Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXIV. Matter
 
24. ஜடம்
Life is not an inexplicable dream.
Page 231
வாழ்வு புரியாத புதிரான கனவல்ல.
 
Nor is it an impossible evil.
Para 1
வாழ்வு உலகிலில்லாத தீமையுமில்லை.
 
It has become a dolorous fact.
சாரமற்ற விளக்கமாக அது மாறவுமில்லை.
 
Thus we are rationally assured.
இப்படிப் பகுத்தறிவு நமக்கு உறுதி கூறுகிறது.
 
It is a mighty pulsation.
வாழ்வு பெரும் பலன் பெற்ற விம்மும் கடலலை.
 
It is a pulsation of the divine All-Existence.
தெய்வீக அனைத்து வாழ்வின் அலையது.
 
We see something of its foundation.
நாம் அஸ்திவாரத்தைச் சற்றுக் காண்கிறோம்.
 
We see also its principle.
அதன் தத்துவத்தையும் காண்கிறோம்.
 
We look up to its high potentiality.
அதன் பெரும் திறமை புதைந்திருப்பதை எதிர்பார்க்கிறோம்.
 
Also to its divine out-flowering.
அதன் இதய மலர்ச்சி இறைவனின் பரிணாமப் பரிமளமாகும் என நினைக்கிறோம்.
 
There is one principle below all the others.
எல்லாவற்றிற்கும் கீழே ஒரு தத்துவம் உண்டு.
 
We have not yet sufficiently considered.
போதுமான அளவுக்கு அதை நாம் இன்னும் ஆராயவில்லை.
 
It is the principle of Matter.
அது ஜடம் என்ற தத்துவம்.
 
Life stands upon it.
வாழ்வு அதில் காலையூன்றி நிற்கிறது.
 
It stands as upon a pedestal.
பீடத்தின் மீது நிற்பது போல் வாழ்வு நிற்கிறது.
 
Out of which it evolves.
வாழ்வு ஜடத்திலிருந்து பரிணாம வளர்ச்சி பெறுகிறது.
 
It evolves like the form of a many-branching tree.
பல கிளைகளாகத் தழைக்கும் மரமாக வளர்கிறது.
 
Out of its encasing seed.
வித்திலிருந்து மரம் எழுவதைப் போன்றது அது.
 
This is a physical principle.
இது ஜடமான தத்துவம்.
 
The mind, life and body of man depend upon it.
மனம், உயிர், உடல் இதை நம்பியுள்ளது.
 
This is out-flowering of Life.
இது வாழ்வு பூரித்தெழுவது.
 
It is the result of Consciousness emerging into Mind.
ஜீவியம் மனமாக பரிணாம வளர்ச்சி பெறுவதன் பலனிது.
 
It expands and elevates itself.
வாழ்வு பரந்து உயர்கிறது.
 
It does so in search of its own truth.
தன்னுடைய சத்தியத்தைத் தேடி வாழ்வு மலர்கிறது.
 
It is in the largeness of the supramental existence.
சத்திய ஜீவியப் பெருவாழ்வினுள் பரிணாமம் செல்ல முயல்கிறது.
 
Yet it is conditioned by the case of body.
எனினும் உடல் எனும் கூடு அதன் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
 
And it is done by the foundation of Matter.
ஜடம் என்ற அடிப்படையில் அது நடக்கிறது.
 
The importance of the body is obvious.
உடல் முக்கியம் என்பது தெளிவு.
 
Or he has been given a body.
மனிதனுக்கு உடல் தரப்பட்டுள்ளது.
 
And a brain.
மூளையும் உடன் வருகிறது.
 
They are capable of receiving.
உடலும் மூளையும் வளர்ச்சியைப் பெறும்.
 
They serve a progressive mental illumination.
படிப்படியான ஜோதி மலர அவை துணை செய்கின்றன.
 
Man has risen above the animal.
விலங்கை விட உயர்ந்து மனிதன் வளர்கிறான்.
 
