Skip to Content

05. உணர்வுமயமான செயல்பாடும் அறிவுடைமையின் அவசியமும்

உணர்வுமயமான செயல்பாடும் அறிவுடைமையின் அவசியமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

  1. டார்சி: டார்சி பார்ப்பதற்கு சாந்தமானவனாகவும் அதிகம் பேசாதவனாகவும் தென்பட்டாலும் அவனிடமும் உணர்ச்சி வயப்பட்டு செயல்படுகின்ற குணம் இருக்கிறது. அது சம்பந்தமான நிகழ்ச்சிகள் சிலவற்றை பார்ப்போம்.
    1. எலிசபெத் மேல் அவனுக்கு காதல் வருகிறது. ஏற்கனவே அவளுடைய அக்காவை மணக்க விரும்பிய பிங்கிலியை, பென்னட் குடும்பத்தினர் manners இல்லாதவர்கள், நாகரிகமற்றவர்கள், ஆகவே அவர்கள் வீட்டு பெண்ணை மணக்கக் கூடாது என்று சொல்லி தடுத்து நிறுத்தியிருக்கிறான். இப்பொழுது அதே குடும்பத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணிடம் அவளை மணக்க விரும்புவதாக சொல்ல விரும்புகிறான். தனக்கு ஒரு நியாயம், தன் நண்பனுக்கு ஒரு நியாயம் என்ற ஒரு double standards முறையற்றது என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு காதல் மயக்கம் அவனை வீழ்த்தியிருக்கிறது.
    2. தன்னுடைய அந்தஸ்திற்கும், செல்வத்திற்கும் எவளும் உடனே தன் proposalக்கு ஒத்துக் கொள்வாள் என்று நினைக்கிறானே தவிர தன்னை மறுப்பதற்கு எலிசபெத்திற்கு ஒரு இடம் இருக்கும் என்று அவனால் நினைக்கக்கூட முடியவில்லை. அவள் சுமாரானவள் என்று தான் விமர்சித்திருந்ததால் இவள் தன் மேல் கோபமாக இருக்கிறாள், விக்காமைத்தான் இவளுக்கு பிடித்திருக்கிறது, தன்னைப் பற்றி தவறான அபிப்பிராயம் வைத்திருக்கிறாள் என்பது எல்லாம் அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. நீ ஜென்டில்மேன் இல்லை என்று அவள் அவனை குறை சொல்லும் பொழுது அவனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. தன் பெருமையிலேயே ஊறிப்போன அவனுக்கு தன்னை திமிர் பிடித்தவன், அகம்பாவி என்று மெரிடன் கிராமத்தில் இருக்கின்றவர்கள் எல்லாம் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
    3. ஒரு பெண்ணிடம் proposal கொடுக்கும் பொழுது அவளுடைய குறைகளைப் பற்றி அவளிடம் சொல்லக் கூடாது. ஆனால் இவனோ அந்தஸ்தில் அவள் குறைந்தவளாக இருந்தாலும், அவளுடைய உறவினர்கள் சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் என்றாலும், இவற்றையெல்லாம் மீறி அவளை விரும்புவதாகச் சொல்கிறான். இப்படி ஒரு proposal கொடுப்பது அறிவில்லாத செயலாகும். அறிவுள்ளவனாக இருந்தால் அவளுடைய குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற உந்துதல் எழுந்தால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் சந்தோஷப்படும்படி proposal கொடுத்திருப்பான். மனதில் எழுந்த எண்ணங்களை எல்லாம் அப்படியே அவன் கொட்டியது அவனுடைய செயல்பாட்டை உணர்ச்சிவயப்பட்ட அறிவில்லாத செயல்பாடாகிவிட்டது.
