DAILY MESSAGES                           

Series XVI

 

851)    Grace, Light, Blessings, and Love abound in the atmosphere NOW. One little chink in the human personality can invite its deluge. Man should seek it.

                அருள், ஜோதி, ஆசி, அன்பு சூழலில் செறிந்து வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. மனித ஜீவன் மயிரிழை இடம் அளித்தால், அதை அழைத்தால் அருள் வெள்ளமாக, பிர வாகமாக உள்ளே நுழையும்.

852)    Inner wisdom cannot collect in its essence without the outer experience of action.

             அகம் ஆத்மீக வளம்  பெற புறத்தின் அனுபவம் அவசியம்.

             சித்தி பெறும்  அனுபவம்.

853)    The death trap into which the wife enters and emerges scarred all over is no occasion for an unloving husband's emotions to be released. He treats it as matter of fact.

             ஆபத்தில் மாட்டிக் கொண்டு ஆயிரம் சித்ரவதைக்குப் பின் தப்பித்து வந்த மனைவியின் நிலை அன்பற்ற கணவனுக்கு உணர்ச்சியைத் தொடும் நேரமில்லை. கடமையைச் செய்வான். அவனுள் எதுவும் கலங்காது.

             பதறுவது உணர்ச்சி, கடமையில்லை.

854)    A cause at a crucial point is often saved by its enemies, showing their opposition is after all not total.

             இலட்சியம் முக்கிய நேரத்தில் எதிரியால் காப்பாற்றப்படுகிறது. அது முரண்பாட்டில் மறைந்துள்ள உடன்பாட்டைக் காட்டுகிறது.

855)    Life succeeds by discipline. Spirit is Freedom. They are antithesis. They do combine in the simultaneity of Time where existence is organisation.

             கட்டுப்பாடான வாழ்வு; சுதந்திரமான ஆத்மா. அவை சந்திக்கா. பிரபஞ்சம் உலகில் பிரபலமானால் சுதந்திரமான கட்டுப்பாடு வாழ்வை ஆளும். அது சுயகட்டுப்பாடு.

856)    Masculinity dominates, loves to dominate, would go to the other extreme of being superior in self-effacing courtesy to simple woman.

             ஆள்வது ஆண்மையின் அற்புதம். ஆள்வதில் மிஞ்சுவதற்காக, அடிபணிவதும் அதன் பாங்கு. அர்த்தமற்ற பெண்மைக்கும் பணிவதில் ஆண்மை தன்னைப் பூர்த்தி செய்யும்.

857)    The decision of a Board or an individual follows the rule of energy -- direction -- organisation -- skills.

             முடிவு எடுக்க தெம்பு சுபாவத்தால் திறமையாகும் இலட்சிய நோக்கம் பலன் தரும் பொறுப்பு தேவை.

858)    Surrender is possible only before the vibration rises.

             எண்ணம், செயல் ஆகியவை சரணாகதிக்குட்பட அவை எழுமுன் நாம் அதை எட்ட வேண்டும்.

             சரணாகதி எழுச்சிக்கு முந்தையது.

859)    என்னை சரணம் செய்ய நான் செயலாகவோ, உணர்வாகவோ, எண்ணமாகவோ மாறக் கூடாது.

          The ego is beyond thought or act.

860)    Sincerity makes surrender overtake us.

             தானே எழும் சரணாகதி ஆத்மசத்தியம்.

             Surrender to surrender.

             சரணாகதியை சரணடைய வேண்டும்.

861)    Misfortune changing into opportunity shakes its finger in jest for having been neglected.

             தரித்திரம் அதிர்ஷ்டமாகும் பொழுது தன்னைப் புறக்கணித்த தற்காகக் கேலி செய்து எச்சரிக்கும்.

862)    நடந்து போகும் பொழுது ஸ்ரீ அரவிந்த தரிசனம் கண் முன் எழுந்தால் காலில் செருப்பு இருப்பது மனத்தை உறுத்தும்.

          The sensitivity of the feet ― the body of tradition ― awakes at the sight of Her vision, as one is in his shoes walking on the road.

