Skip to Content

10. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம!
ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!
ஓம் ஸ்ரீ அரவிந்தோ மிர்ரா!

இறைவடிவான என் இனிய அன்னைக்கும், ஸ்ரீ அரவிந்த பகவானுக்கும் முதல் என் நன்றியை சமர்ப்பணம் செய்கிறேன். என் வாழ்க்கையில் அன்னையை நான் அழைத்து நிறைய சம்பவம் நடந்துள்ளது. அதில் இப்பொழுது இந்த மாதம் நடந்த ஓர் ஆச்சர்யம்.

என் அக்காவும், மாமாவும் திருநின்றவூரில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு 2 குழந்தைகள். மாமா Metrowater-Nungampakkamத்தில் வேலை செய்கிறார். அரசு உத்யோகம்தான். அவருக்கு sugar 2 வருடமாக இருக்கிறது. முதலில் இருந்தே அவர் sugar normalலாகவே இருக்கும்படி full dietல இருப்பார். அவர் - எல்லாவற்றிலும் - நேரம் தவறாமை, உண்மை, சேமிப்பு இப்படி நல்ல குணங்களுடன் அவர் வாழ்வில் முன்னேறி இடம் வாங்கி 2 வீடு கட்டி குழந்தைகள் futureக்காக savingsசும் செய்து நன்றாக வாழ்கிறார்கள். அவர் வீட்டிலும் அன்னையை வைத்து பிரார்த்தனையும் செய்கிறார்கள். மாமாவிற்கு கடந்த October (2008) மாதம் viral fever வந்தது. பிறகு அது டைபாய்டாக மாறியது. ஒரு 10 நாள் ஆகிவிட்டது. 2, 3 நாட்களாக vomitடும் இருந்தது. தண்ணீர்கூட வயிற்றில் தங்க வில்லை. 2 நாட்களாக urineனும் போகவில்லை. Urine சிறிது போனால் கூட குங்குமக் கலர்ல urine வந்தது. உடனே கெல்லீசில் இருக்கும் A.K.N. மருத்துவமனையில் admit செய்தனர். அங்கு doctor பரிசோதித்து இரு கிட்னியும் வேலை செய்யவில்லை. கிட்னிதான் bloodடையும், urineஐயும் பிரிக்கிறது. கிட்னி வேலை செய்யாததால் urine bloodல கலந்து விட்டது, urine போனால் blood colour வர ஆரம்பிக்கிறதுஎன்று கூறினார். இவ்வளவு சிறு வயதில் இப்படி ஆகிவிட்டது என அனைவரும் மிக கவலை அடைந்தோம். Doctor கிட்னி இரண்டுமே failureராக இருக்க chance இருக்கு. Dialysis செய்து பார்ப்போம்என்று கூறினார். என் அக்காவிற்கும், அவருக்கும் என்ன ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்துவது என்று எங்களுக்குப் புரியவில்லை. பிறகு நான் November மாதம் 3ஆம் தேதி 2008 அன்று அம்பத்தூர் தியான மையம் சென்று அன்னையிடம் இந்தப் பிரச்சினையைச் சொல்லி அழுதுவிட்டு அன்னையிடம் மாமாவை குணமாக்க ஒப்படைத்துவிட்டு, அன்னையை அந்த மருத்துவமனைக்கு அனுப்பி பிரார்த்தித்தேன். 5 நாள் பிரார்த்தனையும் மேற்கொள்வதாக 4/11/08 to 8/11/08 வரை செய்ய முடிவுசெய்து வெளியே வந்தேன். வெளியே வந்தால் எங்கள் அம்பத்தூர் தியான மையப் பொறுப்பாளரை சந்தித்தேன். அவரிடம் கூறினேன். அவர், "மதரை அங்கு அனுப்சுடு, மதர் கிட்ட ஒப்படைத்து விடு இந்த விஷயத்தை. கவலைப்படாமல் இரு. மதர் பார்த்துப்பாங்க. உங்க மாமாவிற்குச் சரியாகிவிடும்னு'' கூறினார். அவர் கூறியது அன்னை என் முன் வந்து கூறியதுபோல் மிகவும் ஆறுதலாக இருந்தது. 4-ஆம் தேதி முதல் நாள் பிரார்த்தனை முடிந்தது, 5ஆம் தேதி தியானமையம் வந்து பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் சென்று அக்காவிடம் phone பேசினேன். அவரிடம் "கவலை படாமல் இருங்க. இந்த 5 நாள் பிரார்த்தனையில் ஏதாவது ஒரு change, ஒரு improvement கிடைக்கும். Mother வருவாங்க'' என்றும், மாமா இந்த 5 நாளில் " Refresh ஆகவும் தெம்பு, புதிய ஒரு வித தெம்பு வரும்''னு கூறி Mother கிட்ட pray பண்ணலாம் கண்டிப்பாகச் சரியாகும்என்று கூறி ஆறுதல் சொல்லிவிட்டு, phone ஐ வைத்து விட்டேன். 6ஆம் தேதி காலை 6 மணிக்கெல்லாம் அக்காவிடம் இருந்து phone. (அதற்கு முன் ஒரு விஷயம் மாமாவிற்கு hospital-ல் தினமும் dialysis செய்யப் பட்டது. தினமும் urine 25 ml மேல் தாண்டாது. 5 ml, 10 ml, 25 ml தான் ஒரு நாளைக்கே urine போனார். Dialysis செய்யும்போது மட்டும் தான் கிட்னி வேலை செய்தது).