Equally it can be done by developing a body.
உடலை வளர்த்தும் இதே பலனைப் பெறலாம்.
 
A physical instrument functions.
உடல் என்ற கருவி செயல்படுகிறது.
 
It receives and serves.
பெற்றுப் பெறுவதால் சேவை செய்கிறது.
 
It serves a still higher illumination.
உடல் உயர்ந்த கருவிக்குச் சேவை செய்கிறது.
 
So that man can rise above.
இதனால் மனிதன் உயரலாம்.
 
And realise.
உயர்வதால் சித்தி பெறலாம்.
 
Not merely in thought.
உயர்வு எண்ணத்தில் மட்டுமல்ல.
 
And in his internal being.
அக வாழ்வு மட்டும் உயரவில்லை.
 
But in life.
மனிதன் வாழ்வில் உயர்கிறான்.
 
A perfectly divine manhood.
இறைவனுடைய மனிதத் தன்மையைச் சிறப்பாக அவன் பெறுகிறான்.
 
Otherwise, two possibilities arise.
இரு சந்தர்ப்பங்கள் எழும்.
 
Promise of Life is cancelled.
வாழ்வின் வாய்ப்பு ரத்தாகும்.
 
Its meaning annulled.
வாழ்வின் அர்த்தம் அர்த்தமற்றதாகும்.
 
An earthly being can only realise Sachchidananda.
பூமியில் பிறந்தவன் சச்சிதானந்தம் மட்டுமே பெறுவான்.
 
By abolishing itself.
இதைப் பெற மனிதன் தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.
 
By shedding from it mind, life and body.
மனம், உயிர், உடலை இழந்து இதைப் பெற வேண்டும்.
 
And returning to the pure Infinite.
தூய அனந்தத்தை அடையலாம்.
 
Or else man is not a divine instrument.
இல்லையேல் மனிதன் தெய்வக் கருவியாக முடியாது.
 
There is a destined limit.
அப்பொழுது அளவு விதிக்கப்படும்.
 
The limit is to the consciously progressive power.
தன்னையறிந்து முன்னேறுவதற்கு லிமிட் ஏற்படும்.
 
It distinguishes him.
இது மனிதனைத் தனிமைப்படுத்திக் காட்டும்.
 
From all other terrestrial existence.
இதர சிருஷ்டியினின்று மனிதன் பிரிந்து நிற்பான்.
 
And he has replaced them in the front of things.
அனைவரையும் கடந்து முன்னே வருவான்.
 
So another must eventually replace him.
எனவே வேறொன்று அவனைக் கடந்து செல்ல வேண்டும்.
 
And assure his heritage.
அவன் பிதிராஜ்யத்தைப் பெற வேண்டும்.
 
Body is the soul's great difficulty.
Page 232
உடல் ஆத்மாவுக்குச் சிரமம் தர வல்லது.
 
It is from the beginning.
Para 2
இது ஆரம்ப நாட்களிலிருந்து உள்ளது.
 
Body is the continuous stumbling block.
உடல் தொடர்ந்து இடறி விழும் தடையாயுள்ளது.
 
It is a rock of offence.
அது முயற்சியை விரக்தியாக்கும் மலை.
 
Therefore the eager seeker hurled his ban against the body.
எனவே ஆர்வமான தபஸ்வி உடலுக்குத் தடை விதித்துவிட்டான்.
 
He has a disgust for the world.
தவசிக்கு உலகம் வெறுப்புத் தருவது.
 
This is a world-principle.
இவ்வெறுப்பு உலகம் ஏற்கும் தத்துவம்.
 
Above all else he hates the body.
மற்றவை விட உடலைக் குறிப்பாக அவன் வெறுக்கிறான்.
 
It is an especial object of loathing for him.
வெறுப்புக்குக் குறிப்பாகத் தகுதி பெற்றது உடல்.
 
The body is an obscure burden.
உடல் இருண்ட பாரம்.
 
