Skip to Content

08.பகவானுடைய இதர நூல்கள்

பகவானுடைய இதர நூல்கள்”

கூ”வின் மருத்துவம்

    Dr.Coue's method of medicine

       Dr.Coue's என்பவர் வியாதியைக் குணப்படுத்த மனஉறுதி, நம்பிக்கை, auto-suggestion நமக்கு நாமே சொல்லிக் கொள்வது போன்றவற்றைப் பயன்படுத்துகிறார். மாலை நேர உரையாடல்களில் ஒரு நாள் இந்த விஷயம் பேசப்பட்டது. இதைப் பற்றி பகவான் பேசுகிறார். யோகத்திற்கு இம்முறை பயன்படுமா எனவும் கேட்கிறார்கள். இதைப் பற்றி பகவான் கூறியவை, அன்றைய உரையாடலில் எழுந்த பிரச்சினைகள் :

  • இந்தியர் குடும்பங்களில் யாராவது ஒருவர் உடல்நலம் குன்றிப் படுத்துவிடுவது வழக்கம், வியாதியை நாம் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்?
  • வியாதியைக் குணப்படுத்த டாக்டர் கூ முறையைப் பயன்படுத்த ஆட்சேபனை நமக்குண்டா?
  • யோகி வேலை செய்யலாமா?
  • கூ வின் முறையைப் பயன்படுத்தி வியாதியைக் குணப்படுத்துவதில் எந்த ஆட்சேபணையுமில்லை.
  • இம்முறை auto-suggestion நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் முறை. அம்முறையால் சத்திய ஜீவியத்தை எட்ட முடியாது. அது எளிதன்று.
  • இந்த யோகத்திற்கு - எந்த யோகத்திற்கும் - இம்முறை பயன்படாது.
  • நான் தூய்மையானவன் என்று மனம் சொல்லிக்கொண்டே இருப்பதால் நாம் தூய்மையாக முடியாது.
  • தூய்மை என்பது ஓர் உளநிலை.
  • எங்கு, தூய்மை குறைந்துள்ளது எனப் பார்க்க வேண்டும்.
  • தெய்வ சக்தியை அதனுள் அழைக்க வேண்டும்.
  • பிறகு தூய்மைக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.
  • கூ’வின் முறையில் will உறுதிக்கும் imagination கற்பனைக்கும் வித்தியாசம் முக்கியம்.
  • நாம் எதை உறுதி என்கிறோமோ, கூ அதைச் சொல்லவில்லை.
  • மனம் செயல்படுவதை அவர் உறுதி என்று கூறவில்லை.
  • தம் ஆசைகளைப் பூர்த்தி செய்ய உணர்வு உந்துவதும் உறுதியாகாது.
  • உறுதி என்பது அமைதியானது.
  • அமைதி மேல் உள்ள சக்தியை அழைக்கும்.
  • இவையன்றி இயற்கையை மீறி ஆளும் உறுதியுண்டு.
  • வேறு ஒரு வகை உறுதியொன்றுண்டு. அது ஆர்வம். பிரார்த்தனை போன்றது. மேலேயுள்ள சக்தியை அழைக்கவல்லது.
  • உறுதிகளில் உயர்ந்தது இறைவனுடைய உறுதி.
  • அது தானே automatic செயல்படும்.
  • Faith நம்பிக்கை எல்லா இடங்களிலும் தேவை. கூவின் மருத்துவத்திற்கும் தேவை.
  • எந்த முறையும் யோகத்திற்கு ஆரம்பத்தில் பயன்படும். அதுபோல் கூ வின் முறையும் பயன்படும்.
  • எந்த முறையும் - ஆசனம், பிராணாயமம், ஜடம், அறிவு, கட்டுப்பாடு, உறுதி, auto-suggestion - கடைசிவரை இந்த யோகத்திற்குப் பயன்படாது.
  • கூ’வின் முறை அனைவருக்கும் பயன்படுவதில்லை.
  • கூ’வின் முறை நம் ஆழ்மனத்தை மயக்கமாக்கும் முறை hypnotising the unconscious.
  • யோகம் தன்னையறியும் முறை becoming conscious. அவை நேர் எதிரானவை.
  • யோகத்திற்கு வியாதியைக் குணப்படுத்தவது இலட்சியமில்லை.
  • நம் ஜீவியத்தைத் திருவுருமாற்றுவதே இலட்சியம்.
  • பலருடைய ஆழ்மனம் மயக்கத்தை மறுப்பதால் அவர்களிடம் கூவின் முறை பலிப்பதில்லை.
  • வேலை செய்வதும் யோகம் செய்வதும் முரணானவையில்லை.

****
 



book | by Dr. Radut