863)    சும்மாயிருந்து சுகம் பெறும் மனிதன் சோம்பேறி, தவசி சித்தி பெற்றவன். ஆண்டவன் பிரம்ம ஜனனத்தில் சும்மாயிருப்பது அதிவேகம்.

          Laziness in man is realisation in the yogi. Brahman born in the Being of the Becoming is QUIET in running the cosmos.

          சும்மாயிருந்து சுகம் பெறுவது பிரபஞ்சத்தின் பிரம்ம ஜனனம்.

864)    பிரம்ம ஜனனம் அன்பனுக்கு பிதிராஜ்யம்.

          Unity in Multiplicity is man's heritage from Brahman.

865)    இதயம் இறைவனை நாடும் நேரம் இறைவன் வரும் தருணம்.

          The heart sliding behind it is The Hour of God.

866)    ஜோதிமயமான தரிசனத்தின் மீது இருள் படர்வது மனம் அருளை மறுப்பது.

          Some darkness spreading on a luminous vision is man going back to ignorance.

867)    உறவை நினைப்பது உடல் எழுவது.

             Longing for relatives is the body's rising in revolt.

868)    Brightness in the inner atmosphere is light in the subtle plane.

             அகம் ஜோதிமயமானால் சூட்சும உலகம் அன்னையை ஏற்கும்.

869)    Coarseness is the thinking of the physical body.

             உடல் சிந்திக்க ஆரம்பித்தால் பேச்சு முரட்டுத்தனமாக எழும்.

870)    People outside social culture betraying indicates there is work beyond the social existence.

             சமூகத்தின் எதிரி துரோகம் செய்தால், நமது சேவை சமூகத்தைக் கடந்தது.

871)    One big inner struggle for man is between two women mother and wife later mother and sister.

             தாயும் மனைவியும் வேண்டும் என்பது மனித இதயப் போராட்டம்.

                Woman is the centre of man.

872)    Stealing and bribes steal away self-respect.

             திருட்டுப் பணம் சுயமரியாதையைத் திருடும்.

873)    Nascent energy seeks traditional values.

             ஒதுக்கப்பட்டவன் உயர ஆரம்பித்தால் ஒதுக்கியவர்களைப் பின்பற்றுவான்.

874)    Self-giving to selfishness invites self-immolation, even self-humiliation.

             சுயநலத்திற்கு அர்ப்பணம் சர்வநாசம். நாசம் வருமுன் மானம் போகும்.

875)    To deal with selfishness the first step is not self-giving but inner selflessness.

             சுயநலத்துடன் உறவு கொண்டாட முதலில் மனதால் சுய- நலத்தைக் கடக்க வேண்டும்.

876)    The first qualification of the neo-rich is to ignore the Origin.

             மூலத்தைக் கருதினால் புதியதற்கு முடிவு வாராது.

877)    Intense poverty is intense physical urge of sex.

             உடல் உணர்ச்சி வசப்பட்டு நிலையிழந்தால் தரித்திரம் தலை முறைக்கும் போகாது.

878)    What a SINCERE Westerner plans for with a dynamic Indian will be a success.

             சுறுசுறுப்பான இந்தியரும் உண்மையான மேல்நாட்டாரும் சேர்வது பலிக்கும்.

879)    கருமி கால் விலைக்கு வாங்கப் பிரியப்பட்டால் விற்பவன் கால் விலை கேட்பான்.

          When the strong miser wishes to pay 1/6th of the market rate, someone comes to him with an offer of a sixth.

880)    Capacity to keep QUIET when there is great dynamic energy inside is to move from Time to Timelessness.

             அபரிமிதமான சக்தி அனந்தமாகும் பொழுது மனிதன் காலத்தை விட்டு, காலத்தைக் கடந்த நிலைக்குப் போய் சும்மாயிருக்க முடியும்.

881)    India moving away from politicians to a scientist for her President has been well balanced by a vacuum in the head of her new Vice-President.

             உயர்ந்தது உயரப் போகும் பொழுது உடனிருப்பது கீழிறங்கி வருவது இயற்கை நியதி. அளவுகடந்த புத்திசாலிக் குழந்தை அறிஞனுக்கும் அல்பத்திற்கும் பிறந்தால் அடுத்ததற்கு மூளை வளர்ச்சியிருக்காது.

