Skip to Content

03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXII. The Problem of Life
22. வாழ்வின் பிரச்சனை
All life has a nature.
Page No.209
வாழ்வுக்குச் சுபாவமுண்டு.
It depends on the fundamental poise.
Para No.5
அது அடிப்படையான நிலைமையைப் பொறுத்துள்ளது.
It is a poise of its own constituting consciousness.
அந்நிலை அதன் அமைப்பிற்குரிய ஜீவியத்தைப் பொறுத்தது.
As the consciousness is, so will be the Force.
ஜீவியம் போல் சக்தியிருக்கும்.
The consciousness is infinite.
ஜீவியம் அனந்தமானது.
It is one.
ஜீவியம் ஒன்றானது.
It is transcendent of its acts and forms.
அது தன் செயல்கள், ரூபத்தைக் கடந்தது.
It is so even while embracing them.
அவற்றைத் தழுவும் பொழுது கடந்து நிற்கிறது.
It is so while informing, organising, executing them.
அவற்றிற்கு விவரம் தெரிவித்து, அமைத்து, செயல்படுத்தும் பொழுதும் ஜீவியம் அவற்றைக் கடந்துள்ளது.
It is as is the consciousness of Sachchidananda.
சச்சிதானந்தம் போலவே ஜீவியமும் செயல்படும்.
So will be the Force.
சக்தியும் அதே போல் கடந்திருக்கும்.
The Force is infinite in its scope.
சக்தி அனந்தமாகும்.
One in its works.
செயலில் ஒன்றியிருக்கும்.
Transcendent in its power.
அதன் பவர் கடந்து நிற்கும்.
Equally so will be its self-knowledge.
தன்னையறிவதும் அதே போலிருக்கும்.
The consciousness is like that of material nature.
ஜீவியம் ஜட சுபாவமாக இருக்கிறது.
It is submerged.
அது மூழ்கியுள்ளது.
It is self-oblivious.
தன்னை மறந்தது.
It drives along in the drift.
ஓட்டத்தில் அடித்துக் கொண்டு போகிறது.
It is its own Force without knowing it.
தன்னுடைய சக்தியின் ஓட்டம் அது. அதை அது அறியாது.
It really determines the drift.
அவ்வோட்டத்தை அதுவே நிர்ணயிக்கிறது.
It drives the drift.
அந்த ஓட்டத்தை அதுவே ஓட்டுகிறது.
It is its very nature.
அதுவே அதன் சுபாவம்.
There is an eternal relationship.
நிரந்தரமான தொடர்புண்டு.
It is between the two terms.
ஓட்டமும் அதை ஓட்டுவதும் அவ்விரு அம்சங்கள்.
So will be the Force.
சக்தியும் ஓட்டத்தைப் போன்றது.
It will be a monstrous movement.
அது அசுர ஓட்டம்.
It is Inert and Inconscient.
அது ஜடம், தன்னையறியாதது.
It is unaware of what it contains.
தன்னிடம் உள்ளதை அது அறியாது.
It seems mechanically to fulfil itself.
இயந்திரம் போல் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
It is by a sort of inexorable accident.
தவிர்க்க முடியாத நிகழ்ச்சி போன்றது.
It is an inevitably happy chance.
தவிர்க்க முடியாத சந்தோஷ சந்தர்ப்பம்.
All the while it really obeys.
எந்த நேரமும் பணிகிறது.
Even while it obeys the law faultlessly.
சட்டத்தைக் குறையின்றி ஏற்றுப் பணிகிறது.
It is a law of Right and Truth.
அது சத்தியமான சரியான சட்டம்.
It is fixed for it by the will of Conscious-Being.
சத் புருஷனின் உறுதியால் நிர்ணயிக்கப்பட்ட சட்டமிது.
It is a supernal Being.
அது உச்ச கட்ட ஜீவன்.
It is concealed within the movement.
அந்த ஜீவன் ஓட்டத்தில் மறைந்துள்ளான்.
Consciousness is divided in itself.
ஜீவியம் பிளந்து பிரிவுபட்டுள்ளது.
It is so in Mind.
மனத்தில் அது போன்றது.
It limits itself.
அது அளவுக்குட்பட்டது.
It is so in various centres.
