DAILY MESSAGES                           

Series XVI

 

551)    What you read influences you and affects you, which is natural. But the best way of reading, if you must read, is you should influence the consciousness of what you read.

            நாம் படிப்பதும், பார்ப்பதும் நம்மைப் பாதிக்கின்றது. நாம் அவற்றைப் பாதிப்பது முறை.

552)    That silence which removes the sccond line of thought is mental Silence.

            மனம் முணுமுணுப்பதை அகற்றும் மௌனம் முழுமையான மௌனம்.

553)    Excessive excess of one aspect can achieve success on a world scale.

            ஒரு அம்சம் உபரியாவது முழுமையானால் உலகை ஆளலாம்.

554)    Functioning from mind, man always does the very opposite as soon as something is accomplished. Not doing so, he starts moving to the Supermind.

            எந்த நல்ல காரியம் முடிந்தாலும் மனம் உடனே எதிரானதைச் செய்ய விழையும். இது மனத்தின் முரண்பாடு. அது உடன் பாடாவது சத்தியஜீவியம்.

555)    At no point does one need to declare, " I am unable to surrender, " because at this point his inability can be surrendered.

            முடியவில்லை என்பது சரணாகதிக்கில்லை. ஏனெனில் இயலாமையை சரணம் செய்யலாம்.

556)    To practise surrender which is a conscious act, we must first become conscious, i.e. the spirit  in us must awake.

            விழிப்பான சரணாகதியை மேற்கொள்ள கண்மூடியான நாம் முதலில் விழிக்க வேண்டும்.

557)    Urge in the physical changes into energy of the vital before appearing as thought in the mind.

            உடலின் உந்துதல், பிராணனில் சக்தியாகி, மனத்தில் எண்ண மாகிறது.

558)    Generosity is the joy in another soul flowering.

            அடுத்தவர் வாழ்வு மலர்வதில் பெறும் ஆனந்தம் பெருந்தன்மை.

559)    Poverty is the inconscience of matter and the vital.

            ஏழ்மை உடலின் அறியாமை.

560)    நாம் நம்மை வலியுறுத்துவதே சமர்ப்பணத்திற்குத் தடை.

         Self-assertion withstands prayer.

561)    One can make the world wealthy abolishing poverty if he can consecrate his idea about poverty.

            ஏழ்மையைப் பற்றி அன்னை கூறுவதை ஒருவர் ஏற்று சமர்ப்பணம் செய்தால் உலகில் ஏழ்மை அழியும்.

562)    To change our opinions is like demolishing our house and rebuilding it. To change it universally is to change the pattern of house building all over the world.

            எண்ணம் மாறுவது கடினம். அது வேஷ்டி மாறுவது போல். எண்ணம் சமர்ப்பணமாவது உலகில் (பீக்ஷீமீ ஹ்றீமீ) உடையை மாற்றுவது போலாகும்.

563)    Laziness is to exist and enjoy the old grooves of life.

            பழைய வாழ்வை ரசித்து, ருசிப்பதும், அதிலிருந்து மாறக் கூடாது என்பதும் சோம்பேறித்தனம்.

564)    Results of life come to a man through his own acts, his personality, the society he represents and the receptivity of his own unorganised personality in the measure he can NOW activate the channels by becoming positive there.

            மனிதன் சமூகத்தினின்றும், வாழ்வு மூலமும், பிரபஞ்சத்தி லிருந்தும், ஆண்டவன் அருளைப் பெறுகிறான். அவை இவனுடைய செயல்கள், குணம், சுபாவம், சொரூபம், குடும்பம், ஊர் போக அசத்  (Non-Being) மூலமாக இவனை வந்தடை கின்றன. அன்று ஏற்பட்ட தடைகளை இன்று மனப்பாங்கால் நேராக்கினால், வர வேண்டியவை வந்து சேரும்.

565)    Rules of life. வாழ்க்கைச் சட்டங்கள் அனைவராலும் தவறாது பின்பற்றப்பட வேண்டும். அதைப் பின்பற்றாதவர்க்கு வாழ்க்கை யில்லை.

