Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

116. எந்தச் சிந்தனையுமின்றி…

  • எந்தச் சிந்தனையுமின்றி எதை ஒருவர் செய்தாலும் அது அற்புதமாக மாறும்.
  • அற்புதம் ஆச்சரியப்படும் பலனைத் தரும்.
  • பலன் பெற்றவர் பலனைக் கருதினால் அவர் வாழ்வுக்கு உரியவர்.
  • அவர் வாழ்வு அபரிமிதமாகும்.
  • பலனைக் கருதாமல், நடந்ததைக் கருதினால் ஆத்மா மலரும்.
  • மலரும் ஆத்மா சொர்க்க வாயில்.
  • மலர்ந்த ஆத்மா வாழ்வில் மலர்வது, வாழ்வின் ஆத்மாவாக மலர்வது பூரணயோக வாயில் நிலையாகத் திறப்பதாகும்.
  • எழுவதை எல்லாம் பெற்றால், ஜீவன் இருகூறாகப் பிளந்து உள்ளங்கால் வரை செல்வது தெரியும். நிமிர்ந்தால் பிளவு தலைக்கு மேலும் போகும்.
  • பெற்றது கை நழுவி கீழே விழாவிட்டால் உயர்ந்தது உச்சிக்கு மேலுள்ள சக்கரத்தைத் திறக்கும். அது சகஸ்ரதளத்தின் கீழுள்ளது.
  • சிந்தனை மையம் உயர்ந்து அங்குச் செல்வது தெரியும்.
  • நிலைமை ஜீவனின் நிதானமானால் விழிப்புற்ற சிந்தனை மையம் தலைக்கு மேலேயே நின்றுவிடும்.
  • ஷேக்ஸ்பியர் அங்கிருந்து எழுதினார்.
  • வேத ரிஷிகள் சகஸ்ரதளத்தைக் கடந்து சென்று எழுதினர்.
  • மின்னல் வேகத்தில் பெற்ற பலன் மின்னலாக மறையும்.
  • ஜீவனைப் போல் உடலும், உடலைப் போல் உள்ளமும், எந்த உணர்வுமின்றி இருந்தால் வந்த அனுபவம் ஆத்ம சித்தியாகும்.
  • கவிஞனாகும் சித்தியிது.
  • காவிய சுவையிருந்தால் அன்பன் காவியமாகப் பெருகுவார்.
  • பலனைக் கருதாதது போல் காவியத்தையும் பொருட் படுத்தாவிட்டால் பெற்றது உத்தமமாகும்.
  • உத்தமன் யோகம் செய்யும் சாதகன்.
  • ஒரு மணி நேரமாவது என்னைப் பிரதமராக்குங்கள் எனக் கேட்டவரை எவரும் ஏற்கவில்லை.
  • அவர் நம்பர் 2 ஆனார்.
  • 30 ஆண்டுகள் 2-ஆம் நம்பரானார்.
  • முடிவில் ஜனாதிபதியானார்.
  • கேட்காவிட்டால் கிடைக்கும். அவர் கேட்டார், இழந்தார்.
  • கேட்காமலிருப்பது எந்த சிந்தனையுமில்லாத ஆத்மாவின் குரல்.
  • கேட்க முடியாத நிலை அதையும் கடந்தது.
  • அது Mrs. கார்டினருடையது.
  • Mrs. கார்டினர் கேட்காததால் எலிசபெத் பெம்பர்லியைப் பெற்றார்.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

இமயமலையில் ஒரு தவசி செய்த தவத்தின் பலனாக பிரெஞ்சுப் புரட்சி எழுந்தது என்று பகவான் கூறுகிறார். தவம் வலிமையுடையது. தவம் இங்குப் பலித்து அங்கு எழுந்தது புரட்சி. ஆன்மிகத்தை அறியாதவர் ஏற்க முடியாத கூற்று இது.

 

********



book | by Dr. Radut