Skip to Content

10. Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 2)

Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 2)

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

  1. நாம் Finiteஆக இருக்கும்பொழுது வெளியிலிருந்து அதிகம் பெற்றுக் கொண்டால்தான் இருப்பதை வளர்க்க முடியும் என்று நமக்குத் தோன்றுகிறது. சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் ஸ்தாபனம் தனக்கு increment போட்டுக் கொடுத்தால்தான் தன்னுடைய வருமானம் வளரும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் தனது சிறிய வருமானத்தைப் பெரிதாக்கிக் கொள்ள இப்படி எண்ணுகிறார்கள் என்றால் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் பொதுவாக நெடுநாளாக வியாபார நிறுவனங்கள் எல்லாமே வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்றால், விற்கின்ற பொருட்களின் விலையை ஏற்றி அதன் பலனாக வருகின்ற customerகளிடம் அதிக விலையைப் பெற்று அதன் மூலம்தான் தன்னுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்று நம்பிக் கொண்டு இருந்தன. வருடம் 2000 வரை உலகம் எங்கிலும் எல்லா நிலைகளிலும் உள்ள வியாபார நிறுவனங்களிடமும் விலையை ஏற்றித் தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற கருத்து இருந்தது. பணத்தை ஒரு finite entityஆக நாம் நினைப்பதால் தான் வியாபாரம் செய்யும்போது நாம் இப்படி நடந்து கொள்கிறோம். அதாவது, அடுத்தவரிடமிருந்து அதிகமாகப் பணத்தை வாங்கித்தான் நம்முடைய வருமானத்தை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும் என்று நம்பி நாம் இதுவரை செயல்பட்டு வந்துள்ளோம். ஆனால் நாம் பணத்தை வேறுவிதமாக அணுகினால் அதனுடைய Infinite அம்சங்கள் நமக்குத் தெரிய வரும். அதாவது, விலையை ஏற்றி அதன் வழியாக அதிகம் சம்பாதிக்கலாம் என்று முயற்சி செய்யாமல் விலையைக் குறைத்து customerஐ மகிழ்வித்தால் விலையை ஏற்றும்போது கிடைக்கின்ற வருமானத்தைவிட விலையைக் குறைக்கும்போது வழக்கத்திற்கு மாறாக வியாபார நிறுவனங்கள் வருமானங்கள் பெருகுவதைப் பார்க்கலாம். விலையை ஏற்றும் பொழுது customerஇடமிருந்து வியாபார நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றன. இது finite அணுகுமுறையாகும். ஆனால் விலையைக் குறைக்கும் பொழுது customerகளுக்கு வியாபார நிறுவனங்கள் self giving செய்கின்றன. Self-giving பணத்தினுடைய infinite அம்சத்தை வெளிக் கொண்டு வந்து அதை அளவு கடந்து வளரச் செய்கிறது. இந்த உண்மையைத் தற்போது உணர்ந்து கொண்டு அதற்கேற்றபடி தன்னுடைய வியாபார அணுகுமுறைகளைப் பல நிறுவனங்கள் மாற்றிக் கொண்டு வருகின்றன. Mobile கம்பெனிகள் வருடம் 2000த்துக்கு முன்னால் per minute chargesஐ அதிகமாக வசூலித்துக் கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது local, STD, ISD என்று எல்லாக் கட்டணங்களையும் எல்லா mobile companyகளும் பெருமளவில் குறைத்துவிட்டன என்று தெரிய வருகிறது. கட்டணங்களைக் குறைக்கக் குறைக்க customer base பல மடங்கு அதிகரிப்பதையும் வருமானம் பெருகுவதையும் mobile companyகள் உணருகின்றன. அம்மாதிரியே deposit சேகரிப்பதிலேயே குறியாக இருந்த வங்கிகள் இப்பொழுது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு எல்லாவிதமான கடன்களையும் கஸ்டமர்களுக்குத் தேடி வந்து கொடுக்க முன்வருகிறார்கள். டெபாஸிட் சேகரம் செய்யும் வளர்ச்சியில் கிடைப்பதைவிட வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுப்பதன் மூலம் அதிக வருமானம் வங்கிகளுக்குக் கிடைப்பதை வங்கிகள் இப்பொழுது உணர்கின்றன. ஆக மேற்சொன்னவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது பணத்தை finiteஆக நினைத்து நாம் பெற்றுக் கொள்வதிலேயே குறியாக இருந்தால் நம்முடைய வருமான வளர்ச்சியும் finiteஆகத்தான் இருக்கும். ஆனால் இப்படி அதை finiteஆக நினைக்காமல் infiniteஆகப் பாவித்து வருமானத்தை வளர்க்க முயன்றால் infinite வருமான வளர்ச்சியை நம் வாழ்க்கையிலும் பார்க்கலாம் என்று தெரிகிறது.
  2. Finiteஆக இருக்கும்பொழுது சிந்தனை செய்வதால் அறிவு வளர்கிறது. மாறாக infiniteஆக இருக்கும்பொழுது மௌனத்தால் அறிவு வளர்கிறது.

