Skip to Content

பகவானுடைய இதர நூல்கள்

கி.பி. 1200இல் இந்தியாவில் மக்களாட்சி

Foundations of Indian culture என்ற நூல் 1914 முதல் 1920 வரை ஸ்ரீ அரவிந்தர் "ஆர்யா'' பத்திரிகையில் எழுதிய 5 நூல்களில் ஒன்றாகும். நூலின் தலைப்பை இந்தியப் பண்பின் அஸ்திவாரம் என மொழிபெயர்க்கலாம். ஜனநாயகம், மக்களாட்சி என நாம் அறிவது அரசனுக்குப் பதிலாக மக்கள் தேர்ந்தெடுத்த பார்லிமெண்ட் ஆட்சி செய்வது. இது முதலாம் சார்லஸைக் கொலை செய்து இங்கிலாந்தில் முதலில் ஏற்பட்ட வரலாறு.

முஸ்லீம் படையெடுப்புக்கு முன் 56 தேசம் எனப் பிரபலமாக அகில இந்தியாவைக் கூறும் நாட்களில் உண்டான அரசியல் அமைப்பை ஸ்ரீ அரவிந்தர் ஆராய்ச்சி செய்து அது ஜனநாயகத்தின் சிறப்பம்சங்கள் உள்ளது என்கிறார். அதைத் தழுவிய கருத்துக்கள் அவருடைய எழுத்தில் பரவலாகக் காணப்படுவதையும், அதன் சாயல் இன்று நம் கண்ணில் படுவதையும், அது போன்ற சிறந்த இந்தியப் பண்புகளைப்பற்றி அன்னை கூறியவற்றையும் சுருக்கமாக எழுதுகிறேன்.

  • மக்கள் அரசனை விலக்கி, தாங்களே தேர்ந்தெடுக்கும் சபை, தலைவன் ஜனநாயகம்.
  • இந்நிலை ஏற்பட்டபின் பெரும்பான்மையோர் சிறுபான்மையோரை அடக்க இது உதவும்.
  • தேர்தல் முடிந்தபின் சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கட்டுப்படுவதே democracy ஜனநாயகம்.
  • சிறுபான்மையாக இருந்தாலும் அவர்கள் குரலும் கேட்கும் அமைப்பை 1200 AD இல் இந்தியா பெற்றிருந்தது.
  • வாழ்வில் எல்லா அம்சங்களிலும், எந்த அம்சத்திலும் ஆன்மீகம் வெளிப்படுவது எப்படி என்பதே அன்று இந்தியாவில் இலட்சியமாக இருந்தது.
  • அரசன் உள்ளபொழுதும் அது எதேச்சாதிகாரமாக இருப்பதை நாட்டின் பண்பு அனுமதிக்கவில்லை.
  • தர்மம் தலை தூக்கியது. அரசன் தர்மத்திற்கு கட்டுப்படாவிட்டால் அரசனை நாடு விலக்கும்.
  • சட்டத்தைவிட நியாயம் பெரியது. நியாயத்தைவிட தர்மம் பெரியது. அதைவிடப் பெரியதில்லை. இருந்தால் கருணை அதைவிடப் பெரியது எனலாம். அருள் கருணையைக் கடந்தது. நாடு தர்மத்தால் ஆளப்பட்டது. ஆட்சி அமைப்பு அதற்கேற்றவாறிருந்தது என்கிறார் பகவான்.
  • அரசியலில் ஆன்மீகம் வெளிப்பட அனைவர் குரலும் கேட்க வேண்டும்.
  • எந்த வகையான தொழில் - தச்சன், கருமான், வியாபாரி - செய்பவர்கட்கும், சிறுபான்மையான எவருக்கும் ஆட்சியில் இடம் உண்டு. அவர் குரல் கேட்கும் அமைப்புண்டு.
  • முஸ்லீம் படையெடுப்பிற்குப்பின் நாடும், நாட்டின் அமைப்பும் மாற ஆரம்பித்தது.
  • ஆங்கிலேயர் 200 ஆண்டுகளிருந்ததால் 30% மக்கள் மனம் பாழடைந்து அழுகிவிட்டது என்கிறார் அன்னை.
  • ஆன்மீகத்திற்கு இந்தியாவும், அறிவுக்கு பிரான்சுமாக சேர்ந்து உலகை ஆளவேண்டும் என்பது அன்னையின் எண்ணம்.

இன்றையநிலை உலகக்கலாச்சாரம் அமெரிக்கரைப் பின்பற்றுகிறது. ஆங்கிலம் அமெரிக்க ஆங்கிலமாகிறது. நாம் என்ன காண்கிறோம்? இன்றும் தமிழர் வீடுகளில் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் வீடுகள் உண்டு. எவரும் வாய்திறந்து பேசமுடியாத நிலையுண்டு. பொதுவாகக் குடும்பத்தலைவர் ஆட்சி நடக்குமிடத்திலும் "இது பெண்கள் விஷயம் நாம் தலையிடக் கூடாது'', "இது பிள்ளைகள் காரியம் நாம் கண்டுகொள்ளக் கூடாது'', "இது வேலைக்காரர் விஷயம், இதிலெல்லாம் நாம் தலையிடலாமா?'' என்ற போக்கு பெரும்பாலுமிருப்பது 1200இல் அரசியலில் இருந்த ஆன்மீக ஜனநாயக ஆட்சியின் நோக்காக அமைகிறது. 800 ஆண்டுகளாக அரசியல் பண்பை அழியாமல் காக்கும் குடும்பங்கள் ஏராளம். அப்படி 70% இந்தியப் பண்பு உயிரோடுள்ளது என்கிறார் அன்னை. இந்தியர் உடலில் ஒளியுள்ளது. இந்தியருக்கு Knowledge of life வாழ்வின் ஞானமுண்டு என்கிறார். பிறநாட்டிலிருந்து விஞ்ஞான அறிவு, தொழில் நுணுக்கம் புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்க வேண்டும். அவற்றை நம் பண்பிற்கேற்பப் பின்பற்ற வேண்டும்.

  • இன்று உலகில் ஜனநாயகத்தில் எந்த நாட்டிலுமில்லாத அம்சம் 800 ஆண்டுகட்கு முன் நம் நாட்டிலிருந்தது. இன்னும் முழுவதும் அழியாமல் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை நாம் ஆழ்ந்து கருதுவது ஸ்ரீ அரவிந்தர் எழுத்தை அதிகமாகப் புரிந்து கொள்ள உதவும்.

**********

Comments

para no.1, line no.2 -

para no.1, line no.2 - நூல்கüல் - நூல்களில்

para no.2, line no.2 - நாட்கüல் - நாட்களில்

Bulleter point no.2, line no.1 - சிறுபான்மை யோரை  - சிறுபான்மையோரை 

Bulleter point no.3 -  பெரும்பான்மை யோருக்குக் பெரும்பான்மையோருக்குக்

 

 

  •  



book | by Dr. Radut