Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

 

P.142 Existence half-real and half-dream

கனவாகவும் வாழ்வாகவும் கனிந்து எழும் வாழ்வு

  • வாழும் நம்பிக்கையற்ற ஒரு வாழ்வங்கிருந்தது
  • சுவடறியாதபடி அழிந்த ஜீவன்கள் பிறந்தன
  • உருவமற்ற நாடகத்தின் உறுப்புகளான நிகழ்ச்சிகள்
  • குருட்டு ஜென்மம் செய்த செயல்கள் நிறைந்தவை
  • தன் பாதையைச் செப்பனிடும் சக்தியின் தேடல்
  • அன்பும், வலியும், மகிழ்வும் கொண்ட திட்டங்கள் எழுந்தன
  • வாழ்வின் போக்கை விளக்கும் அடையாளச் சின்ன ரூபங்கள்
  • பூச்சியின் மகிழ்ச்சி தவழ்ந்து ஊர்ந்து பறந்தது
  • ஒளிமயமான இயற்கையின் மேலெழுந்த புல்லரிப்புகள்
  • பூதத்தின் பூரிப்பு, மலைப்பாம்பின் வேதனை
  • சேற்றிலும் சகதியிலும் ஊர்ந்து வந்து சூரியனை ருசித்தது
  • நடுங்கும் நிலத்தை ஆட்டி வைக்கும் ஆயுத வலிமை
  • குட்டை அறிவுடைய பெருவலி பெற்ற ஜந்துக்கள்
  • சிறுமையின் கூட்டங்கள் அவர்கள் சிறுவாழ்வைத் திணித்தன
  • குள்ளர்கள் கூட்டமான மனித குலம்
  • இயற்கை தன் முடிவான அனுபவத்தை ஆரம்பித்தது
  • அவள் திட்டத்தின் கிறுக்கு பெற்ற திறமையின் மகுடம்
  • விழிப்பற்ற குருட்டு ஏற்றத்தின் ஒளிபொருந்திய பலன்
  • உன்னத உயர்வு தாழ்விடையே அமைந்த படிகள்
  • அணு உருவங்களினின்று பெருமலையளவு வரை
  • உடலையும் ஆத்மாவையும் சூட்சுமமாகத் தராசில் நிறுத்தி
  • அறிவுள்ள சிறுமையின் அழகுற அமைந்த அணி
  • காலம் சிதறிய மணித்துளிகள் சூழப்பெற்று
  • விலங்கு ஆத்மாவின் இராஜ்ஜியமாக எழுந்தது
  • செயலே அனைத்தும், அறிவு ஜனிக்க நாளாகும்
  • இதயம் காணாத ஊமைக் கட்டுப்பாட்டை ஏற்றது
  • அறியாமையின் ஒளியால் செயல்படும் திறன்
  • விலங்கில் அவன் பரிசோதனை ஆரம்பித்தது
  • உலகத்தை விழிப்பானவரால் உய்விக்கும் அவள் திட்டங்கள் குழுமி
  • வெளிப்படையாக வேகம் பெற்றவர்
  • மேலெழுந்தவாரியாகத் தொடும் பதிலளித்தவர்
  • வாழ்க்கை ஓட்டத்தை நடத்திய ஆணியின் குத்தல்
  • தன்னுள்ளேயுள்ள ஆத்மாவையறிய முடியாத உடல்
  • வாழ்ந்து, ஏங்கி, மகிழ்ந்து, நெகிழ்ந்து, கவலைப்பட்டு
  • உலகை சந்திக்கும் உயரிய மனம்

 

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எண்ணமழிந்தால் உணர்வுமயமாகும்.
சமர்ப்பணம் சர்வ அர்ப்பணம்.

*******



book | by Dr. Radut