Skip to Content

13. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

சில சிறப்பம்சங்கள்

  • பகுதியான அத்தியாயங்கள் முழுமையாக எழுதப்பட்டுள்ளன.
  • மனம், வாழ்வு, காலம், இடம், ஜடம், ஆன்மா, சிந்தனை போன்ற கருத்துகள் உலகம் ஏற்றவை. ஆனால் இதுவரை அவற்றை எவரும் விளக்கிக் கூறியதில்லை, (definition) விளக்கமளித்ததில்லை. பகவான் அவற்றை விளக்குகிறார்.
  • அனந்தம், பிரம்மம், சிருஷ்டி, ஆனந்தம் ஆகியவற்றை மனத்தால் விளக்கியுள்ளனர். பகவான் அவற்றை மனத்தைக் கடந்த சத்தியஜீவியத்தால் புது விளக்கம் தருகிறார்.
  • மாயை என்பது இல்லாதது என நாம் அறிவோம். வேதம் மாயை என்ற சொல் சிருஷ்டிப்பது எனக் கூறுகிறது. பகவான் அந்த அடிப்படையில் மாயையை விளக்கி, அதனால் உலகம் அற்புதமானது எனக் கூறுகிறார்.
  • இறைவன் உலகை சிருஷ்டித்தான் என்பதை மாற்றி, இறைவன் தானே உலகமாக மாறினான் என்கிறார்.
  • கோப்பர்னிகஸ் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது எனக் கூறியது போல் தீமை, சிருஷ்டி, புனர்ஜென்மம், பிரம்மம், அனந்தம் போன்றவற்றிற்குப் புரட்சிகரமான விளக்கம் கூறுகிறார்.
  • ஜீவாத்மா மோட்சம் பெற்று பரமாத்மாவில் கரைகிறது என்பது மரபு கூறும் தத்துவம். ஜீவாத்மா, அகந்தையை இழந்து, பிரபஞ்ச ஆத்மாவாகி, இயற்கையைக் கடந்து பிரம்ம ஆத்மாவாகி சிருஷ்டியை ஈஸ்வர-சக்தியாக நிர்வாகம் செய்கிறது என பகவான் கூறுகிறார்.
  • ஞானம் வேதத்தால் சித்தியெனவும், அஞ்ஞானம் அசித்தி எனவும் கூறப்படுகிறது. உபநிஷதம் ஞானம், அஞ்ஞானத்தை வித்யா, அவித்யா எனக் கூறுகிறது. இவை பகுதியான விளக்கங்கள்.

    அடிப்படை கருத்துகளைப் பகுதியாக விளக்குவதால், இருள், தீமை, துன்பம், வலி ஆகியவற்றிற்கு இத்தத்துவங்களால் பதிலிருக்க முடியவில்லை.

    அஞ்ஞானம் என்பது ஞானத்தின் மறுஉருவம், சிறுஉருவம் என பகவான் கூறுவதால் இருள், தீமை, துன்பம், வலி, நோய் அழிய ஸ்ரீ அரவிந்தம் வழி கூற முடிகிறது.

  • இதுவரை எழுந்த தத்துவங்கள் இறைவன் உலகைப் படைத்ததைக் கூறின. முதன்முறையாக பகவான் மனிதன் இறைவனை நோக்கி உயர்ந்தெழும் முறையைக் கூறுகிறார்.

    இது பரிணாமம் எனப்படும்.

    வேதாந்தம் இக்கருத்தைக் கூறியது, இடைவெளியில் நிறுத்திவிட்டது.

    இதன் அடிப்படை மனிதன் இறைவன்.

    அதன் ஆரம்பம் இறைவன் உலகமாவது.

    இதன் சிறப்பான அம்சம் உலகில் தீமையில்லை.

    மனித முடிவுகட்குட்பட்டது உலக இயக்கம் என்பது அடுத்த முக்கிய கருத்து.

    இக்கூற்று விஞ்ஞானத்தின் அடிப்படையை ரத்து செய்கிறது.

    ஜடம் மனத்தைவிட உயர்ந்தது என்பது மாறி, மனம் ஜடத்தைவிட உயர்ந்தது என்பது தெளிவாகிறது.

    இதனால் அத்துவைதம், துவைதம், விசிஷ்டாத்தைவதம் ஆகியவற்றிற்குள்ள பேதம் அழிந்து, பிணக்கற்ற இந்து தத்துவம் உருவாகிறது.

    கர்மம் அழிந்து மனிதன் காலத்தின் பிடியினின்று விடுபடுகிறான்.

    புனர்ஜென்மமழிந்து வாழ்வு அமரத்துவம் பெறுகிறது.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமயோசித புத்தி, பவித்திரமான சத்தியமாகவோ, இருண்ட பொய்யின் உருவகமாகவோ இருக்க முடியும்.
 
சமயோசிதம் மெய்யையும் பொய்யையும் ஏற்கும்.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பொய் தொடர்ந்து உன்னை நாடினால், அது உன்னுள் உள்ள பொய்யின் பிரதிபலிப்பாகும். அல்லது உயர்ந்த சத்தியத்திற்கு நீ உரியவன் ஆவாய்.
 
உள்ளத்தின் பிரதிபலிப்பு தொடர்ந்து நாடும்.
 
******



book | by Dr. Radut