Skip to Content

MJ_July-2016_07.வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

20. நாம் செலவு செய்யும் எனர்ஜியைவிட நம் உடம்புக்குள் வரும் எனர்ஜி அதிகமாக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்ட உணவு, முறையாக உடற்பயிற்சி, சுத்தமான பழக்க வழக்கங்கள் மற்றும் சந்தோஷமான மனநிலை ஆகியவை நம்முடைய எனர்ஜியை எப்பொழுதும் பாஸிட்டிவாக வைத்துக் கொள்ள உதவும். இப்படி எனர்ஜியை பாஸிட்டிவாக வைத்துக் கொள்வது நம்முடைய உடல் நிலை எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

நமக்கு உடல், உயிர், அறிவு, ஆத்மா தேவை என்பது உண்மையானாலும் மேலும் சில பொதுவான அடிப்படையான உண்மைகள் உண்டு. அவை

  • 4 அம்சங்கள் தேவைப்பட்டாலும் ஒரு அம்சம் சிறப்பாக இருப்பதே பொது வெற்றிக்கு உதவும்.
  • எந்த அம்சம் சிறப்பானாலும் எல்லா அம்சமும் சிறப்பாக இருக்க உதவும்.
  • இந்த 4 அம்சங்கள் நூலிலும் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. மனத்திற்கு உயிர் எனும் உணர்ச்சியுண்டு, மனத்தின் உடல் நிலையைச் சரியாக வைத்துக் கொள்ளும் அடிப்படை மூளை. மூளையை மனத்தின் உடல் எனலாம். உயிருக்கு உடல் உண்டு. அது நரம்பு மண்டலம். உயிருக்கு அறிவுண்டு. அதுவே வாழ்வில் பிழைக்க உதவும் அறிவு. உடலுக்கு உணர்ச்சியுண்டு. அது தொடு உணர்ச்சி. சொரணை என்பதும் அதுவே. உடலுக்கு மூளையுண்டு. டைப்பிஸ்ட் key board பார்க்காமல் டைப் செய்வான்.
  • தமிழ் நாட்டில் செட்டியார் கணக்குப் படித்தவர். வாழ்க்கை வளத்தில் கணக்கு ஒரு பகுதியே என்றாலும் அந்த ஒரு பகுதி இருப்பதால் செட்டியார் ஜாதியில் ஏழையிருப்பதில்லை. பெரும் பணக்காரர்கள் செட்டியார்களே.
  • உடற்பயிற்சி ஆசிரியர்கட்கு ஆயுள் அதிகம். அவர்கட்கு வியாதி வருவது குறைவு.
  • மேல் நாட்டாருக்கு, அதுவும் அமெரிக்கருக்கு முதுகுவலி பெரும்பாலோர்க்குண்டு. நம் நாட்டில் அது குறைவு. அதுவும் பெண்கட்கு ரொம்பக் குறைவு. மேல் நாட்டார் நாற்காலியில் சாய்ந்து உட்காருவதால், முதுகுக்கு ஆதரவு இருப்பதால் தெம்பு இருப்பதில்லை. நாம் தரையில் உட்காருவதால் முதுகுக்கு ஆதரவில்லாமல் உட்காருவதால் முதுகுக்கு தெம்பு அதிகம். பெண்கள் எல்லா வேலையையும் தரையில் உட்கார்ந்து செய்வதால் அவர்கட்கு முதுகு வலியே தெரியாது.
  • முதுகு வலி ஒரு அம்சம். உடற்பயிற்சி ஆசிரியர் தொழிலுக்காகப் பயிற்சி செய்கிறார், செட்டியார் பண நிர்வாகத்தில் கணக்கு சிறு பகுதி. அந்த ஒரு சிறு பகுதி சிறப்பாக இருப்பதால் அவர்களிடம் பணம் பெருகுகிறது.
  • ஐரோப்பாவில் குளிக்கக் கூடாது என்று ஒரு கொள்கை சில நூற்றாண்டுகளாக, 1900-1950 வரையிருந்தது. வருஷத்தில் குளிர் குறைவான மே மாதத்தில்தான் குளிப்பார்கள். அதனால் திருமணமெல்லாம் மே, ஜுனில் வருவது வழக்கம். குளிக்காததால் உடலில் அழுக்கு வாடை நெடியாக வருவதை மறைக்க பூச்செண்டு எடுத்து வருவது வழக்கம். வருஷம் முழுவதும் குளிக்காதவனுக்கு நோய் அதிகமாக வரும், ஆயுள் முடியும். நடைமுறையில் நம் நாட்டில் சுதந்திரம் வரும்பொழுது ஆயுள் 30 இருந்தபொழுது மேல் நாட்டில் ஆயுள் 60 ஆண்டுகள் இருந்தது. ஏனெனில் அவர்களுக்குச் சாப்பாட்டு வசதியதிகம். முக்கியமான குறையை மீறி ஒரு அம்சம் சிறப்பானதால் ஆயுள் இரு மடங்கிருந்தது.
  • உடல் ஒரு பகுதியானாலும் உடலில் எனர்ஜி எப்பொழுதும் அதிகமாக, மிச்சமாக இருப்பது அறிவு வளர, செல்வம் பெருக, ஆயுள் வளர, உடல் நலம் பெருக உதவும்.

(தொடரும்)

***********



book | by Dr. Radut