DAILY MESSAGES                           

Series XVI

 

801)    We are conscious about our unconsciousness.

             கண் திறக்கக் கூடாது என்ற விழிப்பு மனிதனுடையது.           

802)    The Absolute combines the eternal of the Eternity and the infinity of the Infinite.

             அனந்தனின் முடிவற்ற தன்மையும், நிலையானதின் நிலையையும் தன்னுட் கொண்டவன் மூலவன்.

803)    Aspiration is the ascent that brings down the descent of Grace. Aspiration becomes grace in Silence that is behind Silence.

             அழைப்பு அருளைக் கொண்டு வரும். அழைப்பே அருளானால் மௌனம் ஆழ்ந்து அதன் பின்னுள்ள மௌனத்தையடையும்.  

804)    Mind can endeavour to know the common factor between Being and Non-Being. Doing so, the thought it generates reaches the Absolute.

             சத், அசத் இரண்டிற்கும் பொதுவானதை மனம் அறிய முயலும் பொழுது எழும் எண்ணம் பிரம்மத்தையடையும்.  

805)    Consciousness changes into mind changing its equality into the patience of the mind.

             ஜீவியம் மனமாக மாறும் பொழுது நிதானம் பொறுமையாகும்.

806)    Soviet Union whose per capita income in the 60s was one fifth or one tenth that of the USA excelled USA in science and nearly equalled her in sports. This shows that effort matters and will certainly be rewarded.

             அமெரிக்க வருமானத்தில் ஒரு சிறு பகுதி பெற்றுள்ள ரஷ்யா விஞ்ஞானத்திலும், விளையாட்டிலும் அமெரிக்காவுக்கு சம மாகவும், மிஞ்சியதும் முயற்சிக்குப் பலனுண்டு என்று காட்டுகிறது.  

807)    Thinking hinders understanding.

             சிந்தனை அறிவுக்குத் தடை.

808)    The desire to communicate is a bar to communication.

             பிறருக்குச் சொல்ல முயல்வது அவர் ஏற்பதற்குத் தடை.

809)    At any given moment only one vibration envelops and encircles the earth and expresses in a million ways.

             ஒரே காரியம் உலகெங்கும் ஒரு சமயத்தில் பல்வேறு ரூபங்களில் நடக்கின்றது.

          எங்கும் எந்த நேரமும் நடப்பது ஒன்றே.  

810)    ஒருவர் செய்வதை உலகம் செய்யும்.

          உலகம் செய்வதை ஒருவர் செய்வார்.

             What one man does, the world follows. One man acts as the whole world acts.

811)    Samadhi is a swoon of the spiritual consciousness.

             சமாதி என்பது ஆத்மா மயக்கமுறுவது.

812)    The awakened Spirit activating the mind, the subtle world opens.

             ஆன்மா விழிப்புற்று மனத்தில் வெளிப்பட்டால் சூட்சும லோகம் தன்னை வெளியிடும்.

813)    The Supermind revealing itself in the mind, the causal world opens ― It is His Alipore vision.

             சத்தியஜீவியம் மனத்தில் விழித்தெழுந்தால் பகவான் பெற்ற வாசுதேவ தரிசனம் கிடைக்கும்.  

814)        சரணாகதி மனிதன் அறிந்த ஆத்ம சித்திகளைக் கடந்தது.

             Surrender is beyond any known realisation.

815)    Consciousness is an alertness of the soul in all planes of existence.

             எல்லா லோகங்களையும் ஆத்மா அறிவது ஆத்மவிழிப்பு எனப்படும்.

816)    Unconsciousness is a dull half swoon behind a dynamic exterior.

             சுறுசுறுப்பானவனுக்கு திரை மறைவில் உள்ள மந்தமான மயக்கம் கண்மூடியான வாழ்வு.

817)    A movement of money towards you will be felt as a lightening of the atmosphere.

             பணம் நம்மை நோக்கி வருவதை சூழல் லேசாகி அறிவிக்கும்.

818)    அதிகாரம் செய்வதும், ஆதாயம் தேடுவதும் மனித இயல்பு. நடைமுறையில் அது அதிகாரப் பிச்சையாகிறது.

             Gain and domination are the two strong motives of man.

819)    When you want to understand something, especially if it has been defying for long, the very best method is to surrender the effort of understanding.

             நெடுநாள் விளங்காததை சரணாகதி தெளிவாக விளக்கும்.               

             A wise man declares, " I have no doubts." He is one who understands his own ideas to be wise.

820)    People in prosperous nations are health conscious, politically conscious, educationally awakened conscious citizens. Conscious life is prosperous life.

             விபரம் தெரிந்த வாழ்வு வளம் நிறைந்த வாழ்வு.

821)    A Spiritually conscious life will be spiritually prosperous.

             ஆன்மா விழிப்படைந்த வாழ்வில் ஆன்மீக வளம் நிறையும்.

