Skip to Content

சாவித்திரி

 

அன்னையின் வருகை (மார்ச் 29, 1914)

சுமார் 2 அல்லது 3 மைல் தூரத்திலிருக்கும்பொழுது, புதுவை நகரின் மத்தியில் அன்னை   ஓர் ஒளி ஸ்தம்பம் நிற்பதைக் கண்டார். பின்னர் ஸ்ரீ அரவிந்தரே அந்த ஜோதி என   அறிந்தார்.

மழையை அன்னை அருள் என்கிறார். அந்த ஆண்டு பெருமழை பெய்தது. அதற்கு முன்    100 ஆண்டுகளாகப் பெய்யாத அளவு மழை அந்த ஆண்டு பெய்து அன்னையை நம்  நாட்டிற்கு அருள் வரவேற்றது.

சாவித்திரி

1910 முதல் 1950 வரை பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய ஆங்கிலப் பெருஇலக்கியம், காப்பிய வடிவமானது.  இதன் வரிகள்  மந்திர சக்தியைத்  தாங்கி வருபவை.

புராணத்து  சாவித்திரி எமனிடமிருந்து  சத்தியவானை மீட்டாள். ஸ்ரீ அரவிந்தருடைய சாவித்திரி காரிருள் தெய்வமான காலனின் இருளை அழித்து ஒளிமயமாக்கி உலகிலிருந்து மரணத்தை அழிக்கும் சின்னமானாள். இந்நூலைப் பயில்பவர்க்கும்,பொக்கிஷமாகப் போற்றி வைத்திருப்பவர்க்கும்,

  • வாழ்வில் இருளாக வரும் ஆபத்து, விபத்துகளை விலக்கும் திறனுண்டு.
  • பூரண பாதுகாப்பின்  சின்னமாக செயல்படும் நூல் வடிவமான ஆத்ம  சக்தி.
  • ஆன்ம விழிப்பை நாடுபவர் ஆழ்ந்து பயின்றால் ஆன்மா விழித்தெழும்.
  • அன்னையின் ஆன்மீக இரகஸ்யத்தை "Adoration of the Divine Mother"    அன்னையை துதிக்கும்  பகுதி  விளக்குகிறது.

இந்நூலில் வரும் சில சீரிய கருத்துக்கள்:-

  • மௌனத்தின் ஊமைக் கருவிலிருந்து  எழும்  செயல்கள்.
  • அவனும் அவளும் இப்பரந்த உலகமாவர்.
  • அவன் மௌனம் அவள் செயலுக்கிட்ட  முத்திரை.
  • அற்புதங்கள் அன்றாட  நிகழ்ச்சியாகும்.
  • பரிசு பெற்ற கீரீடத்திற்கு பதிலாக அளிக்கும்  மரண  தண்டனை.
  • வறண்ட உள்ளத்தை மலர வைக்கும்  புன்னகை.
  • காலத்தையும் விதியையும் எதிர்த்தெழுந்த  ஆத்மா.
  • இறைவனை நெருங்கும் மனிதனை சூழும்  இருள்போல.
  • சந்தோஷம் ஏந்தும் மௌன இதயம்.
  • பிரபஞ்சத்தைவிட அகன்ற அன்பு.
  • உள்ளே சென்ற ஆன்மா காணும் உள்ளுறை ஜோதி.
  • மூடிய கண்கள் காணும் பிறந்தறியாதவனின் ஊமை முகங்கள்.
  • நரகத்தை கடந்தறியாதவர் மோட்சத்தை அடைய முடியாது.
  • ஆனந்த  அமைதியான மேலுலகம், இறைவன் நம்மைத் தழுவும்  இவ்வுலகம்.
  • ஒரே க்ஷணத்தில் பிறந்த ஓராயிரம் ஆண்டுகள்.
  • உள்ளங்களில் சூரியனை உதிக்கச்  செய்யும்  சூரியன்.
  • விண்டுரைக்க  முடியாததை விளக்கும்  சொல்.
  • குறையற்ற  சிருஷ்டியின் குணச் சிகரங்கள்.

பெண்ணின்  பெருமை

-துறவறம் பூண்ட பக்தன் சக்தியை வழிபடுகிறான்.

-இலட்சிய  தேசபக்தன்  நாட்டை பாரத மாதாவாகக் கருதி வணங்குகிறான்.

-இல்லறத்தை நல்லறமாக்க கணவன்  மனைவியை  மனத்தின் ஆழத்தில் ஏற்று மகிழ்கிறான்.

-உயர்ந்த  உள்ளமுள்ள  மனிதன் குடும்பத்தை  உயர்த்த  மனைவியின்    குறையை    நிறைவாகக் கருதுகிறான்.

-உன்னதமான  யோகத்தை  வாழ்வாக   ஏற்றவன்   மனைவியின் துரோகத்தை  அன்னையின்  வரப் பிரசாதமாக ஏற்கிறான்.

-அட்டகாசம்  செய்யும்  காளியும், அதிர்ஷ்டமான லக்ஷ்மியும்,அற்புதமான  சரஸ்வதியும்,  ஞான ஊற்றான  ஈஸ்வரியும்  அன்னையை ஏற்கும்     மனிதனுக்கு     அவன் மனைவியேயாகும். அவளது உயர்ந்த  அடக்கம் அவனை ஊக்குவிக்கும்,   சிறந்த   சேவை ஆயுளை  வளர்க்கும்,  கொடுமையான  சிறுமை  அவன்  குறைவை அகற்றும்,   விரும்பிச்   செய்யும் துரோகம்  பூரண  யோகத்தைப் பூர்த்தி செய்யும்.

 

பெண்மை சிறப்புடையது. அதன் குறையும்   நிறைவாகும்



book | by Dr. Radut