  2. லிசி: இந்தக் கதையில் மிகவும் அறிவுள்ளவளாக செயல்படுவது எலிசபெத் என்றுதான் சொல்ல வேண்டும். அவளுக்குள்ள இந்த அறிவு முதிர்ச்சி அவளுடைய வயதை மீறியதாகவுள்ளது. இருந்தாலும் அவளுடைய இளமைக்கேலியுரிய வேகமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த இளமையின் வேகமும், காதல் வயப்படுவதில் கிடைக்கக்கூடிய இன்பமும் இப்படி ஒரு விவேகமுள்ள பெண்ணையும் அறிவில்லாமல் உணர்ச்சிவயப்பட்டு செயல்பட வைக்கின்றன என்றால் அதில் எந்த ஆச்சரியமுமில்லை.
    1. விக்காமுடைய அழகான தோற்றமும், pleasant manners அவளை மயங்க வைக்கின்றன. வெளியழகு உள்ளழகிற்கான அடையாளம் என்று எடுத்துக் கொள்கிறாள். ஆனால் உண்மையில் manners என்பது ஒரு தோற்றம்தான், அது உள்ளழகை பிரதிபலி க்கவும் செய்யலாம் அல்லது நெகட்டிவ் பர்சனாலி ட்டியை மூடி மறைப்பதற்கும் உதவலாம். விக்காம் விஷயத்தில் இரண்டாவதாக சொல்வதுதான் உண்மையாக இருந்திருக்கிறது. விக்காம் சரியானவன் இல்லை, அவனிடம் பார்த்து பழக வேண்டும் என்று கரோலின் எச்சரிக்கை விடும்பொழுதும் அவள் அதை நம்பகூட தயாராக இல்லை. அவன் நல்லவன் என்று தான் முடிவு செய்திருந்தது ஒருவேளை தவறாக இருக்கலாமோ என்ற சந்தேகம் கூட அவளுக்கு எழவில்லை.
    2. பென்னட் குடும்பத்தினர் மெரிடன் கிராமத்திற்கு வாக்கிங் செல்லும் பொழுதே விக்காமை பார்த்தவுடன் டார்சியின் முகத்தில் தெரிந்த ஒரு அதிர்ச்சியை எலிசபெத் கவனிக்கிறாள். அப்பொழுதே இவர்களுக்குள் ஏதோ தகராறு இருக்கிறது. விக்காமை டார்சிக்கு பிடிக்கவில்லை என்று அவளுக்குத் தெரிந்துவிடுகிறது. நெதர்பீல்டு நடன நிகழ்ச்சியில் அவன் வராததைக் கண்டு ஏமாற்றம் அடைகிறாள். அதே சமயத்தில் டார்சி இவளை தன்னோடு நடனமாட அழைக்கிறான். நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது அடிக்கடி மெரிடன் கிராமத்திற்கு நடந்து செல்வீர்களா என்று கேட்கிறான். அவள், ஆமாம் அடிக்கடி செல்வோம். சமீபத்தில் சென்ற பொழுதுகூட உங்களையும் பார்த்தோம், வேறு ஒருவருடைய நட்பும் கிடைத்தது என்று மறைமுகமாக விக்காமைப் பற்றி அவனுக்கு நினைவுபடுத்துகிறாள். அதைக் கேட்டவுடன் அவன் முகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி வருகிறது. பிறகு சிறிது நேரம் கழித்து, உங்களுக்கு யார் மேலாவது அதிருப்தி ஏற்பட்டால் அதை எளிதில் மறக்கமாட்டீர்கள் போலி ருக்கிறது என்று மீண்டும் மறைமுகமாக விக்காம் மேல் அவனுக்கு இருக்கிற மனக்கசப்பை நினைவூட்டுகிறாள். இவை இரண்டுமே அறிவில்லாமல் உணர்ச்சிவயப்பட்டு பேசிய வார்த்தைகளாகும். ஒருவர் நம்மோடு பிரியமாக உறவாட வரும்பொழுது அவருக்கு பிடிக்காத விஷயங்களை பேசக்கூடாது என்பது காமன்சென்ஸ். ஆனால் அந்த தவற்றைதான் இவள் செய்கிறாள். இதனுடைய நேரடி விளைவு எப்படி இருக்கிறதென்றால், இவளுடைய உணர்ச்சிவயப்பட்ட பேச்சை தொடர்ந்து லிடியா ஒரு போர் வீரனின் வாளை உருவிக் கொண்டு இங்கும், அங்கும் தாறுமாறாக சத்தம் போட்டுக் கொண்டு