DAILY MESSAGES                           

Series XVI

 

751)    Objectivity can be in physical facts. It cannot arise in emotional impressions. One cardinal example of a vast literature is the western writings on Asia, especially USSR. Should anyone take any one of these publications, get rid of the prejudicial statements and views and write down the facts, he will make a tremendous progress in emotional objectivity.

             புள்ளி விவரத்தில் உண்மை வெளிப்படும். அபிப்பிராயம் நடுவு நிலைமை பெறாது. மாமியார் மருமகளைப் பற்றிக் கூறுவதை எழுதி, அதிலுள்ள உண்மையை ஒருவர் கண்டு பிடித்தால் அவருக்கு நடுவுநிலை உணர்வு உற்பத்தியாகும்.

752)    No man can write about another culture with objective emotions.

             அடுத்த நாட்டைப் பற்றி உணர்ச்சி பூர்வமான உண்மையை அறிவது நடுவு நிலைமை.

753)        The world has not produced one objective work where emotions are concerned.

             உணர்ச்சி சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ளதை வெளியிட்ட நூல் இது வரை உலகில் வெளிவரவில்லை.

754)    Western objectivity has won its victory in facts and figures. Their views are as objective as the communists. There is greater sincerity in the Russians.

             மனிதன் நடுவு நிலையை அறிய மாட்டான். நடுநிலை மனத்தில் பிறக்கவில்லை. உண்மை ஓரளவு பிறந்துள்ளது.

755)    To evaluate another man from your own standard even when it right is not objectivity. It is a value judgement.

             உயர்வானதானாலும் உன் நோக்கில் பிறரை அறிவது நடுவுநிலையல்ல. அது சொந்த அபிப்பிராயம். மன்னிக்க முடியாதது.

756)    The first realisation is to know the subliminal moves the surface.

             மேல்மனத்தை இயக்குவது ஆழ்மனம் என்றறிவதே முதல் சித்தி.

757)    The world has witnessed Revolutions against governments. An upsurge against lying, insincerity, prejudice, superiority is on the agenda.

             உலகம் கண்ட புரட்சிகள் ஏராளம். கர்வம், பொய், தப்பபிப் பிராயம், இவற்றை எதிர்த்த புரட்சி தேவை.

             A psychological REVOLUTION is the order of the day.

758)    Non-human expressions render human relationships tasteless as well as lifeless. Inhuman words instantly kill them.

             உறவு கடுமையால் கருகும் விஷமம் விஷம்.

759)    Human understanding is misunderstanding.

             மனிதனால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.

760)    Instrument instantly distorts.

             கருவி கசக்கும்.

761)    Exchange of foreign youth, one for each Indian village is a rich programme of cultural interchange that can have economic benefits.

             வெளிநாட்டு இளைஞன் இந்திய கிராம வாழ்வில் பங்கு கொள்வது பயன் தரும்.

762)    A hundred years after the Southerners lost the war, the resistance to de-segregation law was stiff in the extreme. What rules is not Love or Reason, but the habits of the body.

             மனிதன் மாற மாட்டான், தானே மாறவே மாட்டான். மாறாத பிரம்மம் மனிதன்.

763)    Presence of frustration indicates physical consciousness.

             அலுப்பும், சலிப்பும் நாம் உடலில் வாழ்வதைக் குறிக்கும்.

764)    As long as men feel, " I can crush you, whatever can you do?" which means his physical strength is a threat to another, the police force is necessary.

          'உதைத்தால் என்ன?' என்பவர் உள்ளவரை போலீஸ் தேவை.  'என்னிஷ்டம், நீ என்ன செய்ய முடியும்?' என்பவர் உள்ளவரை கொடுமை உயிர் வாழும்.

765)    The positive energies in excess in the society in organisation, information, religion, Spirituality, education, Goodness, charity, Service etc., are abundant. Pooled together and organised to neutralise evil, the evil of the world can be self-contained or marginalised, even disarmed.

             நாட்டின் உபரியான நல்ல சக்திகளை - கல்வி, தர்மம், சேவை - சேர்த்து தீயசக்திகளுக்கு எதிராக்கினால் அவை அடங்கி ஒடுங்கும்.

             தன்னிடம் உள்ள நல்ல குணங்களை ஒருமித்து கெட்ட குணங்கட்கு எதிராகச் செயல்பட முனைவது தீமை உள்ளே அழிய உதவும்.

766)    To combat minor crimes of all types, a full utilisation of all kinds of voluntary service will do.

