Skip to Content

1. நிதானம்

நிதானம்

இந்தியாவில் தியான மையம் நடத்துபவர் மகன் அமெரிக்காவில் IT கம்பனியில் வேலை செய்கிறார். அவரும் அவர் மனைவியும் அன்பர்கள். சுமார் 6 மாதமுன் ஏதாவது discipline வேண்டும் என்றார். மணிக்கொரு முறை சமர்ப்பணத்தை ஏற்றார். அவர் வீட்டுக்கு வருபவர் அனைவரும் சுத்தத்தைப் பாராட்டுவர். அவர் சேல்ஸ் வருஷத்திற்கு $ 5 மில்லியன். ஐந்தை அடுத்த வருஷம் பதினெட்டாக மாற்றினார். நிதானமாக வேலை செய்பவர். எல்லா சேல்ஸ் ஆபீசர் போல் அவர் மனத்தில் சேல்ஸ் இருக்காது. அன்னையிருப்பார். அன்னைக்கு அடுத்தபடி நிதானமிருக்கும். வேலையை வேலையாக செய்வார். முடியும் நேரம் சேவையாக செய்வார். $ 5 மில்லியன் $ 8 மில்லியனை எட்டியது. எட்ட வேண்டியது $ 18 மில்லியன். நாள் நெருங்குகிறது. அவசரம் விலக்கப்பட வேண்டும். நாமே போய் வேண்டுவது தவிர்க்கப்பட வேண்டும் அல்லது குறைய வேண்டும். கடமை காரியத்தைப் பூர்த்தி செய்யும் என்பது நம்பிக்கை. இலட்சிய அன்பராக இருக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை அன்னை வழியே செல்வது நோக்கம். வாரம் ஒரு முறை இவர் ஒரு வாடிக்கைக்காரரை சந்திப்பார். அவர் இவரை "வியாபாரம் எப்படியிருக்கிறது? இந்த ஆண்டு சேல்ஸில் குறையுண்டா?" எனக் கேட்டார். "10 மில்லியன் பாக்கி" என்றார். "நான் அந்த 10 மில்லியனை பூர்த்தி செய்கிறேன்" என்று பதில் வந்தது.

*******



book | by Dr. Radut