         Rules of life are a must to one and all.

566)    Cannot average humanity and the below average aspire for Mother's consciousness? Yes, they can, if they are capable of proportionate effort.

            எளிய மனிதன் அன்னைக்குப் பிரார்த்திக்கலாம். பிரார்த்தனை பலிக்கும் அளவுக்கு மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். மேலும் அன்னை வாழ்வை அடைய அவன் தான் அறியாமையைச் சமர்ப்பணம் செய்ய முன்வர வேண்டும்.

567)    Higher consciousness is for him who has reached the highest point of human consciousness.

            மனிதனின் அதிகபட்சத்தைக் கடந்தவனுக்கு அன்னை வாழ்வுண்டு.

568)    The scholar makes academically conscious what the common man unconsciously uses.

            தெரிவது பயன் தரும். புரிவது அறிவின் விளக்கம்.

569)    Commercial culture, technological culture, academic culture, administrative culture, martial culture, religious culture, Spiritual culture are the various expressions of culture. Generally we mean social culture by the word.

            பண்பு பல வகையானது. அது நுழையாத வீடில்லை. பிரித்துணர்வது அறிவு. தொகுத்தறிவது விவேகம்.

             Society rests on the structure of culture.

570)    Who meets whom where decides the outcome.

            அந்தஸ்து முடிவை நிர்ணயிக்கும்.    

571)    Movement needs energy. As it is the energy of the Force and not of the Being, the energy ends at some point. Moving from the Force to the Being, the energy is endless.

            சலனம் சக்திக்குரியது. ஜீவனுடைய சக்திக்கு முடிவில்லை. பிரகிருதியின் சக்திக்கு முடிவுண்டு. பிரகிருதியின்று, ஜீவனுக்கு மாறினால் சக்திக்கு அளவில்லை, முடிவில்லை, அழிவில்லை.

572)    To effectively function in this world as an instrument of Supermind, the forces of this world should be of service to us. Money is the first of them.

            இறைவனுக்கு இவ்வுலகில் கருவியாக, இவ்வுலக சக்திகள் நமக்குப் பணிய வேண்டும். தலையாயது பணம்.

573)    The spiritual part in man now dormant coming to the surface is the spiritual awakening known to the world. The evolving Spirit in all Becoming knowing itself as the Absolute is known as the Spiritual Awakening in HIS yoga.

            மனித ஜீவனின் தலைசிறந்த பகுதியான ஆன்மா மறைவிலிருந்து எழுவது ஆத்ம விழிப்பு என்று அறிவோம். பிரகிருதியின் ஆன்மா - சைத்தியபுருஷன் - தான் பிரம்மத்தின் இச்சையால் வளர்வதை அறிவது, தானே பிரம்மம் என்று அறிவது பூரண யோகத்தில் ஆத்ம விழிப்பு, பிரம்ம ஞானம், பிரம்ம ஜனனம், பிரம்மார்ப்பணம் எனப்படும். அதை அறிவது பிரம்ம ஞானம். அந்த ஞானம் செயலாய் எழுவது பிரம்ம ஜனனம். அதற்குரிய அசைவு பிரம்மார்ப்பணம்.

574)    Court is created to clear up unclear legal claims. It is used to administer social or physical pressure offered by a legal dispute.

            நியாயம் வழங்க ஏற்பட்டது சட்டம். மனிதன் சட்டம் மூலம் நெருக்கடி ஏற்படுத்த முயல்கிறான்.

            Any instrument can be used from both sides.

575)    உள்ளம் உறவு கொள்ளும் வரை யோகமில்லை. ஆத்மா உறவு கொள்ளாத யோகம் மோட்சம் தேடும், திருவுருமாறாது. உள்ளம் விட்டுக் கொடுக்காதவரை, ஆத்மாவுக்கு உறவு ஏற்படாது.

         Yoga does not commence in him who relates to people emotionally. Yoga needs relationship of the soul, which commences after the psychological relationship dissolves.