பல மையங்களில் அது பிரிந்துள்ளது.
It sets each to fulfil itself.
ஒவ்வொரு மையமும் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
It has no knowledge of what is there in the others.
மற்ற மையங்களில் என்னயிருக்கிறது என அறியாது.
It does not know of its relation to others.
மற்ற மையங்களுடன் என்ன தொடர்புண்டு என அறியாது.
They are apparently divided.
அவை பிரிந்து தோன்றுகின்றன.
They are opposed.
அவை எதிரானவையாகத் தோன்றுகின்றன.
They are so to each other.
ஒன்றுக்கொன்று எதிரானவை.
Not so in their unity.
அடிப்படை ஒற்றுமையில் அப்படியில்லை.
Such will be the Force.
சக்தியும் அப்படியிருக்கும்.
It will be life like that we are.
அது நம் வாழ்வு போன்றது.
The life around us.
அது நம்மைச் சுற்றியுள்ள வாழ்வு போலாகும்.
It will be a clash.
அது ஒரு பிணக்காக இருக்கும்.
It is of the intertwining of individual lives.
அது தனி மனித வாழ்வு சேர்ந்து இணைவதாகும்.
Each seeks in the other its own fulfilment.
அடுத்ததில் தன் பூர்த்தியை ஒவ்வொன்றும் நாடுகிறது.
They do not know their relations with others.
மற்றவற்றுடன் தன் தொடர்பை அவை அறியா.
It is a conflict of divided forces.
பிரிந்த சக்தியின் பிணக்கு அவை.
They are opposing and differing forces.
அவை எதிரான வேறுபட்ட சக்திகள்.
They mix in the mentality.
மனப்போக்கில் அவை கலக்கின்றன.
It is a shock and wrestle.
அது அதிர்ச்சி, போராட்டம்.
It is an insecure combination of divided ideas.
அது நிலையற்ற பிரிந்த எண்ணங்களின் சேர்க்கை.
They are opposing divergent ideas.
அவை விலகிப் போகும் எதிரான எண்ணங்கள்.
They cannot arrive at knowledge.
அவை ஞானத்தை எட்ட முடியாது.
It is a knowledge of their necessity.
அது தேவையான ஞானம்.
It is necessary to each other.
ஒவ்வொருவருக்கும் தேவையான ஞானமது.
They grasp their place as elements of that Unity.
அந்த ஐக்கியத்தின் அம்சங்களாக அதைப் பற்றிக் கொள்கின்றன.
It is behind.
ஐக்கியம் பின்னணியில் உள்ளது.
It is expressing through the divided ideas.
பிரிந்த எண்ணங்கள் மூலம் ஐக்கியம் வெளிப்படுகிறது.
There the discords must cease.
எல்லாப் பிணக்கும் அங்கு அழியும்.
Consciousness can possess diversity and Unity.
ஜீவியம் ஐக்கியத்தையும் பிரிவினையும் உடையது.
The latter contains the former.
ஐக்கியம் பிரிவினையை உட்கொண்டது.
It governs it.
அதைத் தன்னுட்கொண்டு ஆள்கிறது.
Here it is aware of the Law.
இந்நிலையில் அது சட்டத்தையறியும்.
Law, Truth, right of All are included in it.
அதனுள் சட்டம், சத்தியம், அனைவர் உரிமையும் உள்ளன.
It includes the Right of the individual.
இது தனி மனித உரிமையையும் உட்கொண்டது.
The two become consciously harmonised.
இரண்டும் தெரிந்து சுமுகமாகின்றன.
They do so in mutual unity.
பரஸ்பரம் ஐக்கியமாக அவை சுமுகமாகின்றன.
The whole nature of the consciousness is the One.
ஜீவியத்தின் முழு சுபாவமும் பரமாத்மாவாகும்.
It is their knowing as One.
அது தன்னை அப்படி அறியும்.
There the One knows itself as the Many.
பரமாத்மா தன்னை ஜீவாத்மாவாக அறியும்.
The Many know themselves as One.
ஜீவாத்மாக்கள் தம்மை பரமாத்மாவாக அறியும்.
There the force also will be of the same nature.
சக்தியும் அங்கு அதே சுபாவமாகும்.
