Skip to Content

08. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

45. தானே எழும் ஜீவிய ஸ்தாபனம் காலத்தைச் சுருக்கும்

  • வேலைக்குரிய அமைப்பை ஸ்தாபனம் என்கிறோம்.
  • இந்த ஸ்தாபனம் வேலையால் அமைக்கப்படலாம்.
  • நம்மால் அமைக்கப்படலாம்.
  • நம் ஜீவியத்தால் ஏற்படலாம்.
  • பொதுவாக நாம் முயன்று ஏற்படுத்துவது இது.
  • இந்த ஸ்தாபனம் தானே ஏற்படுவது வழக்கமில்லை.
  • பாங்க் 120 பேருக்குக் கடன் கொடுத்தது. தவணை முடிந்தால் கடன் பெற்றவரை பணம் கட்டும்படி தபால் வரும். நேரில் வந்து கேட்பார்கள். பல முறை கேட்டால், சிலர் பணம் தருவார்கள். இம்முறை வழக்கத்திற்கு மாறாக கடன் பெற்றவர் கூடி கடனை கேட்குமுன் தர முடிவு செய்தனர். இது தானே ஏற்பட்ட ஸ்தாபனம். மக்கள் ஜீவியம் ஏற்படுத்தியது. வேலை காலம் தேவைப்படாமல் முடிந்தது.
  • ஒருவருடைய இரு பெண்களுக்கு நெடுநாள் திருமணமாகவில்லை. உறவினர் கூடும் சந்தர்ப்பத்தில் இது விவாதிக்கப்பட்டு, 50,000 ரூபாய் வசூல் செய்து திருமணங்களை முடிக்க முடிவு செய்தனர். பெண்ணின் பெற்றோர் மறுத்துவிட்டனர். இது உலக வழக்கிற்குப் புறம்பானது.
  • உறவினர் உணர்வது ஜீவியம், கூடி முடிவு செய்வது ஸ்தாபனம்.
    இது தானே அமைவது அருள்.
    இப்படி ஒருவர் வாழ்வில் ஏற்படுவது அருளைக் கடந்த பேரருள்.
    அவர்களுக்கு யோகம் பலிக்கும்.
  • ஒரு அன்பர் திருமணங்கட்குப் போவதில்லை என்ற முடிவு எடுத்தார். அவர் மனைவி அதை ஏற்கவில்லை. "நாம் போகாவிட்டால் நம் வீட்டு விசேஷத்திற்கு யார் வருவார். நான் போகிறேன்'' என்று அவர் மட்டும் போனார். பல வருஷங்களாயின. அன்பர் மகளுக்குத் திருமணம் வந்தது.

    உறவினர் கூடிப் பேசினர். கேலியாக ஒருவர் கூறினார், "இந்தக் கல்யாணத்திற்குப் பெண்கள் மட்டும் வருவார்களா?''. திருமண நாள் நெருங்கும்பொழுது வேறொரு திருமணத்தில் கூடிய உறவினர்கள், "அன்பர் திருமணத்திற்கு நாம் அனைவரும் போகாவிட்டால், அது நம் அந்தஸ்திற்குச் சரியில்லை'' என்றனர். ஆண்களும், பெண்களும் தவறாது வந்தனர்.

  • நாம் செய்ய வேண்டிய வேலையைப் பிறர் செய்வது பண்புள்ள ஊர்களில் நடக்கும்.
  • எலக்ஷனில் வேட்பாளர் வாக்காளர்களை அணுகி ஓட்டு கேட்பார்கள்.
    அப்படி அவர் சார்பில் கேட்கத் தொண்டர் குழுக்களை ஏற்படுத்துவர்.
    தொண்டர்கட்குச் செலவாகும்.
    சில வேட்பாளருக்குத் தொண்டர்களே சேர்ந்து குழு அமைத்து ஓட்டு கேட்கப் போவார்கள்.
    தொண்டர்களும் முன்வராமல் தானே ஓட்டு கேட்கும் இயக்கம் அரிது.
    இயக்கமோ, குழுவோ, தொண்டரோயின்றி வாக்காளர் தாமே விரும்பி வந்து ஓட்டுப் போடும் அற்புதமும் உண்டு.
  • குருக்கள் வீட்டில் பெண் பார்க்க வந்த வரன் பெரிய பெண்ணைத் தவிர்த்துச் சிறிய பெண்ணை முன் வைத்தபோது, வீட்டு நிலைமையறிந்து இரு பெண்களையும் தானும் தம்பியும் மணப்பதாகவும், பெண்ணின் தம்பிக்கு உபநயனம் செய்வதாகவும் கூறியது அரிபொருளான நிகழ்ச்சி.
    முயன்று செய்ய ஒருவரில்லை.
    இக்கருத்தை நினைக்கப் பெண் வீட்டார் முன்வரவில்லை.
    எண்ணம் தானே எழுகிறது.
    அதற்குரிய வழி முறைகளை அதுவே ஏற்படுத்தியது.
    அதைச் செய்தது ஜீவியம்.
    ஜீவியம் முன்வந்து ஸ்தாபனம் ஏற்படுத்துவது அரிது.
    அரிதான அந்தச் செயல் காரியத்தைச் க்ஷணத்தில் முடிக்கும்.
    அன்றே அனைத்தும் முடிவு செய்யப்பட்டது.
    இது பேரருள், யோக அம்சமுள்ளவர் வாழ்வில் நடக்கும்.

தொடரும்.....

*******



book | by Dr. Radut