             விரும்பி சேவை செய்பவர்களை சேர்த்து செயல்பட்டால் சிறிய குற்றங்கள் அனைத்தும் அழியும்.  

             நமது சிறு குறைகளையும், குற்றங்களையும் விலக்குவது என முடிவு செய்தால் மறுநாள் அவையிருக்கா.

767)    What yields results is not capacity, but action, organised action.

             திறமை இருப்பது பலன் தாராது. அதை செயல்படுத்தினால் பெரும் பலன் தரும்.

768)    Society does not come to the point of self-initiated useful activity by the individual, unless it has social incentive or personal reward.

             நல்லது செய்வதால் எவ்வளவு நன்மை ஏற்படும் என்றாலும் சொந்த ருசி அல்லது பெருமையாகப் பிறர் பாராட்டுவது இல்லாவிட்டால் மனிதன் அதைச் செய்யமாட்டான்.

             பலனைக் கருதாது, பாராட்டை எதிர்பார்க்காமல், நல்லது என்பதால் மட்டும் செய்ய முன்வருபவன் பெரிய ஆத்மா வாவான்.

769)    The strong man out of evil urge and the weak man out of perverse pleasure combine to create a good part of social evils, nationally as well as internationally. To offer both useful outlets as an organised action will reduce the best part of our evils.

             வம்பு ருசிப்பதாலும், வம்பில் மாட்டிக் கொள்ளப் பிரியப்படு வதாலும் ஏராளமான குற்றங்கள் எழுகின்றன. அந்த சக்திகள் நல்ல முறையில் பயன்படும்படிச் செய்வது எளிது.

             நேரம் நேர்மையானால் மனம் இதமாகும்.

770)    Power will act if it can reach.

             அதிகாரம் கண்ணில் பட்டால் அட்டகாசம் செய்யத் தவறாது.

771)    Never does man expand in enjoyment as when he meets with an occasion for exploitation. It is greater still if he has the freedom to do, especially when the freedom arises out of another's culture.

             உரிமையற்றதை அனுபவிப்பது கொண்டாட்டம். அதற்குரிய சுதந்திரம் தருவது ஆனந்தம். எதிரியில் நல்ல குணம் கேட்காது என்றால் ஆனந்தமும், கொண்டாட்டமும் அபரிமிதமாகும்.

772)    Intellect is fed by information. Any knowledge can be reduced to information and given to the intellect. It cannot achieve as it has no life. Life comes from integral experience.

             எதையும் விவரமாகக் கூறினால் அறிவு அறியும். அதற்கு ஜீவனில்லை. சாதிப்பது முழுமையின் அனுபவம்.

773)    பிரம்ம ஞானத்தையும் சிறு விவரங்களாகப் பிரித்து அறிவுக்குப் புரியும்படிக் கூறலாம். அது ஞானமாகாது.

          The highest Brahmavidya can be broken down into details and the intellect can take it. That cannot impart the concept of Brahman.

774)    Consecration of a work often completes another work as the mind was not on it.

             நினைவுபட்டால் வேலை நீளும். ஒரு வேலையை சமர்ப்பணம் செய்யும் பொழுது மனம் மறந்து போன அடுத்த வேலை பூர்த்தியாகும்.

             முழு அக்கறையிருக்கும் பொழுது மனம் முழுவதும் விலகுவது யோகம்.

775)    அதிகாரம் பெறுவது மரியாதை.

             அன்புக்குக் கிடைப்பது அலட்சியம்.

             Respect for authority.

             Indifference for affection.

776)    Subconscious pressure is suffocating.

             மனம் அறியாத பாரம் தாங்க முடியாதது.

777)    அனந்தமான பிரம்மம் வாழ்வில் அபரிமிதமாக வெளிப்படும்.

          The Absolute surfaces in life as abundance.

778)    The finite cannot escape the jurisdiction of the Infinite.

             கண்டத்தை விலக்கும் அகண்டம் அனந்தமாகாது.

779)    குழந்தையுடன் விளையாடும் தகப்பன், குழந்தையும், தகப்பனு மாவான். அகண்டம், கண்டமுமாகும்.

          A father playing with his child does not cease to be a father. He is at once the child as well as the father, as the infinite is simultaneously the infinite as well as finite.

780)    The audience adores the Romance of one, ignoring his entire past.

             கர்மத்தை மீறி காதலை ஏற்பது மனம்.

781)    Security eggs one to risk his all in favour of a silly favour or privilege.

