Skip to Content

MJ_July-2016_09.The Life Divine – Outline

The Life Divine – Outline

தமிழ்

கர்மயோகி

அத்தியாயங்களின் சிறு குறிப்பான விளக்கம்:-

அத்தியாயம்-1:

ஆதிநாளிலிருந்து மனிதன் தன் மூலமான பிரம்மத்தை அடைய முயல்கிறான். இடையில் விடாவிட்டால் வெற்றி பெறுவான்.

அத்தியாயம்-2:

அவன் காண்பது பிரம்மமல்ல, ஜடம். ஜடத்தை அறிவால் அறிய முடியாது. ஜீவியத்தால் ஜடமும், பிரம்மமும் சக்தியென அறியலாம்.

அத்தியாயம்-3:

சன்னியாசி முடிவான பிரம்மத்தை முழுமையாகக் கண்டவர். எவ்வளவு பெரியதானாலும் அது பகுதியே. முழுமையல்ல.

அத்தியாயம்-4:

ஜடமும், பிரம்மமும் பிரபஞ்ச ஜீவியத்தில் சந்தித்தது போல பிரம்ம ஜீவியத்தில் சந்தித்து பரம்பொருளாகும். உலகம் அனைத்தும் பரம்பொருளே.

அத்தியாயம்-5:

மனம் சிருஷ்டியில் மனிதனை பிரம்மத்திலிருந்து 18 வகையாகப் பிரித்தது. பரமாத்மா, பாதாளம் அதில் ஒரு வகை. இரண்டையும் இணைப்பது மனித இலட்சியம்.

அத்தியாயம்-6:

மனிதனுக்கு மனிதன், பிரபஞ்சம், பிரம்மம் என்ற 3 அம்சங்களுண்டு.

அத்தியாயம்-7:

அகந்தை நமது ஆத்மாவில்லை. அது இடைப்பட்ட தற்காலிகமானது.

அத்தியாயம்-8:

வேதாந்தம் 4 பெரிய சூத்திரங்களைக் கண்டது. சத் புருஷனைக் கண்டாலும், அதற்கும் அகந்தைக்குமுள்ள தொடர்பு ரிஷிகள் எழுப்பிய தலையாய ஆன்மிகப் பிரச்சனை.

அத்தியாயம்-9:

அகந்தை அழிந்து உலகைச் சமுத்திரமான சக்தியாகக் கண்டால் அது ஜீவனாகவும், ஜீவியமாகவும் காட்சியளிக்கிறது.

அத்தியாயம்-10:

சித்-சக்தி அதனுடைய சக்தி. அது ஜீவனுள்ள சக்தி, விரயமற்றது.

அத்தியாயம்-11:

சச்சிதானந்தம் ஆனந்தத்தைப் பொருட்களில் வெளிப்படுத்தும் பொழுது மனிதன் ஆனந்தத்தை விட்டு பொருட்களை நாடி வலியை உணர்கிறான்.

அத்தியாயம்-12:

வலியை விலக்க ரிஷிகள் சந்தோஷத்தையும் விரதமாக விலக்கினர். பகவான் வலியை உணர்ச்சியாக ஏற்று திருவுருமாற்றத்தால் ஆனந்தமாக்க வேண்டும் என்கிறார்.

அத்தியாயம்-13:

பரம்பரை மாயையை இல்லாதது எனக் கூறுகிறது. மாயை பிரம்மத்தை உலகமாக்க அனைத்தும் அனைத்துமான பிரம்மத்தை அனைத்தும் ஒரு ஜீவாத்மாவிலும், ஒவ்வொரு ஜீவாத்மாவும் அனைத்திலும் என மாற்றியது என பகவான் கூறுகிறார். (all is in all -- all is in each and each is in all)

அத்தியாயம்-14:

சத்திய ஜீவியம் சச்சிதானந்தத்திற்கும் மனத்திற்கும் இடையேயுள்ளது. இது உலகைப் படைத்தது.