ஓடுகிறாள். காலின்ஸ் courtesy முறைகளைப் பின்பற்றாமல் தானே சென்று டார்சியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முயல்கிறான். இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் இவளுடைய தாயார் டார்சி காதில் விழும்படி பிங்கிலிக்கும், ஜேனுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. மேலும் மற்ற பெண்களுக்கும் இம்மாதிரியே பணக்காரத் தொடர்புகளை உண்டுபண்ண போகிறேன் என்று பெருமையடித்துக் கொள்கிறார். இதன் நேரடி விளைவாக டார்சியும், பிங்கிலியின் சகோதரிகளும் பிங்கிலியைக் கண்டித்து ஜேனிடமிருந்து விலகச் சொல்கிறார்கள். அவனும் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நெதர்பீல்டை காலி செய்து கொண்டு லண்டனுக்கே திரும்பிப் போய்விடுகிறான். பென்னட் குடும்பத்தினருடைய கனவுகளும் அந்த நேரத்திற்கு தரை மட்டமாகின்றன.
  3. கேதரின் டீ பர்க்: லாங்பர்ன் வீட்டு அருகே லிசியுடன் இவர்கள் போட்ட சண்டை மிகவும் அறிவில்லாமல் உணர்ச்சிவயப்பட்டு செயல்பட்டதாக அமைகிறது. இதன் விளைவாக அதிர்ச்சியும், அவமானமும்தான் மிஞ்சுகிறது.
    1. டார்சிக்கும், எலிசபெத்திற்குமிடையே காதல் மலர்ந்துள்ளது என்று இவர்கள் காதுக்கு ஒரு செய்தி வந்தால் நியாயமாக இவர்கள் உறவுக்கார பிள்ளையான டார்சியைத்தான் விசாரித்திருக்க வேண்டும் மற்றும் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை என்று தெரிகிறது. அதை வைத்துப் பார்க்கும் பொழுது ஒருவேளை அவனை கண்டிக்கும் அளவுக்கு தைரியம் இல்லாமல் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது.
    2. லிசியைத்தான் கண்டிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், லிசி இவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரியும் பொழுது அவளிடத்திற்கே வந்து அதிகார தோரணையில் அவளைக் கண்டித்து சத்தம் போடுவது என்பது அறிவில்லாத செயல்பாடாகிறது. ஆனால் காலின்ஸ் இவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பவன். மேலும் பென்னட் குடும்பத்தினருக்கு உறவும் ஆவான். ஆகவே காலின்ஸை பென்னட் குடும்பத்தினருடைய வீட்டுக்கு அனுப்பி, அவனை விட்டு லிசிக்கு எச்சரிக்கை செய்திருக்கலாம். தன்னுடைய முதலாளி அம்மா என்ற இடத்தில் கண்டிப்பாக காலின்ஸ் இவருடைய கட்டளையை ஏற்று, லாங்பர்னுக்குச் சென்று லிசியை எச்சரிக்கை செய்திருப்பான். அவள் அந்த எச்சரிக்கையை ஏற்கிறாள் அல்லது மறுக்கிறாள். அது அடுத்த கட்டம். ஆனால் தன்னை நேரடியாக லிசி எதிர்த்துப் பேசியது மற்றும் அவமானப்படுத்தியது ஆகிய அசம்பாவிதங்களை தவிர்த்து தன்னுடைய மரியாதையை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் இப்படி டார்சியிடமும் போகாமல், காலின்ஸையும் பயன்படுத்தாமல் நேரடியாகத் தானே லாங்பர்னுக்குச் சென்று லிசியிடம் தகராறு செய்தது ஒரு உணர்ச்சிவயப்பட்ட அறிவில்லாத செயலாகவே ஆகிறது.

