Skip to Content

10. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(25) (Occult Secret) சூட்சும இரகஸ்யம் – கீழே போய் மேலே எழுதல்

நாம் மேல்மனத்திலிருக்கிறோம். இதைக் கடந்து உள்மனம் மூலம் அடிமனம் சென்றடைந்தால், அங்கிருந்து சத்தியஜீவியத்திற்கு உயர்ந்து போகலாம்என்ற யோக இரகஸ்யத்தை பகவான் 10 ஆண்டுகள் முயன்று கண்டார்.

  • நமது பிரார்த்தனைகள் மேல்மனத்திலிருந்து எழுந்து பலன் தருகின்றன. கேட்டது கிடைக்கிறது.
  • சில சமயம் 2ணீ கோடி கம்பனிக்கு 16,000 கோடி கம்பனி பார்ட்னராக வருகிறது.
    • ஓர் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்தால் சீறுநீரகக் கல் கரைந்து மறைகிறது.
    • 20 இலட்ச சம்பனிக்கு ஒரே சமயம் 40 இலட்சக் கமிஷன் சொல்ப நாளைக்குள் வருகிறது.

      பயம் பீதியானால் மேல்மனம் பிளந்து அடிமனம் திறக்கும். ஆசை, பேராசையாகி தீவிரமானாலும் அடிமனம் வழிவிடும். யோக முயற்சியின் முதற்பலன் பயத்தாலும், ஆசையாலும் சில சமயங்களில் கிடைப்பதுண்டு.

    • சம்பளம் முழுவதாக ஆயிர ரூபாயில்லாத சமயம் 8 இலட்சம் சேமிப்பு எழ முடியுமா? பூரணத் திறமையுள்ளவர்க்கு அதுவும் ஒரு சமயம் நடக்கும். மனம் அமைதியுற்று, புலம்பல் நின்றால் அப்படியும் நடக்கும்.

      இதுபோன்றவை வாழ்வில் யோகப் பலன். இதைப் பலனாக அறியாமல், யோக வாயில் திறப்பதாக அறிந்தால் அன்னை அவர்கட்கு சொந்தமாவார். அவர்கட்கு யோகம் பலிக்கும்.

    • விவேகானந்தர், பகவானிடம் மோட்சத்தைவிட்டு, சத்திய ஜீவியத்தை நாடச் சொன்னார். அதனால் கிடைத்தது விஸ்வரூப தரிசனம். அதை நிலையாகப் பெறும் வழியை முதலில் கண்டது பகவான். அதுவே

      மேல் மனத்திலிருந்து கீழே போய் மேலே உயருதல்.

    • பகவானும் அன்னையும் பெற்ற யோக சித்திகள் பக்குவமான ஆத்மாக்களுக்கு - வேணுகானம் கேட்பவர் போன்றவர்க்கு - ஒரு க்ஷணம் அனுபவமாக வரும்.

      இது சத்தியஜீவிய லோகப் பேரருளின் அழைப்பு.
      இது வந்தபின் தவறாமல் ஏற்க வேண்டும்.

    • இதைப் பலனாக மட்டும் கருதினால், இது நிச்சயம் மின்னலாக மறையும்.
    • சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர் இதுபோன்றதை அனுபவித்ததை என்னிடம் கூறியுள்ளனர். இதன் அழைப்பை ஏற்க இதுவரை எவரும் முன்வரவில்லை. குருவாயூரப்பன் குருக்களுக்கு கோலத்தில் மோட்ச லோகத் தேர் வந்தது தெரிந்தது. வீட்டினர் அனைவரையும் உடன் அழைத்தார். எவருக்கும் தேர் தெரியவில்லை. பைத்தியம் என்றனர்.
      • தேர் அவருக்கு மட்டும் தெரிந்தது.
      • அழைப்பை வேலைக்காரிமட்டும் ஏற்றாள்.
      • மற்றவர் வந்த பேர் அதிர்ஷ்டத்தை இழந்தனர்.

