Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

சக்தி இறங்கி வந்து ஆசிரமச் சூழலை வலுப்படுத்தியது. சக்தியின் சந்நிதானம் முடியாததை முடியும் என க்ஷணத்தில் மாற்றியது.

Descent இறைவன் இறங்கி வருவது என்பது ஆன்மிகத்தில், அதுவும் ஸ்ரீ அரவிந்த ஆன்மிகத்தில் அன்பர்கள் அடிக்கடி கேள்விப்படுவது. அதை அனுபவித்தவர் மேற்கூறிய கருத்தை உணர்வால் அறிவார். அலெக்ஸாண்டர் டூமாஸ் உலகப் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு கதாசிரியர். 400-க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். அவர் தகப்பனார் நெப்போலியன் இராணுவத்தில் தளபதியாக இருந்து அவனுடன் முரண்பட்டு விலகியவர். இவர் ஒரு நீக்ரோ வேலைக்காரிக்கும், பிரபுவுக்கும் பிறந்தவர். குதிரை மீது உட்கார்ந்து இருகால்களாலும் குதிரையை அணைத்து மேலே தொங்கும் கயிற்றை பிடித்துக் கொண்டு உயரும் பொழுது அவர் கால்களிடையேயுள்ள குதிரையுடன் மேலெழும்புவார் என்பது அவரைப் பற்றிய செய்தி. நம் நாட்டில் வால்மீகி, வியாசர் போன்றவர்கள் பெரும் இலக்கியங்களை எழுதியுள்ளனர். பிரான்ஸில் ஆன்மிகம் தெரியாது. அது கத்தோலிக்க நாடு. ஐரோப்பாவில் கிழக்கே ரஷ்ய சாம்ராஜ்யம் உண்டு. மேற்கே நாடு என்ற பிரபலத்துடன் இருந்தது பிரான்ஸ் மட்டுமே. Louis XIV 14-ஆம் லூயி காலத்தில் “நானே பிரான்ஸ்’’ என அரசன் தன்னை வர்ணித்தான். அன்று சர்க்கார் அதிகாரம் பூரணமான நேரம், அரசனின் சொல்லே சட்டம். மேலே சொன்ன கதாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய கதைகளில் The Three Musketeers மூவீரர்கள் என்பது பிரபலமான கதை. அரசன் 21-ஆம் வயதில் புதியதாக அதிகாரம் பெற்ற நேரம். அவன் தாயார் அதுவரை அவன் சார்பாக நாட்டை ஆண்டார். ராணிக்கு 12 பணிப் பெண்களுண்டு. அப்பெண்கள் அரச குடும்பத்துடன் நெருங்கிய குடும்பப் பெண்களாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். பிரான்ஸின் தென்பகுதியில் அப்படி ஒரு குடும்பத்தில் அழகியெனப் பெயரெடுத்த Louisa லூயிஸா என்பவள் அரசனுடைய தம்பியின் மனைவிக்குரிய 12 பணிப்பெண்களில் ஒருத்தி. சிறுவயதில் காலில் விழுந்த சுளுக்கை எடுக்க முடியாததால் இவள் சற்று தாங்கி நடப்பாள். அரசன் திருமணமானவன், இந்த Louisa என்ற பெண்ணை ஒரு பிரபுவின் மகன் இளவயதிலிருந்து உயிராகக் காதலிக்கிறான். பெண் தன் முழுச்சம்மதம் இன்னும் தெரிவிக்கவில்லை. அரசனுக்கு இப்பெண்மீது அபிப்பிராயம் ஏற்படும் போல இருந்ததால், ராணி அதைத் தடுக்க பல முறைகளைக் கையாண்டாள். இந்த நேரம் அவ்விளம் காதலன் இலண்டனுக்குப் போயிருக்கிறான். அரச குடும்பங்களில் ராஜ்ய பாரம் பெரியது. அது தலையெடுத்தால் அனைவரும் அனைத்தையும் மறந்து விடுவார்கள். மற்ற நேரங்களில் மற்ற பல விஷயங்கள் தலையெடுக்கும். கதையில் அதுபோன்ற நேரம். அரசன் பரிவாரத்துடன் காட்டினுள் picnic உல்லாசமாகக் காலம் கழிக்கும் நேரம். 4 பெண்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது பல ஆண்களை விமர்சனம் செய்கிறார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் தன்னை மறந்த Louisa “அரசன் சூரியனைப் போல் ஜொலிக்கிறான்’’ எனக் கூறுகிறாள். இது அரசிக்கும், அரசனுடைய தாயாருக்கும் செய்தியாகப் போய்ச் சேர்கிறது. அதற்கு ஒரு நாள் முன் அரசன் இப்பெண்ணின் அறைக்குப் போய் அவளைப் பாராட்டிப் புகழ்ந்து பேசியபொழுது அரசனுக்கு இதுவரைதன்னையறியாமல் உருவான அபிப்பிராயம் மேலெழுகிறது. அரசி, அரசனின் தாயார், அரசனின் தம்பி மனைவி அனைவரும் சேர்ந்து பெண்ணைக் கூப்பிட்டு அனுப்புகிறார்கள். “எப்படி அரசன் அழகை நீ ரசிக்கலாம், ரசித்துப் பேசலாம்” என 4 பேரும் கேள்வி மேல் கேள்வி கேட்க பெண்ணின் உடல் நடுங்குகிறது. தன்னறைக்குப் போய் தவிக்கிறாள். அரசனின் அபிப்பிராயம் ஆழ்ந்த காதல் என அறிந்த பெண் தன்னை மறந்து மகிழும் பொழுதே பயத்தால் சூழப்படுகிறாள். அரசிகள் ஆர்ப்பாட்டம் அவளை அரசனை மறக்கச் செய்கிறது. ஒரு கான்வென்டிற்கு இரவில் 2 மணிக்கு எழுந்து போகிறாள். ரோட்டில் சில போக்கிரிகள் அவளை வழி மறித்து வம்பு செய்கின்றனர். அந்த நேரம் தத்தானியன் என்ற வீரன் அங்கு வருகிறான். அதுவே அவளுக்கு Descent இறைவன் அவள் வாழ்வில் இறங்கி வருவதாகும். அவளைக் கான்வென்டினுள் அனுப்பிவிட்டு வீரன் திரும்புகிறான். மறுநாள் காலையில் எழுந்தவுடன் அரசன் பெண்ணை உருகி நினைக்கிறான். அவளைக் காணவில்லையெனக் கேள்விப்பட்டுக் கொந்தளிக்கிறான். உடனிருந்த வீரன் அவள் கான்வென்டிலிருப்பதாகக் கூற அரசன் தானே போய் அவளை அழைத்து வந்து ஆசை நாயகியாக்கி ஒரு பெரு மாளிகை கட்டி - இன்று உலகப் பிரசித்திபெற்றதானது - அவளை அங்கு வைக்கிறான். Descent அதைச் செய்யும்.