It will be a Life that consciously obeys the law of Unity.
வாழ்வு தன்னையறிந்து ஐக்கியச் சட்டத்திற்குப் பணியும்.
And yet fulfils each thing in diversity.
இருப்பினும் பலவற்றுள்ளும் ஒவ்வொன்றும் தம்மைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.
It is according to its proper rule and function.
அது சட்டப்படி செயல்படி நிறைவேறுகிறது.
It will be a life in which all the individuals live.
எல்லா ஜீவாத்மாக்களும் வாழும் வாழ்வு அது.
They live at once in themselves and in each other.
ஒவ்வொருவரும் பிறரிலும் தன்னிலும் வாழ்கின்றனர்.
They live as one conscious Being in many souls.
ஒரு சத்புருஷன் பல ஆத்மாக்களில் வாழ்கிறார்.
It is one power of Consciousness in many minds.
ஜீவியத்தின் ஒரே பவர் பல மனங்களில் உறைகிறது.
It is one joy of Force working in many lives.
ஒரே ஆனந்தம் பல வாழ்வில் உள்ளது.
One reality of Delight in many hearts.
ஒரே ஆனந்தத்தின் சத்தியம் பல இதயங்களில் செயல்படுகிறது.
There are four positions.
Page No.211
இவற்றுள் நான்கு நிலைகள் உள்ளன.
The first is the source of all this progressive relation.
Para No.6
முதல் நிலை இந்த வளர்ச்சிக்கு உற்பத்தி ஸ்தானம்.
It is a poise in the being of Sachchidananda.
அது சச்சிதானந்தத்துள் உள்ள நிலை.
It is a relation between consciousness and Force.
அது ஜீவியத்திற்கும் சக்திக்குமுள்ள உறவு.
For there the Force is consciousness of being.
அங்கு சக்தி ஜீவனின் ஜீவியம்.
It works itself out.
அது தன்னை செயலாக மாற்றுகிறது.
It does so without ever ceasing to be
consciousness.
அந்நிலையில் சக்தி ஜீவியமாகவேயிருக்கிறது.
And the consciousness is similarly luminous Force of being.
அதே போல் ஜீவியம் ஒளிமயமான ஜீவனின் சக்தியாக இருக்கிறது.
It is eternally aware of itself.
என்றும் அது தன்னையறியும்.
It is eternally aware of its own Delight.
அது தன்னை நிரந்தரமாக ஆனந்தமாக அறியும்.
It never ceases to be this power.
ஜீவியம் இந்தச் சக்தியை இழப்பதேயில்லை.
It is a power of utter light.
அது முழுவதும் ஒளிமயமான சக்தி.
It is a power of self-possession.
அது தன்னைத் தான் ஆட்கொள்ளும் சக்தி.
There is a second relationship.
இரண்டாம் நிலையுண்டு.
It is of material Nature.
அது ஜடமான இயற்கை.
It is a poise of Being.
அது ஜீவனின் நிலை.
It is a poise in the material Nature.
ஜீவனும் சக்தியும் ஜடத்தில் - ஜட உலகில் - கொண்டுள்ள தொடர்பு அது.
It is a great denial of Sachchidananda by Himself.
சச்சிதானந்தம் தன்னையே மறுக்கும் நிலை அது.
Here there is utter separation.
இங்கு இரண்டும் முழுவதும் பிரிந்துள்ளது.
It is apparent.
பிரிந்தது தோற்றம்.
Force is separated from consciousness.
சக்தி ஜீவியத்திலிருந்து பிரிகிறது.
It is a specious miracle.
அது அதிசயமான தோற்றம்.
It is a miracle of all governing.
அது ஆட்சி செய்யும் சக்தியின் அதிசயம்.
It is an infallible inconscient.
அது பிழையறியாத ஜட ஜீவியம்.
It is only a mask.
அது ஒரு முகமூடி.
Modern knowledge has mistaken it for the real face of cosmic Deity.
இக்கால விஞ்ஞானம் அதைப் பிரபஞ்ச தெய்வத்தின் வன்மையான முகம் எனக் கொள்கிறது.
There is a third relation.
மூன்றாம் நிலையொன்றுள்ளது.
It is a poise of being in Mind and in the Life.