பிரஞ்சு புரட்சியின் அர்த்தம் என்ன மற்றும் அந்த புரட்சி ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவினால் ஐரோப்பா முழுவதும் உள்ள உயர்குடி மக்களின் நிலைமை என்னவாகும் என்றெல்லாம் கேதரீன் டீ பர்க் சிந்தித்ததாகவேத் தெரியவில்லை. அப்படி அவர் சிந்தித்திருந்தார் என்றால் லிசியிடம் தகராறு செய்ய வேண்டும் என்று வந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார். டார்சி தனக்கு மருமகனாக கிடைக்காமல் போனதற்கு தன் மகளுடைய எனர்ஜி இல்லாத பர்சனாலிட்டியும், ஆரோக்கியமில்லாத உடல்நிலையுமே காரணம் என்று புரிந்து கொண்டு தன்னையும் தன் மகளையுமே நொந்து கொண்டிருப்பார்.

இந்தக் கதையில் வருகின்ற ஆறு கதாபாத்திரங்களுடைய உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடுகளை இப்பொழுது பார்த்தோம். பொதுவாக உணர்ச்சிவயப்பட்டு செயல்படும்பொழுது நடக்கும் செயல்களை திருத்துவது என்பதோ, அவற்றின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்க நினைப்பதோ மிகவும் கடினமான காரியம். இம்மாதிரி தவறுகளை செய்கின்றவர்கள் தலைவிதியே என்று நொந்து கொண்டு, அதனால் வரும் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். திருமதி. பென்னட்டுடைய பர்சனாலிட்டியே முழுவதும் உணர்ச்சிவயப்பட்டு செயல்படக்கூடியது. அவருடைய அறிவில்லாத செயல்பாடுகள் மற்றும் மட்டமான பேச்சையும் மீறி அவருடைய மூன்று பெண்களுக்கு திருமணம் நடப்பதென்பதே ஒரு பெரிய அற்புதம்தான். அவருடைய அறிவில்லாத செயல்பாட்டையும், அவசரத்தையும் மீறி இப்படி மூன்று திருமணங்கள் நடக்கின்றன என்றால் அந்தளவிற்கு அவருடைய பர்சனாலிட்டியில் ஒரு எனர்ஜி இருந்திருக்கின்றது. மற்றும் அவருடைய பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் உண்மை இருந்திருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தன்னுடைய அறிவில்லாத செயல்பாட்டினால் வந்த ஏமாற்றத்திலிருந்து காலின்ஸ் சுலபமாக தப்பித்துக் கொள்கிறான். அதாவது தன் கவனத்தை சார்லட்டின் பக்கம் திசை திருப்பி, அவளுக்கு proposal கொடுத்து மானத்தைக் காப்பாற்றிக் கொள்கிறான். தன்னை மணக்க விரும்பவில்லை என்று சொன்ன லிசியை தொடர்ந்து வற்புறுத்தாமல் இருக்குமளவிற்காவது அவனுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது. அவன் சற்று சிந்தித்- திருந்தால் மேரி தனக்கு ஏற்றவள் என்று கண்டுபிடித்திருக்கலாம். திருமதி. பென்னட் தனக்கு ஆதரவாக இருந்ததால் அவரின் ஆதரவை வைத்துக் கொண்டு மேரிக்கு proposal கொடுத்து பென்னட் குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அறிவில்லாமல் லிசிக்கு proposal கொடுத்தது தான் செய்த தவறு என்று அவன் ஏற்றுக் கொள்கிறான். இப்படிச் செய்த தவற்றை அவன் உணர்வதால் உடனே வாழ்க்கை அவனுக்கு சார்லட்டை பரிசாக அளித்துப் பாராட்டுகிறது.

இப்போது டார்சிக்கு வருவோம். லிசிக்கு அவன் proposal கொடுத்த விதம் அவளிடமிருந்து அவனை விலகிப் போகச் சென்றாலும் கதையில் வருகின்ற எதிர்பாராத திருப்பங்களின் விளைவாக அதே லிசி அவனை மீண்டும் proposal கொடுக்கச் சொல்லி அழைக்கிறாள். தான் திருமணம் செய்து கொள்ளக்கூடிய கடைசி ஆள் இவனாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிய அவள் தனக்குத் தெரிந்த மிகச்சிறந்த gentleman இவன்தான் என்று முடிவை மாற்றிப் பேசுமளவிற்கு அவன் தன்னைத் திருத்திக் கொள்கிறான். லிசி தன்னை மீண்டும் வரவேற்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற அளவிற்கு அவளோடு இருந்த உறவைக் கெடுத்துக் கொண்டவன் அவனைத் தேடி அவளே தன் வீட்டிற்கு வருமளவிற்கு டார்சி தன்னைத் தானே திருத்திக் கொள்கிறான். உணர்ச்சிவயப்பட்டு செயல்படுகின்றவர்கள் தான் என்ன தவறு செய்தோம் என்பதை உணர்ந்து திருந்தினார்கள் என்றால் இந்த தவறுகளினால் வரும் நஷ்டம் மற்றும் சிரமங்களிலிருந்து அவர்கள் தன்னை காப்பாற்றி கொண்டு தான் அடைய விரும்பிய நல்ல பலன்களை அடையலாம் என்பதற்கு டார்சியின் வாழ்க்கையே நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இப்பொழுது லிசிக்கு வருவோம். எந்த reservationஉம் இல்லாமல் அவள் விக்காமை ஏற்றுக் கொண்டது அவள் செய்த தவறுதான். கரோலின் எச்சரிக்கை செய்த பிறகும்கூட அவள் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தன்னை விட்டுவிட்டு மிஸ். கிங் பக்கம் போய்விட்டான் என்று தெரிந்த பிறகும்கூட வசதி உள்ள பணக்கார பெண்ணை மணந்தால்தான் அவனுக்கு நல்லது என்பதால் அவன் செய்வது தவறில்லை என்று அவள் பேசினாள். இருந்தாலும் கடைசியில் டார்சி விக்காமின் உண்மையான சொரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பின்னர் அவன் மேல் உள்ள பிரியத்தைக் கைவிடுகிறாள். பிங்கிலி ஜேனை விட்டு விலகிச் சென்றதற்குக் காரணம் தன் குடும்பத்தாருடைய மட்டமான செயல்பாடுதான் என்பதையும் ஏற்கிறாள். அவள் சின்சியராகத் தன்னைத் திருத்திக் கொண்டதால் ஜேன் மற்றும் பிங்கிலியின் திருமணத்திற்குத் தடையாக இருந்த டார்சி தன் மனதை மாற்றிக் கொண்டு ஜேனுடன் பழகுவதற்கு மறுபடியும் சம்மதம் கொடுக்கிறான். தடைபட்ட அக்காவின் திருமணம் இப்போது கூடிவருவதால் டார்சி மேல் இருந்த அதிருப்தி லிசிக்கு போய்விடுகிறது. அதனால் மீண்டும் அவனது proposalஐ வரவேற்கிறாள்.