He cannot bear it.
அவனால் தாங்க முடியாத பாரம் இது.
 
It has an obstinate material grossness.
அதன் ஜடமான முரட்டுத்தனம் பிடிவாதமானது.
 
It is an obsession.
அவனை அது பிசாசாகப் பிடித்து உலுக்குகிறது.
 
It drives him for deliverance.
விடுதலையை நாடி அவன் ஓடுகிறான்.
 
The life of the ascetic is sought.
விரதமும் நோன்பும் நிறைந்த துறவறத்தை நாடுகிறான்.
 
He wants to get rid of it.
உடலைத் தவிர்க்க முனைகிறான்.
 
He denies its existence.
உடல் என ஒன்றில்லை என்கிறான்.
 
He denies its reality of material existence.
ஜடமான வாழ்வு பெற்றது உடல் என்பதை மறுக்கிறான்.
 
Religions put their curse on Matter.
மதங்கள் ஜடத்தைச் சபித்தன.
 
Most of them do so.
பெரும்பாலான மதங்கள் அப்படிப்பட்டவை.
 
They have made the refusal.
மறுப்புத் தெரிவித்தன.
 
Or resigned temporary endurance of the physical life.
தற்காலிகமாக உடலை ஏற்கின்றன, உடல் வாழ்வை ஏற்கின்றன.
 
It is the test of true spirituality.
ஆன்மீக வாழ்வுக்கு அதைச் சோதனையாக்கின.
 
The older creeds were more patient.
பழங்காலக் கொள்கைகள் பொறுமையானவை.
 
They were broodingly profound.
அவை தம் ஆழ்ந்த சிந்தனையால் ஆழத்தைத் தொட்டன.
 
Our souls are under the burden of iron age.
கலியுகத்தில் நம் ஆத்மா பாரத்தைத் தாங்குகிறது.
 
It is of feverish impatience.
இவை பொறுமையிழந்து கொந்தளிக்கின்றன.
 
They are tortured.
இது சித்ரவதை.
 
The older creeds were not touched by this.
பழம் கொள்கைகளை இது தீண்டவில்லை.
 
This is a formidable division.
இது பெரும் பிரிவு.
 
They did not make.
அவை இப்படிப் பிரிக்கவில்லை.
 
They acknowledged Earth and Heaven.
பூமியையும் சொர்க்கத்தையும் ஏற்றனர்.
 
Earth was Mother, Heaven was Father.
பூமியை பூமாதேவி எனவும் சொர்க்கத்தைப் பிதா எனவும் கூறினர்.
 
They accorded them equal love and reverence.
இரண்டையும் அன்புடன் மதித்தனர்.
 
They are ancient mysteries.
அவை புராதனப் புதிர்கள்.
 
They are obscure and unfathomable.
அவை இருளடர்ந்தவை, ஆழங்காண முடியாதவை.
 
It is so whether our view is materialistic or spiritual.
நாத்திகவாதியும், ஆன்மீகவாதியும் இந்த விஷயத்தில் ஒன்றாக நினைக்கின்றனர்.
 
They cut the Gordian knot of the problem of existence.
வாழ்வின் பிரச்சினை என்ற சிக்கலை அவர்கள் உடைக்கின்றனர்.
 
They do so with one decisive blow.
ஒரேயடியில் ஒழித்துக்கட்டுகின்றனர்.
 
They accept an escape into an eternal bliss.
சாஸ்வதானந்தம் பெற இதைச் செய்கின்றனர்.
 
Or an eternal annihilation or eternal quietude.
நிரந்தர அமைதி அல்லது நிரந்தர அழிவை ஏற்கின்றனர்.
 
There is a quarrel.
Page 232
ஒரு போராட்டம் உள்ளது.
 
We see it when we awaken to our spiritual possibility.
Para 3
நம் ஆன்மீக வாய்ப்பை அறிந்தால் போராட்டம் தெரியும்.
 