822)    அன்னையின் யுகம் - ஸ்ரீ அரவிந்தருடைய யோகம்.

          அன்னையின் யோகம் - ஸ்ரீ அரவிந்தரது யுகம்.

             Sri Aurobindo's yoga is Mother's age.

823)    The organised crimes of state police Raj of the dictatorship are patterned on the social ostracism tyrannically present in all communities earlier. Today the same is in existence in equal terror in all societies at the vital level.

             சமூகக் கொடுமைகளை எதேச்சாதிகார நாடுகளில் சர்க்கார் எடுத்துக் கொள்கிறது.

824)    கண்ணாடி உடைந்து நொறுங்கினால் பெருக்கி வாரலாம், பொறுக்கி தூள்களை விலக்க முடியாது. மனம் பொய்யால் நிரம்பியிருந்தால் மாறி பொய்யை விலக்கலாம். ஒவ்வொரு பொய்யாக விலக்கி வெல்ல முடியாது. 

             Glass that splinters and covers the floor as dust can be swept off, not picked up by hand. The falsehood in the being can be removed by a change of heart, cannot be removed by taking one after the other.

825)    Work in any plane or even sacrifice can be rewarded only in that plane, not in another.

             குழந்தைகட்காக செய்த தியாகத்திற்காக குழந்தையின் உரிமையைக் கேட்க பெற்றோருக்கு உரிமையில்லை. கேட்டால் கிடைக்காது.

826)    Goodness is taking another man's point of view without hypocrisy.

             பிறர் தேவையை மனதாரப் பூர்த்தி செய்வது நல்லெண்ணம்.

827)    தமிழ் என்பது வெறும் மொழியில்லை. அது இனிமை என்பது மொழியின் வாயிலாக மொழியும் பண்பு. அப்பண்பு இனிமை- யாக வெளிப்படும் மொழியே தமிழ் எனப்படும்.

             A language is not just represented by words or grammar. It represents a culture. The words that represent that culture are that language.

828)    Concentration which is a dwelling on oneself takes the spirit to the Super- conscient. Surrender which is to give up the being and nature takes you to  the evolving soul inside you.

             நிஷ்டை ஆத்மாவை பரமாத்மாவுடன் சேர்க்கும். சரணாகதி ஜீவனையும், சுபாவத்தையும் சத்புருஷனுக்கும் அவன் சுபாவத் திற்கும் ஒப்படைப்பதால், அது நம்மை வளரும் ஆத்மாவான சைத்தியபுருஷனுக்குக் கொண்டு சேர்க்கும்.

829)    The gross plane has physical pain, torture and death. The subtle plane has vital pains. The causal plane has no sorrows, only JOY.

             ஸ்தூல உடலில் துன்பமும் மரணமும் உண்டு. சூட்சும உடலில் மரணமில்லை, கவலையுண்டு. காரண லோகத்தில் துன்பமில்லை, இன்பமுண்டு.

830)    While you are on the right path there is no waste, no duty, everything bears fruit. When you are not, again it is true, but it appears there is waste.

             பாதை நேரானால் கடமையில்லை, விரயமில்லை. இல்லா விட்டாலும் அதுவே உண்மை. தோற்றம் விரயத்தைக் காணும்.

831)    He who asks for gifts is shameless. He who gives it grudgingly and loudly regrets it later does not see his own shamelessness pulled to the surface.

             வெட்கம் கெட்டவன் கேட்டுப் பெறுவான். அதைக் கொடுத்து விட்டு பின்னால் புலம்புபவனுக்கு தன் வெட்கம் கெட்ட குணம் வெளிவருவது தெரிவதில்லை.

832)    The subtle plane operates through the subtle centres -- chakras -- but the causal plane has no centre in us. One has to be created behind the heart. Till then it acts as a Force through the occasion we give.

             ஸ்தூலம் என்பது உடல், மூளை, நரம்பு. சூட்சுமம் சக்கரங்கள் மூலம் செயல்படுகிறது. காரணத்திற்கு மையம் இதயத்திற்குப் பின் இனி உற்பத்தியாக வேண்டும். அதுவரை சக்தி நாம் தரும் சந்தர்ப்பம் வழியாக க்ஷணத்தில் செயல்படும்.

833)    One of the pronounced irrationalities or stupidities of man is to idealistically shun what is practically important. He can best understand the Force in money results about which he is shy.

             பணம் மட்டும் புரியும். கூச்சப்பட்டால் Force சக்தி வேலை செய்வதை அறிய முடியாது.

834)    The most powerful reception world can give Truth is lynching, as the forty dogs in getting at the meat their owner brought, ate her.

             பொய் மெய்யை வரவேற்க அதன் உயிரை எடுத்து விடும்.

835)    Psychological dissipation changing into well directed consecration readily creates the genius.

