Skip to Content

01. சாவித்ரி

சாவித்ரி

P.133 Else could he roam on a free sunlit soil

         சூரிய ஒளி சுடர்விடும் மண்ணில் அவன் பவனி வந்தான்

  • வலியறியாத சிறு குழந்தையின் விலங்கு மனம்
  • மரமும், மலரும் போல் அசையாமல், ஆனந்தம் பெறுபவர்.
  • அனுக்கிரஹம் செய்ய வந்த அளவிலா வலிமை,
  • இருந்து உழன்று ஏங்கித் தவிக்கலாயிற்று.
  • காலத்தினூடே கணீரென ஒலித்த சிரிப்பு அடங்கி ஒடுங்கியது:
  • இயல்பான மனித சந்தோஷம் லேசாக இருண்டது
  • அவன் பெற்ற வருத்தம் அவன் தலைவிதியை வளர்த்தது.
  • விலங்கின் அறிவில்லாத ஆனந்தம் அவனை விட்டு விலகியது,
  • கவலையும், சிந்தனையும் அவன் அன்றாட வாழ்வில் கனத்தது;
  • பெரியதையும் கண்டான், அதிருப்தியும் கொண்டான்,
  • புலனறியாதது புலப்படும் விழிப்பு எழுந்தது.
  • திகட்டாத சிந்தனை தித்திக்கும் மனம்; அறிவதற்கு அளவு கடந்த வாய்ப்புளது
  • மேல் மன வாழ்வின் மேன்மைகளை முழுவதும் அறிந்தான்,
  • ஜீவனின் அந்தரங்க ஆழம் அவன் ஆராய்ச்சிக்குக் காத்திருக்கிறது.
  • மனமாகி, ஆத்மாவாகி, அவன் பிரம்மமாகிறான்.
  • வலுவற்ற கூரையின் கீழ் இயற்கையை ஏற்று ஆள்கிறான்
  • நீண்ட இருண்ட சமாதி போன்ற உறக்கத்தினின்று அவனுள் ஜடம் விழிக்கிறது
  • இறைவன் வருகையை அவனுள் பூமாதேவி காண்கிறாள்
  • கபோதியான சக்தி இலட்சியத்தைக் காண இயலவில்லை
  • துடிக்கும் சக்தியின் உறுதி பசி வேகத்தில் வருகிறது
  • ஓய்ந்து ஒடுங்கிய உடலுருவத்துள் வாழ்வு தன் வித்தை ஊன்றியது
  • இனிய உறக்கத்தினின்று குருட்டு சக்தியாய் அது எழுந்தது
  • புலன்களை உணரக் கட்டுப்படுத்தும் ஒழுங்கு
  • சூன்யத்தின் வேலை சுகதுக்கங்களைக் கடந்தது
  • அகன்ற ஆற்றொழுக்கான வாழ்வை கலக்கும் கனவுலக அனுபவம்
  • உறக்கத்தில் உழலும் பிரபஞ்ச ஜீவனற்ற பரப்பு
  • வலிமையான கைதி விடுதலைக்காகத் திணறுகிறான்
  • ஆர்வம் உயிர்ப்பித்த ஜீவனற்ற அழைப்பு
  • இதயத்தில் அவளெழுப்பிய தேவையின் வேகம்
  • உயிரற்ற பொருள்களின் ஆழ்ந்த அமைதியினூடே
  • உழைப்பும், பிரார்த்தனையும், போராட்டமும் எழுந்து குரலெழுப்பின
  • வழியறியாத வழிகாட்டி வழிகாட்ட முன் சென்றான்
  • எண்ணம் தன்னையிழந்தது, எதுவும் தெரியும் பாங்கில்லை
  • அறியாத உலகின் அளவிறந்த வீச்சு அவன் அரவணைப்புக்குக் காத்திருக்கிறது

*******



book | by Dr. Radut