்கத் தன்மையில் ஜீவியம் எழும் நிகழ்ச்சிக்கு இடம் இல்லை
If there is a necessity, which compels the emergence? அதற்கான அவசியம் அங்கு எழுமானால், எது அதன் வெளிப்பாட்டை வற்புறுத்துகிறது.
If so, it can be only this. அப்படி இருந்தால், அது இதுவாக இருக்க வேண்டும்
There is already a consciousness concealed in the Inconscient. ஜட இருளினுள் ஏற்கனவே ஒரு ஜீவியம் புதைந்து மறைந்துள்ளது.
It is waiting for evolution. அது பரிணாமம் பெறக் காத்திருக்கிறது. 
When ready it will break out from its prison of apparent Nescience. அது தயாராகும் பொழுது தன் தோற்றமான அறியாமை சிறையைத் தகர்த்து வெளி வரும்.
We may get rid of the difficulty of the imperative order of things. அப்படி வெளி வந்தால் நியதி எனும் சிரமத்திலிருந்து நாம் விடுபடலாம்.
We may suppose that it does not exist. நாம் அப்படி ஒன்று இல்லை என்றும் கருதலாம்
We may suppose that determinism in Nature is imposed on it. இயற்கையின்மீது நியதிவாதம் சுமத்தப்பட்டுள்ளது என்று நாம் நினைக்கலாம்.
It is imposed by our thought which needs such an imperative order. நம் எண்ணத்திற்கு நியதி என்பது தேவை என்பதால் எண்ணம் அதை இயற்கையின் மீது சுமத்தியுள்ளது.
That enables it to deal with its surroundings. அதன் மூலம் அது தன்னைச் சுற்றியுள்ள சூழலை கையாளுவது எளிதாகிறது.
But in reality there is no such thing. ஆனால் உண்மையில் அப்படி ஒன்று இல்லை
There is only a Force experimenting in a random action of infinitesimals. சிறியதன் ஒழுங்குமுறையற்ற செயலில் ஆராய்ச்சி செய்யும் ஒரு சக்தி மட்டுமே அங்கு உள்ளது.
They build up in their general results. அதனால் அவற்றில் பொதுவான விளைவுகள் ஏற்படுகின்றன.
They build diff erent determinations by a repetitive persistence. அவற்றின் தொடர்ந்த நீடிப்பு, நிலை பெறுவதால் வேறுபட்ட நிர்ணயங்கள் உருவாகின்றன.
They are operative in the sum of their action. அவற்றின் செயல்கள் மொத்தமாக சேர்ந்த கூட்டுத் தொகையில் அந்த நிர்ணயங்கள் இயங்குகின்றன.
Thus we go back from Necessity to Chance as the basis of our existence. இவ்வாறாக நாம் அவசியம் என்பதிலிருந்து தற்செயல் நிகழ்வு என்பதை நம் வாழ்வின் அடிப்படையாகக் கருதும் நிலைக்கு மீண்டும் வந்து சேர்கிறோம்
But what then is this Mind, this Consciousness? அப்படியானால், இந்த மனம், ஜீவியம் என்பதென்ன?
It diff ers so radically from the Energy that produced it. அது அதை உருவாக்கிய சக்தியிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.
For its action it has to impose its need of order. அது செயல்பட ஒழுங்கு முறையை வலியுறுத்துவது அவசியமாகிறது.
It imposes it on the world she has made and in which it lives. அது தான் உருவாக்கி வாழும் இவ்வுலகத்தின்மீது அதைச் சுமத்துகிறது.
There would then be the double contradiction. அப்படியானால் அங்கு இரட்டை முரண்பாடு எழுகிறது.
Consciousness emerges from a fundamental Inconscience. அஸ்திவாரமான ஜட இருளிலிருந்து ஜீவியம் வெளிவருகிறது.
Yet there is a Mind of order and reason. இருப்பினும் அங்கு ஒழுங்கு முறையும் பகுத்தறிவும் கொண்ட மனம் உள்ளது.
It manifests as the brilliant final consequence of a world. அது அற்புதமான முடிவான விளைவாக, உலகமாக வெளிப்படுகிறது.
That world is created by inconscient Chance. அவ்வுலகம் ஜட இருளின் தற்செயல் நிகழ்வாக உருவாக்கப்படுகிறது.
These things may be possible. இவை சாத்தியமாக இருக்கலாம்

Before we can accept, they need a better explanation.