It does not commence there.
தெரிவது அறிவதிலாரம்பிக்கவில்லை.
 
Life appears.
வாழ்வு வெளிப்படுகிறது.
 
It begins with this.
பிணக்கை வாழ்வு வெளிவந்தவுடன் நாம் காண்கிறோம்.
 
Life struggles to establish its activities.
வாழ்வு தன் செயல்களை ஸ்தாபிக்கப் போராடுகிறது.
 
There are forces of inertia.
தாமஸ சக்திகளுண்டு.
 
Life tries to establish its permanent aggregations of living form.
நிலையான ஜீவனுள்ள ரூபங்களைச் சேர்த்து ஸ்தாபிக்க வாழ்வு போராடுகிறது.
 
It does against the force of inconscience.
ஜீவியமற்ற சக்திகளை எதிர்த்து வாழ்வு முனைகிறது.
 
Against the force of atomic disaggregation.
அணுவைச் சிதைக்கும் சக்திகளை எதிர்த்தும் செயல்படுகிறது.
 
They are in the material principle.
அவை ஜட தத்துவத்திலுள்ளன.
 
They are the knot of the great Denial.
பெரு மறுப்பின் முடிச்சு அவை.
 
Life is at constant war with Matter.
வாழ்வு ஜடத்துடன் இடைவிடாமல் போராடுகிறது.
 
The battle seems to end.
போராட்டம் முடிவதாகத் தெரிகிறது.
 
It ends in the apparent defeat of Life.
முடிவில் வாழ்வு தோற்பது போல் தெரிகிறது.
 
It collapses downward.
தோற்றுக் கீழே விழுகிறது.
 
It falls on the material principle.
தோற்று ஜடத்தில் முடிகிறது.
 
We call the material principle death.
ஜடத்தை நாம் மரணம் என்கிறோம்.
 
Mind appears.
மனம் வருகிறது.
 
The discord deepens.
பிணக்கு வளர்கிறது.
 
Mind has its limitations.
மனத்திற்கு வரையறையுண்டு.
 
Mind has its own quarrels.
மனமும் போராட்டத்திலுள்ளது.
 
It quarrels with Life and Matter.
மனம் வாழ்வு ஜடத்துடன் போராடுகிறது.
 
Mind is in constant subjection to inertia.
தமஸூக்கு உட்பட்டுள்ளது.
 
Mind revolts against Matter.
மனம் ஜடத்தை எதிர்த்துப் புரட்சி செய்கிறது.
 
It revolts against the passions and sufferings of the other.
ஜடத்தின் வேதனை, பாசத்தை எதிர்த்துப் புரட்சி செய்கிறது.
 
The battle turns eventually towards the vital.
வாழ்வை எதிர்த்து மனம் போராடுகிறது.
 
It is not very sure.
போராட்டம் இப்படித் திரும்புவது நிலையில்லை.
 
It is towards a partial and costly victory for the Mind.
பகுதியான வெற்றியை சிரமப்பட்டு மனம் பெறுகிறது.
 
Mind slays the vital cravings.
உயிரின் ஆசைகளை மனம் அழிக்கிறது.
 
It impairs the physical forces.
ஜட சக்திகளை அது சிதைக்கிறது.
 
Mind disturbs the balance of the body.
உடலின் நிதானத்தை மனம் கலைக்கிறது.
 
It does so in the interests of mental activity.
மனம் செயல்பட வேண்டி இதைச் செய்கிறது.
 
It does so in the interests of a higher moral being.
பெரிய தர்மத்திற்காக மனம் இதைச் செய்கிறது.
 
The impatience of Life, the disgust of the body recoil.
வாழ்வின் அவசரமும், உடலின் வெறுப்பு பின்வாங்குகின்றன.
 
Pure mental and moral existence take their rise.
மனத்தின் தார்மீக வாழ்வு எழுகிறது.
 
Man awakens to an existence beyond Mind.
மனிதன் மனத்தைக் கடந்த வாழ்வை நாடுகிறான்.
 