576)    உறவுக்குப் பிரச்சினையில்லை.

            Problems vanish when the relationship is forged.

            பிரச்சினையுள்ளவரை உறவில்லை.

         உறவும் பிரச்சினையும் உடனுறையா.

577)    Asking for what we want is prayer. Accepting what Mother gives is consecration. Surrender tries to dissolve the person who accepts at our end.

            வேண்டியதைக் கேட்பது பிரார்த்தனை. கொடுப்பதை ஏற்பது சமர்ப்பணம். ஏற்பவன் இல்லாமற் போவது சரணாகதி.

            Man surrenders to make himself powerful. It is not the surrender HE asks for.

578)    பிரச்சினை எனக்கில்லை என்பது சரணாகதிக்கு முன்னிலை- யான சமர்ப்பணம். நானே இல்லை என்பது சரணாகதி. என்னை அன்னையாக மாற்றுவது திருவுருமாற்றம்.

         Consecration says the problem is not mine. Surrender dissolves me. Transformation makes me The Mother.

579)    A language is culturally understood at the personal level it is psycho- logically received.

            பிற மொழியை நம் பண்பு மூலம் ஏற்கிறோம். தாய்மொழியும் எவருக்கும் அவர் மனநிலைக்கேற்ப விளங்கும்.

            Communication is effected by psychology through culture, not merely by the language.

580)    The culture one has without losing it in times of war, famine, calamity is true.

            அழிவு ஆக்கிரமித்துக் கொண்ட பின் உள்ள பண்பு உண்மை யானது.

581)    When we surrender our mental thoughts that we initiate, Supramental thoughts begin to occur in the mind from above.

            மனம் எண்ணத்தை எழுப்புவதை சரணம் செய்தால் சத்தியஜீவிய எண்ணங்கள் தானே மனதில் உற்பத்தியாகும்.

582)    Self-awareness opens to the previous level of involution.

            தன்னையறிவது என்பது சிருஷ்டியில் தனக்கு முன்னிலையை அறிவதாகும்.

583)    Self-awareness of the ego is spiritual awakening.

            அகந்தை தன்னை ஆத்மாவாக அறிவது ஆத்ம விழிப்பு.

584)    An urge rears its head when the capacity to satisfy it is waning.

            திறமை குறையும் நேரம் தேவை அதிகமாகத் தெரியும்.

585)    A leader is needed not for what he can accomplish or for his talents, but by the NEED of others to whom those needs would otherwise not be met.

            தலைமை, சேவை, திறமைக்காக தலைவர் தேவைப்படுவதில்லை. மற்றவர்களால் பூர்த்தி செய்ய முடியாத தேவைகளைப் பூர்த்தி செய்வதால் தலைவரை நாடுகிறார்கள்.

586)    As long as any faculty of mind operates, it means the mind is in existence.

            நினைவு, சிந்தனை போன்ற மனத்தின் பகுதிகள் உள்ளவரை மனம் அழியவில்லை எனப் பொருள்.

587)    To achieve the results that one had with the support of Force without it, one has to see double, like Iaccoca, and physically fail in health scores of times, like Churchill.

            சக்தியால் சாதித்ததை அது இல்லாமல் சாதிக்க, லாரியை அடுத்த ஊருக்கு தள்ளிக் கொண்டே போவது போலாகும்.

588)    Entering into the plane of physical Time, minutes become ages.

            ஜடத்தில் காலம் பொறுக்க முடியாத பொறுமையுடன் நகர மறுக்கும்.

589)    England wanted Labour's Socialism, not Churchill's welfare.

            எதிரி தரும் சலுகை ஏராளமானாலும் தேவையில்லை. உள்ளது சிறியதானாலும் உரிமையாக வேண்டும்.

590)    USA which demanded payment in gold from Britain, threatening to send a warship for collection, very soon was attacked by Japan and had to pour her wealth down into war-drain.

            பொறுக்காதவனுக்கு உள்ளதும் போகும்.