             உணர்ச்சி உலகத்தைத் தேடி அலைவதற்குப் பதிலாக, சேர்ந்து மனத்தை வளப்படுத்தினால் மேதை பிறப்பது நிச்சயம், எளிது.

836)    More than protecting property and person, law does a great service of protecting individuals from bullying by stronger men.

             சட்டம் சொத்தையும் உயிரையும் காப்பாற்றுகிறது. அதைவிட சட்டம் செய்யும் மற்றொரு சேவை மகத்தானது. ஒருவர் கொடுமையிலிருந்து அடுத்தவரை சட்டம் பாதுகாக்கிறது. இது இல்லையெனில் உலகம் ஏமாந்தவருக்கு நரகமாகும்.

837)    The vast resources of potential courage and bravery are seen only when tyranny is let loose. The courage is in equal proportion to the malicious meanness of dynamic energy of small men in power.

             இதயத்தின் தைரியம் கொடுங்கோலில் தெரியும். சிறியவன் பெற்ற சிறப்பு கயவன் கையில் உள்ள கருவியாகிறது.

838)    Physical courage, vital bravery are energised by the freedom mind seeks. Education makes everyone dissent.

             வீரமும், தைரியமும் அறிவால் உயிர் பெறுகின்றன. கல்வி கடவுள் தரும் வீரம்.

839)    Men who are right and strong, possessing their strength quietly will always succeed.

             நேர்மையான வலிமை நிதானமாக இருந்தால் தோல்வி தொலை தூரத்திலும் வாராது.

840)    Christianity is an organisation. Hinduism is an institution having become a culture of a religion.

             கிருத்துவம் ஒரு ஸ்தாபனம். ஹிந்து மதம் வாழ்க்கை ஏற்ற பண்பு.

841)    The poor man does not so much appreciate help as the one who offers it.

             உதவியை விட பணக்காரனுடைய உதவியே ஏழைக்கு முக்கியம்.

          பணக்காரன் பணத்தை விட முக்கியம்.

842)    The hostiles are ready to die to win the victory.

             உன்னை அழிப்பதே தீயசக்திகட்கு முக்கியம், உயிரல்ல.

          'உயிரைக் கொடுத்து உயிரை எடுப்பேன்'.

843)    The courageous dissent in dictatorships, the religious fervour of the martyr; the patriotism of the citizen are the same as the daughter-in-law who obeys the tyranny of the mother-in-law.

             கொடுங்கோலனை எதிர்ப்பவனும், பக்திக்காக உயிரிழப்பவனும், தேசபக்த வீரனும், கொடுமைக்குட்பட்ட மருமகளும் பெற்ற தைரியம் ஒன்றே.

844)    பெரியதாக வழிவிட்டாலும் கிடைப்பது முழுமையாக நிறைவாகக் கிடைப்பது அருள்.

            The great opening yielding the result in full rich fashion is grace.   

          பெரியதன் நிறைவு பேரருள்.

845)    Transitions, especially those agreed upon by the erstwhile regime move not by themselves. The progress is like pulling teeth, inch by inch.

             கட்டுப்பெட்டியும், ஆசாரமும் மாற சம்மதித்தால் முன்னேற்றம் கல்லில் நார் உறிப்பது போலாகும்.

             மாமியார் கருணை மாமாங்கம் தொறும் வெளிப்படும்.

             இருள் இசையாது.

846)    The power of the great rotates on the perfection of the small.

             பெரியதன் பெருமை விளங்க சிறியதன் சிறப்பு அவசியம்.

847)    The Vietnam bombing excelled the total bombing of both wars as it expressed the total intensity of the whole conflict.

             வெறுப்பு விருப்பாக மாறாவிட்டால், ஒரு துளியும் முழு விஷத்தைக் கக்கும்.

848)    Public opinion has a relish for malice. Its adoration is only an unconscious reversal of this malice out of superstition.

             மனிதகுலத்தின் இருளின் வேகம் பொது மக்களுடைய அபிப்பிராயம். தன்னை மறந்த நேரம் மூட நம்பிக்கை அவ்விருளை பிரபலமாக்கி ஒருவருக்கு மகுடம் சூடும்.

849)    புற இருள் அக ஒளியாவது மனமாற்றம்.

          Outer darkness changing into inner light is change.

850)    The casual incidental link with evil however small will unleash the whole flood. Women bore that brunt through marriage earlier.

             உலகத்தின் இருள் தீமையாக வாழ்வதுடன் ஒரு சிறிய தொடர்பு, இருள் வெள்ளத்தில் முடியும். திருமணத்தில் பெண்ணும், வேலையில் தொழிலாளியும், மருமகளும் அன்று வதைந்தனர். நிலைமை இன்று மாறியுள்ளது. கொடுமை இடம் மாறியுள்ளது அழியவில்லை.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000