Skip to Content

10. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

Sri Aurobindo and the Tradition

ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

CHAPTER 2 – THE MATERIALIST DENIAL

  1. Tradition has a tirade against life, calls it evil, and asks us to shun it.
    Sri Aurobindo says the Absolute supports life with its vast strength.

    மரபு வாழ்வை தீயது என்று நிந்தித்து, நம்மை அதை விலக்கச் சொல்கிறது.
    ஸ்ரீ அரவிந்தர் இறைவன் தன் பெரும் வலிமையால் வாழ்வை ஆதரிக்கிறான் என்கிறார்.

  2. The materialist is not able to perceive anything immaterial or not organised as gross Matter.
    Sri Aurobindo accuses them of the vice of the argument in a circle.

    ஜடமற்றதையோ, ஸ்தூல ஜடமாக இல்லாததையோ, பொருள்முதல்வாதியால் ஏற்க முடியவில்லை.
    பொருள்முதல்வாதியின் கருத்து வட்டத்தைச் சுற்றிவரும் தவறான கருத்து என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

  3. Tradition faithfully repeats the formulas of a bygone century.
    Sri Aurobindo points out the increasing evidences of the supraphysical. He says intellects can be limited in spite of their acuteness.

    கடந்தகாலத்தின் சூத்திரங்களை மரபு விசுவாசத்துடன் திரும்பத் திரும்பச் சொல்கிறது.
    சூட்சும நிலை உண்டு எனக் காட்டும் ஆதாரங்கள் பெருகிவருவதை சுட்டிக்காட்டி, புத்திசாலிகளின் கூரிய அறிவும்கூட அளவிற்குட்பட்டதே என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

  4. Tradition jealously conserves the dying or dead intellectual dogmas.
    Sri Aurobindo affirms the existence of the worlds beyond.

    முடிந்துவிட்ட, தேய்ந்துவரும் அறிவுபூர்வமான கோட்பாடுகளை மரபு பொறாமையோடு பாதுகாத்து வருகிறது.
    நம் உலகிற்கு அப்பாற்பட்ட உலகங்கள் உண்டு என்று ஸ்ரீ அரவிந்தர் உறுதியாகக் கூறுகிறார்.

  5. Materialism tries to return to the Non-Being.
    Sri Aurobindo pleads for the extension of the field of consciousness to settle the ancient quarrel.

    பொருள்முதல்வாதம் அசத்திற்குத் திரும்ப முயல்கிறது.
    ஆதிகாலந்தொட்டு வரும் பிணக்கைத் தீர்க்க ஸ்ரீ அரவிந்தர் ஜீவியத்தின் தளங்களை நீட்டிக்க வேண்டும் என்கிறார்.

தொடரும்....

*******



book | by Dr. Radut