He carries it further.
அதை மேலும் தொடர்கிறான்.
 
It is beyond this discord.
அது இப்பிணக்கைக் கடந்து செல்கிறது.
 
Mind, Body, Life are condemned.
மனம், உடல், உயிரை வெறுக்கிறார்கள்.
 
They are called the trinity of the world.
உலகின் திருமூர்த்திகளென அவை அழைக்கப்படுகின்றன.
 
They are called flesh and devil.
அவற்றைப் பேயெனும் உடலென்கின்றனர்.
 
Mind too is banned.
மனமும் தடை விதிக்கப்படுகிறது.
 
It is called the source of the malady.
மனம் நோயின் மூலமாகக் கருதப்படுகிறது.
 
War is declared between the Spirit and its
instruments.
ஆத்மாவும் அதன் கருவிகளும் போரில் இறங்குகின்றன.
 
The victory of the spiritual inhabitant is sought.
உள்ளுறை ஆத்மாவின் வெற்றியை நாடுகிறார்கள்.
 
It is sought in an evasion.
வெற்றியை நாட விஷயத்தை விலக்குகின்றனர்.
 
Evasion is from a narrow residence.
வாழ்வின் குறுகிய உலகை விலக்குகின்றனர்.
 
It is sought in the rejection of mind.
மனத்தை விலக்கி வெற்றியை நாடுகிறார்கள்.
 
Life and body are evaded.
உடலையும் உயிரையும் ஒதுக்குகிறார்கள்.
 
They withdraw into their own infinitude.
அவற்றின் அனந்தத்தில் தஞ்சம் புகுகின்றனர்.
 
The world is a discord.
உலகம் பிணக்காலானது.
 
We shall solve its perplexities.
அதன் சிக்கல்களை நாம் அவிழ்க்கலாம்.
 
It is done by increasing the discords.
பிணக்கை முழுமைப்படுத்தித் தீர்க்கலாம்.
 
It is a cutting away and final severance.
வெட்டி விலக்கும் முறையிது.
 
These defects and victories are only apparent.
Page 233
Para 4
இந்த வெற்றி தோல்விகள் எல்லாம் தோற்றமே.
 
This solution is not a solution.
இந்தத் தீர்வு, தீர்வாகாது.
 
It is an escape from the problem.
பிரச்சினையைத் தவிர்க்கும் வழியிது.
 
Life is not really defeated by Matter.
ஜடம் வாழ்வைத் தோற்கடிக்கவில்லை.
 
It makes a compromise.
ஒரு மாதிரி விட்டுக் கொடுக்கிறது.
 
It uses death for the continuance of life.
வாழ்வு நீடிக்க மரணத்தைப் பயன்படுத்துகிறது.
 
Mind is not really victorious over Life and Matter.
மனம் வாழ்வையும் ஜடத்தையும் வெல்லவில்லை.
 
It has achieved only an imperfect development.
அரைகுறையான முன்னேற்றத்தை மட்டுமே கண்டது.
 
It is of some of its potentialities.
உள்ள சில வாய்ப்புகளில் பெற்ற முன்னேற்றமது.
 
At the cost of others.
மற்றதை இழந்து பெற்ற முன்னேற்றமிது.
 
They are bound up with the unrealised or rejected possibilities.
அவை இதுவரை பயன்படாதவை அல்லது மறுக்கப்பட்டவை.
 
They are possibilities of its better use of life and body.
வாழ்வையும் உடலையும் அதிகமாக நல்ல முறையில் பயன்படுத்தும் வாய்ப்புகள் அவை.
 
There is the lower triplicity.
மனம், உயிர், உடல் உண்டு.
 
The individual soul has not conquered it.
ஜீவாத்மா அவற்றை வெல்லவில்லை.
 
Only rejected their claim upon it.
அவற்றின் உரிமையை மறுத்தது.
 
It is a claim of work.
அது செயல்படும் உரிமை.
 