அத்தியாயம்-15:

சத்திய ஜீவியத்தின் ஜீவியம் காலம், இடத்தை சிருஷ்டிக்காக உற்பத்தி செய்தது.

அத்தியாயம்-16:

இறைவன், ஜீவாத்மா, மனிதன் என்ற 3 நிலைகள் சத்திய ஜீவியத்திற்கு உண்டு.

அத்தியாயம்-17:

தெய்வீக ஆன்மா சச்சிதானந்த லீலையில் உள்ளது. இது எந்த நேரமும் பிரம்மத்தின்முன் உள்ளது. இதற்குள் சத்திய ஜீவிய வாழ்வின் 3 நிலைகள் (வேதம் கூறுவது) உள்ளன.

அத்தியாயம்-18:

சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரிந்து அவற்றிடையே மனம் உற்பத்தியாகிறது.

அத்தியாயம்-19:

மனம் தன் சக்தியால் வாழ்வை உற்பத்தி செய்தது.

அத்தியாயம்-20:

மரணம் வாழ்வை நித்தியமாக்குகிறது.

அத்தியாயம்-21:

ஆசை உயர்ந்து அன்பாகிறது.

அத்தியாயம்-22:

சக்தியும் ஜீவியமும் பிரிந்துள்ளன. அவை உயர்ந்து சத்திய ஜீவியத்தில் இணைகின்றன.

அத்தியாயம்-23:

சைத்திய புருஷன் நம் உண்மையான ஆத்மா.

அத்தியாயம்-24:

ஜடம் ஆனந்தமய புருஷன்.

அத்தியாயம்-25:

ஜடம் நம் பார்வையால் ஏற்பட்டது. நம் பார்வை மாறினால் ஜடம் மறையும். அஞ்ஞானம், தமஸ், பிரிவினை தடை.

அத்தியாயம்-26:

பரிணாமத்திற்கு 7 தத்துவங்கள் உண்டு. ஒரு சமயத்தில் ஒரு தத்துவம் வேலை செய்யும்.

அத்தியாயம்-27:

சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம் என்ற 4 தத்துவங்கள் தலைகீழே மாறி ஜடம், வாழ்வு, சைத்திய புருஷன், மனம் என்ற உலகமாக சிருஷ்டிக்கப்பட்டது.

அத்தியாயம்-28:

சத்திய ஜீவியத்தை அடையும் சூட்சும இரகஸ்யத்தைக் காண பகவான் 10 ஆண்டுகள் முயன்று முடிவாக மேலே போக முதலில் கீழே அடி மனம் போய் அங்கிருந்து உயர்ந்து ஆன்மிக மனம் வழியாக சத்திய ஜீவியத்தை அடைய வேண்டும் எனக் கண்டார்.

(தொடரும்)

*************

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம் குறையை குறையாக நினைக்கிறோம். ஆன்மா விழிக்க குறை அவசியம் என்பது பகவான் விளக்கம். பிடியின்றி கத்தி வெட்டாது. கரையின்றி நதி ஓடாது. கத்தியின் கூர்மை வெட்ட கூர்மையற்ற பிடி வேண்டும். நீரோட்டம் நிறைந்து நதி பெருக இரு மருங்கிலும் தடை செய்யும் கரை வேண்டும். ஆன்ம விழிப்பால் ஜீவன் விழிப்படைகிறது. ஆன்மா ஜீவனின் சிகரம். ஜீவன் கரணங்களின் தொகுப்பு. அத்தொகுப்பில் ஆன்மாவும் ஒரு பகுதி.

மனிதன் சத்திய ஜீவனாக முடியுமா என்ற கேள்வி மனித குலத்திற்குண்டு. மனிதன் விழிப்படைய ஜீவனும், ஆன்மாவும் விழிப்படைய வேண்டும். அதற்கு மேலிருந்து சத்திய ஜீவியம் வருவது அவசியம். அதனால் மனிதன் சத்திய ஜீவனாக முடியுமா என்ற கேள்வி அர்த்தமற்றுப் போகிறது.

************



book | by Dr. Radut