**********

ஜீவிய மணி

இளைஞர்களே எதிர்காலம். எல்லாச் சிறப்புக்கும் உரியவர் இளைஞர்கள். வேலையில்லை என்பதில்லை. எதிர்காலம் ஏற்றமிகுந்ததாக இருக்கும். அதை ஏற்று மகிழும் மனநிலை என்ன? என்ன செய்தால் எட்டாத உயர்வை அனைவரும் எட்டலாம்? பணம் முக்கியம். அதைவிட முக்கியமானதும் உண்டு. அது எதிர்காலச் சிறப்பு, மனநிம்மதி. வளம் பெருகும் நேரம் நிம்மதியழியும் நேரம் என்பது அனுபவம். பொருள் வளம் பெருகும் பொழுது மனவளமும் பெருகும் மார்க்கமுண்டா? ஒருவர் உயர்வதால் அனைவரும் உயர வழியுண்டா? உலகத்து உயர்வை எல்லாம் நாம் பெற்று திளைத்து உலகம் உயர்வு பெறும் உதாரணமாக வாழும் வகையுண்டா? இலக்கியம் வழி காட்டுமா? அரசியல் கொள்கை வகுக்குமா? ஆன்மிகம் சிறக்க வழியுண்டா? ஒன்று பத்தாகப் பெருகுமா? ஒன்று ஆயிரமாகச் சிலர் வாழ்வில் பெருகுவது போல் அனைவர் வாழ்விலும் பெருக வழியுண்டா? கொடுமை முழுவதும் அழியுமா? தாழ்த்தப்பட்டோர் என்ற சொல் அகராதியை விட்டுப் போகுமா? ஏழ்மை என்ற நிலை எந்தக் காலத்திலும் இனியில்லை என்று ஏற்படுமா? ஏழ்மையை, வறுமையை ஒழிப்பது போய் மகிழ்ச்சியை வளர்க்க மனம் வழி தேடுமா?

நாம் எது நினைத்தாலும், அது பன்மடங்குக் கூடிவரும் காலம் எதிர்காலம்.

***********



book | by Dr. Radut