Contd...

இவற்றை நாம் ஏற்பதற்குமுன் இவற்றிற்கு ஒரு மேலான விளக்கம் தேவை.

தொடரும்…

ஜீவிய மணி

அந்த நாளில் 7 அல்லது 10 குழந்தைகளைத் தாய் எப்படி வளர்த்தாள்?தாயார் வளர்க்கவில்லை. அவை தானே வளர்ந்தன. அவை சமூக மூடநம்பிக்கை, அதன் கடுமை இரண்டிற்கும் உட்பட்ட சுதந்திரத்தில் அவர்கள் வளர்ந்தன. இன்றும் மூட நம்பிக்கை ஏராளமாக உண்டு. ஆனால் குறைவு. கடுமை அளவு கடந்து குறைந்து விட்டது. இவையெல்லாம் குழந்தை உயர்ந்த பண்பைப் பெறப் போதாது. பெற்றோருக்குரிய பண்பு இயல்பாக குழந்தைக்கு வரும். அது உயர்ந்ததாக இல்லாவிட்டாலும், அந்த வரையறைக்குள்ளேதான் குழந்தை உயர்ந்த பண்பைப் பெற முடியும். பிரபலமான பள்ளிகளில் பரந்த மனப்பான்மையுடைய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளையொட்டி Kinder Garten வகுப்புகளை நடத்த முன்வந்தால் இது முடியும். தாய்மார்கள் ஆசிரியர்களாக முன்வந்து அன்பால் வாழ்வை உருவாக்கும் ஸ்தாபனம் இது. கல்வி மூலமே பண்பு வரும். அன்பே அதைப் புகட்டும். 100 ஆண்டுகளுக்குமுன் K.G.வகுப்புகளை பெண்கள் நடத்த முன்வந்ததுபோல், சமூகத்தில் உச்சகட்ட தாய்மைப் பண்பை பெற்றவர் எல்லா குழந்தைகளையும் வசீகரிக்கும் ஆசிரியராகப் பணிபுரிய பலர் முன்வந்தால், இது நடக்கும்.

It is a creation of an educational centre of emotional culture.

ஜீவிய மணி

கடந்த கால வரலாற்றின் வாழ்வு, அனுபவம், பண்பு, கலாச்சாரம் அனைத்தையும் பெற்றோர் அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் வாயிலாக குடும்பம் என்ற ஸ்தாபனம் ஏற்பட்டது. தகப்பனாரில்லாமல் வளரும் குழந்தை, தாயில்லாமல் வளரும் குழந்தை, அநாதை விடுதிகளில் வளரும் குழந்தைகள் இன்று பெரும்பாலும் குற்றவாளிகளாகவும், போக்கிரிகளாகவும் உருவாகின்றனர். திருவுருமாற்றம் செயல்பட்டால், பெற்றோரின் குறைகளின்றி குழந்தைகள் நேரடியாகப் பரந்த சமூகப் பண்புகளுடன் வளரும். இது கற்பனை அல்லது தத்துவம். ஆனால், எதிர்காலம் இதற்குரிய அமைப்பை உருவாக்கும் எல்லா அறிவும், அனுபவமும் இன்று சமூகத்திற்கு உண்டு. இயல்பாகப் படிப்படியாக இந்த மாற்றம் எழுந்தால் அதன் கட்டங்களை அறியலாம். திடீரென மாற்றம் வந்தால் அது புயலாக வெடிக்கும். உலகெங்கும் Pre.KG, LKG, UKG வகுப்புகள் வந்துள்ளது முதல் அறிகுறி. அங்கும் குழந்தைகள் தாய், தகப்பனாரைப் பிரிய பிரியப்படவில்லை. தகப்பனார்மீது அதீத பற்றுள்ள குழந்தை தாய், பாட்டியுடன் வளர்ந்தாலும், அவன் ஆசை முழுவதும் தீவிர வேகமாகி ஆர்ப்பாட்டமாகிறது. வெகு சிறப்பான எதிர்காலம் உள்ளதை வேகம் காட்டுகிறது. தகப்பனார், தாயார், குடும்பம் ஆகியோர் உளநிலையின் உண்மையை அறிந்து குழந்தையின் வேகத்தைப் பெரும் திறமையாகச் செய்யும் ஞானம் இன்று உலகில் உள்ளது.



book | by Dr. Radut