Skip to Content

09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமிர்தமா?

    அடி நாக்கு நஞ்சும் நுனி நாக்கின் அமிர்தமாகும்.

  2. கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.

    காமாட்டி நாயகரும் கருத்தின் ஆழத்தில் காமாச்சி நாயகர்.

  3. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

    ஏறினாலும் எருதுக்குச் சந்தோஷம், இறங்கினாலும் நொண்டிக்குச் சமம்.

  4. எருமை வாங்குமுன் நெய் விலை கூறுகிறதா?

    அன்பன் எருமை வாங்குமுன் நெய் விலையைப் பெறுவார்.

  5. உடல் ஒருவனுக்குப் பிறந்தது, நாக்கு பலருக்குப் பிறந்தது.

    நாக்கு உடல் போல உயர்ந்து செயல்படும்.

  6. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

    அருள் நஷ்டமானாலும் அதிர்ஷ்டமாகும்.

  7. உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்திற்கு உலகம் பேய்.

    பேயைக் கண்டு கொள்ள முயன்றால் அது உலகமும் ஞானமும் ஆகும்.

  8. வண்ணானுக்கும், நிர்வாணிக்கும் உறவென்ன?

    நிர்வாணியான வண்ணான்.

தொடரும்....

*******



book | by Dr. Radut