882)    As you travel down from mind to the body, Silence becomes richer.

             மனத்திலிருந்து மேலே போனாலும், கீழே வந்தாலும் மௌனம் கனக்கும். கைக்குத் தட்டுப்படும்.

883)    The American kettle that engineers 'revolutions' through the CIA calls the pot of USSR, who does it by its tanks, black.

             சுயநலமான மருமகள் மாமியார் கொடுமையைக் குறையாகக் கூறுகிறாள்.

884)    எண்ணத்தை சரணம் செய்வது மேதையாகும் பாதை. அதன் சிகரம் ஞானியாவது.

          Surrendering thoughts or the very capacity of thought makes one a genius before he becomes a sage.

885)    The intelligence that negatively appreciates another's value and is unable to happily accept it degenerates into sarcasm.

             பிறர் திறமை புரிந்த பின் ஏற்க முடியவில்லை என்றால் குதர்க்கம் குத்தலான கேலியாகும்.

886)    முடிவற்ற முழுமையுடையது சரணாகதி.

          The fullness of surrender is infinite.

887)    சரணாகதியை ஆரம்பிப்பது மிகக் கடினம். ஆரம்பித்தபின் அதற்கு முடிவில்லை.

          It is an arduous task to initiate surrender. Once begun, one discovers it has no end.

888)    Initiate surrender which is surrender of initiatives.

             ஆரம்பிப்பதை அழிப்பது சரணாகதி.

889)    What in our life appears indispensable is the thing that will give a relief on giving up.

             எது இல்லாது முடியாது என நினைக்கிறோமோ அது போனவுடன் நிம்மதி பிறக்கும்.

890)    Surrender is the sacred footprints of the Beloved that is yoga.

             சரணாகதி அன்னையின் அமிர்தமான அடிச்சுவடுகள்.

891)    Poetry of life can rise to become poetry of Spirit.

             ஆன்மாவின் எண்ணம் அமர காவியம்.

892)    பிரபஞ்ச சிருஷ்டியை பிரம்ம சிருஷ்டியாக அறிவது பிரம்ம ஞானம்.

          Brahma Vidya knows cosmic determinants as the determinants of the Absolute.

893)    சிலையினின்று காளி வெளி வருவது சூட்சும தரிசனம். சிலையே காளியாவது காளிக்கு பிரம்ம ஜனனம்.

          Kali emerging out of the statue is darsan in the subtle plane. In the causal plane the statue becomes Kali.

894)    மனம் சரணடைவது பிரம்ம ஞானம்.

             உணர்வு சரணடைவது பிரம்மார்ப்பணம்.

             உடல் சரணடைவது பிரம்ம ஜனனம்.

          Mental surrender is Brahma jnanam.

             Vital surrender is Brahmarpanam.

             Bodily surrender is Brahma jananam.

895)    The million movements of evolution along the various paths are simultaneous.

             பரிணாமத்தின் ஆயிரம் பாதைகள் ஒரே சமயத்தில் நகரும்.

896)    Matter is Delight of existence, life is consciousness of existence, mind is the nature of Existence.

             மனம் சத்தியஜீவியமாகவும், வாழ்வு சித்தாகவும், உடல் சத்துடைய ஆனந்தமாகவுமாவது பரிணாமம்.

897)    Ambition never thinks of anything less than the highest.

             பேராசை எழுந்த பின் மனிதன் மந்திரிபதவியை நாடுவதில்லை. அரசபதவிக்கு ஆசைப்படுவான்.

898)    ஆசை என்று எழுந்த பின் அதை ஆயிரம் முறை நினைப்பது வழக்கம். காலம் கடந்தாலும் ஆசை கனலாக எரியும்.

          Once desire possesses a man he dwells on it non-stop. Even after decades of disappointment its fire remains unextinguished.

899)    ஆசையழிய ஆசைப்படுவது சுபாவம்.

             Man acquires the ideal desire of dissolving desires.

900)    In a cultured home, the earning members make the elder member the centre.

             நல்ல குடும்பத்தில் சம்பாதிப்பவன் பெரியவர்கட்குக் கட்டுப் பட்டிருப்பான்.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000