    உதாரணமாக சாதாரண எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் இவர்கள் எல்லோருமே தீவிரமாக சிந்தனை செய்துதான் புதிய புதிய விஷயங்களைக் கற்பனையில் உருவாக்கித் தம்முடைய படைப்புகளை உலகிற்கு அளிப்பார்கள். ஆனால் இப்படிச் சிந்தனையையும், கற்பனையையும் வலியுறுத்தி உருவாக்கும் படைப்புகளைவிட மௌனத்திலிருந்து எழும் படைப்புகள் பல மடங்கு சிறப்பானவைகளாக இருக்கும். பகவான் எழுதியுள்ள ஃலைப் டிவைன், சின்தஸிஸ் ஃஆப் யோகா மற்றும் சாவித்திரி ஆகிய உன்னத படைப்புகளெல்லாம் மற்ற எழுத்தாளர் போல அவர் சிந்தனை செய்து எழுதியவைகளே கிடையாது. மாறாக அவருக்குள் குடி கொண்டிருந்த நிரந்தர மௌனத்தில் பிறந்தவைதாம் இந்தப் படைப்புகளெல்லாம். பேனாவையும், பேப்பரையும் எடுத்துக் கொண்டு எழுத அமர்ந்தார் என்றால் எண்ணங்களும், வாக்கியங்களும் தாமாக ஒன்றன் பின் ஒன்று உதயமாகி வெளிப்பட்டு எழுத்து வடிவம் பெறுமாம். இப்படித்தான் அவர் எழுதினார் என்று அன்றே தன்னுடைய அஜெண்டாவில் அவருடைய எழுத்தாற்றலைப் பற்றி அன்னை குறிப்பிட்டிருக்கிறார்.

  3. Finite initiative மூலம் சாதிக்கிறது. ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாக surrender மற்றும் சமர்ப்பணத்தின் மூலம் Infinite சாதிக்கிறது.

    அகந்தையை மையமாக வைத்துச் செயல்படுகின்ற சாதாரண மனிதன் தனக்குப் பிடித்த காரியங்களையும் தனக்கு எது நல்லது என்று தெரிகிறதோ அது சம்பந்தப்பட்ட காரியங்களையும் தானே முனைந்து initiative எடுத்துச் செய்கிறான். இப்படித் தனக்கு வேண்டியதைத் தானே செய்து கொள்ள நினைப்பது finite மனப்பான்மையாகும். இப்படிச் செயல்படும்போது அவரவருடைய சொந்த அறிவாற்றல், மனோபலம் மற்றும் உடலுழைப்பு, பணபலம் இவற்றுக்குண்டான பலன்தான் கிடைக்கிறது. அந்தப் பலன் limitedஆகத்தான் இருக்கும். ஏனென்றால் அகந்தை என்பது ஒரு finite entity தான். ஆனால் அன்னை பக்தர்கள் தங்களுடைய choice,, தங்களுடைய இஷ்டம் என்று எல்லாவற்றையும் அன்னையிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு அன்னையின் திருவுள்ளம் தங்கள் வாழ்க்கையில் செயல்படட்டும் என்று அன்னைக்குச் சுதந்திரத்தை வழங்கும் பொழுது அன்னையினுடைய அருளாற்றல் அன்பர்கள் வாழ்க்கையில் செயல்படத் தொடங்குகிறது. அகந்தையின் பலம் finite என்றால் அன்னையின் அருளின் பலம் infinite ஆகும். அருளினுடைய வரம்பற்ற பலம் அன்பரின் வாழ்க்கையில் வெளிப்படும் பொழுது அவருடைய வருமானம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம், மற்றும் கேரியர் accomplishment அவரைப் பொறுத்தவரை ஒரு வரம்பற்ற வளர்ச்சியைக் காண்கின்றன. அதாவது மாதம் 10,000 ரூபாய் வருமானம் கிடைத்தாலே பெரிது என்று நினைப்பவருக்கு மாத வருமானம் இலட்ச ரூபாயாக உயர்கிறது. Clerical cadreல் பணியில் சேர்பவர் அதிவேகத்தில் officer cadreக்கு உயர்கிறார். Working classல் பிறந்து வளர்ந்தவர் அதிவேகமாக upper class levelக்கு உயர்கிறார். இவையெல்லாம் சாதாரண மனிதனாக இருந்து அன்னை பக்தனாக மாறுபவருக்கு அவரைப் பொறுத்தவரை வரம்பற்ற வளர்ச்சிதான்.

  4. Finite பகுத்தறிவை வைத்துச் செயல்படக்கூடியது. Infinite நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் செயல்படுகிறது. மனிதன் தன்னை finiteஆகப் பாவித்துச் செயல்படும் பொழுது அவனுடைய அறிவு தன்னுடைய power of reasonஐ மட்டுமே நம்பிச் செயல்படுகிறது. அப்பட்சத்தில் ஒருவருடைய அறிவுக்கு என்ன புரிகிறதோ, எது சாத்தியம் என்று படுகிறதோ, அதுதான் அவருடைய வாழ்க்கையில் கூடி வரும் என்று அவருடைய அறிவு அவரை நம்ப வைக்கிறது. ஒருவருக்கு இருக்கின்ற வாழ்க்கை சூழ்நிலையில் பெரிய மாற்றத்திற்கோ, உயர்விற்கோ வழியில்லை என்று அவருடைய அறிவு சொல்வதை அவர் நம்பினால், அவருடைய வளர்ச்சி அத்துடன் நின்று விடுகிறது. ஆனால் அறிவு சொல்வதை மதிக்காமல் ஆன்மாவினுடைய நம்பிக்கையை வைத்துச் செயல்படும் பொழுது finiteஆக இருக்கின்ற மனிதன் infiniteஆக மாறுகிறான். எந்த வருமானம், எந்தப் பதவி உயர்வு, எந்தச் சமூக உயர்வு ஒருவருக்கு இல்லை என்று அவருடைய அறிவு சொல்கிறதோ அவற்றை எல்லாம் அவருடைய இறை நம்பிக்கை சாத்தியமாக்கும் பொழுதுதான் finiteஆக செயல்பட்ட தன்னுடைய அறிவை இதுவரையிலும் நம்பியது எவ்வளவு பெரிய தவறு என்பதை மனிதன் உணர்கிறான்.

தொடரும்....

*******



book | by Dr. Radut