Skip to Content

Savitri

பஸ்மாசூரன்

Page 7இல்  உள்ள  சில  கருத்துகள்:

  1. கண்ணீர் கலந்த வாழ்வே பூமிக்குரியது
  2. ஜோதியை மனிதன் வெறுப்புடன் நோக்குகிறான்
  3. அருளை வழங்கும் அரவணைப்பை மறுப்பது மனிதன்
  4. அவதாரப் புருஷனுக்குச் சிரச்சேதமளிக்கும் உலகம்
  5. கிரீடத்தை அளித்தவனுக்குச் சிலுவையைப் பரிசளிக்கும் உலகம்

ஸ்ரீ அரவிந்தர் அடிப்படையாகக் கருதும் தத்துவங்கள்  இவை. உலகம் மட்டமான   வாழ்வை ரசித்துச் சுவைக்கின்றது. ஜோதி மனிதனுக்கு நன்றியை எழுப்பவில்லை,   வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அருளை நாம் பிறருக்கு அளித்தால் ஆர்வமாகப் பெறுவார் என நினைக்கிறோம். க்ஷணம் தாமதமின்றி உதறித் தள்ளுவது உலகம்.  அவதாரம் மனிதனை நாடி வந்தால் அவனைச் சிரச்சேதம் செய்ய முனைகிறது. கிரீடம் கொண்டு வந்தால் அவனைச் சிலுவையிலறைகிறது என்று சாவித்திரியில் 7ஆம் பக்கம் கூறுகிறது. நாம் பிறருக்கு உதவி செய்தால் பெறுபவர்  நன்றியுடனிருப்பார். மீண்டும் நமக்கு உதவி செய்வார். நமக்கு நல்ல பெயர் வரும்  என அனைவரும் நினைக்கிறோம். உண்மை வேறு.

  • உதவிசெய்பவர் செல்வாக்குடனிருந்து மேலும் அவரிடம் உதவியை  எதிர்பார்த்தால் பெறுபவர் அடக்கமாக இருப்பார். உயர்வாகப் பேசுவார்.  செய்தவரை நல்ல மனிதர் என்பார்.
  • சொல்லும் பதில் உதவியைப் பொருத்ததன்று, செய்பவரின் பதவி,   அதிகாரம், செல்வாக்கைப் பொருத்தது. மனிதன் அதிகாரத்திற்குப் பணிவான்,  நல்லதிற்குப் பணியமாட்டான்.
  • செய்தவர் பதவியில்லாதவரானால், அவர் ஏன் செய்கிறார் அதன்  உள்நோக்கம் என்ன என்று  கேட்பான். மனிதனால் அடுத்தவர் நல்லதை   ஏற்கமுடியாது. பதவிக்குப் பணியமுடியும்.

அன்பர்கள்  அனுபவம்.

  • வருமானத்தை பக்தர் அடுத்தவருக்கு 5 மடங்கு உயர்த்திய பொழுது  "நாம்  அங்குபோனது தவறு'' என்றனர் பெற்றவர்.
  • எங்களுக்கு உதவி செய்வதால் உங்களுக்கு நல்ல பெயர் என்பதால்  செய்கிறீர்கள் என்றனர் சிலர்.
  • உயிரைக் காப்பாற்றியவர் மீது திரும்பி பிழைத்தெழுந்தவன், அவர்  உயிரையே எடுக்க  முயன்று, அவரைச் சுற்றி 5 பேர் உயிரை  எடுத்துவிட்டான்.
  • பொய்க் கேஸ் போட்டு, வாரண்ட்  பிறப்பித்தான் 12 மடங்கு இலாபம்  பெற்றவன்.
  • உதவி செய்யும் முன்பே "உன் சொத்து முழுவதும் எனக்குக் கொடு'' என்றான்  ஒருவன்.
  • 3 நாளில் 2 வேளை சாப்பிட்டவருக்குச் செய்த உதவியால் அவர் உயர்ந்து  டாக்ஸியில்  பயணம் செய்துவந்து உதவி செய்தவரைப் பார்த்து வெட்கமின்றி "என்னால்தானே நீங்கள் உயர்ந்தீர்கள்?'' என்று  கேட்கும் மனிதப்பிறவி  ஒன்று.
  • உதவிபெற்று  உயர்ந்து, எதிரியாகி,  உயிரை எடுத்து, பரமஎதிரியுடன்   சேர்ந்து "உன்னை அழிப்பேன்'' என்று கொக்கரிக்கிறான் அடுத்தவன் ஒருவன்.

நல்லது செய்து நல்ல பெயர் எடுக்க முனைபவர் திறனற்றவரானால் தரைமட்டமாக்கப்பட்டு தலைமுறையே அழியும் என்பது ஸ்ரீ அரவிந்தம் கூறும்  வாழ்வின்  உண்மை.

*******

Comments

Line 6 - பரிசüக்கும் -

Line 6 - பரிசüக்கும் - பரிசளிக்கும்

Para 6 - Line 6 - பணிய டியும். - பணியமுடியும்.



book | by Dr. Radut