Skip to Content

14. தலைகீழான அனுபவம்

தலைகீழான அனுபவம்

       கடையில் நெருக்கடி வந்து பல வழியை நாடி, முடிவில் அன்னை காப்பாற்றியபொழுது வியாபாரி அறிந்தவை இரண்டு.

1. அன்னை சக்தி வாய்ந்த தெய்வம்.

2. அன்னையை அனுப்பினால் நடக்காதவை நடக்கும்.

      வியாபாரத்தில் நெருக்கடி தீர்ந்தது. இனி நிம்மதி. இவர் திருமணமாகியவர். 15, 18 வருஷமாகிறது. குழந்தை வேண்டாம் என்ற முடிவுள்ள தம்பதியர். அவர் மனைவிக்கு குதிரை சவாரி பிரியம். கிராமத்தில் வீடுண்டு. குதிரையுண்டு. மனைவிக்காக கணவனும் அவற்றை ஏற்பார். கானடா நாட்டு மக்கள். அவர் மனைவிக்கு எரு வாரிக் கொட்டுவதில் அலாதி பிரியம். மனைவிக்காக கணவனும் செய்வார். இந்த சமயங்களில் மனைவி சற்று அதிகமாக அதிகாரம் செய்வார். கடையின் அனுபவம் அவருக்கு ஓர் எண்ணம் கொடுத்தது. ஏன் மனைவிக்கு அன்னையை அனுப்பக் கூடாது என்பது அந்த எண்ணம். அனுப்பினார், மனைவி பொறுக்கமுடியாத அளவு அதிகாரம் செய்ய ஆரம்பித்தார். புரியவில்லை. அன்னை போனால் நல்லது தானே நடக்கும். ஏன் இந்தத் தலைகீழ் அனுபவம். இதைக் கற்பித்த நண்பரை விசாரித்தார். நண்பர் பரிகாரம் கூறினார். மனைவிக்கு அன்னையை அனுப்புவதற்கு பதிலாக சாந்தியை அனுப்பச் சொன்னார். பிரச்சினை தீர்ந்தது. மனைவி முன்பை விட அமைதியாக, அடக்கமாகிவிட்டார். பிரச்சினை தீர்ந்தாலும் theory தத்துவம் தெரிந்து கொள்ள அன்பர் ஆசைப்பட்டார். தத்துவம் எளியது, பின்பற்றுவது கடினம். பிரச்சினை எளிமையில் தீரும்.

  • அன்னையை அனுப்பினால் அன்னை சக்தி மனைவிக்குப் போகிறது. அவர் அதிகாரம் வளர்கிறது.

  • அன்னையை அனுப்புவது எளிது. மனைவியை சமர்ப்பணம் செய்வது கடினம். சமர்ப்பணத்திற்கு நல்ல பலனிருக்கும்.

  • அமைதி அகங்காரத்தை அமைதிப்படுத்தும்.

  • சமர்ப்பணத்தில் அன்னை முடிவை மனம் ஏற்க வேண்டும். நாம் எதிர்பார்க்கக் கூடாது. அது கடினம்.

    ****

 



book | by Dr. Radut