Skip to Content

MJ_July-2016_05.பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

126. உயிர் மனத்தை ஏற்பது

  • நாம் செயல்படுகிறோம் என நாம் நினைப்பது இயற்கை செயல்படுவதாகும்.
  • செயல் என்பது நம்மைப் பொறுத்தவரை எண்ணத்தை உடல் ஏற்பது.
  • ‘எண்ணம்’ என்பது ஆத்மாவின் செயலையும், இயற்கையின் செயலையும் மனம் ஏற்பது.
  • கீழிருந்து செயல்படுவது இயற்கை. அது உடல், உயிர், மனம் வழி செயல்படுகிறது.
  • மேலிருந்து செயல்படுவது ஆத்மா. மனம் வழி உயிரைக் கடந்து உடலையடைவது.
  • கல்லெறியும் கூட்டத்தில் அறிவுள்ளவனுக்குக் கல் எரியத் தோன்றுவது அவன் செயலல்ல, கூட்டம் அவனை உந்துகிறது.
  • கல்லூரியில் மாணவன் இலட்சியம் பேசுவது அவன் கூறுவதல்ல, கல்லூரிச் சூழல்.
  • மனிதன் - ‘நான்’ - செய்வது என்ன? அது குடும்பம், ஊர் சொல்வது.
  • ஒரு நடிகன் பிரபலமானபின் அவன் Hero-வாக நடித்துப் பிரபலமானால் மட்டும் அவனுக்குச் சிறுவயதிலேயே நடிக்கப் பிடிக்கும். பரோபகாரம் சொந்தமாகவேப் பிடிக்கும் எனப் பேசுவதைப் பார்க்கலாம்.
  • நடிப்பு அவன் பர்சனாலிட்டி, Hero அவன் individuality தனித்தன்மை.
  • உலகில் செயல்படுவது இயற்கை. அதை இயக்குவது இறைவன். அவை இணைந்து மனிதன் மூலமாக செயல்படும் பொழுது மனம், உயிரைக் கடந்து செயல் உடலால் எழுகிறது.
  • இந்தியன் சுதந்திரப் போராட்டத்தில் அப்படி வீறு கொண்டு எழுந்தவன்.
  • ஆங்கிலேயர் ஹிட்லரை எதிர்க்க எழுந்ததும் அதுபோலவே.
  • ரூஸ்வெல்ட் சொன்னதால் அமெரிக்கர் திவாலான பாங்கில் திருப்பி தம் பணத்தைப் போட்டாலும், அது தனக்கே புரிந்து செயல்பட்டதாகும்.
  • நாமெல்லாம் சுடக் கற்கிறோம். க்ஷத்திரியனுக்கு அது இயல்பாக வரும். அது ஜாதித் திறமை. Individuality மூலம் அது வெளிவந்தால், அவன் தளபதியாவான்.
  • ஒருவருக்கு அப்படி வார்த்தை பலித்தால், அவரால் பிறருக்கு பிரச்சனை தீர்ந்தால், வியாதி குணமானால், ஞானோதயம் எழுந்தால் அவருக்கு யோகம் பலிக்கும்.
  • பல ஆண்டான பிரச்சனை இன்று புரிந்து தீர்ந்தால், மனம் புரிந்துகொள்வதை உயிரும் உடலும் ஏற்கின்றன எனப் பொருள்.
  • உயிர் மட்டும் புரிந்து கொண்டால், அவன் பிரச்சனை தீரும்.
  • அனைவர் பிரச்சனையும் தீர்ந்தால், உடலும் ஏற்பதாகும்.
  • ஹசாரே கூறியதை ஊர் ஏற்றது. பல ஊர்கள் ஏற்றன. இன்று நாட்டிற்கே லஞ்சம் ஒழிய வேண்டும் என்கிறார். ஊர் ஏற்பது உயிர் ஏற்பது. நாமேற்பது உடலும் ஏற்பது. உடலின் ஆன்மா ஏற்றால் உலகமே ஹசாரேயை ஏற்கும்.
  • இவை யோக சித்திகள்.
  • பூரண யோகம் பலிக்க, உடலின் ஆத்மா ஏற்றுச் செயல்பட வேண்டும்.
  • யோகம் பூரணம், பூரண யோகம் உலகத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் அதைக் கடந்த பிரம்ம நிலைக்கும் பெறும் பூரணமாகும்.

**********



book | by Dr. Radut