(26) தடையை வாய்ப்பாக மாற்றுவது

  • சிருஷ்டியில் தடையேயில்லைஎன்பது ஸ்ரீ அரவிந்தம்.
  • சிருஷ்டியில் உள்ள அனைத்தும் வளரும் வாய்ப்புகள்.
  • சிருஷ்டியில் இருள் படைக்கப்படவில்லை. நம் கண் பார்வைக்கு ஒளி இருளாகத் தெரிகிறது.
  • தீமையே படைக்கப்படவில்லை. அகந்தைக்கு நல்லது தீமையாகத் தெரிகிறது.
  • அனுபவமற்றவனுக்குத் தடை. அனுபவசாலிக்கு இல்லை.
  • பயந்தவனுக்கு வரும் ஆபத்து, தைரியஸ்தனுக்கு சவால், ஆபத்தில்லை.

    அரசியல் பேச்சாளர் மீது கல் வீசினான்.
    எட்டிக் கல்லைப் பிடித்து ஏலம் விட்டார்.
    கல் 100 ரூபாய்க்கு ஏலம் போயிற்று.

  • முதல்வர் வாரண்ட் பிறப்பித்தார்.
    வாரண்டை ரத்து செய்ய எடுத்த பெருமுயற்சியால் முதல்வருக்கு எதிரியின் திறமை தெரியவந்தது.
    வாரண்ட் ரத்தாயிற்று.
    முதல்வர் எதிரிக்கு நண்பரானார்.
  • சம்மன் வந்தால் கட்சிக்காரன் நடுங்குகிறான்.
    வக்கீலுக்கு நடுக்கமில்லை, வேலையது.
    சொத்தில் 1/3 பங்குள்ளவனை "உனக்குப் பங்கில்லை, வெளியேறு” என பொய் கேஸ் போட்டான்.
    கேஸ் முடிந்தபொழுது முழுச் சொத்தும் அவனுக்குப் போய்விட்டது.
    இந்த கேஸே போட்டிருக்காவிட்டால், எனக்கு சொத்து வந்திருக்காதுஎன்றான்.
  • தடை என்பது அறியாமை, சாளேஸ்த்திரம், அனுபவமில்லாதது, சாதுர்யமில்லாதது, சமயோசிதமறியாதது.

    சிறுவனுக்குத் தடை பெரியவர்க்குத் தடையில்லை. தடை எழுந்தவுடன் நிதானமாக யோசனை செய்தால், அல்லது அனுபவசாலிகளைக் கலந்து ஆலோசித்தால், அது தடையில்லைஎன விளங்கும்.

  • அன்னைச் சூழல் சமயோசிதம், சாமர்த்தியம், சாதுர்யம் செய்வதைச் செய்யும். சூழல் தடையை விலக்கும் சூழலை உற்பத்தி செய்யும். பலன் வர நாம் நம் நடைமுறையை அதற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். கண்மூடியாக, கர்வமாக, அலட்சியமாக, பொறுப்பற்ற முறையில் திமிராக நடந்தால் சூழல் பலன் தாராது.

    பவ்யமாக, உஷாராகக் கவனித்தால் பலன் வரும்.

  • பலன் சிறியது.
    திறக்கும் வாயில் பெரியது.
    யோக வாயில் திறந்தபின், பலனைப் பெறுவது கவர்னர் ஒருவரை கௌரவிக்க விருந்து நடத்தினால், அங்குள்ள விருந்தை ரசித்துச் சாப்பிடுவதுபோலாகும்.

    பூர்வ ஜென்மப் புண்ணியத்திற்கும் கிடைக்காதது வாயில் திறப்பது. பலனைமட்டும் நாடுதல் அதைத் தவறவிடுவதாகும்.

தொடரும்.....

 

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன்னையழிக்கும்படி, உன்னை நாடுவதை, அழிக்காமல், அதன் வேதனையைக் குறைக்க அன்னையை அழைத்தால், உனக்கு வேதனை வரும்; வளரும்.
 
தன்னழிவை நாடி உன்னிடம் வருவதை அழிக்க வேண்டும்.

*****



book | by Dr. Radut