Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.139 Arriving with heavy eyes that hardly see

பார்க்க முடியாத நேத்திரங்களை எடுத்து வந்து

  • ஆசையும் உணர்ச்சியும் மாறுவேடத்தில் வருகின்றன
  • ஓடும் நதியில் மிதக்கும் களையென
  • எழுவதும் மறைவதும் ஏவலுக்குக் கட்டுண்ட வாழ்வு போல்
  • அவை அசுத்தமானவை, அவளசைவுகள் மட்டமானவை
  • இறைவனின் சத்தியம் இகவாழ்வின் ஆழத்தில் புதையாத நேரமில்லை.
  • கடைசி கட்டத்தினரிடத்திலும் ஆர்வம் காணாததில்லை
  • எங்கெல்லாம் சிருஷ்டியுண்டோ அங்கெல்லாம் இறைவனின் ஸ்பர்சம் உண்டு
  • இழந்த ஆனந்த மகிமையின் இன்ப நினைவு இல்லாமலில்லை
  • பிறப்பிலும் இறப்பிலும் பிசிறென ஒட்டிக் கொண்டிருக்கிறது
  • உலகின் உணரமுடியாத அழகு பிரதிபலிக்கும் இறைவனின் ஆனந்தம்
  • அப்பூரிப்பின் புன்னகை எங்கும் தவழும் இரகஸ்யம்
  • காற்றுடன் கலந்து வரும், மரத்தின் சத்தாக மணக்கும்
  • இலையிலும் மலரிலும் எழிலாக மணக்கும் மகிமை
  • வாழ்வின் மயக்கம் மரத்திலுதித்தது போல்
  • உணர்வு தரும் வேதனை குரலாக எழவில்லை
  • விலங்கிலும் பறக்கும் பறவையிலும் சிந்திக்கும் மனிதனிலும்
  • இதயத் துடிப்பை இசையின் தாளமாக மாற்றி
  • உயிரற்ற சதையை உணர்வு பெற எழுப்பி
  • மகிழ்ச்சியை நாடி மனவேதனை பெற்று
  • சொற்ப சந்தோஷம் புளகாங்கிதமாகப் புல்லரித்து
  • வலியால் துடித்து, பூரிப்புக்கு ஏங்கி
  • குரலையிழந்த, தவறாகப் புரியும், தடையற்ற சட்டம்
  • ஜோதியிலிருந்து விலகி, மூலத்துடன் நெருங்கி
  • உணர்வோடு கலந்து, உரிய மகிழ்வை இழந்து
  • ஆத்மாவின் ஆசை அழிபவற்றை ஆர்வமாக நாடும்
  • எவரும் தடுக்க முடியாத இயற்கையின் வேகம்
  • கொதித்தெழும் இரத்தம், சூடுபெற்ற உணர்வு
  • சொந்த வேலையில் பிரம்மம் கண்ட பூரிப்பு
  • உலகின் உண்மையை காமமாகவும் காதலாகவும் காண வைக்கிறது
  • வென்று, பெற்று, ஆண்டு அனுபவிக்கும் உறுதி
  • வாழ்வை அனுபவிக்கும் அரங்க வளமாக்கி

*******



book | by Dr. Radut