Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.150 Acute to capture truth for outward use

சத்தியத்தைப்பற்றி புறத்தில் பயன்படுத்தி

  • அதன் ஞானம் உடலின் கருவியாகும்
  • தான் சிறைப்பட்ட வீட்டின் சிறு கடமைகளில் தன்னை இழந்து
  • மாறாத மையங்களைச் சுற்றி சுற்றி வலம் வந்து
  • ஆசையும், ஆர்வத்தினாலுமான அதே வட்டத்தை வலம் வந்து
  • அச்சிறையின் தலைவனென தன்னை நம்பியது
  • விவேகத்திற்கன்றி வேலைக்காக வந்தாலும்
  • எண்ணமே அதன் சிகரம், அதன் வாய்க்கால் விளிம்பு
  • புற உலகின் பிம்பத்தை அது கண்டது
  • மேற்புறத்தைக் கண்டது வேறெதையும் காணவில்லை
  • குழம்பிய சிக்கலான சொந்த ஆராய்ச்சியை மெதுவாக நடத்தியது
  • மனத்தின் தெளிவு வெட்டி எடுக்கப்பட்டது, துல்லியமாகாது அது
  • கல்லாக இறுகிய அறியாமையைச் சூழ்ந்த மின்னல்
  • குறுகிய சிந்தனையின் கட்டுப்பட்ட சிறு தலைமை
  • ஆத்மாவில் இணைந்து, எளிமையான உற்சாகம் பெற்று
  • பரிச்சியமான சிறு உலகைப் பாசமாகப் பற்றி
  • ஏராளமான ஆர்வமான நாடகங்களிடையே
  • மாறும் நடிகர்கள், இலட்சக்கணக்கான முகமூடிகள்
  • வாழ்வு சப்பென இருக்கும் சாரமற்ற நாடகம்
  • பரந்த ஆன்மீகக் கண்ணோட்டமின்றி
  • அறிய முடியாத ஆனந்தம் வெள்ளமாக வேகமாகப் புகவில்லை
  • பரந்த விடுதலை பொன்னான இடைவெளியை ஏற்படுத்தவில்லை
  • மனித வாழ்வுபோல் தோன்றும் இச்சில்லறை நிலை
  • மாறாத அச்சில் வார்க்கப்பட்ட பிரம்மத்துடன் பிணைந்து
  • க்ஷணத்தின் சலனம் காலத்திற்கும் தொடரும்
  • இருண்ட இடைவெளியைப் பாலமாக இணைக்கும் வாழ்வு
  • மங்கிய ஒளி பொருந்திய மூடுபனி சூழ்ந்த கட்டடம்
  • சூன்யத்தினின்றெழுந்து பார்வையில் தென்பட்டது
  • ஆத்ம சூன்யத்துள் அதிவேகமாக நுழைந்தது
  • பெரு இருளில் பிறந்த சிறு ஒளி
  • எப்படி வந்தோம், எங்கு போகிறோம் என அறியாத வாழ்வு
  • அதைச் சூழ்ந்துள்ள இருண்ட பார்வை

********

ஜீவிய மணி
 
புற வாழ்வு புலன் வாழ்வு.
அக வாழ்வு மன வாழ்வு.
 

*******



book | by Dr. Radut