             பயமே இல்லையெனில் எவ்வளவு பெரிய நஷ்டத்தையும் சிறு சலுகைக்காக மனம் ஏற்கும்.

782)    அன்பு உண்மையென ஆண்டியின் மனம் உணர்ந்தால் அரச னிடமும் அவன் கிராக்கி செய்வான்.

          Even a beggar will assert against a King, if only he knows the King loves him.

783)    முடியும் என்பதைச் செய்யத் தவறாதவன் வெறும் மனிதன். செய்ய மறுப்பவன் மனிதத் தன்மையுடையவன்.

             The raw flesh cannot resist doing anything, any heinous crime, if only it can. Culture and conscience refuse to do it.

784)    அன்பு அறியாதது கிராக்கி.

             Love knows no assertion.

785)    கிராக்கியுள்ள இடத்தில் எந்த நல்லதும் இருக்க முடியாது.

             Self-assertion cancels anything good.

786)    Acting for the beloved, the act itself becomes lovable.

             அன்பிற்காகச் செயல்பட்டால் செயல் அன்புமயமாகும்.

787)    Love knows not itself to be Love.

             தன்னை அறிவது அன்பல்ல.

788)    One falls in love with everyone and everything related to the Beloved.

             காதலின் சூழல் அன்புமயமானது.

789)    சிலை உயிர் பெறுவது தரிசனம்.

             சிலையே காளியாவது பிரம்ம ஜனனம்.

             Bhakti brings the soul of the statue out.

             Brahma Jananam changes the stone into live Kali.

790)    பிரம்ம ஞானம் மனத்தை முழு பிரம்மமாக்கும்.

             பிரம்மார்ப்பணம் உயிரை முழு பிரம்மமாக்கும்.

             பிரம்ம ஜனனம் ஜீவனை பிரம்ம மயமாக்கும்.

          Brahma jnanam changes the mind into integral Brahman. Consecration at that level transforms the vital into integral Brahman. Brahman born in us is the transformation of the whole Being into Brahman.

791)    If the emptied well is recharged from around, the Infinite when emptied replenishes itself. It is the Self replenishing itself.

             இறைத்துக் காலியான கிணறு நிரம்புவது போல் அனந்தம் காலி செய்யப்பட்டால் தன்னைத் தானே நிரப்பிக் கொள்ளும்.

792)    ஜீவன் பிரம்ம ஞானம் பெற்று பிரம்மார்ப்பணத்தால் பூர்த்தி யானால் ஜீவன் பிரம்மமாக ஜனிக்கும்.

          Our being securing Brahma jnanam and resorting to consecration to the Brahman, will be reborn as Brahman.

793)    ரூபமும், சுபாவமும், காலமும், ஜீவனும், மௌனமும் மூன்றாம் நிலையை எய்துவது பிரம்ம ஜனனம்.

             Form, nature, Time, being, Silence and all other aspects attaining their fullness in the Simultaneous Time-eternity and Timeless eternity is the Birth of the Absolute in the relative.

794)    To know, better to see all the five or six definitions of Infinity in the finite is practical sensation of the Infinite.

             அனந்தத்தின் ஆறு விளக்கங்களும் நடைமுறை செயலில் வெளிப்படுவது வாழ்வு அனந்தமாவதாகும்.

795)    When a new scheme is mooted, often its completion depends on the availability of funds. A new scheme generates new funds is a truth the world has not yet seen.

             திட்டம் தீட்டினால் பணம் உற்பத்தியாகும் என்பது உலகம் அறியாத உண்மை.

796)    Partial schemes need money. Complete schemes generate Funds.

             முழுமையான திட்டம் பணத்தை உற்பத்தி செய்யும். அரைகுறையான திட்டத்திற்குப் பணம் தேவை.

797)    திட்டம் முழுமையாவது ஜீவனில். பணம் எழுவது பிராணனில்.

          A complete scheme rises from the being while its funds rise from the vital. There can never be paucity.

798)    If the scheme does not generate money for itself, it will never be funded.

             திட்டம் பணம் தராவிட்டால் அத்திட்டம் பூர்த்தியாகாது.

799)    The scheme is the whole, funds are not even its part. How can one hold up the other?

             திட்டம் முழுமையானது.  பணம் அதன் கருவி பகுதியுமல்ல. எப்படி இது அதைத் தடுக்க முடியும்?

800)    No scheme in which there is heart has ever been held up for money.

             ஆர்வத்துடன் தீட்டிய திட்டம் எதுவும் இதுவரை பணத்தால் தடையானதில்லை.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000