The Spirit has undertaken it.
ஆத்மா மேற்கொண்ட கடமை அது.
 
It did so when it first cast itself into form of
universe.
உலகம் என்ற ரூபத்தை மேற்கொண்ட பொழுது ஏற்பட்ட உரிமை.
 
The labour of the Divine continues.
இறைவனின் பணி தொடர்கிறது.
 
It is in the universe.
இறைவனுக்கு உலகில் பணி அமைந்துள்ளது.
 
Therefore the problem continues.
எனவே பிரச்சினை தொடர்கிறது.
 
It is without any satisfying solution of the problem.
பிரச்சினைக்குத் திருப்தியான தீர்வு எழவில்லை.
 
Nor any victorious accomplishment of the Labour.
செய்த வேலைக்கு எந்த வெற்றிகரமான முடிவும் வரவில்லை.
 
Therefore we must seek a solution.
எனவே நாம் ஒரு தீர்வு காண வேண்டும்.
 
We have a stand point.
நமக்குள்ள ஆதாரமுண்டு.
 
It is about Sachchidananda.
அது சச்சிதானந்தத்தைப் பற்றியது.
 
It is the beginning, middle and end.
அதுவே ஆரம்பமும், மையமும், முடிவுமாகும்.
 
The struggle and discord cannot be eternal.
எனவே போராட்டமும் பிணக்கும் நிரந்தரமானதல்ல.
 
They are not the fundamental principles in His Being.
சச்சிதானந்த ஜீவனுக்கு அவை அடிப்படையானவையல்ல.
 
Their very existence implies something.
போராட்டம் முடிவைச் சுட்டிக் காட்டுகின்றது.
 
They imply a perfect solution and complete victory.
முழுமையான வெற்றியையும் சிறப்பான தீர்வையும் அவை குறிக்கின்றன.
 
We must seek a solution in a real victory.
உண்மையான வெற்றியே தீர்வு. நாம் அதை நாட வேண்டும்.
 
It is a victory of Life over Matter.
வாழ்வு ஜடத்தை வெல்வது அவ்வெற்றி.
 
It must be a perfect use.
சரியான பயன் அவ்வெற்றி.
 
It is a use of life-force and form by Mind.
மனம் வாழ்வின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.
 
There is a real victory of Spirit over the triplicity.
மனம், உயிர், உடலை ஆத்மா வெல்வதே அவ்வெற்றி.
 
It must be a free and perfect operation of mind, life and body.
மனம், உடல், உயிர் சுதந்திரமாகச் சிறப்பாக வேலை செய்ய வேண்டும்.
 
The victory is by a conscious Spirit.
விழிப்புற்ற ஆத்மா பெறும் வெற்றியது.
 
We have worked out a view.
நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
 
In it this is the last conquest.
அம்முடிவில் முடிவான வெற்றியிது.
 
This alone can make that victory possible.
இந்த முடிவே அந்த வெற்றியைத் தரும்.
 
We must see how this conquest can be possible.
இந்த வெற்றி எழும் வழியைக் காண வேண்டும்.
 
Is this possible at all or wholly possible?
இது முடியுமா, முழுமையாக முடியுமா?
 
We must find out the reality of Matter.
ஜடத்தின் உண்மையைக் கண்டறிய வேண்டும்.
 
We must do so as we seek fundamental knowledge.
அடிப்படை ஞானம் தேடுவது போல் தேட வேண்டும்.
 
Earlier we found out about Mind, Soul & Life.
ஆத்மா, மனம், வாழ்வை அறிந்தது போல் ஜடத்தை அறிய வேண்டும்.
 
Contd....
தொடரும்......
 
 
 
*******
 
 
 
********
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
 
உள்ளே சென்று உறைந்தால்
உலகம் அடங்கும்.
 
உலகம் உன் நினைவை விட்டகன்றால், உன் நினைவு உலகை விட்டகலாது.
 

********



book | by Dr. Radut