Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

பூர்வ ஜென்ம ஞானம் மூலத்தையடைந்தால் தெரியும்

  • பூர்வ ஜென்ம ஞானம் காலத்தைக் கடந்தது.
  • காலத்தைக் கடந்ததுடன் ஜட உலகைக் கடந்த சூட்சும உலகுக்குரியது.
  • மேல் மனம் ஜடமானாலும், அதற்கும் சூட்சுமம் உண்டு. அது உள் மன சூட்சுமமாகாது.
  • சூட்சுமம் மேல் மனம், உள் மனம், அடி மனம், ஆழ் மனம், பாதாளம், ஜட இருளுக்குண்டு.
  • தன் பூர்வ ஜென்மம் தெரிவது, பிறர் பூர்வ ஜென்மம் தெரிவது, எதிர்காலம் தெரிவது.
  • உலகில் கடந்த காலம், எதிர்காலம் தெரிவது படிப்படியான உயரங்கள்.
  • இந்திய ஆன்மிக மக்கள் பலர் இந்திய சுதந்திரம் போரில்லாமல் வரும் என்றனர்.
  • காலன் அழிவான் என்பதை இதுவரை எவரும் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை.
  • வடலூர் கடலூராகும் என வள்ளலார் கூறியது வடலூர் மண்ணின் எதிர்காலம் அவருக்குத் தெரிந்திருக்கிறது.
  • ஸ்ரீரங்கம் தேர்ச்சீலை எரிவதை திருமங்கை ஆழ்வார் சூட்சுமத்தில் கண்டார்.
  • உத்தர யோகி வருவார், மூன்று பிரகடணங்களைக் கூறுவார் என்றது சூட்சுமம்.
  • சங்கராச்சாரியார் எதிர்காலத்தை அவர் பிறக்கும்முன் அறிந்த கனவு சூட்சும ஞானம்.
  • வ.ரா. அடுத்த ஆண்டு எப்படித் தோன்றுவார் என பகவான் கூறியதும், தாடியில்லாத குள்ள மனிதனை அன்னை உயரமான தாடியுடையவனாகக் கண்டதும் பூர்வ ஜென்ம ஞானம்.
  • 30 ஆண்டிற்குப்பின் சர்க்கார் ரிக்கார்ட்டுகள் வெளிவருவதை நாம் அறிவது ஒரு வகையில் காலத்தினுள் “சூட்சுமம்” வெளிப்படுவதாகும்.
  • மூலம் என்பது மரபுக்கு அக்ஷர பிரம்மம்.
  • ஸ்ரீ அரவிந்தம் கூறும் மூலம் முழுப்பிரம்மம்.
  • நாரதர் அஸ்வபதிக்குச் சாவித்ரியைப் பற்றிக் கூறியது எதிர்காலம். தெய்வீக மனம் பெற்ற சூட்சும ஞானம்.
  • அனுசுயா திருமூர்த்திகளைக் குழந்தையாக்கியது Supreme பரநிலைக்குரிய சூட்சுமம்.
  • மாடியில் க்ஷவரம் செய்து கொண்டிருந்த கணவன் வெட்டிக்கொண்டதைக் கீழேயிருந்த மனைவி “அறிந்து” வந்து விசாரிப்பது உடலின் சூட்சும ஞானம்.
  • சைபீரியா பறவைகள் வேடந்தாங்கல் வந்து திரும்புவது (instinct)) உள்ளுணர்வு பிறவியில் பெற்ற சூட்சுமம்.
  • கடலூரில் 3 நாள் அன்னை பெயரை ஸ்மரித்தவர் பெயரை 10 கார்டுகளுடன் அன்னையிடம் எடுத்துச் சென்ற சாதகர் அன்னை அவற்றைப் பெறாமல் கார்டுகளைத் தள்ளி அவர் பெயரை எடுத்து March 25, மாலை 3 மணி என எழுதியது அழைப்பின் சூட்சுமம். அது அன்னை காதில் விழுகிறது.
  • ஓடிப்போன பையனைப் பற்றி அன்னையிடம் கூறியபின் பையன் திரும்பி வந்தான். வந்தவன் “வா வீட்டுக்கு வா” எனக் குரல் கேட்டு வந்தேன் என்றான். அன்னை ஜீவியம் குரலாக எழுந்து கூப்பிடவல்லது.
  • சாவித்ரி எதிர்காலத்தைக் காட்டுவது அன்னை ஜீவியத்தின் சூட்சும சூழல்.

********

ஜீவிய மணி

கவலையின் சுவடுள்ளவர்க்குக் காரிய சித்தி இல்லை.

********



book | by Dr. Radut