Skip to Content

07. அஜெண்டா

அஜெண்டா

P.300 Mother too takes medicines (Vol. V, 1964)

அன்னையும் மருந்து சாப்பிடுகிறார்கள்

  • எந்தச் சட்டமும் எல்லா நேரமும் செல்லும் எனக் கூற முடியாது.
  • மருந்தை நம்பக் கூடாது என்ற அன்னை மருந்து சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
  • சாப்பாடு அவசியம் என்றால் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று அர்த்தமல்ல. அது முடியாது, கூடாது. சாப்பாடு நேரத்திற்குத் தகுந்தாற்போல் மாறும். சாப்பாடும் அவசியம், தண்ணீரும் அவசியம்.
  • எதற்கும் அளவுண்டு, நேரமுண்டு, காலம் உண்டு, சட்டம் உண்டு, விலக்குண்டு. ஒரே மாதிரியாகச் செயல்பட நினைப்பது அறிவுக்கு அனுபவமில்லை எனப் பொருள்.
  • ஒரு ஐரோப்பிய பெண் ஆசிரமம் வந்தபின் மருந்து சாப்பிட மறுத்த பொழுது, அன்னை வற்புறுத்திச் சாப்பிடச் சொன்னார்.
  • சட்டம் எதுவானாலும் நம் மனநிலைக்கு உகந்தவாறு அதை சட்டத்தின் திட்ட எல்லைக்குள் மாற்றி அமைப்பது முறை. அதை மறுப்பது சட்டத்தின் பெரும் பயனைத் தவறவிடுவதாகும்.
  • தியானம் உயர்ந்தது. தபஸ்விகள் நாள்கணக்காகத் தியானத்தில் தங்களை இழந்தனர். பூரணயோகத்தில் தியானத்தைவிட சமர்ப்பணம் உயர்ந்தது. தானே நம்மைத் தேடிவரும் தியானம் நல்லது.
  • நாமே முயன்று தியானம் வருகிறது என்பதால் வலிந்து மணிக்கணக்காகத் தியானத்தை மேற்கொண்டால் படபடப்பு வரும். தானே வரும் தியானம் தானே கலையும்.
  • அகங்காரம் கூடாது. அறியாமை பாதிக்கும். அறியாமையின் வகைகள் பல.
    • பொருத்தமில்லாமல் பிறரைப் பார்த்து அவர் செய்வது போல் நாமும் செய்வது.
    • பகுதியான சட்டத்தை முழுமையாகப் பின்பற்றி விரயமாவது.
    • முழுமையான சட்டத்தைப் பகுதியாகப் பின்பற்றி பலனை இழப்பது.
    • முடியும் என்பதால் செய்துவிட்டுப் பலனைக் கண்டு அதிர்வது.
    • எவரும் கேட்கவில்லை என்பதால் அளவுக்கு மீறிச் செயல்படுவது.
    • தவற்றுக்குத் தண்டனை கொடுக்கவில்லையென்பதால் தொடர்ந்து செய்து அனைத்தையும் இழப்பது.
  • நேரு பெரும் தலைவர், உலகத் தலைவர். 1936இல் அவர் சுயசரிதை இங்கிலாந்தில் அதிகபட்சம் விற்றது. தன் மகளுக்கு M.P. பதவியும் தராதவர். பெரும் தியாகி. மகாத்மாவின் பிரதம சீடர்.
  • வாழ்நாள் முழுவதும் மகாத்மாவையும் அவர் அகிம்சையையும் பின்பற்றிப் பெருமைப்பட்டவர். சர்வதேச அரசியலில் அகிம்சையைப் பின்பற்ற வல்லரசுகளுடன் கூட்டுச் சேராத இயக்கத்தை ஆரம்பித்து உலகப் பாராட்டைப் பெற்றார்.
  • சீனாக்காரர்களை அக்கொள்கை நம்ப வைத்தது. சீனர்கள் துரோகம் செய்தார்கள். 1962இல் சீனா தாக்கியது. 1964இல் நேரு காலமானார்.
  • செய்வது சரியானாலும், நோக்கம் உயர்ந்ததானாலும், இடம், பொருள், ஏவல் அறிந்து நடக்க அறிவு போதாது, அனுபவமும் போதாது, அனுபவ அறிவு தேவை.
  • தவறு எனப் புரிந்த பிறகும் மாற மறுப்பவரும் உண்டு.
  • அன்னையும் மருந்து சாப்பிடுகிறார் என்பது இந்தச் சட்ட நுணுக்கங்களை எடுத்துக் காட்டுகிறது.
  • இதுபோன்ற விஷயங்களை அன்னை வலியுறுத்துகிறார்.

*******

ஜீவிய மணி
 
தவறாத பிரார்த்தனை தவறினால், பெரிய பலன் தவறாது வரும் தகுதி வரும்.
தான் செய்தால் நியாயம்; பிறர் செய்வது அநியாயம் என்பது அகந்தையின் ஆணவ மந்திரம்.
பிறர் பெருமையை, திறமையை ஏற்க முடியாத மனம் பொறாமைக்குரியது.
சத்திய ஜீவியம் வாழ்வில் அதிர்ஷ்டம்.
சர்வ ஜீவராசிகளுக்கும் ஆத்மா உண்டு. அதுவே அவற்றின் ஜீவன்.
ரிஷிக்கு நிஷ்டையில் சித்தித்த பிரம்மம் அன்பருக்கு The Life Divineபடிப்பால் சித்திக்கிறது.
 
 
*******



book | by Dr. Radut