Skip to Content

02. திருமணத்தின் சரியான பக்கமும், தவறான பக்கமும்

திருமணத்தின் சரியான பக்கமும், தவறான பக்கமும்

ஆங்கில மூலம் திரு. என். அசோகன் அவர்கள்

தமிழாக்கம் திருமதி. விசாலாக்ஷி ராமநாதன் அவர்கள்

 
சரியான பக்கம்
 
தவறான பக்கம்
1.
தம்பதியரிடம் இருக்கும் அன்பும், அரவணைப்பும் அவர்களுடைய பிஸிக்கல் வாழ்க்கையையும்,
உணர்வு மயமான வாழ்க்கையையும் மேலும் மேம்படுத்தும்.
1.
அன்பு இல்லாமலும், ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்யும் முயற்சியிலேயே இருந்தால் அவர்களது வாழ்க்கை இழுபறி போராட்டமாக இருக்கும்.
2.
பரஸ்பர நல்லெண்ணமும், உதவும் மனப்பான்மையும் இருந்தால்
அவர்களது வாழ்நாளும் நீடிக்கும்.
2.
பரஸ்பர நல்லெண்ணம் அழிந்து கெட்ட எண்ணமாக மாறினால், அது அவர்களது ஆயுளை குறுக்கவும் செய்யலாம்.
3.
திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை தன்னை மற்றவருக்கு வழங்குவதற்கும், எல்லோருடன் ஒத்துழைத்து, சுமுகமாக இருப்பதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.
3.
போட்டி மனப்பான்மையாக உறவு மாறினால் அங்கு பரஸ்பரம் பாராட்டுவதற்கு பதிலாக
அதிகாரம் செய்யும் மனப்பான்மை மேலோங்கி சுமுகக் குறைவு ஏற்பட்டுவிடும்.
4.
திருமண உறவில் அடுத்தவர் கண்ணோட்டத்தைப் பாராட்டுவது நம் மனதை விசாலமடையச்
செய்யும்.
4.
நம்முடைய கண்ணோட்டத்தையே வலியுறுத்தினால், நம் மனம் மேலும் மேலும் குறுகிவிடும்.
5.
ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு தானே முன்வந்து பணிந்து அவருடைய சொற்படி நடந்தால் அந்த உறவு இனிமையாகவும், சந்தோஷமாகவும் மாறிவிடும்.
5.
கணவன் தனக்குப் பணிய வலியுறுத்தி, அதை ஏற்காமல் மனைவி தன் போக்கிலேயே சுதந்திரமாகச் செயல்பட விரும்பினால் இனிமையான இல்லறம் மறைந்து கசப்பு தலைதூக்கும்.
6.
தம்பதிகளிடம் இருக்கும் பரஸ்பர அன்பு அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தால் அவர்களது திருமணம் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.
6.
கணவனுடைய வருமானத்தையோ அல்லது சொத்தையோ கணவனை விட முக்கியமானதாக ஒரு மனைவி கருதினாலும், மனைவியுடைய அன்பைவிட அவளுடைய
அழகையோ, அவள் தரும்
சுகத்தையோ ஒரு கணவன்
முக்கியமாகக் கருதினாலும்
அவர்களுடைய இல்வாழ்க்கை
துன்பமயமாகிவிடும்.
7.
இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் தன்மை இருப்பின், வீட்டையும், அலுவலகத்தையும் சமநிலையுடன் சமாளிப்பதும், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் சிறந்த கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருக்கும்.
7.
இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் இருந்து வேலைக்கும் செல்பவராக
இருப்பின் வீட்டையும், அலுவலகத்தையும் சமாளித்து, குழந்தைகளையும் கவனிப்பது என்பது ஒரு வேதனைக்குரிய அனுபவமாக மாறிவிடும்.
8.
மனைவி ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் மருமகளாக இருந்தால், அவள் நல்ல பண்புள்ளவளாகவும், அனுசரித்து போகின்றவளாகவும் இருந்தால் அக்கூட்டுக் குடும்ப வாழ்க்கை எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
8.
அவள் ஒத்துப்போகும் தன்மை அற்றவளாக இருந்து, மாமியாரும் அதிகாரம் செய்பவராகவும் சண்டை போடுபவராகவும் இருந்தால் அக்கூட்டுக் குடும்பத்தில் திருமண வாழ்க்கை எல்லோருக்கும் துன்பமயமாகிவிடும்.
9.
இருவருடைய சாதனைகளையும் கண்டு இருவரும் சந்தோஷமடைந்தால், அவர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தால், அவர்கள் பணியில் அவர்களுக்கு மேன்மேலும் முன்னேற்றம் கிடைக்கும்.
9.
கணவன் அலுவலக பணியிலேயே ஆழ்ந்துவிட்டார் என மனைவி நினைத்தாலோ, மனைவி அதிகம் சம்பாதித்தால் தனக்கு அடங்க மாட்டாள் என்று கணவன் கருதினாலோ அவர்களது அலுவலக பணியின் முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டுவிடும்.
10.
சிறப்பான பெற்றோராக இருந்தால், குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றமும், சாதனைகளும்
தடங்கலின்றி ஏற்படும். குழந்தைகள் பெற்றோரைவிட அதிகமாக சாதிப்பார்கள்.
10.
பெற்றோர் இருவரும் சரியில்லை என்றால், தங்களைவிட பிள்ளைகளின் சாதனை தாழ்ந்துப் போகக் கூடாது என்பதிலும், அவர்களுடைய குறைந்தபட்ச முன்னேற்றத்திற்கே தங்களுடைய அதிகமான நேரத்தையும், சக்தியையும் செலவழிக்க வேண்டி வரும்.

*******



book | by Dr. Radut