591)    எழுத்தால் காரியத்தை சாதிக்க வேண்டுமானால், அது காரியத்தை சாதித்தவனுடைய எழுத்தாக இருக்க வேண்டும்.

592)    வாழ்க்கையை சௌகரியமாக ஏற்பதால் மனம் ஆதாயத்தை நாடுகிறது. வாழ்வை முழுமையாக நாடினால் அதன் அன்பு நம்மை அரவணைக்கும்.

593)    அன்னையின் ஸ்பர்சம் வயதான சுருங்கிய உடலை குழந்தையின் ஸ்பர்சம் போலாக்குகிறது.

594)    அரசனுக்கு தன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அவசியமில்லை. அது மற்றவர் கடமை. அனுபவிப்பதே அவன் பங்கு.

         அன்னையின் சூழலில் அன்பன் அரசன்.

595)    நமக்கே உண்மையாயிருப்பது மனச்சாட்சி.

         அன்னைக்கு உண்மையாயிருப்பது அன்னை மீது நம்பிக்கையுள்ள பக்தி.

596)    அனுபவப்படாமல் அறிவு வராது.

         உள்ளே போகாமல் ஆத்மா விழிக்காது.

597)    மனம் அன்னையால் நிறைந்து, சொந்த நினைவும், உணர்வையும் இழந்த பின் எழும் வேலையை அன்னை சொல்படி ஒரு நிமிஷம் செய்த பின் அந்நிலை மறைகிறது. அதன் பின் நாமே செய்யும் வேலைகள் சப்பென ஜீவனற்றிருக்கும்.

         ஜீவனுள்ள வாழ்வு பெற ஜீவனை இழக்க வேண்டுமன்றோ.

598)   

·         தனக்குப் பொறாமையேயில்லை என்பவன், பொறாமையை கருவியாகப் பயன்படுத்துபவன்.

·         பிறர்க்கு பொறாமையுண்டு என்பது முதல் நிலை அறிவு.

·         நமக்குப் பொறாமையுண்டு என்பது அடுத்த நிலை தெளிவு.

·         பிறர் பொறாமை நம் பொறாமையின் பிரதிபலிப்பு என்பது ஞானம்.

·         பொறாமை சிறுமையின் தீவிரம் என்பது தெளிவான ஞானம்.

·         பொறாமையுள்ளவரை அன்னையில்லை என்பது அன்னை ஞானம்.

·         பொறாமைக்காக வெட்கப்படுவது power பொறாமையை அழிக்கும் திறன்.

·         பொறாமை - நமது, பிறருடையது - நம்மைக் கலக்குவது பெரும்பாலும் பொறாமை போன நிலை.

·         பொறாமை நம்மை -does not disturb - சீண்டாதது பொறாமை அழிந்த நிலை.

·         பிறர் பொறாமையால் அவதிப்படும் பொழுது தெளிவான சந்தோஷம் எழுவது, அவர் பொறாமையை அழிக்கும் திறன்.

·         பொறாமை நம்மிடம் வராதது, பொறாமை முழுவதும்   அழிந்த நிலை.

·         பொறாமை வந்து மாறுவது திருவுருமாற்றத் தெளிவும் திறனுமாகும்.

·         அதன்பின் பொறாமையை நம் உலகிலும், உலகிலும் அழிக்க நம் எண்ணமும், உணர்வும் திறன் பெறும்.

599)  காலத்தையும், தூரத்தையும் கடந்த பாசமுள்ளவர் பக்தி காலத் தையும் இடத்தையும் கடந்த அன்னையைப் பரிசாகப் பெறும்.

           காலம் பாதிக்காவிட்டால் பக்தி முக்தியாகும், சித்தியுமாகும்.

600)  முடிவதற்கு முன் முடிந்ததாகக் கருதுவது அவசரமான சுபாவம். முடிந்த பின் முடிந்து விட்டதா என சோதிப்பது பொறுமையான சுபாவம்.

·         முடிவு மனத்தில் எழுவது அவசரம்.

·         முடிவு கண்ணுக்குத் தெரியாதது பொறுமை.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000