காலை 6 மணிக்கு என் அக்கா phone செய்தார். மாமாவிற்கு ஒரு கனவு வந்ததாகக் கூறினார். அதில் வெள்ளை உடையில் ஒரு பெண் உருவம் வந்து மாமாவைத் தட்டி எழுப்பி ஒரு மருந்து கொடுத்தாராம். பிறகு "படு படு" என்றார். பிறகு எழுந்திரு vomit பண்ணு. மறுபடியும் படு எழுந்திரு இந்த மருந்தைக் குடி, வாந்தி எடு என்றாராம். கட்டிலில் இருபுறமும் ஒரே வாந்தியாம். பிறகு படு படு என்று கூறி அவர் மறைந்து விட்டாராம். உடனே மாமாவிற்கு விழிப்பு வந்து மெத்தையில் வாந்தியைத் தேடினாராம், ஈரமாக இல்லை. என்ன கனவு என்று நம்ப முடியவில்லையாம். நிஜமாக நடந்தது போல் தோன்றியதாம். பிறகு அக்காவை எழுப்பி இந்தக் கனவு வந்ததாகக் கூறிவிட்டு அவரே எழுந்து bathroom சென்று 100 ml urine போனாராம். நம்பவே முடியலை, Doctor ரும் ஆச்சர்யப் பட்டார். மாமா urine போய்விட்டு வந்ததும் அக்காவிடம் சொன்னாராம் "எனக்கு refresh ஆனா மாதிரி இருக்கு, புது தெம்பு வந்தா மாதிரி இருக்கு'' என்று கூறினார். உடனே அக்கா "இதையே தான் யாமினி (நான்)யும் சொன்னாள். என்ன ஆச்சர்யம் அவள் கூறியதை அப்படியே சொல்கிறீர்கள். என்ன அதிசயம்''. அக்கா என்னிடம் இவற்றையெல்லாம் கூறி அழுதே விட்டார். இப்பொழுது மாமாவிற்கு கிட்னி நல்லா function ஆகுது. Daily urine, motion போகிறார் vomit இல்லை. Normal ஆயிட்டார். மாமா என்னிடம், "ஏதோ ஒரு பெரிய சக்தி இருக்குமா அன்னையிடம். நான் discharge ஆகி வீட்டிற்குப் போகும் முன் அம்பத்தூர் தியான மையத்திற்கு வந்துவிட்டு பிறகுதான் வீட்டுக்குப் போவேன்'' என்று கூறினார். அவரும் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அன்னையின் அருள் எவ்வளவு விரைவாக நமக்குக் கிடைக்கிறது. நாம் எப்போது அன்னையை அழைத்தாலும் அவர் வரத் தயாராய் உள்ளார். நாம் தான் அழைப்பதில்லை. அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அக்கா எனக்கு நன்றி சொன்னாள். நான் எனக்கு எதற்கு நன்றி அன்னைக்கு நீ நன்றி சொல் என்றேன். அக்கா வீட்டில் Motherக்கு symbol போடுவதாகவும் pray பண்ணினோம். மாமா வீட்டிற்கு வந்ததும் hall முழுவதும் பெரிய symbol போடணும்னு மாமா கூறினார். அன்னையின் அருளைப் பெற இந்த ஒரு ஜென்மம் போதாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன்னையின் அன்பராகப் பிறக்க ஆசைப்படுகிறேன். "மாமா நல்லடியாக க்ண் dischargeஆக வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு இக்கட்டுரையை முடிக்கிறேன்''.

"ஓம் நமோ பகவதே!''

- S.யாமினி சிவராமகிருஷ்ணன், சென்னை

 

******



book | by Dr. Radut