Skip to Content

10. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Page 40 To be perfect as He is perfect is the condition of this integral attainment

            இறைவன் எவ்வளவு சிறப்பாக இருக்கிறானோ அவ்வளவு

            சிறப்பாக இருப்பதே நிபந்தனை

  • நம்மால் இறைவனை ஏற்க முடியும், அவன் சிருஷ்டியை ஏற்க முடியாது.
  • ஆடு பகை, குட்டி உறவா என்பது பழமொழி. ஆடு உறவு, குட்டி பகை சரியாகுமா?
  • சிருஷ்டி இறைவனுடையது. ஏன் நம்மால் சிருஷ்டியை ஏற்க முடிவதில்லை.
  • சஞ்சீவ ரெட்டி தூய்மையான காந்தியவாதி.
  • காந்தீயவாதத்தால் ஜனாதிபதி தேர்தலை இழந்தார்.
  • காந்தீயவாதத்தின் தூய்மையால் பத்து ஆண்டு கழித்து போட்டியின்றி ஏகமனதாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • கவர்னர் ஷா மீனும், சிகரெட்டும் தரவில்லையென வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
  • சஞ்சீவ ரெட்டி காந்தீயவாதியெனினும் மீன் சாப்பிடுவார், சிகரெட் பிடிப்பார்.
  • இது மனித சுபாவம்.
  • ஷா காந்தீயவாதி, மீன் சாப்பிடமாட்டார், புகை பிடிக்கமாட்டார்.
  • காந்தீயவாதியான கவர்னர் காந்தீயவாதியான ரெட்டிக்கு மீன் தரவில்லை.
  • காந்தி மன்னிக்காத குற்றமில்லை, கோட்ஸேயை மன்னித்தார். தன்னைச் சுட்டவனையே மன்னிப்பது காந்தீயவாதம்.
  • ரெட்டியால் சிகரெட் இல்லையென்றதால் ஷாவை மன்னிக்க முடியவில்லை.
  • கவர்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மன்னிக்க முடியாத குற்றம்.
  • காந்திஜீயைப் பின்பற்றினாலும் அவர் கொள்கைகளைப் பின்பற்ற முடிவதில்லை.
  • காந்தீஜியின் காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பணம் வைத்திருக்கிறார்கள்.
  • பாம்பு இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டது. நாம் அதை அடித்துக் கொல்கிறோம்.
  • மாமியார் தான் பார்த்து அழைத்து வந்த மருமகளை ஏற்க முடியவில்லை.
  • "எந்த மடையன் உனக்கு வேலை கொடுத்தான்'' என்று தான் நியமித்த பியூனை மிரட்டிய ஆபீஸர், "ஐயாதான்'' என்ற பதிலை எதிர்பார்க்கவில்லை.
  • அறிவற்ற காரியத்தை விரும்பி அறிவின் பெயரால் செய்வது அறிவுடைமையாகுமா?
  • அதுவே மனித சுபாவம்.
  • உலகம் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டது. சர்வம் பிரம்மம்.
  • அதனால் நாம் எதையும் வெறுக்கக்கூடாது என்பது ஞானம்.
  • மனிதன் இன்று ஒன்று செய்வான்.
  • நாளைக்கு அதை மறுப்பான்.
  • சுபாவம் தன்னை அறியாது.
  • தன்னை அறிவது ஞானம்.
  • பக்தி என்பது தன்னை அறியும் மனநிலை.
  • இது இறைவனை ஏற்பதாகும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கருவியை மாற்றினால் புரியாதது புரியும்.
அறிவுக்குப் புரியாதது, பக்திக்குப் புரியும்.
பக்திக்கும் நம்பிக்கைக்கும் The Life Divine புரியும்.
உடலுக்குப் புரியாதது இல்லை.
உடலுக்குப் புரியும்படி சொல்வது பெரிய
ஆத்மாக்கள் கடமை.
அதற்கும் நேரம் வர வேண்டும்.
அந்த நேரத்தையும் வரவழைக்கலாம்.
அவதாரபுருஷனின் உடலுக்குப் புரிந்தால் நேரம் வரும்.
எதற்கும் நேரம் வர வேண்டும் என்பது கடமை.
அந்த நேரத்தை வரவழைக்கலாம் என்பதும் உண்மை.
முடியாதது என்பதில்லை.
 

******



book | by Dr. Radut