லிடியாவின் உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடு அவளை லண்டன் தெருக்களில் அனாதையாக விட்டிருக்கும். அவள் ஓடிப்போனதால் பென்னட் குடும்பத்தாருடைய மானமும், பெயரும் கெட்டுப்போயிருக்கும். ஆனால் தக்க சமயத்தில் டார்சி சமயோசிதமாக செயல்பட்டு லிடியாவை விக்காம் முறையாக திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமையை மாற்றி ஒரு பாஸிட்டிவ் முடிவைக் கொண்டு வருகிறான். இருந்தாலும் லிடியாவின் செயல்பாட்டால் குடும்பத்திற்கு வந்த ஆபத்து பெரிய ஆபத்துதான். லிசிக்கு கடிதம் வந்த சமயம் டார்சி அங்கு வந்திருக்காவிட்டால், அப்படியே வந்திருந்தாலும் இவள் ஒன்றுமே சொல்லாமல் கிளம்பியிருந்தாலும் விளைவுகள் விபரீதமாக இருந்திருக்கும்.

டார்சியும், லிசியும் பழகுவதை காதரீன் டீ பர்க் எதிர்த்திருந்தாலும் இறுதியில் டார்சியை லிசி திருமணம் செய்து கொண்ட பின்னர் காதரீன் டீ பர்க் லிசிக்குரிய மரியாதையை வழங்கி சமாதானம் செய்துகொள்வதாக கதையில் எழுதப்பட்டுள்ளது.

இந்த கதையில் வருகின்ற ஒரே ஒரு கதாபாத்திரம்தான் உணர்ச்சிவயப்பட்டு செயல்படுவதிலுள்ள ஆபத்தை உணர்ந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகத் தெரிகிறது. விக்காமுடன் ஓடிப் போக வேண்டுமென்று அவள் நினைத்ததென்னவோ உண்மைதான். ஆனால் கடைசியில் தான் இப்படி திட்டம் போட்டிருப்பதெல்லாம் தன் அண்ணனிடம் ஒளிவு மறைவில்லாமல் தெரிவித்து, அண்ணனால் தடுத்து நிறுத்தப்பட்டு, தனக்கு   வரவிருந்த ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாள். ஜார்ஜியானாவைப் போல் நாமும் உணர்ச்சிவயப்பட்டு செயல்பட விரும்பும்பொழுதெல்லாம் கடைசி நேரத்திலாவது அதன் ஆபத்தை உணர்ந்து நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அறிவுள்ள வகையில் செயல்பட்டோம் என்றால் வீண் பிரச்சனை மற்றும் சிரமங்களிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்.

முற்றும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம் கடந்த கால வலிமையை அறிந்தாலும், குறைகள் இன்றைய நிலையை அளித்தது என உணருவதில்லை. குறைகள் நம்மை அழித்தன. நம் தலை மீது கொடுமையைக் குவித்தன. அதுவே நம்மை இந்நிலைக்குக் கொண்டு வந்தது.
 
வறுமைக்கு வருத்தபடாத நிலை நன்றியறிதல்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அது போன்ற எதிர்காலப் பண்பு யாரென்று தெரியாமல் செயல்படுவதாகும். எந்தச் சரக்கு நம்மிடம் இருந்தால் நாம் யாரென வெளியில் தெரிய முடியாதோ, அதுவே பகவான், அன்னை யுகத்திற்குரிய சின்னம்.
 
இரகஸ்யமான விளம்பரம்.

******



book | by Dr. Radut