ஜீவன் மனத்திலும் வாழ்விலும் உள்ள நிலையிது.
We see it emerging out of this denial.
இந்த மறுப்பிலிருந்து எழுவது அது.
It is struggling.
அது போராடுகிறது.
There is no possibility of submission.
பணியும் சந்தர்ப்பமில்லை.
Submission is possible if the struggle ceases.
போராட்டம் நின்றால் பணிவு முடியும்.
But it has a clear knowledge.
ஆனால் அதற்குத் தெளிந்த ஞானமுண்டு.
Or it is an instinct.
அந்த ஞானம் உணர்ச்சி.
It is of a victorious solution.
நிச்சயமாக வெல்வோம் என்ற உள்ளுணர்வு அது.
It is a perplexing apparition of man.
திகைப்பூட்டும் மனிதப் பிசாசின் தோற்றமிது.
It is out of the half-potent conscient being.
பாதி உயிருள்ள ஜீவனிலிருந்து அது வெளி வருகிறது.
It is a being out of the omnipotent Inconscient.
எல்லாம்வல்ல ஜட ஜீவியத்திலிருந்து எழும் ஜீவனது.
It is of the material universe.
அது ஜடப்பிரபஞ்சம்.
The fourth relation is the poise of being in
Supermind.
நான்காம் நிலை சத்தியஜீவியத்தில் ஜீவிய நிலை.
It is a fulfilled existence.
அது வாழ்வு பூர்த்தியடைந்த நிலை.
The total denial creates a problem.
முழுமறுப்பு ஒரு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
It is because of a partial affirmation.
பகுதியான வலியுறுத்தலால் அது வருகிறது.
It emerges out of the denial.
அது மறுப்பால் எழுகிறது.
It needs to be solved.
அதைத் தீர்க்க வேண்டும்.
There is one possible way.
அதற்கு ஒரு வழியுண்டு.
It is complete affirmation.
முழுமையான வலியுறுத்துதல் வழி.
It fulfilled all that was secret.
ஒளிந்துள்ளதை முழுமைப்படுத்தும் தீர்வு அது.
It is in the potentiality.
அது வித்தாக உளது.
Beind the denial, it is there.
அது மறுப்பின் பின் இருக்கிறது.
It is a great denial.
மறுப்பு பெரும் மறுப்பு.
It is intended by the evolution.
பரிணாமம் அதை நாடுகிறது.
That is the real life.
அதுவே உண்மையான வாழ்வு.
It is the life of the real Man.
உண்மையான மனிதனின் வாழ்வு அது.
Man's life is partial.
மனித வாழ்வு பகுதியானது.
Manhood is partial and unfulfilled.
மனிதத்தன்மை பகுதியானது, முழு நிறைவு பெற்றதில்லை.
Manhood is striving forward.
மனித குலம் முயன்று முன்னேறுகிறது.
It has a perfect knowledge.
அதற்குச் சிறந்த ஞானம் உண்டு.
It has guidance.
வழிகாட்டியும் உண்டு.
It is in the so called Inconscient.
ஜட ஜீவியம் என நாம் அழைப்பது வழிகாட்டுகிறது.
It is within us.
அது நம்முள் உறைகிறது.
We have a conscient part.
நாம் அறிந்த பகுதியுண்டு.
It has a dim vision.
அதன் பார்வை மங்கலானது.
It is a prevision.
அது எதிர்காலத்தை அறியும்.
It has fragments of realization.
சித்தியில் சிதறிய சிறு பகுதிகளுண்டு.
It has glimpses of the ideal.
இலட்சியம் அதற்குத் தட்டுப்படும்.
The poet, the prophet, the seer, the
transcendentalist have it.
கவி, தீர்க்கதரிசி, ரிஷி, உலகைக் கடந்தவன் அவற்றைப் பெற்றுள்ளான்.
The mystic and the thinker have it.
அறிஞனும், மாயத்தை நாடுபவனும் அதை அறிவான்.
The great intellects have it.
பெரும் அறிஞர்கள் பெற்ற பேறு அது.
The great souls of humanity do have it.
மனித குல மேதைகள் பெற்றது அது.
Contd....
தொடரும்......

*******



book | by Dr. Radut